ஒரு படைப்பாளிக்கு பெரிய சந்தோஷமே தான் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான்.ஒவ்வொருவரும் எழுதுவதும்,படைப்பதும் இந்த அங்கீகாரத்துக்குத்தான். அதனால் கிடைக்கும் வருமானம் தனி சந்தோஷம் என்றாலும் இந்த அங்கீகாரம்தான் சிறந்தது என்பேன்.
நான் முதன் முதலாக பிளாக் உலகில் வரும்போது கவனித்த இருவர் கேபிள் சங்கரும், கவிதைக்காதலரும்.பதிவுலகின் ரஜினி என போற்றப்படும் சங்கர் சினி ஃபீல்டில் ஆல்ரெடி எண்ட்டர் ஆகி விட்டார்.நம்ம கவிதைக்காதலன் தபு சங்கருக்கு இணையான கவிதைத்திறம் மிக்கவர். அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டும்.
நான் அவர் பிளாக்கில் கமெண்ட் போடும்போதே நீங்கள் சினி ஃபீல்டில் நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கமெண்ட் போட்டேன்.அது உண்மையாகி விட்டது. கந்தகோட்டை என்ற படத்தை எடுத்த எஸ் சக்திவேல் என்ற இயக்குநர் எடுக்கும் உயிரைத்தொலைத்தேன் படத்தில் 2 பாடல் எழுதுகிறார். அதை விட பெரிய விஷயம் டைட்டிலில் ,போஸ்டரில் அவர் பெயர் வருகிறது. ( மணிகண்டவேல்)
இதில் என்ன பெருமை என கேட்பவர்களுக்கு. சினி ஃபீல்டில் அவ்வளவு சீக்கிரம் டைட்டிலில் பெயர் போட விட மாட்டார்கள்.முதல் படத்திலேயே அவர் பெற்ற இந்த வாய்ப்பும் ,பெருமையும் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
நேற்றே இறந்து விட்டேன் என்ற கவிதையை பார்த்து இயக்குநர் இந்த வாய்ப்பு கொடுத்தாராம்.பலர் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து வாய்ப்பு கேட்டும் கிடைக்காத வாய்ப்பு பதிவு போட்டே இவருக்கு கிடைத்தது ஒரு பதிவர் என்ற முறையில் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது.
ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது.நமக்கு பதிவு போட மேலும் ஊக்குவிப்பாக இவரது முன்னேற்றம் அமைகிறது.
எனவே இவரது வெற்றியை நமது வெற்றியாக கொண்டாடுவோம்.வாழ்த்துவோம். அவரது ஃபோன் நெம்பர் 9043194811,வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி
அவரது மெயில் ஐ டி [email protected]
வாழ்த்துங்கள்..
41 comments:
இதோ சுடச் சுட எனது முதலாவது வாழ்த்து அவருக்கு!
சக பதிவர் என்ற ரீதியில் எமக்கெல்லாம் பெருமை தேடித்தந்திருக்கிறார்!!
//எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி//
நம்புகிறோம்!
மேலே என்ன படம் போட்டி இருக்கீங்க? எதுவுமே தெரியலையே?
முதல் வாழ்த்து சொன்ன அண்ணன் மாத்தி யோசிக்கு நன்றி.. மேலே போட்டிருப்பது அவர் பாட்டு எழுதும் படத்தோட ஸ்டில்
எனது வாழ்த்துக்களும்!
வாழ்த்துக்கள் அவருக்கு!
சினிமாவில் கொடி கட்டி பறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்....
//இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி//
என்னைவிட பத்து வயசு கூடுதலா......???
இருக்கட்டும் இருக்கட்டும்.....
வால்பையன் said...
எனது வாழ்த்துக்களும்!
கொங்கு மண்டல சிங்கத்துக்கு நன்றி
MANO நாஞ்சில் மனோ said...
//இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி//
என்னைவிட பத்து வயசு கூடுதலா......???
இருக்கட்டும் இருக்கட்டு
இது ஓவர்... உங்களுக்கு என்ன 14?
வைகை said...
வாழ்த்துக்கள் அவருக்கு!
நன்றி வைகை அண்ணே
பதிவுலகில் இருந்து சினிமாவுக்கு செல்வது சந்தோசமான ஒன்று... வாழ்த்துக்கள்
நன்றி சவுந்தர்
ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது
...Absolutely true!
Congratulations, Mani!
கவிதைக்காதலனுக்கு வாழ்த்துக்கள். அவரை அடையாளம் காட்டிய சி.பி அண்ணனுக்கு நன்றி(நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு தெரிந்திருக்காது)
அவருக்கு எனது வாழ்த்துக்களும்!
கவிதைகாதலன் நண்பருக்கு வாழ்த்துக்கள்....
பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி ஐயா... :)))))
Chitra said...
ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது
...Absolutely true!
Congratulations, Mani!
நன்றி சித்ரா.. உங்களுக்கு ஏற்கனவே மேட்டர் தெரிந்து வாழ்த்தி முந்திக்கொண்டதாக கேள்வி
ரஹீம் கஸாலி said...
கவிதைக்காதலனுக்கு வாழ்த்துக்கள். அவரை அடையாளம் காட்டிய சி.பி அண்ணனுக்கு நன்றி(நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு தெரிந்திருக்காது)
யாரப்பா அது மறுபடி நம்ம வயசை கூட்டறது..? மைனஸ் ஓட்டு போடப்போறேன் ஹி ஹி
பாஸ் ஸ்டில் தெரியலையே! என்னாச்சு? இருங்க என்னோட மொபைல்ல பாக்குறேன்!
Delete
Blogger வெறும்பய said...
அவருக்கு எனது வாழ்த்துக்களும்!
February 1, 2011 9:13 PM
நன்றி ஜெயந்த்
ஊஹூம்! ஸ்டில் ஓபன் ஆக மாட்டேங்குது!
மாணவன் said...
கவிதைகாதலன் நண்பருக்கு வாழ்த்துக்கள்....
பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி ஐயா... :)))))
நன்றி மாணவன்
Delete
Blogger மாத்தி யோசி said...
ஊஹூம்! ஸ்டில் ஓபன் ஆக மாட்டேங்குது!
February 1, 2011 9:18 PM
ம் ம் சவுந்தர் கூட இதையே சொன்னாரு.. இருங்க பார்க்கறேன்..
பாஸ் இன்னிக்கு ட்விட்டரில் உங்களோட ஜாயின் ஆகியிருக்கேன்! அந்த ப்ரொபைல் பிக்சர மாத்திடுங்க! ' 'பொட்டு அம்மான் ' மாதிரி இருக்கீங்க! அப்புறம் ஏதாவது ஆபத்து வந்திடப் போவுது! கூலிங் கிளாசோட எடுத்த படம் சூப்பரா இருக்கு அதப் போடுங்க!
அவருக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் வளர்ந்து புகழ்பெறட்டும்!
வாழ்த்துகிறேன்..!
வாழ்த்துக்கள் நண்பர் கவிதை காதலருக்கு
எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.. இதை ஒரு பதிவாகவே போட்ட சிபி அண்ணனுக்கு மிக்க நன்றி...
கவிதைக் காதலனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..தொடர்ந்து மென்மேலும் முன்னேற முருகன் அருள் செய்யட்டும்.
பாஸ் நீங்க பேஸ்புக்கில் இருக்கீங்களா? ஐ.டி. ப்ளீஸ்!
// வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி.. //
ஸ்பெல்லிங் மிஸ்டேக்... உங்களுக்கு பேரன் மாதிரி...
பதிவுலகிற்கு பெருமை தேடித்தந்த அவருக்கு எனது வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் அவருக்கு
மாத்தி யோசி said...
பாஸ் நீங்க பேஸ்புக்கில் இருக்கீங்களா? ஐ.டி. ப்ளீஸ்!
February 2, 2011 2:51 AM
ஆமா.. [email protected]
புகைப்படங்களுடன் கவிதை எழுதும் 'கவிதை காதலருக்கு' திரைப்படங்களில் வாய்ப்பா? மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அவரது கவிதைகள் மிக பிடிக்கும்...படிச்சு பல முறை வியந்திருக்கிறேன்...இந்த வாய்ப்பிற்கு தகுதியும், திறமையும் ஒருங்கே பெற்றவர்.
முதல் வாய்ப்பிலேயே இரண்டு பாடல் !! சினிமா துறையில் இவரது பாடல்கள் அதிகமாக வலம் வர மனமார வாழ்த்துகிறேன்.
பதிவின் மூலமாக இவர் இந்த வாய்ப்பை பெற்று இருக்கிறார் என்பது பதிவுலகத்தின் மதிப்பை உயர்த்துகிறது..
இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் பல.
எனது வாழ்த்துக்களும்....:)
படிக்கும் போதே ரொம்ப சந்தோசமாக இருக்கு..
கவிதைக் காதலனுக்கு வாழ்த்துக்கள்..
கவிதைக் காதலனுக்கு வாழ்த்துக்கள் அண்ணே !!!
Post a Comment