இசையோ, பின்னணி இசையோ இல்லாமல் வெறும் சிறப்புச்சத்தங்கள்.ஒலிச்சேர்ப்பு மட்டுமே துணையாகக்கொண்டு ஒரு த்ரில்லர் படம் கொடுக்க தைரியமாக வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனனுக்கு ஒரு ஃப்ளவர் பொக்கே கொடுத்துப்பாராட்டலாம் என்றால்.........
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வருவது போல் பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் ஒரு சைக்கோவின் கதை தான் இது என்பது கூட பரவாயில்லை. ஆனால் ஆண்ட்டி ஹீரோ சைக்கோ ஆனதற்கு இயக்குநர் வைத்திருக்கும் ஃபிளாஷ்பேக்... ஸாரி சார்...
மென்மையான காதல் படங்களை மயில் இறகு வருடுவது மாதிரியான காட்சி அமைப்புகளில் மனம் கவர்ந்த இயக்குநரா இப்படி? என அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் பல காட்சிகளை கண் முன் நிறுத்தும் படி எடுத்ததற்கு என் வன்மையான கண்டனங்கள்.
மனவியல் நிபுணர்களின் கருத்துப்படி ஹோமோ வாக மாறும் ஒரு ஆண் பெண்களுடன் பழகும் வாய்ப்பு பெறாதவனாகவே இருப்பான் என்கிறார்கள். ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கும் கதையின் ஹீரோவின் அப்பா தனது சொந்த மகன் (அதுவும் வயது 8) கூடவே.....
இளவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் நலன் கருதிதான் எடுத்தேன் என 1000 சால்ஜாப்புகள் சொன்னாலும், BASED ON A TRUE STORY போஸ்டரில் போட்டு தப்பிக்கப்பார்த்தாலும் இந்த மாதிரி படங்கள் பார்ப்பவர்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால்,சமூகத்தில் குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர இது பாதை வகுக்கும் என்பதால் இந்த மாதிரி படங்கள் தடை செய்ய்ப்பட வேண்டும் அல்லது மக்களே ஒதுக்க வேண்டும்.
16 வயதே ஆன ஹீரோ தனது கார்டியன் மாதிரி இருக்கும் பக்கத்து வீட்டு ஆண்ட்டியை பலாத்காரப்படுத்தும் இடமும்,ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆண்ட்டியும் இணங்குவது போல் காட்டுவதும் வன்மையாகக்கண்டிக்கத்தக்க சீன்கள்.
அதே ஆண்ட்டி தனது காதலனை கல்யாணம் பண்ணி வந்த பிறகு முதல் இரவிலேயே ஹீரோ கணவனை கொலை செய்வதை நேரில் பார்த்த பிறகும் போலீஸில் சாட்சி சொல்லாமல் ஹீரோவைக் காப்பாற்றுவதும் நம்ப முடியாத காட்சி அமைப்பு.
அதே போல் இறந்து விட்ட அந்த ஆண்ட்டி உயிருடன் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு வாழும் மனப்பிறழ்வு நோய் கொண்டவர் ஹீரோ என்பதெல்லாம் ஆங்கில சைக்கோ ( ஹிட்சாக்) படத்திலும், பாலு மகேந்திராவின் மூடு பனி படத்திலும், ஆர் .பார்த்திபனின் குடைக்குள் மழை படத்திலும் வந்தவை தான்.
சிட்டியில், பப்ளிக்காக ஹீரோ பெண்களை கடத்துவதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடப்பதாக காண்பிப்பது கேலிக்கு உரியது. போலீஸ் எல்லாம் என்ன தான் பண்றாங்க?
அதே போல் அந்த ஆண்ட்டி பெட்ரூமில் உள்ள மெழுகுவர்த்தி கீழே விழுந்து தீ விபத்தில் மாட்டுவது நம்பும்படி இல்லை.ஹீரோவாக நடிப்பவரின் (வீரா) முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எதுவும் குறை சொல்லும்படி இல்லை. இசை இல்லாதது படத்தில் ஒரு குறையாகவே தெரியவில்லை.
ஷமீரா ரெட்டியின் நடிப்பும், அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அருமை.ஆனால் திகில் படங்களில் நடிப்பதில் கலக்கிய நளினி( நூறாவது நாள் ),ஜீவிதா போல் வரவில்லை.
நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.
--
கண்டிக்கத்தக்க வசனங்களில் சில சாம்ப்பிள்ஸ்
1.பொண்ணுங்க.. பாருங்க... ரொம்ப அறிவாளியா இருப்பாங்க... ஆனா நெட்ல உக்காந்து பாருங்க.. சேட்டிங்ல வரிசையா விழுவாங்க..
2. அம்மா, அப்பா ரூம்ல பொண்ணு படிக்கறதா நினைப்பாங்க.. இவளுங்க ரூம்ல பசங்களோட சேட்டிங்க்ல இருப்பாளுங்க...
.3. ஏய்ய்... என் பேரு வீரா... நான் ரொம்ப நல்லவன்...இப்போ உன்னை ரேப் பண்ணப்போறேன்.
4.நீ தூங்குன பிறகு எப்பவாவது உன் ரூமுக்கு வந்து உங்கப்பா நீ ரூம்ல தான் இருக்கியா?ன்னு செக் பண்ணி இருக்காரா? என்னா நீ நல்லவன்னு தெரியும்... அதனால நீ என்ன பண்றே.. நைசா சுவர் ஏறி குதிச்சு என் ரூம்க்கு வர்றே....
5. இப்போ உன் கிட்டே வந்து ஐ லவ் யூ சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே.. அர்ஜூனை ஏற்கனவே லவ் பண்றேன்னு சொல்லி இருப்பே.. அதான்.. அவனை சீனை விட்டே தூக்கிட்டேன்..
6. இந்தா தண்ணீர்.. WASH YOUR MOUTH... I WANT TO KISS YOUR MOUTH.
நல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள். அது மாதிரி இத்தனை நாளாக கஷ்டப்பட்டு சேர்த்த நல்ல பெயரை இந்த ஒரு படத்தின் மூலம் இழக்கப்போகிறார் இயக்குநர்.
இதய பலஹீனம் உள்ளவர்கள், மென்மையான மனம் படைத்தவர்கள்,பெண்கள், மாணவ மாணவிகள்,கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.
ஆனந்த விகடன் எதிர்பார்க்கப்படும் மார்க் - 40
குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
diski - ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 - காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்
diski - ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 - காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்
51 comments:
சுட சுட விமர்சனம்... சுட சுட வடை
ஓஹோ... இன்னைக்கு போலாம்ன்னு இருந்தேன்.... பாக்கலாம்
மூணாவது அருவா
கண்டபடி கண்டிக்கும் சிபிக்கு வாழ்த்துக்கள்
பதிவ போட்ட உங்களுக்கு அதுக்கு கமண்டு போட்ட எனக்கு பதில் சொல்லுங்க போன பதிவுக்கு ஹி ஹி!
நன்றி 4 ஓட்டு உங்களுக்கு
உங்களின் வேகம் அசரவைக்கிறது..
கண்டபடி கண்டிக்கும் சிபிக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் இந்த படத்தை கண்டிப்பதன் மூலம் உங்கள் சமூக அக்கறை நன்றாக தெரிகிறது.
ஆனா நீங்க மட்டும் பாத்துட்டு மத்தவங்கள பாக்காதன்னு சொல்லறது ரொம்ப கொடுமைங்க..(படம் கிளுகிளுப்ப இருக்கும் போல..ஹி...ஹி)
//நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.//
நல்ல சிறப்பான விமர்சனம்..
//ல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள்.//
கரக்கீட்டா சொன்னீங்க தலைவா ...
//பக்கத்து வீட்டு ஆண்ட்டியை பலாத்காரப்படுத்தும் இடமும்,ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆண்ட்டியும் இணங்குவது போல் காட்டுவதும் வன்மையாகக்கண்டிக்கத்தக்க சீன்கள்.//
இப்படி ஒன்னு ரெண்டு பேர் இருப்பாங்கனு அவர் நினச்சு இருப்பார் போல ...
//
அதே ஆண்ட்டி தனது காதலனை கல்யாணம் பண்ணி வந்த பிறகு முதல் இரவிலேயே ஹீரோ கணவனை கொலை செய்வதை நேரில் பார்த்த பிறகும் போலீஸில் சாட்சி சொல்லாமல் ஹீரோவைக் காப்பாற்றுவதும் நம்ப முடியாத காட்சி அமைப்பு//
திரை கதையில் நொம்ப ஓட்டை இருக்கும் போல ...! உங்கள் விமர்சனம் பார்த்த பிறகு ,இந்த படத்தை திருட்டு DVD இல் கூட படம் பார்க்கும் எண்ணம் இல்லை ....
( யெப்பா ....இத்தனை பதிவா ...36 ...உங்கள் வேகம் உண்மையாக அசர வைக்கிறது )
2 .02 pm க்கு பதிவு போட்டு 2 .06 pm குள்ள ,6 பின்னூட்டம் ....! செம ட்ராபிக்கா இருக்கு உங்கள் கடை...! வாழ்த்துக்கள் ...!
அந்த மூனாவது படம் ஹி ஹி ஹி ஹி.....
ஷங்கருக்கு பாய்ஸ், கௌதமுக்கு நடுநிசி நாய்கள், அவர்களின் உள் மன வக்கிரங்கள் வெளிப்படுகிறதோ...????
//இந்தா தண்ணீர்.. WASH YOUR MOUTH... I WANT TO KISS YOUR MOUTH.//
இது நல்லா தானே இருக்குது(ஹி...ஹி..)
விமர்சனம் அருமை.உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
//அம்மா, அப்பா ரூம்ல பொண்ணு படிக்கறதா நினைப்பாங்க.. இவளுங்க ரூம்ல பசங்களோட சேட்டிங்க்ல இருப்பாளுங்க...//
வன்மையாக கண்டிக்கிறேன்.....
/நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.//
not just this film, recently almost all films potray Chennai as worst city and villages are still so innocent
//ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.//
இப்பிடி எழுதினா மிரட்டல் வராம அல்வாவா வரும். ஆன்னல் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
இதய பலஹீனம் உள்ளவர்கள், மென்மையான மனம் படைத்தவர்கள்//
Thanks for info
நல்ல பெயர் எடுத்தல் பற்றி இயக்குனருக்கு விடுத்த எச்சரிக்கை அருமை.
அதேப் போல இயக்குனரின் நகர்புற பெண்கள் மீதான தவறான எண்ணங்களை குட்டியதும் நச்.
உங்களுக்கே பிடிக்கலியா..இப்போ நான் பார்க்குறதா வேணாமா..ஒரே குழப்பாமா இருக்கே...
வாக்கும் வாழ்த்தும்..
அப்போ படம் அவ்வளவுதானா? என்ன இப்படிக் கண்டிச்சிருக்கீங்க? நீங்க இப்படிச் சொல்லி நான் பார்த்ததில்ல!
விடுங்க பாஸ்! அவர் என்ன சொந்தமாவா யோசிச்சிருப்பார்? எந்த நாட்டுப் படமோ? :-)
அதுக்குள்ள விமர்சனமா??....கலக்குறீங்க.....
thanks chitthapu
எதிர்பார்த்த ஒன்றுதான்! கண்டனங்களுக்கு நன்றி!
தமிழ்மணம் என்னாச்சு?
it's unexpected.super review. cp innikku office cut aa?
சமீராவுக்கு நீங்க போட்டிருக்கிற ஸ்டில் படத்துல இருக்குனு போயி ஏமாந்துடப் போறானுவோ.
'கௌதம் வாசுதேவ் மேனன்' என்று டைட்டில் வந்தபோது கைதட்டி ஆரவாரம் பண்ணுன பக்கத்து இருக்கை இளைஞர்களில் ஒருவன், படம் முடியப் போகையில், "மச்சி, வாடா, பார்ட்-2 போட்டுடப் போறான். வா, போயி ஒரு கட்டிங் போட்டுட்டுப் போயிடலாம்," என்றான்.
சபாஷ்!!! பொறுப்பான விமர்சனம்..!!
இதை பார்ப்பதை விட, நாங்கு தெரு நாய்களை பார்க்கலாம் போல......!!!?
//ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்//
கண்டிப்பாக பி சி சென்டர்களில் அடுத்த வாரம் இந்த படம் இருக்காது. பல இடங்களில் குமட்டிக்கொண்டு வந்தது. அருவருப்பான காட்சிகளை ரியாலிடி என்று காட்டினால், வொர்க் அவுட் ஆகாது என்பதற்கு இது உதாரணம்.
கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்
ஏதாவது படத்துக்கு போக வேண்டியது, அதுல சீனு இருக்கானு தேடுறது, அப்படி எதுவும் இல்லனா ஒரு சீன் கூட இல்ல போஸ்டர் போட்டு ஏமாத்திட்டானுங்க அப்படின்னு ஒரு பதிவு போட வேண்டியது... இப்போ இந்த படத்துல ஓவரா சீனு இருக்குன்னு அதை கண்டிச்சு ஒரு பதுவு போட்டுருக்கீங்க... பேசாம நீங்களே ஒரு படம் சீன் வச்சும் வைக்காமலும் டைரக்ட் பண்ணி அதுக்கு நீங்களே விமர்சனம் எழுதுங்க.. நல்லாயிருக்கும்.
இதே படத்தை வெளி நாட்டுக்காரன் எவனாவது எடுத்திருந்தான்னா.
ஆஹோ ஓஹோன்னு பாராட்டி தள்ளியிருப்பீங்க தமிழ்ல இந்த மாதிரி படம் எடுக்க நம்ம இயக்குனர்களுக்கு ஏன் துணிச்சல் இல்லைன்னு கேள்வி கேப்பீங்க.
உங்களை மாதிரி ஆட்களுக்காகவே வேற ஒரு SET OF STYLE படம் எடுத்தா
இப்பிடி விமர்சனம் பண்ணுவீங்க.
நீங்க தெரிஞ்சு வைத்திருக்கிற உலக அறிவுகளின் ஊடே இந்த படம் வராமல் இருந்திருக்கலாம் அதுக்காக
நமக்கு தெரியாத புரியாத ஒரு விஷயத்தை அறவே ஒதுக்கும் பழக்கம் சரியா?
எப்பவுமே நிதர்சனத்தை ஒத்துக்கொள்ள முடியாதுதான். (மாட்டீங்க)
நீங்க POPCORN கொரிச்சிகிட்டே படம் பார்த்திருப்பீங்க போல எதுக்கும் இன்னொரு முறை பாருங்க
நிறைய மெசேஜ் இருக்குங்க
you are approaching the standard of vikatan and kumudam.
என்ன எல்லாரும் படத்தை போட்டு தாக்கறீங்க! கவுதம் கவுத்துட்டாரு போல!
என்னா ஒரு ஸ்பீடு விமர்சனம்.....
பாக்கலாமா.... வேணாமா.... ஒரே குழப்பமா இருக்கே
gud review! so fast?
senthil, doha
நாங்களும் பாத்துட்டோம்ல..
எல்லாம் ஒக்கே அதன் நம்ம சமீரா படத்த போட்டு கடுப்பேத்துறீங்க??
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
திருடன் said...
இதே படத்தை வெளி நாட்டுக்காரன் எவனாவது எடுத்திருந்தான்னா.
ஆஹோ ஓஹோன்னு பாராட்டி தள்ளியிருப்பீங்க தமிழ்ல இந்த மாதிரி படம் எடுக்க நம்ம இயக்குனர்களுக்கு ஏன் துணிச்சல் இல்லைன்னு கேள்வி கேப்பீங்க.
உங்களை மாதிரி ஆட்களுக்காகவே வேற ஒரு SET OF STYLE படம் எடுத்தா
இப்பிடி விமர்சனம் பண்ணுவீங்க.
நீங்க தெரிஞ்சு வைத்திருக்கிற உலக அறிவுகளின் ஊடே இந்த படம் வராமல் இருந்திருக்கலாம் அதுக்காக
நமக்கு தெரியாத புரியாத ஒரு விஷயத்தை அறவே ஒதுக்கும் பழக்கம் சரியா?
எப்பவுமே நிதர்சனத்தை ஒத்துக்கொள்ள முடியாதுதான். (மாட்டீங்க)
நீங்க POPCORN கொரிச்சிகிட்டே படம் பார்த்திருப்பீங்க போல எதுக்கும் இன்னொரு முறை பாருங்க
நிறைய மெசேஜ் இருக்குங்க..
I like your comment :)
நல்ல வேளை! தங்களின் விமர்சனம் படித்தேன்! தப்பித்தேன்! நன்றிகள் பல!
//நல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள். அது மாதிரி இத்தனை நாளாக கஷ்டப்பட்டு சேர்த்த நல்ல பெயரை இந்த ஒரு படத்தின் மூலம் இழக்கப்போகிறார் இயக்குநர்.//
CPS சொன்னா அப்பீல் ஏது ?
சி பி ரொம்ப நல்லவர் உண்மையை சொல்லிட்டார்
நடு நிசி (இசி) நாய்கள் !
இதுக்கு, இந்தக் கதை தேவலை
http://writervisa.blogspot.com/2011/02/blog-post.html
good warning....good review!
நடுநிலையான விமர்சனம், நீங்களே இவ்வளவு எச்சரிக்கை பண்ணி இருக்கீங்கன்னா.... வேற எதுவும் சொல்றதுக்கு இல்ல.....!
சமீரா கொஞ்சம் குண்டாகிட்ட மாதிரி தெரியுதே? (என்னவென்று உங்கள் ரகசிய நண்பர்களிடம் கேட்டு சொல்லவும்!)
இந்த வாரம் முழுதும் “நடந்தது என்ன “நிகழ்வில் கௌதம் மேனன் இந்தத் திரைப்படத்திற்கிற்கு ஆதாரமான தேடல்களை அழகாகச் சொல்லி வருகிறார் !
ரேப் சீன் (மீனாக்க்ஷி ரெண்டாவது தடவை) பாத்து கண்ண பொத்திகிட்டது, லைப்ல இந்த படத்தில்தான்.
எப்படா படம் முடியும்னு இருந்தது.
நான் சொன்னது என்னோட தனிப்பட்ட கருத்து அதை உங்க மேல் திணிக்க எனக்கு உரிமை இல்லை
இன்னைக்கு தான் தப்புன்னு பட்டது
so sorry
இது சுதந்திர நாடு. யார் வேணாலும் என்ன கருத்து வேணாலும் சொல்லலாம். எதிர் கருத்தே வர்லைன்னா அது ஜால்ரா தளம் ஆகிடும்
Post a Comment