Friday, January 14, 2011

ஆடுகளம் - சினிமா விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBvdyTNlnjXWsGlmtKE5kcE_ETgnL5I2GYY3d0eFmwkvvmk_Zuos6hSw1PSdoTH9MQtUNormbwxQTCZB7CIWEJrjoGziK8om7X-OaA0wKbB-7M7cbIM-XGuw-dfsl49srDXwsrq6eiM0Bu/s640/6.jpg
சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி,போதையைக்கொடுத்து அதை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் அவனை செய்ய வைக்கும்  என்ற உளவியல் தத்துவத்தை அட்டகாசமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் 30 நிமிடம் சேவல் சண்டையை திரில்லிங்காய் குடுத்திருப்பது புதுசு..படத்தில் தனுஷ் மதுரை வட்டார வழக்குத்தமிழ் பேசி ஜெயித்திருக்கிறார்.ஹீரோயின் புதுமுகம்.கிட்டத்தட்ட பிரியாமணியின் சாயல் (குரல் மட்டும் அதே மாதிரி கட்டைக்குரல்)நல்ல ஃபிகர்தான்.ஆங்கிலோ இண்டியன் மாதிரி காண்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
http://www.koodal.com/cinema/koodal_reel/2010/Aadukalam-reel-27.jpg
அப்படி காண்பித்ததால் தேவை இல்லாமல் ஆங்கில வசனங்கள் பேச வைத்தது கிராமியக்கதைக்கு அந்நியம் சேர்க்கிறது.ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை.

அந்த ஃப்ளோவில் வரும் டப்பாங்குத்துப்பாட்டு இசை அமைப்பாளர்,நடன இயக்குநர்,இயக்குநர் அனைவரும் கலக்கி எடுத்த கலக்கல் காக்டெயில் நடனம்.

அதே ஹீரோயின்  அவன் என்னை உன்னை விட அதிகமா டார்ச்சர் பண்ணுனான்,அதனாலதான் உன்னை லவ் பண்றதா பொய் சொன்னேன் என பல்டி அடிக்கும்போது தனுஷின் சோக நடிப்பும் கன கச்சிதம்.

படத்தின் கதைக்களன் சேவல் சண்டைதான் என்பதையும்,கதை நடப்பது கிராமத்தில் தான் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்த சேவலின் கொக்கரக்கோ சத்தத்தை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்பதும் அவசியமே இல்லாதது.

மனிதனுக்கு பந்தயம் ,போட்டிகளில்,சூதாட்டத்தில் ஏற்படும் வெறியை நிதர்சனமாய் காண்பித்து பார்வையாளர்களுக்கும் அந்த வெறியை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றியே..

சேவல் சண்டையை கிராஃபிக்ஸில் எடுத்தது தெரியாத அளவு ஒளிப்பதிவாளர் பாடுபட்டு அழகாக சமாளித்து இருக்கிறார்.படத்தில் வில்லனாக வருபவர் உண்மையில் ஒரு கவிஞர்.தாத்தா மாதிரி இருக்கும் அவருக்கு அவரை விட 30 வயது இளைய பெண் காதலித்து மனைவி ஆனவர் என்பது நம்பும்படி இல்லை.

அதே போல் தனது மனைவியை அவர் சந்தேகப்படும் சீனும் எடுபடவில்லை.ஆனால் அந்த சீனில் மனைவியாக நடிப்பவரின் பிரமாதமான நடிப்பு மைனசை போக்கி விட்டது.

வசனகர்த்தாவாக இயக்குநர் ஜொலித்த இடங்கள்

1. இப்படியே தனியா பேசிட்டு இரு, சீக்கிரம் மெண்ட்டல் ஆகிடுவே...

சரி சரி விடம்மா.. உன் பையன் உன்னை மாதிரிதானே இருப்பான்..?

2. சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்.

3. வேட்டைக்காரன் சாவு வீரமாத்தான் இருக்கோணும்,சாவே வந்தாலும் களத்துக்கு வெளில வந்த பிறகுதான் சாகனும்.

4.எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என் கூடவே 10..15 வருஷமா இருந்த யாரும் ஹெல்ப் பண்ணலை,அவந்தான் உதவி செஞ்சான்..அவன் கெட்டவனா இருந்தா என்ன?

5. மனுஷனுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவன் சவுகர்யத்துக்கு மாறிடறான்,அவனோட அடிப்படை  குணங்கள் மாறிடுது.

6. போலீஸ்காரன் புத்தி திருட்டு புத்தின்னு நிரூபிச்சுட்டியே,....

7. எனக்கு ரூ 2000 அவசரமாத்தேவைப்படுது.

சரி.. இந்தா..

ஓக்கே.என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனியே.. அதுக்கு ஃபைனா இதை நினைச்சுக்கோ...

8. தோத்திடுவோம்னு பயமா?

பயமா? எனக்கா? நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க் பண்ற ஆளுங்க

(இந்த வசன பஞ்ச்சுக்கு தியேட்டரில் இருந்த தனுஷ் ரசிகர்கள் 22 பேரும் கை தட்டுனாங்க)

9. ஏய்.. எதுக்காக இப்போ என் கையை பிடிச்சே?

அது வந்து... சேஃப்டியா கூட்டிட்டு போறதா வாக்கு குடுத்துட்டேன்,, அதான்..

10. இப்போ நான் யாருமே இல்லாத தனியனாய் ஆகிட்டேன்,அதிர்ஷ்டத்துல ஜெயிச்சவன் எல்லாம் என்னைப்பார்த்து எள்ளி நகையாடறான்.

11.எங்கப்பாவோட தோத்த முகத்தை என்னால பாக்க முடியல.

12,  சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லைன்னு உன்னைப்பார்த்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

13.  என்ன ..தயங்கறே..கேளு..

வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா?

14.இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன்?

15. என் பையன் உருப்பட்டுடுவான்.. என்னை சாகற வரை சந்தோஷமா வெச்சுக்குவான்னு நினைச்சேன்,, ம் ம் 

16. எங்கம்மா உயிரோட இருந்தவரை அவங்க எவ்வளவு முக்கியமானவங்கன்னு எனக்கு தெரியாமயே போச்சு..

17. மத்த ஜாதிப்பையனோட ஓடிப்போன பொண்ணு கடைசி வரை சந்தோஷமா இருந்ததை சரித்திரம் இதுவரை பார்த்ததில்லை..

18. அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்,

19. அண்ணே... ஏண்ணே இப்படிப்பண்ணீட்டே..?நீ பண்றது எனக்குப்பிடிக்கலை..செத்துப்போன்னு சொல்லி இருந்தாக்கூட செத்துப்போயிருப்பேனே....ஏன் நம்பிக்கை துரோகம் பண்ணுனே..

20. நாங்க எல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் தர்றவங்க..நமக்கே ஐடியாவா? 

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.

2. என்னதான் கிராமங்களில் சேவல் சண்டை ஃபேமஸ் என்றாலும் ,சேவல் டோர்ணமெண்ட்டை விட்டால் வேறு உலகமே இல்லாதது மாதிரி திரைக்கதை அமைத்த  விதம்.

3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...

4.குழந்தைக்கு காது குத்தும் சீனை இவ்வளவு க்ளோசப்பில் காட்ட வேண்டுமா?கிராமப்படங்கள் எல்லாவற்றிலும் இது வருகிறது.

5.படம் முழுக்க யாராவது லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது ஓவர்.
பாதி வசனம் புரியவே இல்லை.

6. படம் பெரும்பாலும் இரவில் தான் நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவிலும் இருட்டாக காட்ட வேண்டிய கட்டாயம். இதை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் ஏற்கன்வே ஹிட். 3 பாடல்கள் நல்லாருக்கு.

வெற்றி பெறுவது பெரிசில்லை..அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்...மனிதனுக்குப்பொறாமை கூடாது. எதிரியை அஹிம்சை வழியிலும்,சரண்டர் முறையிலும் வீழ்த்தலாம் என புது ரூட் போட்டு ஜெயித்திருக்கிறார்.சேவல் சண்டையை இவ்வளவு விஸ்தீரமாக காட்டியதில்லை என்ற அளவிலும் இது ஒரு முக்கியப்பதிவாக அமைகிறது.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,  பி செண்ட்டர்களில் 30 நாட்கள்,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.

54 comments:

அஞ்சா சிங்கம் said...

முதல் வெட்டு ..............

நல்ல விமர்சனம் .............

Pradeep said...

*****பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

*****ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்

// Yaen sir intha contradiction?

Ram said...

படத்த நம்பி பாக்கலாம்னு நினைக்கிறன்... பாத்துபுட்டு சொல்றன்.. சிறுத்தை என்ன ஆச்சு.????

Unknown said...

அண்ணே படத்த பாத்துடுவோம் .

idroos said...

sun picture endra ore kaaranathirkaga padathai paarka virumbavillai.

KANA VARO said...

கெதியா படத்தை பாக்கணும்...

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

SIR UNGAL AADUKAL VIMARSANATHAI NAAN PAYAN PADUTHI KOLKIREN. UNGALUKKU SIRAMAM IRUNTHAAL SOLLUNGAL NEEKKI VIDUKIREN.
INTHA PAKKAM PAARUNGAL
http://rizalinulagam.blogspot.com/2011/01/blog-post_14.html

Unknown said...

சூடான விமர்சனத்திற்கு நன்றிகள்.
நாளை சிறுத்தை சீறுமா உங்கள் வலைப்பூவில்?

THOPPITHOPPI said...

சார் தமிழ்மணம் என்ன ஆச்சி?

ஆதவா said...

ஆடுகளம் ஆடுகளம்னு சொல்லிட்டு ஆட்டை காமிக்காம சேவலைக் காமிச்சு ஏமாத்திட்டானுங்கப்பா!!!

நல்ல விமர்சனம்

Youngcrap said...

Thanks for the review....Read the first paragraph and last two lines alone..booked the tkts..let me see and read this tomorrow....

டக்கால்டி said...

Paathuduvom...

சண்ட கோழி said...

படம் நல்ல இருக்கு.

படம் மதுரையை மையமாக வைத்து எடுத்து இருப்பதால் அவர்கள் சேவல் காலில் கத்தியை கட்டவில்லை. ( புதியவர்களுக்கு புரியவில்லை சேவல் சண்டை என்றால் "சேவல் காலில் கத்தியை கட்டுவார்கள்" ஆனால் இந்த படத்தில் புதிதாக உள்ளது என்று. )

புரியாதவர்களுக்கு விளக்கம்:-

தமிழகத்தை பொறுத்தவரை சேவல் சண்டையில் 2 வகை உள்ளது.
1.வெத்து கால் சண்டை ( சேவல் காலில் கத்தியை கட்ட மாட்டார்கள் )
2.கத்திகால் சண்டை ( சேவல் காலில் கத்தியை கட்டுவார்கள் )

தென் மண்டலத்தில் தான் வெத்து கால் சண்டை வைகிறார்கள். ( மதுரை etc.... )
கொங்கு மண்டலத்தில் கத்திகால் சண்டை தான் பிரபலம். ( சேலம்,கரூர்,நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,பழனி,பொள்ளாச்சி,கோவை,.... )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் எப்படியோ விமர்சனம் சூப்பர் சிபி......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...//////

ஒரு ஹீரோவ, ஒரு ஹீரோயின் லவ் பண்றா, இதுக்குப் போயி காரணம் கேட்டுக்கிட்டு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.//////

இது ஓரளவு உண்மைதான் சிபி, அதான் பொண்ணுங்க சைக்காலஜி....!

Srini said...

" கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது... "
-----------------------------------
" எனக்கு தெரிஞச ஒரு பொண்ணு (சென்னை) She is a Lawer and Rich.. ஒரு சேரி ஆளை, அவரோட Innocence'க்காக லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டாங்க... “
சினிமாவ பாத்து இவங்களா... இல்ல, இவங்கள பாத்து சினிமாவான்னுதான் புரியல... லாஜிக் எல்லாம் பாத்துதான் சினிமா எடுக்கனும்னு எதுனா ரூல்ஸ் இருந்தா, அப்புறம் தமிழன் திருந்திட்டான்னு அர்த்தம் ஆயிரும்.... உட்ருங்க...பாவம் தமிழன் இப்படியே இருந்துட்டு போவுட்டும்...

ம.தி.சுதா said...

நல்ல பார்வை சீபி பொறுங்க நாளைக்குப் பார்ப்போம்..

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Sathish said...

நானும் இந்த படம் பார்த்தேன். சுமாரான ஹீரோவ சூப்பரான பொண்ணு லவ் பண்ணுது. ஆனா அது ஏன்னு தெளிவா சொல்லல. அந்த கருமாந்திரம் புடிச்ச காரணத்த
எவன்தான் சொல்லுவான்னு தெரியல..இன்னும் எத்தன படத்துல பாத்தாலும் பரவால்ல. ஒவ்வொரு தடவையும் புது புது ஹீரோயின் லவ் பண்றதால.. இந்த மேட்டர டீல்லவிட்ருவோம்

Philosophy Prabhakaran said...

என்ன இது... ஒரே நாளில் மூன்று பதிவுகள்...

Philosophy Prabhakaran said...

// ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார். //

தவறாக சொல்லப்படும் கருத்தெல்லாம் இல்லை... அதுதான் உண்மை...

Philosophy Prabhakaran said...

// கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது... //

இது ஒன்னும் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லையே...

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

Abhi said...

பொங்கல் வாழ்த்துக்கள் சி.பி. நல்ல விமர்சனம். என் விமர்சனமும் பாசிடிவ் தான்

http://inthiya.in/ta/?p=2974

ஷஹன்ஷா said...

படத்தை பார்த்துட்டு வாரேன்.....

சி.பி.செந்தில்குமார் said...

அஞ்சா சிங்கம் said...

முதல் வெட்டு ..............

நல்ல விமர்சனம் .............

அடேங்கப்பா

சி.பி.செந்தில்குமார் said...

Pradeep said...

*****பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

*****ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்

// Yaen sir intha contradiction?

50 நாள் கழிச்சு பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தம்பி கூர்மதியன் said...

படத்த நம்பி பாக்கலாம்னு நினைக்கிறன்... பாத்துபுட்டு சொல்றன்.. சிறுத்தை என்ன ஆச்சு.????

January 14, 2011 7:10 PM

பாருங்க.. சிறுத்தை போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நா.மணிவண்ணன் said...

அண்ணே படத்த பாத்துடுவோம் .

January 14, 2011 7:21 PM

பாருங்க மணி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஐத்ருஸ் said...

sun picture endra ore kaaranathirkaga padathai paarka virumbavillai.

January 14, 2011 7:24 PM

ஹா ஹா இன்ணும் 5 வருஷம் கழிச்சு தமிழ்ல வரும் 90% படங்கள் சன் தயாரிப்பு அல்லது சன் ரிலீஸாத்தான் இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

கெதியா படத்தை பாக்கணும்..

அர்த்தம் புரியல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நன்றி மாணவன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரிஸால் அஹமது said...

SIR UNGAL AADUKAL VIMARSANATHAI NAAN PAYAN PADUTHI KOLKIREN. UNGALUKKU SIRAMAM IRUNTHAAL SOLLUNGAL NEEKKI VIDUKIREN.
INTHA PAKKAM PAARUNGAL
http://rizalinulagam.blogspot.com/2011/01/blog-post_14.html

ஹா ஹா ஆத்துல போற தண்ணியை யார் குடிச்சா என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

சூடான விமர்சனத்திற்கு நன்றிகள்.
நாளை சிறுத்தை சீறுமா உங்கள் வலைப்பூவில்?

பாருங்க போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

சார் தமிழ்மணம் என்ன ஆச்சி?

ஏதோ பிராப்ளம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆதவா said...

ஆடுகளம் ஆடுகளம்னு சொல்லிட்டு ஆட்டை காமிக்காம சேவலைக் காமிச்சு ஏமாத்திட்டானுங்கப்பா!!!

நல்ல விமர்சனம்

ஹா ஹா நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger nigdyn said...

Thanks for the review....Read the first paragraph and last two lines alone..booked the tkts..let me see and read this tomorrow....

ஹா ஹா ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

Paathuduvom...

அட டகால்டி பேரே செமயா இருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சண்ட கோழி said...

படம் நல்ல இருக்கு.

படம் மதுரையை மையமாக வைத்து எடுத்து இருப்பதால் அவர்கள் சேவல் காலில் கத்தியை கட்டவில்லை. ( புதியவர்களுக்கு புரியவில்லை சேவல் சண்டை என்றால் "சேவல் காலில் கத்தியை கட்டுவார்கள்" ஆனால் இந்த படத்தில் புதிதாக உள்ளது என்று. )

புரியாதவர்களுக்கு விளக்கம்:-

தமிழகத்தை பொறுத்தவரை சேவல் சண்டையில் 2 வகை உள்ளது.
1.வெத்து கால் சண்டை ( சேவல் காலில் கத்தியை கட்ட மாட்டார்கள் )
2.கத்திகால் சண்டை ( சேவல் காலில் கத்தியை கட்டுவார்கள் )

தென் மண்டலத்தில் தான் வெத்து கால் சண்டை வைகிறார்கள். ( மதுரை etc.... )
கொங்கு மண்டலத்தில் கத்திகால் சண்டை தான் பிரபலம். ( சேலம்,கரூர்,நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,பழனி,பொள்ளாச்சி,கோவை,.... )

January 14, 2011 10:51 PM

சூப்பர் விளக்கம் சார் . எனக்கு இந்த தகவல் புதுசு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் எப்படியோ விமர்சனம் சூப்பர் சிபி......!

நன்றி ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...//////

ஒரு ஹீரோவ, ஒரு ஹீரோயின் லவ் பண்றா, இதுக்குப் போயி காரணம் கேட்டுக்கிட்டு.....?

சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.//////

இது ஓரளவு உண்மைதான் சிபி, அதான் பொண்ணுங்க சைக்காலஜி....!

ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Srini said...

" கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது... "
-----------------------------------
" எனக்கு தெரிஞச ஒரு பொண்ணு (சென்னை) She is a Lawer and Rich.. ஒரு சேரி ஆளை, அவரோட Innocence'க்காக லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டாங்க... “
சினிமாவ பாத்து இவங்களா... இல்ல, இவங்கள பாத்து சினிமாவான்னுதான் புரியல... லாஜிக் எல்லாம் பாத்துதான் சினிமா எடுக்கனும்னு எதுனா ரூல்ஸ் இருந்தா, அப்புறம் தமிழன் திருந்திட்டான்னு அர்த்தம் ஆயிரும்.... உட்ருங்க...பாவம் தமிழன் இப்படியே இருந்துட்டு போவுட்டும்...

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Sathishkumar said...

நானும் இந்த படம் பார்த்தேன். சுமாரான ஹீரோவ சூப்பரான பொண்ணு லவ் பண்ணுது. ஆனா அது ஏன்னு தெளிவா சொல்லல. அந்த கருமாந்திரம் புடிச்ச காரணத்த
எவன்தான் சொல்லுவான்னு தெரியல..இன்னும் எத்தன படத்துல பாத்தாலும் பரவால்ல. ஒவ்வொரு தடவையும் புது புது ஹீரோயின் லவ் பண்றதால.. இந்த மேட்டர டீல்லவிட்ருவோம்

ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

என்ன இது... ஒரே நாளில் மூன்று பதிவுகள்...

லீவ் கிடைச்சா விட மாட்டோம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன இது... ஒரே நாளில் மூன்று பதிவுகள்...

January 15, 2011 4:23 AM
Delete
Blogger Philosophy Prabhakaran said...

// ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார். //

தவறாக சொல்லப்படும் கருத்தெல்லாம் இல்லை... அதுதான் உண்மை...

ஓ...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

// கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது... //

இது ஒன்னும் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லையே...

ஆமாமா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

நன்றி ,வந்துட்டோம் இல்ல..

சி.பி.செந்தில்குமார் said...

Abhi said...

பொங்கல் வாழ்த்துக்கள் சி.பி. நல்ல விமர்சனம். என் விமர்சனமும் பாசிடிவ் தான்

http://inthiya.in/ta/?p=2974

நன்றி வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

“நிலவின்” ஜனகன் said...

படத்தை பார்த்துட்டு வாரேன்.....

நன்றி