படத்தோட போஸ்டர் டிசைனையும்,சாய்குமாரோட ஆவேச முகத்தையும்
பார்த்ததுமே ஏதோ டப்பிங்க் படமோ என்ற பயத்தோடு அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றும் முருகன் மந்திரம் அவர்களுக்கு ஃபோன் ஃபோட்டு படத்தை பற்றி விசாரித்தேன்.நேரடி தமிழ்ப்படம் என்று உறுதி ஆனதும்தான் தியேட்டருக்கே போனேன்.
படத்தோட ஹீரோ கம் டைரக்டர் பேரு சிவன் (அறிமுகம்).ஆர் பாண்டியராஜனின் பாடி லேங்குவேஜ்,லிவிங்க்ஸ்டனின் முக சேஷ்டைகள்,ஆர் பார்த்திபனின் தெனாவெட்டு என கலந்து கட்டிய கலவையாக படத்தின் இடைவேளை வரை காமெடி போர்ஷனை கையில் எடுத்துக்கொண்டு இவர் செய்யும் அலப்பறைகள் கலக்கல். ஆனால் அவரது முக அமைப்பும்,தோற்றமும் ஒரு ஹீரோவுக்கு உண்டான கெத்தை தரவில்லை. ஆனால் பக்காவான ஸ்கிரிப்ட் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற லேட்டஸ்ட் கோடம்பாக்க விதிப்படி இவரும் ஹீரோ ஆகி இருக்கிறார்.
ஹீரோயின் பாக்யாஞ்சலி.நல்ல முக வெட்டு.ஹோம்லியான ஃபிகர்.60 மார்க்
போடலாம்.காதல் காட்சிகளிலும்,சோக காட்சிகளிலும் முக உணர்வை வெளிப்படுத்துவதில் சிக்சர் அடிக்கும் இவர் நகைச்சுவைக்காட்சிகளில் தடுமாறுகிறார்.வழக்கமாக படம் முழுக்க போர்த்தி அடக்க ஒடுக்கமாக வரும் ஹீரோயின்கள் டூயட் சீன்களில் மட்டும் கவர்ச்சிப்பாவையாக வருவது வழக்கம்.ஆனால் இவர் படம் முழுக்கவே டீசண்ட்டாக வருவது அழகு. (ஹூம்,வட போச்சே...)
படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே ஹீரோ ஏதோ ஐ டி கம்பெனியில் ஒர்க்
பண்ணுபவர் மாதிரி கையில் ஃபைலோடு பஸ் ஸ்டாப்பில் நிற்பதும்,பின் அவரது ஃபைலில், ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் என்ன படம் ஓடுகிறது என்ற பேப்பர் கட்டிங்க்ஸ்ஸின் தொகுப்புதான் என்பது தெரிய வரும்போது செம காமெடி.
பஸ் ஸ்டாப்பில் பக்கத்தில் நிற்பவர் சிகரெட் லைட்டரை சங்கிலியில் கட்டி பேண்ட் பாக்கெட்டில் இணைத்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக நட்ந்து கொள்வதும் சிரிப்பை வரவழைக்கிறது.இன்னொருவர் கையில் ஆனந்த விகடன் புக்குடன் பக்கத்தில் நின்று குறுக்கே குறுக்கே பேசி கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார் .இந்த மூவர் கூட்டணி இடைவேளை வரை படத்தை காமெடியாக கொண்டு செல்கிறது.
ஹீரோவின் தங்கை ஹீரோவிடம் அண்ணே என்னை தின பச் ஸ்டாப்பில் கலாட்டா செய்கிறான் என்று புகார் செய்ததுமே ஏதோ ஃபைட் சீன் வரப்போகிறது என பார்த்தால் அவன் சின்ன பொடியன். மேலும் ஹீரோயினின் தம்பி.ஹீரோவின் தங்கையை ஹீரோயினின் தம்பி லவ் பண்ணுவதும்,ஹீரோ ஹீரோயினின் காதலுக்கு அவன் குறுக்கே நிற்பதும் என டைரக்டர் கையாண்ட காமெடி டிராக் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ஆனால் இந்த காமெடி கொண்டாட்டம் எல்லாம் இடைவேளை வரைதான்.படம் கதைக்குள் போக ஆரம்பித்ததும் தாதா கதை என்று புரிய ஆரம்பித்ததும் கொட்டாவி வருகிறது.ஊரில் 2 கேங்க்.தாதா கோஷ்டிகள் 2ம் யார் பெரியவன் என்ற ஈகோ பிராப்ளத்தில் அடித்துக்கொள்வதும், ஒரு தாதாவின் மகன் ஒரு கட்டத்தில் இன்னொரு கோஷ்டியை பழி தீர்ப்பதும்தான் கதை என்ற உண்மை
உரைத்ததும் அடடா டைரக்டர் ஒரு நல்ல காமெடி படத்தை தராமல் மிஸ் பண்ணி விட்டாரே என்ற ஆதங்கம் எழுகிறது.
NAUGHTY (நாட்டி)என சொல்ல வைக்கும் கோட்டியின் காமெடி வசனங்கள்
1. எக்ஸ்க்யூஸ் மீ சார்,உங்களை ஒண்ணு கேக்கலாமா?
கடனைத்தவிர எது வேணாலும் கேக்கலாம்.
2.அய்யரே.. ஆம்பளைங்க சைடு வரவே மாட்டீங்களா? லேடீஸ் பக்கமே டேரா போட்டு இருக்கீங்களே?
செத்த இருங்கோ...
செத்தா எப்படி இருக்க முடியும்?
.3. தேங்காய் ,பழம் ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கிறாயா?
இல்ல அய்யரே..யாராவது வீதில தேங்காய் உடைச்சா பொறுக்கறதோட சரி...
நாயே நாயே,, அப்புறம் எதுக்கு கோயிலுக்குள்ள வந்தே..போ போ வீதிக்கே போ
4. உன் பேரென்ன?
கோட்டி
ஓம் கோட்டியாஹியே நமஹ...
சாரி ,நமஹ கிடையாது.. வெறும் கோட்டி மட்டும்தான்.
ஹய்யோ... உன் ராசி என்ன?
கன்னி ராசி...
நட்சத்திரம்?
வால் நட்சத்திரம்.
5. டேய்..அவங்கவங்க குழந்தையை கோயிலுக்கு நேர்ந்து விடுவாங்க..உன்னை டீக்கடைக்கு நேர்ந்து விட்டாங்களா? எப்போ பாரு டீக்கடையிலேயே இருக்கியே...
6. நீ ஏண்டா என்னை அடிச்சே...?
நீ இப்போ சைட் அடிச்சியே..அவ என் தங்கச்சிடா..
ஓ மச்சானா?
7. பண்றது வாத்தியார் வேலை,செய்யறது பூரா செக்ஸ் டார்ச்சர்.
அய்யா மன்னிச்சிடுங்கய்யா...
தப்பு பண்ற எல்லாருமே நுனி நாக்குல மன்னிப்பை வெச்சுக்கிட்டேதாண்டா தப்பு பண்றாங்க...
8. ஹீரோயின் - ஹலோ..கோட்டி..?நான் வீட்ல தனியாதான் இருக்கேன்,வாங்க ,பேசலாம்.
ஹீரோ - நானும் தனியாதான் இருக்கேன்,இப்படியே பேசு..
ஹீரோயின் -அய்யோ மரமண்டை...வந்தா கிஸ் கிடைக்கும்.
9. ஹீரோயின் - ஏய் ,என்ன பண்ணுனே இப்போ..?
ஹீரோ - முத டைம் கட்டிப்பிடிக்கற அனுபவமா? அதான் வெட்கம்..
ஹீரோயின் - அப்போ நான் இதுக்கு முன்னால 5 பேரை கட்டிப்பிடிச்சிருக்கேனா?எனக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்...
10. ஹீரோ - டியர், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் ,படிக்கறேன் கேளு...
பூமி சுத்தலை நான் .சுத்தறேன்.மழை பெய்யலை ஆனா நான் நனையறேன்..
ஹீரோயின் - முடியல
ஹீரோ - என்னால முடியும்.
சோப்ளாங்கி மாதிரி இருக்கும் ஹீரோ இடைவெளை வந்ததும் பாட்ஷா ரேஞ்சுக்கு ஃபைட் பண்ணுவது ஓவர். (தனுஷை விட ஒல்லி)சாய்குமார்- யுவராணியின் நடிப்பு கனகச்சிதம்.
ஒளிப்பதிவு,இசை ,எடிட்டிங்க்,ரீஇ ரெக்கார்டிங்க் போன்ற டெக்னிக்கல் அயிட்டங்கள் எபவ் ஆவரேஜ்.2 பாடல்கள் தேறுகின்றன. படத்தில் செலவு ஏதும் இல்லை என்பதால் ஹீரோ கம் இயக்குநருக்கு இந்தப்படம் ஒரு வெற்றிப்படமே...
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே
ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் பி செண்ட்டர்களில் 20 நாட்கள் சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.
டிஸ்கி 1 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக
32 comments:
VADAI
என்ன சீபி குடல் அறும் போல இருக்கே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
10. ஹீரோ - டியர், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் ,படிக்கறேன் கேளு...
பூமி சுத்தலை நான் .சுத்தறேன்.மழை பெய்யலை ஆனா நான் நனையறேன்..
ஹீரோயின் - முடியல
ஹீரோ - என்னால முடியும்.///
இது நம்ம செல்வா பேசுற மாதிரி இருக்குல்ல... ஒரு வேல இந்த படத்துக்கு செல்வாதான் வசனமோ.......
arthikkumar said...

பங்கு கரக்ட்டா சொன்னே
பாஸ் அப்ப படம் பார்க்கலாமா
எழுதியிருக்கும் விதம் படம் பார்க்க தூண்டுகிறது
நகைச்சுவை ந்னு லேபிள்?
//
செத்த இருங்கோ...
செத்தா எப்படி இருக்க முடியும்?
//
ஹா ஹா ஹா.......
ஹா ஹா ஹா.. படத்தில் உள்ள காமெடி எல்லாம் ஷேர் பண்ணினதுக்கு தேங்க்ஸ்.. :-))
என்ஜாய் பண்ணி படித்தேன்.. :-)
நல்ல பகிர்வு..
பிகருங்களை கூட்டிட்டு பொய் கார்னர் சீட்டுல உக்காந்து பாக்குறதுக்கு பொருத்தமான படம்தானே...
இத்தனை படங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...
// எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 //
வாய்ப்பே கிடையாது...
//ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் என்ன படம் ஓடுகிறது என்ற பேப்பர் கட்டிங்க்ஸ்ஸின் தொகுப்புதான் என்பது தெரிய வரும்போது செம காமெடி.//
உங்ககிட்ட இருக்கறதவிட அதிகமா வச்சிருக்காரா..?! :-))
//படம் முழுக்கவே டீசண்ட்டாக வருவது அழகு.//
தம்பி வட வரல ச்சீ..ஹீரோயின் படம் போடல..!!ஹி.ஹி..ஹி...
ஹி.ஹி..ஹி.. ஏதோ தமிழ்ச்சமூகத்திற்கு நம்மால முடிஞ்ச சேவை..!!
ரொம்ப டேங்ஸ்..!!
A செண்டர்ல 30 நாளா? ஒரு நாளு கூட தாண்டல பொட்டி ரிட்டர்ன்ஸ்!!
karthikkumar said...
VADAI
ada
Delete
Blogger ம.தி.சுதா said...
என்ன சீபி குடல் அறும் போல இருக்கே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
January 3, 2011 7:48 PM
hi hi hi
karthikkumar said...
10. ஹீரோ - டியர், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் ,படிக்கறேன் கேளு...
பூமி சுத்தலை நான் .சுத்தறேன்.மழை பெய்யலை ஆனா நான் நனையறேன்..
ஹீரோயின் - முடியல
ஹீரோ - என்னால முடியும்.///
இது நம்ம செல்வா பேசுற மாதிரி இருக்குல்ல... ஒரு வேல இந்த படத்துக்கு செல்வாதான் வசனமோ.......
January 3, 2011 7:52 PM
hi hi hi i think also while c ing the film
dineshkumar said...
arthikkumar said...
10. ஹீரோ - டியர், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் ,படிக்கறேன் கேளு...
பூமி சுத்தலை நான் .சுத்தறேன்.மழை பெய்யலை ஆனா நான் நனையறேன்..
ஹீரோயின் - முடியல
ஹீரோ - என்னால முடியும்.///
இது நம்ம செல்வா பேசுற மாதிரி இருக்குல்ல... ஒரு வேல இந்த படத்துக்கு செல்வாதான் வசனமோ.......
பங்கு கரக்ட்டா சொன்னே
January 3, 2011 8:10 PM
jha haha
Delete
Blogger dineshkumar said...
பாஸ் அப்ப படம் பார்க்கலாமா
January 3, 2011 8:11 PM
m m in t v only
Delete
Blogger பார்வையாளன் said...
எழுதியிருக்கும் விதம் படம் பார்க்க தூண்டுகிறது
January 3, 2011 8:33 PM
thanx
Delete
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...
நகைச்சுவை ந்னு லேபிள்?
January 3, 2011 9:22 PM
because 1st half comedy
வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
செத்த இருங்கோ...
செத்தா எப்படி இருக்க முடியும்?
//
ஹா ஹா ஹா.......
hi hi
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ஹா ஹா ஹா.. படத்தில் உள்ள காமெடி எல்லாம் ஷேர் பண்ணினதுக்கு தேங்க்ஸ்.. :-))
என்ஜாய் பண்ணி படித்தேன்.. :-)
நல்ல பகிர்வு..
thnax aanadhi
Delete
Blogger Philosophy Prabhakaran said...
பிகருங்களை கூட்டிட்டு பொய் கார்னர் சீட்டுல உக்காந்து பாக்குறதுக்கு பொருத்தமான படம்தானே...
January 4, 2011 4:55 AM
hi hi
Delete
Blogger Philosophy Prabhakaran said...
இத்தனை படங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...
January 4, 2011 4:55 AM
secret. hi hi . op to office
Philosophy Prabhakaran said...
// எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 //
வாய்ப்பே கிடையாது...
let c
// எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 //
வாய்ப்பே கிடையாது...
January 4, 2011 4:56 AM
Delete
Blogger சேலம் தேவா said...
//ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் என்ன படம் ஓடுகிறது என்ற பேப்பர் கட்டிங்க்ஸ்ஸின் தொகுப்புதான் என்பது தெரிய வரும்போது செம காமெடி.//
உங்ககிட்ட இருக்கறதவிட அதிகமா வச்சிருக்காரா..?! :-))
//படம் முழுக்கவே டீசண்ட்டாக வருவது அழகு.//
தம்பி வட வரல ச்சீ..ஹீரோயின் படம் போடல..!!ஹி.ஹி..ஹி...
January 4, 2011 6:02 AM
thnx for rememberence
//ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் என்ன படம் ஓடுகிறது என்ற பேப்பர் கட்டிங்க்ஸ்ஸின் தொகுப்புதான் என்பது தெரிய வரும்போது செம காமெடி.//
உங்ககிட்ட இருக்கறதவிட அதிகமா வச்சிருக்காரா..?! :-))
//படம் முழுக்கவே டீசண்ட்டாக வருவது அழகு.//
தம்பி வட வரல ச்சீ..ஹீரோயின் படம் போடல..!!ஹி.ஹி..ஹி...
January 4, 2011 6:02 AM
Delete
Blogger சேலம் தேவா said...
ஹி.ஹி..ஹி.. ஏதோ தமிழ்ச்சமூகத்திற்கு நம்மால முடிஞ்ச சேவை..!!
vaazka
சேலம் தேவா said...
ரொம்ப டேங்ஸ்..!!
ok ok
இப்படியெல்லாம் படம் வந்திருக்கா இப்போ!!..
உண்மையிலயே உங்களப் பாராட்டனுங்க.. ரொம்ப பொறுமைசாலி நீங்க..
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க..
Post a Comment