தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.
வேண்டாம் என்று நீ
விலகிப்போனாலும்
காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி
உன் சுவாசத்தில் நிரம்புவேன்.
நான் பார்க்கின்ற
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்
அங்கே குடியேற குறுக்கு வழியோ ,
என் முகம் அதில் பிரதிபலிக்க
விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.
திட்டமிட்ட பயணத்திலோ,
எதேச்சையாகவோ
நம் சந்திப்பு ஒருமுறை
நிச்சயம் நிகழும்.
அப்போது
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
26 comments:
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்
அங்கே குடியேற குறுக்கு வழியோ ,
என் முகம் அதில் பிரதிபலிக்க
விஞ்ஞான முறையோ தேடுகிறேன்//// அருமை :)
Nice
கலக்கல் கவிதைகள் தல....நம்ம புதுக்கடைக்கும் வந்து பின்னூட்டமிட்டு, பின்தொடர்பவராக சேர்ந்ததுக்கு நன்றி.....
"பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன."
கவிதையைவிடவும்
என்னை கவர்ந்த வரிகள்
நன்றி
//கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு///
அருமையான கவிதை....
எப்போ பதிவு போடரீங்கன்னு தெரியவில்லை.. ஒர் மெயில் பிளீஸ்.
அருமையான கவிதை....
நீங்க குமராயிருக்கேக்க இப்படிய சுட்டிப் பையனா இருந்திங்க.. ஹ..ஹ..ஹ..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
இன்றைக்கு உங்களால் நினைத்தாலும் இவ்வளவு அழகாக எழுத முடியாது செந்தில்.. கடந்து வந்து விட்டீர்கள்.. அந்த அழகு நினைவுகளை..ஹ்ம்ம்.. வேறு தளத்தில் இருக்கிறீர்கள்..
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
ஆ.... ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ்! கவிதை கற்பனையா? அல்லது........!
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
ஆ.... ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ்! கவிதை கற்பனையா? அல்லது........!
Nice c.p.sir..
தல உண்மையிலேயே அருமையாகத்தான் இருக்கிறது, இதுல என்ன குறை இருக்குது?
//நான் பார்க்கின்ற
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்//
சில நேரம் ஒரே நேரத்தில் வேறு வேறு இடத்தில் இருந்தும் ஒன்றாக பார்த்திருக்கலாம்...அப்போது அதில் ஒருவர் முகம் மற்றொருவருக்கு தெரிஞ்சிருக்கலாம் !! :))
//அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.//
உண்மை.
கவிதை ரசனை !
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
....very nice. :-)
அண்ணே அருமை கவிதனே
இத போய் நல்ல இல்ல ஏனே சொல்றீங்க
///உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.///
உண்மையான வரிகள், நல்ல கற்பனை.
.................
வெங்காயமா? இல்ல, தங்கமா?
" விட்டுச்சென்றவளுக்கு விண்ணப்பம்”
தலைப்பே கவிதைதான்..!!
------------------------------------
குத்துங்க மொதலாளி.. குத்துங்க...!!
"அட்ரா சக்க" கவிதைய சொன்னேன்
என்ன இது புதுசா இருக்கு... இப்படி எல்லாம் கூட எழுதுவீங்களா...
குத்துங்க மொதலாளி.. குத்துங்க...!!
சிபி...நல்லாவே இருக்கு கவிதை.இடைக்கிடை கவிதையும் பதிவிடலாம் !
சி பி கவிதை எல்லாம் எழுதுறீங்க எங்கயாவது மாட்டிகிட்டீங்களா .....?
///////தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது ////////
ஏன் இந்த வெளம்பரம்?
கவிதை ரொம்ப நல்லா இருக்கறதப் பார்த்தா பெரிய ஆட்டோகிராப் புக்கே இருக்கும் போல?
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
என்று கவித்துவாமாக கேட்டிருக்கிறீர்கள்..
.இது அபத்தமா?
இல்லை அற்புதம்.
Post a Comment