ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான்
கதை..(கே எஸ் அதியமான் டைரக்ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை.
படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது.
அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது இளமை கூடுதல் போனஸ்.(இமேஜில் தேடிப்பார்த்தால் அவரது ஃபோட்டோ கூகுளில் கிடைக்கல)
டென்த் படிக்கும் மாணவர்களின் காதல் கதை என்பதால் இது அடலசண்ட் லவ்வை உற்சாகபடுத்துவதுபோல் அல்லாமல் டீன் ஏஜ் காதல் செல்லாது ..ஆகாது என்பது போல் நீதி உணர்த்திய இயக்குநர் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரைக்கதையில் ஜால வித்தை காட்ட தவறி விட்டார்.
மெயின் கதையின் ஹீரோயின் இவர்தான். பார்ட்டி படு சுமார்தான். ஆனால் இவரது அம்மாவாக வருபவர் செம கலர் + ஷைனிங்க். ( அது என்னமோ தெரியல..ஹீரோயின் தங்கையா வர்றவரோ, தோழியா வர்றவரோ நம்ம கண்ணுக்கு கலக்கலா தெரியறாங்க..( சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்..)
படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வர்ற டூயட்ல ஹீரோயின் பல கிஃப்ட்களை ஹீரோவுக்கு கொடுக்க ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் குடுக்க அதை ஓப்பன் பண்ணி பார்த்தால் அந்த நகைப்பெட்டி காலி,, செம நக்கலோடு டூயட் தொடர்கிறது..
காட்டு செடிக்கு காவல் கிடைச்சிடுச்சு என தொடங்கும் பாடல் ஃபிளாஷ்பேக்கில் வரும் காதலை அழகியலோடு அணுகும் அற்புத தொடக்கம்.இயக்குநர் கவிநயம் மிக்கவர் என்பதற்கு அந்த ஒரே ஒரு பாடலே போதும்.
அந்தப்பாட்டில் ஆசிரியர் மாணவிக்கு தண்டனையாக முட்டி போட வைப்பது பழசு என்றாலும் அவள் அரிசி பரப்பிய தரையில் முட்டி போடுவது புதிய கிராமக்கலாச்சாரப்பதிவு.
அட
டென்த் படிக்கும் பெண்ணாக வருபவர் சிறுமியாக வரும் சீனிலும் சரி, வயதுக்கு வந்த பருவக்குமரியாக வரும்போதும் சரி அவர் காண்பிக்கும் பாடி லேங்குவேஜ் மாற்றம் அபாரம்.. (இப்போ இருக்கற முன்னணி ஹீரோயின்கள் கவனிக்க.)
களவாணி படத்தில் எல் சி 311 கூட்டு என்பதை மகேஷ் என மாற்றுவது மாதிரி இதிலும் 16 என்ற எண்ணை I G கற்பிதம் செய்வது அழகு.. ( ஐ - இளவரசி ஜி -கோபி
ஆனால் இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?
பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.
படத்தின் வசனகர்த்தா பட்டையை கிளப்பிய இடங்கள்
1. அவசர அவசரமா வாழ்ந்துட்டு சீக்கிரமா சாகறதுக்காகத்தான் மனுஷன் படைக்கப்படுகிறானா?
2. ஹீரோயின் - ஹலோ...
ஹீரோ - எஸ் .. கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்...
ஹீரோயின் - விளையாடாதீங்க.. நான் தான்.
3. என் ஃபியூச்சரை டிசைடு பண்ண பேரண்ட்ஸா உங்களுக்கு எப்படி ரைட்ஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ரைட்ஸ் இருக்கு.
4. டே.. மச்சான்.. இந்து காலேஜ்ல டி சி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா..
இப்போ என்னடா பண்றது?
நீயும் டி சி வாங்கிட்டு போயிடு.. அதுதான் காதலுக்கு மரியாதை.
5. பீச்ல அலை வந்து மோதுதே அது மாதிரி தான் காதலும்..
டேய். அவன் இதுவரைக்கும் பீச்சுக்கே போனதில்லையா? இப்படி விளக்கறே.. ( நையாண்டி டூ டி ஆர்?)
6. அவங்க ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க...
எப்படி சொல்றே..?
கார் வெச்சிருக்காங்களே...?
7. அடப்பாவி.. இந்த ஆண்ட்டி யார்டா? எப்போ கரெக்ட் பண்ணுனே.?எங்க கிட்டே சொல்லவே இல்ல..?
டேய்.. கொல்லாதீங்கடா..இது என் ஆளோட அம்மாடா..
ஓ சாரி .. நிஜமான ஆண்ட்டியா?
8. எல்லாமே உன்னாலதான்னு நான் சொல்ற மாதிரி என் கிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆனா என்னாலதான்னு நீ சொல்ற மாதிரி உன் கிட்டே எதுவுமே இல்லையா?
9. என்னை உனக்கு பிடிக்கலைன்னு தெரியும்.. இருந்தாலும் இப்படி என் பைக் பின்னால நீ உக்காந்து வர்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
10. டேய், சொந்த மாமன் மகளை பைக்ல கூட்டிட்டு போறது பெரிய விஷயமாடா..இந்த அலட்டு அலட்டறியே..?நாங்க எல்லாம் சினிமாக்கே கூட்டிட்டு போயிருக்கோம்..
எது அந்த 5 வயசு பொண்ணைத்தானே...
11. என்னடா..ஃபோட்டோ எடுக்கறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருக்கே..?வேற டிரஸ் போட்டுட்டு வா போ..
என் கிட்டே இருக்கறதே இந்த ஒரு டிரஸ்தான்,அதுவும் நீ எடுத்துக்குடுத்ததுதான்.
12. மாலைக்கும் ,கழுத்துக்கும் என் கழுத்து நின்னுச்சுன்னா அது உனக்கு மட்டும்தான்.
13. ஊரே கூடி தேர் இழுத்தாலும் தேர் போய் சேரும் இடம் கோயில்தான்..என் கோயில் என் ஆள் கோபிதான்.
14. காதல்ல தோத்துப்போன யாரோ ஒருத்தரோட கதையைப்படிச்சாஎங்க மனசு மாறிடுமா?
15. காதலிக்காத ஒரு ஆளைக்காட்டுங்க.. நான் காதலிக்கறதை விட்டுடறேன்னு சொல்றியே...அப்படிக்காதலிச்சு கல்யாணம் பண்ணுனவங்க சந்தோசமா இருக்கறதைக்காட்டு...பார்ப்போம்.. விரல் விட்டு எண்ணிடலாம்.
16. மரணம்கறது ஒரு சம்பவம்..ஆனா என்னைப்பொறுத்தவரை நம்ம நினைவுகள்ல இருந்து நம்ம மனசுக்கு பிடிச்சமானவங்க எப்போ போறாங்களோ (பிரியறாங்களோ) அதுதான் மரணம்.
17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..
தமிழ்ப்படம் படத்துல ஹீரோவா நடிச்ச ஷிவா இந்தப்படத்துல சீரியஸ் ஹீரோவா நடிக்க வேண்டிய கட்டாயம். ஆனா அவர் சும்மா கெஸ்ட்
ரோல் மாதிரிதான்.மதுஷாலினிதான் ஹீரோயின்.அவங்க நடிப்பும் சுமார்தான்.
கிளைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் டாப்.ஆனால் என் வருத்தம் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டார் என்பதுதான்.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
எத்தனை நாள் ஓடும்? ஏ செண்ட்டர்களில் படம் ரிலீஸ் ஆன மாதிரியே தெரியல.. 25 நாள் ஓடலாம். காதலர்கள் பார்க்கலாம்.
39 comments:
நல்ல அலசல்....
ஹைய்யா வடையும் எனக்கேதான்.....
2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman//
தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
வந்துட்டேன்! இருங்க ஒரு சில்லறை வேலை இருக்கு! முடிச்சிட்டு வந்துடறேன்!
உங்களுக்கு ஒகேவா, கேபிள் சங்கர் சார் கிழிச்சு இருந்தார், நல்ல விமர்சனம் தல ...
படம் ரீலிஸ் செய்யப்பட்டதை இதன் மூலமே அறிந்தேன்
உலவுல சேர்த்திடுங்க பாஸ்! ஓட்டுப் போடணுமில்லையா?
சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்///
Sema comedy. O this is comedy film?
ரொம்பவும் ஆழமான அலசல்.
விமர்சனம் படத்தைப் பார்க்கணும்போல இருக்கு சிபி !
நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..//
ஹி... ஹி... ஹி.. செம காமெடி!
எப்படிங்கணா ..உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்குது ....உங்க பதிவை பார்த்துதான் இந்த படம் வந்திருக்கிறது தெரிகிறது.
நல்ல விமர்சனம் ..படம் எப்படின்னு தெரியல
விமர்சனம் ஜோர்..!!
MANO நாஞ்சில் மனோ said...
நல்ல அலசல்....
thanx mano
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ஹைய்யா வடையும் எனக்கேதான்..
take it take it
sakthistudycentre-கருன் said...
2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman//
தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
s . coming..
Delete
Blogger மாத்தி யோசி said...
வந்துட்டேன்! இருங்க ஒரு சில்லறை வேலை இருக்கு! முடிச்சிட்டு வந்துடறேன்!
haa haa r u a conducter? ha ha
Delete
Blogger இரவு வானம் said...
உங்களுக்கு ஒகேவா, கேபிள் சங்கர் சார் கிழிச்சு இருந்தார், நல்ல விமர்சனம் தல
i am ok.. but the audience not ok ha ha ha
Speed Master said...
படம் ரீலிஸ் செய்யப்பட்டதை இதன் மூலமே அறிந்தேன்
hi hi hi tks
மாத்தி யோசி said...
உலவுல சேர்த்திடுங்க பாஸ்! ஓட்டுப் போடணுமில்லையா?
s joined
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்///
Sema comedy. O this is comedy film
hi hi hi
ஹேமா said...
ரொம்பவும் ஆழமான அலசல்.
விமர்சனம் படத்தைப் பார்க்கணும்போல இருக்கு சிபி !
thanx hema
மாத்தி யோசி said...
நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..//
ஹி... ஹி... ஹி.. செம காமெடி!
hello THAT IS A SERIOUS DIALOGUE.. Y R U LAUGHED?
கோவை நேரம் said...
எப்படிங்கணா ..உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்குது ....உங்க பதிவை பார்த்துதான் இந்த படம் வந்திருக்கிறது தெரிகிறது.
நல்ல விமர்சனம் ..படம் எப்படின்னு தெரியல
HI HI AVEREGE FILM
Blogger Srini said...
விமர்சனம் ஜோர்..!!
THANX SRINI
விமர்சனம் அருமை.. DVD வந்துடுச்சா!!
ஷிவாவுக்காகவாவது இந்த படத்தை பார்க்கலாம்னு இருக்கேன்..
நண்பா... தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்க வாருங்கள்...
Sathishkumar said...
// ஷிவாவுக்காகவாவது இந்த படத்தை பார்க்கலாம்னு இருக்கேன்.. //
அந்த மாதிரி ஏதாவது எண்ணம் இருந்தா தயவு செய்து மாத்திக்கோங்க... முடிஞ்சா ஒருமுறை கேபிளோட விமர்சனத்தை படிச்சிட்டு போங்க...
மாத்தி யோசி said...
நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..//
ஹி... ஹி... ஹி.. செம காமெடி!
hello THAT IS A SERIOUS DIALOGUE.. Y R U LAUGHED?
ஐயோ பாஸ்! வேலைக்குப் போற அவசரத்துல மேலோட்டமாப் படிச்சிட்டு கமெண்டு போட்டுட்டேன்! அதான் சீரியஸ் டயலாக்குக்கு சிரிச்சுட்டேன்! இப்போ பதிவ முழுமையா படிச்சிட்டேன்!
பாஸ்! இப்போ அங்க காலை நான்கு மணி நீங்க தூங்கிட்டு இருப்பீங்க னு நெனைக்கிறேன்! உங்க ப்ளாக் ல இப்போ என்னுடன் சேர்த்து அஞ்சு பேர் படிச்சுட்டு இருக்கோம்! சீக்கிரம் எந்திரிங்க பாஸ்! குட் மார்னிங்! ஹாவ் எ நைஸ் சண்டே!
padam mokkaiyaa..
பாடல்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே சிபி? யுவன்சங்கர் ராஜா ராக்ஸ்!
கேபிள் அண்ணாச்சி நல்லா இல்லன்னு சொல்லியிருந்தாருன்னு நினைக்கிறேன். நீங்க பரவாயில்லை என்பது போல் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அவரவர் பார்வையில் உருவாகும் கருத்து இது.
நல்ல விமர்சனம்.
விமர்சனம் நல்லாருக்கு.... !
பிகரும் நல்லாத்தான் இருக்கு, என்ன மூஞ்சிதான் கொஞ்சம்... பரவால்ல...!
//////17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..//////
நெஜமாவே டாப்தான்!
இந்த மாதிரி அண்டர் ஏஜ் லவ் வர்ர படங்களை டிஸ்கரேஜ் பண்ணனும் சிபி (என்னதான் மெசேஜ் சொல்றேன் நீதி சொல்றேன்னாலும்), குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருது. ஸ்கூல் லவ், சின்ன வயசுல இருந்தே பழக்கம் ஈர்ப்பு இருக்கறதா காட்டுறது... எல்லாமே தவிர்க்கப்பட வேண்டும்!
Erodela entha theatrela padam paartheenga?
Theatre details missing thala...
Post a Comment