Friday, January 07, 2011

கேப்டன் போடும் கணக்கு

ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.
இது பழைய கணக்கு.இப்போது இவரின் ஓட்டு 12.8 %.தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான கட்சிகள் பல வருடங்களாக கட்டிக்காத்து வந்த தொண்டர்கள்,மக்கள் ஆதரவு,ஓட்டு வங்கி இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் அசைத்துப்பார்க்க ஆயத்தமானவர்.
கே.பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சிவாஜி போன்றவர்கள் சினிமா புகழில் வந்த செல்வாக்கை அரசியலில் புகுத்தி தனிக்கட்சி தொடங்கிய போது மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.ஆனால் விஜய்காந்த் தனி ரகம்.

தி.மு.க,அ.தி.மு.க 2 கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என துணிந்து கருத்து கூறினார்.இவர் ஒரு குடிகாரர் என ஜெ கூறிய போது அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா எனக்கேட்டு அதிர வைத்தார்.
இவர் போகும் இடங்களெல்லாம் கூட்டம் கூடினாலும் ,கலைஞர் சொல்வது போல் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
 எம் ஜி ஆர்க்குப்பிறகு எந்த நடிகரும் அரசியலில் வென்ற சரித்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார்.விதிவிலக்காக விஜயகாந்த் திகழ ஒரு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.பொதுவாக நடிகர்களின் 100வது படம் ஹிட் ஆவதில்லை.(விதிவிலக்கு எம்.ஜி ஆரின் ஒளிவிளக்கு,சிவாஜியின் நவராத்திரி)ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர்,கமலின் முதல் சொந்தப்படமான ராஜபார்வை,சத்யராஜின் சொந்தப்படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை 3 படங்களும் அவரவரின் 100வது படம்தான்.3மே தோல்விப்படங்கள்.ஆனால் விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம்.அதற்கும்,அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.
நடுநிலையாளரும்,சிறந்த அரசியல் நையாண்டி பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் ஒரு வாசக்ரின் கேள்விக்கு அளித்த பதில் சிந்திக்க வைக்கிறது.
கே- 2011 சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க + ம தி மு க + காங்கிரஸ்+ தே மு தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தால் அந்தக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப- அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது கூட்டணி அல்ல.அதுதான் அசெம்ப்ளி.
அவரது கருத்து சரிதான்.ஏனெனில் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேஷன் இருக்கிறது.ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு உண்டு.

அ.தி.மு.க 26 %,  தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு.கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதால் சோ நினைப்பது போல் ஒரு கூட்டணி அமைக்க விடமாட்டார்.
விஜயகாந்த் நினைப்பது என்ன?தி மு க கூடவோ,அ.தி.மு.க கூடவோ கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 25 சீட் தான் கிடைக்கும்.அதுவே காங்கிரஸ் கூட தனியாக கூட்டணி வைத்தால் 50 % சீட் நிச்சயம்.கட்சியை வளர்த்து விடலாம்.
ராகுல்காந்தி அதேபோல் காங்கிரசை தனிப்பெரும் சக்தியாக வளர்க்க நினைப்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ராகுல் விஜய்காந்த் கூட்டணியில் ஆர்வமாக உள்ளார்.பொதுவாக ஜெ யாரையும் மதிக்க மாட்டார் என்ற பேச்சு முத்துசாமி கட்சியை விட்டு விலகியபோது நீர்த்துப்போனது.எப்போதுமில்லாத அதிசியமாக “எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் என்னை சந்திக்கலாம் எனக்கூறி அ தி மு க தொண்டர்கள் மனதில் ந்ம்பிக்கையை விதைத்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.விஜயகாந்த் தனியாக நின்றதால் கிடைத்த 12% ஓட்டுகள் தி மு க வுடனோ,அ தி மு க வுடனோ கூட்டணி வைத்தால் அதே அளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இப்போது இருக்கும் நிலவரப்படி விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூடணி காண்பதே அவரது கட்சி வளர்ச்சிக்கு நல்லது.ஆனால் 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் அனுபவம் நிறந்த கலைஞர் அதற்கு வழி விடுவாரா என்பதில்தான் கேப்டனின் எதிர்காலமும் ,தமிழக அரசியலின் போக்கும் தீர்மானிக்கப்படும்.
பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.

31 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

comedy with real.nice post.

சௌந்தர் said...

இவர் யார் கூடவும் கூட்டணி வைக்காமல் இருந்தால் இவர் கட்சிக்கு முன்பை விட வாக்குகள் மற்றும் அதிக தொகுதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது

Unknown said...

வாக்களிச்சாச்சு..

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏதாவது கட்சியோடு கூட்டணி வைத்தாலாவது ஒரு நாலஞ்சு இடமாவது ஜெயிக்கலாம். ஆனால், தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி என்றால் பல்புதான் கிடைக்கும்

அஞ்சா சிங்கம் said...

அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.............////////////////////////////

அது அவருக்கு நல்லது நமக்கு ?
விருத்தகிரி மாதிரி படங்கள் வராமல் இருக்கும் .

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள் நல்ல இருக்கு

Ram said...

எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது.. விஜயகாந்த் அரசியல் மாற்றத்தை நாசூக்காக கொண்டு வந்துவிட்டார்.. நடிகர் திலகத்தின் 100வது படமும் வெற்றி தான்.. அவரும் தேர்தலில் நின்று அடிவாங்கியவர் தான்.. அதேபோல் ஆகிவிடாதா.?? காங்க்ரஸுடன், தே.மு.தி.க., கூட்டணி ஒரு அம்சமான விசயம்.. முன்பு கொஞ்ச சதவீத ஓட்டுகள் பிரித்தெடுத்த கேப்டன் இதுமூலம் நிறைய ஓட்டுகளை பிரித்தெடுக்கமுடியும்.. யப்பா.!!! இவனுங்க அலப்பறை தாங்க முடியலப்பா...

பொன் மாலை பொழுது said...

சினிமாகாரர்கள் அரசியலில் தலையெடுப்பது எனக்கு உடன்பாடு அல்ல. நானும் மற்றவர்களைப்போலவே இவரையும் நினைத்திருந்தேன். கட்சி ஆரம்பித்தபோதே தன் மனைவி, மைத்துனர் என்று தான் குடும்ப சகிதமாக ஆரம்பித்தது கேலிகூத்தாக இருந்தாலும். இன்றைய நிலையில் படித்தவர்கள் விபரம் தெரிதவர்கள் பங்கெடுக்க தயங்கும் அரசியலில் இவர் மிக்க மன தைரியத்துடன் எதிர்கொள்வது சற்று யோசிக்க வைக்கிறது. கருணாநிதி .ஜெயலலிதா இவர்களை எதிர்ப்பதில் இவருக்கு தயக்கமே இல்லை. நீங்கள் சொல்வதுபோல ஒரு வேலை காங்கிரசுடன் கூட்டணி சேரும் எண்ணத்தில் இருப்பாரோ என்னவோ?

இப்போது உள்ள சூழலில் காங்கிரசுக்கு நமவர்கள் ஒட்டு போடுவார்களா என்ன? இதனுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தோற்றாலும் கூட இவரின் தனிப்பட்ட நிலை இங்கு இன்னமும் வலுவாகுமோ என்னவோ?

Speed Master said...

இவர் யார் கூடவும் கூட்டணி வைக்காமல் இருந்தால் இவர் கட்சிக்கு முன்பை விட வாக்குகள் மற்றும் அதிக தொகுதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது


ஆனால் இன்னும் பல மாவட்டத்தில் நல்ல reach இல்லை

idroos said...

ஆட்டோவுக்கு பயந்து எழுதிய பதிவா
உங்களின் வலையுலக பிரச்சாரத்தின் மூலம் கேப்டன் தமிழக முதல்வர் ஆனால் உங்களுக்கு வார்ட் கவுன்சிலர் பதவி தரப்படலாம்.

--இப்படிக்கு
கேப்டனின் முரட்டுப்பக்தன் from
காங்கோ!

NKS.ஹாஜா மைதீன் said...

சோ நடுநிலைவாதி அல்ல.....அவர் அதிமுக அனுதாபிதான்....

கேப்டன் நிச்சயம் பிரகாசிப்பார்....அப்பத்தான் படத்தில் நடிக்க மாட்டார்....

THOPPITHOPPI said...

பொறுத்திருந்து பார்ப்போம்

dheva said...

//ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.///

இந்த முன்னுரையும்.........

//பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி //

இந்த பின்னுரையும்................செம பஞ்ச்........!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

தங்கராசு நாகேந்திரன் said...

100 வது படம் ஓடினது செல்வமணியால விசயகாந்தால அல்ல,

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
யார் வந்தாலும் மக்களாட்சி உறுதியில்லை என்பது உறுதியாகிறது

தினேஷ்குமார் said...

பாஸ் ஒரு சின்ன விண்ணப்பம் நம் நண்பர் தமிலழ்க்காதலன் கவிதிறமையில் வல்லவர் பதிவுலகில் மட்டும் அவர் கவி ஆளாது தமிழ் எங்கும் பரவ வேண்டும் அதற்கான வழியை தாங்கள் கூறுவீர்கள் என என் எண்ணம் பாட்டெழுதும் புலமை அங்கிகாரமில்லா தவிக்கும் அவருக்கு http://ithayasaaral.blogspot.com/2011/01/1.html
ஓர் வழி தேடுகிறேன் கிடைக்குமா உங்களையும் தான் பதிவர்களே சினிமா துறையில் உள்ளவர்கள் முன்வந்து உதவலாமே தமிழ் வாழ தரணி செழிக்க அவர் புலமை ஊரறிய வேண்டும் நண்பர்களே
9786809352

Unknown said...

தலைவரே இவரால் எந்த அரசியல் மாற்றத்தையும் தரமுடியாது...

தமிழ்மகன் said...

கக்கு - மாணிக்கம் சொல்லுவது போல // இப்போது உள்ள சூழலில் காங்கிரசுக்கு நமவர்கள் ஒட்டு போடுவார்களா என்ன? // கண்டிப்பா இது யோசிக்க பட வேண்டிய கேள்வி,காரணம்

பீகாரில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி வெறும் 4 மட்டும் தான். ஆகையால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவு உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் & இலங்கை தமிழர்கள் பட்ட வேதனைகள் ( இதை தமிழ்நாட்டில் உள்ள யாராலும் எளிதில் மறக்க முடியாது ) ஆகியவை காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவை தமிழகத்தில் தரும்.

விஜயகாந்த்க்கு உள்ள ஒரே பிளஸ் ( திமுக மற்றும் அதிமுக மீது மக்களுக்கு உள்ள அதிர்ப்தி தான் )

ஆனால் 1.விஜயகாந்த் ஒருவேளை திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு சென்று விட்டால்?
2.காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் தோற்றாலும் கூட இவரின் தனிப்பட்ட நிலை இங்கு இன்னமும் வலுவாகுமோ என்னவோ?

இந்த 2 கேள்விவிக்கும் பதில் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் தான்.

ILA (a) இளா said...

//பீகாரில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி வெறும் 4 மட்டும் தான்//
4 வேணாம்..தனியே நின்னு தமிழ்நாட்டுல ஒன்னே ஒன்னு.. ஜெயிக்கட்டும் மொட்டை போட்டுக்கிறேன்யா(சத்தியமா.. படம் எடுத்து பதிவுலேயே போடுறேன்)

'பரிவை' சே.குமார் said...

சினிமா பகிர்வுகளுக்கு மத்தியில் நீங்கள் கொடுக்கும் நல்லதொரு பகிர்வு நண்பா.

bandhu said...

காங்கிரஸ் மற்றும் தி மு க வின் கூட்டணி உறுதியாக உள்ளது என்று நினைக்கிறேன். தி மு க வை பொறுத்தவரை இது மிக முக்கியமான தேர்தல். தோற்கும் பட்ச்சத்தில், அடுத்த தேர்தல் வரை வாய் சவாடாலில் வழக்கம் போல் வண்டி ஓட்ட கருணாநிதிக்கு வயது இடம் கொடுக்காது என்று நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் அவர் வயது 92 என்னும் பட்சத்தில் அவர் நின்று வெல்வது கடினம் என்றால் , மகன்கள் நின்று வெல்வது நடக்காத காரியம். அதற்காகத்தான் காங்கிரஸ் இடம் முழு சரணடைந்திருக்கிறார் அவர். காங்கிரஸ்-இற்கும் தனியாக நின்று தேர்தலை சந்திக்கும் துணிச்சல் இல்லாததால், வென்று ஆட்ச்சியில் பங்கு வாங்கிவிடலாம் என்று கூட்டணியில் இருக்கிறார்கள்.

மற்றபடி , கருணாநிதி ஒரு சிறந்த ராஜ தந்திரி, ஜெயலலிதாவை யாரும் எளிதாக பார்க்கலாம், விஜயகாந்த் - படத்தை வெற்றியாக்கியவர் அரசியலில் வென்று காட்டுவார், போன்ற நகைச்சுவைகளை ரசித்தேன்

நன்றி!

Philosophy Prabhakaran said...

வழக்கம் போல ஜோக்ஸ் என்று நினைத்துதான் உள்ளே வந்தேன்... ஆனா கலக்கிட்டீங்க...

Philosophy Prabhakaran said...

// அ.தி.மு.க 26 %, தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு //

புள்ளிவிவரங்கள் உண்மையா...? இல்ல சும்மா அடிச்சி விட்டீங்களா...?

மாணவன் said...

பொறுத்திருந்து பார்ப்போம்

மங்குனி அமைச்சர் said...

தி.மு.க விலோ , அ.தி.மு.க புதிதாக இன்மேல் யாரும் கட்சிப் பொறுப்போ அல்லது எம்பி எம்.எல்.ஏ சீட்டு வாங்கிவிடமுதாயது என்ற ஒரு நிலை உருவானபோது இவர் கட்சி ஆரபித்தார் ........ ஆட்சிக்கு வந்தால் .. எப்படியும் ஏதாவது ஒரு சீட்டு வாங்கிவிட முடியும் என்ற ஒரே காரணத்தால் தான் இவர் கட்ச்சியில் பலபேர் உள்ளனர் . தி.மு.க மற்றும் , அ.தி.மு.கவை பிடிக்காததால் தான் இவருக்கு ஒட்டு விழுகின்றதே தவிர இவரை ஆதரிப்பதற்காக இவர் ரசிகர் மன்ற ஒட்டு மட்டுமே விழும் .

எஸ்.கே said...

//பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல...//

ha haa superb!

தறுதலை said...

கோட்டான் என்ன கணக்கு போட்டாலும் ஆப்புதான். தேசிய வியாதிகாரன்கூட கொள்கை என்று உதட்டளவில் வைத்திருக்கிறான். இவன் 'கொள்ளை' ஒன்றே கொள்கை என்று அறிவித்துவிட்டு அரசியல் செய்கிறான்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்- ஜன '2011)

Jayadev Das said...

//அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.// என்ன கண்டுபிடிப்பு இது!! தந்தை பெரியாருக்கே வாத்தியாரா போற அளவுக்கு பகுத்தறிவு இவங்களுக்கு இருக்கும் போல இருக்கே!

Jayadev Das said...

ஜெயலலிதா கூட கூட்டு வைக்கணும்னா சூடு, சொரணை இதெல்லாம் எருமை மாட்டு லெவலுக்கு மட்டுமே இருக்க வேண்டும், சுய மரியாதை கொஞ்சம் கூட இருக்கக் கூடாது.

தமிழ்மலர் said...

கூட்டணி முடிச்சு இந்த மாதமும் அவிழாது போல இருக்கே...
காங்கிரசு - தேமுதிக - பாமக கூட்டணி அமைக்கப்போறதா ஒரு தகவல்.