Saturday, January 22, 2011

3 லைன்ல எழுதிட்டா அது ஹைக்கூவா?

http://www.howtogetridofstuff.com/wp-content/uploads/how-to-get-rid-of-chapped-lips.jpg 
1. உச்சரிக்கும்போது

உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை

காதல்



http://vadakaraivelan.files.wordpress.com/2008/09/currencyjpg.jpg
2. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்

பேங்க் காஷியர்

எண்ணும்  பணம்.



http://upload.wikimedia.org/wiktionary/ta/thumb/3/36/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg/210px-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg
3. கல்லறையே கருவறை

சமாதியில் 

முளைத்த செடி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga8PUz5EgMVlQH-NRxWB94fDkcAJn58NwMe8D2OVK82H0H9yOdNkU1KIpgaiIs7PqlyawxwXgwzNcgT-mB_C85-7fj1wDjtssBi7S6ugHAbNnvGBQehiuPn4jNMO_axUgDVb01wFc11UA/s400/roma.jpg
4.மச்சினியை ரசிக்கையில்

மனைவியின் முகம் ஞாபகம்.

இடமாறு தோற்றப்பிழை.


5.நிழலை விட நீ மோசம்...

இரவில் கூட என் 

பின்னாலேயே வந்து விடுகிறாயே..உன் நினைவுகள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUfHC5tmHLj1GVh-yffNF7zFwIP_dCr4KtwapSW5mLMLwjKFsKG99zJjQXN77Mi98n8NvAD9EhGqsQeQdiAn-zIA5zOaygFTXdbepT3LD326Sm8DYQj_FlKuhKbuQFyqYnQvRbOV7mRo0o/s800/anjali_or_anupama092.jpg
6.   கூட வரும் மனைவி மட்டும் கண்ணகியாகவும்

எதிர்ப்படும் மற்றவர் மனைவிகள் மாதவிகளாகவும்

இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ஆணகள் மனது.

டிஸ்கி 1- ஹைய்யா .. நானும் ஹைக்கூ எழுதிட்டேன்.. இதுதான் முதல்ல வெச்ச டைட்டில் .ஆனா இதைப்படிச்சுட்டு நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு யோசிச்சுப்பார்த்து அந்த கமெண்ட்டையே டைட்டில் ஆக்கீட்டேன்.ஹி ஹி எங்களை எல்லாம் யாரும் இறக்க முடியாது.. நாங்களே இறக்கிக்குவோம்ல..


டிஸ்கி 2 - மேலே உள்ள படங்களில் இருப்பது என் மச்சினியும் அல்ல மனைவியும் அல்ல.. ஆனா அப்படி இருக்க அவங்களுக்கு சம்மதம்னா நமக்கும் சம்மதமே.. ஹி ஹி ....இப்படிக்கு கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போட துடிப்போர் சங்கம்.கவர்மெண்ட் அப்ரூவ்டு ( ரொம்ப முக்கியம்)

33 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

first cut

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம கவிதையும் படிச்சுட்டு கருத்த சொல்லுங்க தல

http://ragariz.blogspot.com/2011/01/blog-post_21.html

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒவ்வொரு ஹைக்கூ(?)வும் அருமை

Unknown said...

இரண்டாவது அருமை.

karthikkumar said...

ரெண்டாவது சூப்பர் சித்தப்பா :)

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு சின்ன சந்தேகம்

3. கருவறையே கல்லறை
சமாதியில்
முளைத்த செடி.////
------------------
கருவறையே கல்லறை
தலைப்பு சரியா?

ஒரு வேளை இப்படி இருக்கணுமோ....
கல்லறையே கருவறை

சக்தி கல்வி மையம் said...

இது தான் அதுவா?

அருமை..
என்னதும் முத வோட்டு மிஸ்ஸூ..
ஆனாலும் போட்டும்மில்ல...

ரஹீம் கஸ்ஸாலி said...

கல்லறை தானே செடி வளர்வதற்கு கருவறையாக இருக்கிறது அதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

கரெக்ட்..நாந்தான் அவசரத்துல தப்பா டைப்பிட்டேன் நன்றி தல

சேலம் தேவா said...

ஹைக்கூ எல்லாம் டாப்பு..!!

Speed Master said...

கவிப்புலவன் என்று நான் உங்களுக்கு பட்டம் வழங்குகிறேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆமா சார் இதுதான் ஹைகூ! உங்களுக்கு இது கூட வருமா? முதலாவது கவிதையே அசத்தல் பாஸ்! இன்னிக்கு நம்ம தியேட்டர்ல உங்க சினிமாதான் ஓடுது பாஸ் - டைம் கெடைச்சா பாருங்க - டிக்கெட் இலவசம்!

MANO நாஞ்சில் மனோ said...

//கல்லறையே கருவறை


சமாதியில்


முளைத்த செடி//

அசத்தல்.....

தினேஷ்குமார் said...

பாஸ் எல்லாமே சூப்பர்

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனைவியை ரசிக்கையில்
மச்சினியின் முகம் ஞாபகம்.,,,

இது என்ன பிழை?
--------------------------
சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்

settaikkaran said...

ஹைக்கூவா இல்லையா பிரச்சினை இல்லை. நல்லாயிருக்கு!

டிஸ்கி.2 படு சூப்பர்! :-))

மாணவன் said...

super...

Unknown said...

கவித கவித கவிதா ச்சீ கவித...:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சபாஷ்.. எல்லா ஹைக்கூவும் நல்லாயிருக்கு...

அஞ்சா சிங்கம் said...

என்னப்பா இது எல்லா பக்கமும் கவித வியாதி வேகமா பரவிகிட்டு இருக்கு ......................

Unknown said...

ஹைக்கோ ஹைக்கு

அன்பு said...

சூப்பர்.......

பரதேசித் தமிழன் said...

ஹைக்கூவிற்கே ஹைக்கூவா? நல்லாருக்கு சார்!

Anonymous said...

///.நிழலை விட நீ மோசம்...

இரவில் கூட என்

பின்னாலேயே வந்து விடுகிறாயே..உன் நினைவுகள்.

/// அருமை

Anonymous said...

முதலும் மூன்றும் அழகு..

Jayadev Das said...

எல்லாமே நன்றாக இருக்கின்றன. ஹைக்கூ நான் கேள்விப்பட்ட வரைக்கும், இண்டிகேட்டரை வலது பக்கம் போட்டுவிட்டு, கையை இடது பக்கம் காட்டிவிட்டு நேராகப் போய் பின்னால் வருபவனுக்கு டிமிக்கி கொடுப்பது போல இருக்க வேண்டும். அதாவது முதல் இரண்டு வரி படிக்கும் போது வாசகர் மனதில் ஏதோ தோன்ற வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் போது எதிர்பார்க்காத திருப்பமாக அசத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் நீங்க எழுதியிருப்பதில், 4, 6 ஹைக்கூவே இல்லை. They are just statement of facts! மற்றவை சரியாகத்தான் இருக்கின்றன, நீங்கள் மூன்று வரியாக எழுதியிருந்தாலும், 1 OK,2,3 இரண்டு வரிகளும் [அதாவது மூன்றாவது வரியில் வரவேண்டிய "பன்ச்" இரண்டாவது வரியிலேயே ஆரம்பித்துவிட்டது!] , 5 வது நான்கு வரிகளாகவும் வந்துவிட்டன. தயவு செய்து நீங்கள் எழுதியிருப்பதை குறை சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம், அந்தத் தகுதி எனக்கில்லை.

Anonymous said...

//நிழலை விட நீ மோசம்.
இரவில் கூட என்
பின்னாலேயே வந்து விடுகிறாயே..//
>>> கடன்காரனா??

Unknown said...

//கல்லறையே கருவறை

சமாதியில்

முளைத்த செடி.
//

Top one..

ஆமினா said...

ஓ..........இதான் ஹைக்கூவா???????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னாச்சு..... ஓ ரைட் ரைட்... வெளங்கிருச்சு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்கப்பு, நடத்துங்க நடத்துங்க..... ஏதாவது செட்டாகுனா சரிதான்!

test said...

முதல் மூன்றும் அட்டகாசம்! :-)

R.Gopi said...

படித்து பார்த்து பேந்த பேந்த விழித்தேன்
ஒன்றுமே புரியவில்லையே..
ஓஹோ... இது தான் ஹைக்கூ....