டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ மர்டர் கம் புலனாய்வுப்படம் என நினைத்துப்போனால் அது ஏதோ ரெண்டுங்கெட்டான் படம் போல. ஆர் கே நடித்த எல்லாம் அவன் செயல் என்ற படம் மலையாளத்தில் வந்த சிந்தாமணி கொலை வழக்கு என்ற படத்தின் ரீ மேக்.ஆனால் அந்த 2 படங்களுக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தம் இல்லை.இது வழக்கமாக சீன் பட லேபிளில் வெளி வந்து சீன் இல்லாத சீன் படம் என்ற லேபிளில் வகைப்படுத்தலாம். (புது வருஷமும் அதுவுமா மாட்டுனேன் பாரு...)
பிரபல நாவல் ஆசிரியை தான் எழுதும் நாவலுக்காக தனிமையான பங்களாவில் வந்து தங்குகிறார். அங்கே அவரை 4 இளைஞர்கள் ரேப் செய்கிறார்கள்.இவர் அவர்களை மறுபடி ரேப் செய்வது போல் பாவ்லா காண்பித்து பழி வாங்குகிறார்.( என்ன கேவலமான கதை..?)
ஏதோ ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.படத்தின் பெயர் சட்டென ஞாபகம் வர மாட்டேங்குது.இந்தக்காலத்தில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தர்றாங்க. இதுல ஒரு லேடி நாவல் ஆசிரியை நாவல் எழுத ரூ 20000 அட்வான்ஸ் குடுத்து ரூ 5000 வாடகையில் பங்களாவில் தங்குவது செம காமெடி.
4 இளைஞர்களாக வருபவர்கள் அடிப்படை நாகரீகமும்,நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் வருவது ரொம்ப கொடுமை.அந்த நாவல் ஆசிரியையாக வரும் மோனலிசா எனும் நடிகை பார்க்க சுமாராக இருந்தாலும் எப்போ பாரு சிரிச்சிக்கிட்டே இருப்பது மகா எரிச்சல்.நல்ல வேளை ரேப் சீனில் சிரிக்கலை.
கேமரா ஆங்கிள்கள் எவ்வளவு மோசமாக ஒரு படத்துக்கு இருக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.நாவலில் வரும் சம்பவங்கள் போலவே கொலை நடந்திருக்கிறதே என போலீஸ் விசாரிக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் கொஞ்சம் விறு விறுப்பு.அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஆப்செண்ட்.க்ளைமாக்சில் திடீர் என படம் முடிவது அதிர்ச்சி.போலீஸ் என்ன ஆச்சு? கேஸ் என்ன ஆச்சு? அந்த நாவல் ஆசிரியை என்ன ஆனார்? என எந்தக்கேள்விக்குமே பதில் இல்லை.
வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்தில் தேறிய 3 வசனங்கள்-
1. ஏய், உனக்கு பாய் ஃபிரண்டே இல்லையா?
இல்லை,ஏன்?
எனக்கு கேர்ள் ஃபிரண்ட் ஆகிடறியா?
2. மேடம், உங்க முதல் நாவல் ல ஹீரோயினுக்கு உங்க பேரையே வெச்சிருக்கீங்களே?ஏன்?
இந்த உலகத்துலயே என் பேரை விட அழகான பேரு எது?
3. பொண்டாட்டிக்கு பயப்படற ஆளுங்க எதுக்கு மத்த பொண்ணு மேல ஆசப்படனும்?
சம்ஹாரம் என்ற பாடல் சீனில் வைஜயந்தி ஐ பி எஸ் படத்தில் வருவது போல் ஹீரோயின் உடற்பயிற்சி செய்வது செம காமெடி...அதற்கு பேசாமல் ஒரு குத்தாட்டப்பாட்டே எடுத்திருக்கலாம்.
எச்சரிக்கை 1 - இந்தப்படத்துக்கு யாரும் போயிடாதீங்க....படத்துல கதை இல்ல சீனும் இல்ல.
எச்சரிக்கை 2 - சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதுவதில்லை என என் மீது ரொம்ப நாளாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது,இப்போ இந்த விமர்சனத்தின் மூலம் பலரை எச்சரித்ததன் மூலம் நானும் ஒரு சமூக விழிப்புணர்வு கட்டுரையாளன் ஆகி விட்டேன்...( யாரப்பா அது கல்லெல்லாம் எடுக்கறது..? நோ பேட் வோர்ட்ஸ்..அவ் அவ் )
11 comments:
நான் இங்க வரவே இல்லை எதையும் படிக்கல....
ஓட்டும் மட்டும் போட்டுட்டு போறேன்........
ஹிஹிஹிஹி
//நாவல் ஆசிரியையாக வரும் மோனலிசா எனும் நடிகை பார்க்க சுமாராக இருந்தாலும் எப்போ பாரு சிரிச்சிக்கிட்டே இருப்பது மகா எரிச்சல்.நல்ல வேளை ரேப் சீனில் சிரிக்கலை.//
என்னா ஒரு வில்லத்தனம்.......
ஈரோடு குசும்பா........
ஹிஹிஹி
//எச்சரிக்கை 2 - சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதுவதில்லை என என் மீது ரொம்ப நாளாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது,இப்போ இந்த விமர்சனத்தின் மூலம் பலரை எச்சரித்ததன் மூலம் நானும் ஒரு சமூக விழிப்புணர்வு கட்டுரையாளன் ஆகி விட்டேன்...( யாரப்பா அது கல்லெல்லாம் எடுக்கறது..? நோ பேட் வோர்ட்ஸ்..அவ் அவ் )//
நல்லதொரு முயற்சி இதுபோன்ற இன்னும் பல சமூகநல் விழிப்புணர்வை தொலைநோக்குப் பார்வையுடன் எழுத வேண்டும் எனபது எங்களைப் போன்ற இளைஞர்களின் ஆவல்......
உங்கள் பொன்னான சமூக நல விழிப்புணர்வு பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
பாஸ் 18+ போட்டுட்டிங்க அதனால நான் படிக்கல பாஸ் நான் தான் சின்ன பையனாச்சே
spit on your grave?
>>> ஏதோ ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.படத்தின் பெயர் சட்டென ஞாபகம் வர மாட்டேங்குது// இத மட்டும் மறந்துருங்க...மேல இருக்கிற அக்காவ போட்டோ புடிச்சவர் பேராவது தெரியுமா.....சும்மா ஒரு General Knowledge..வேற ஒண்ணுமில்ல அண்ணே!!!
ரொம்ப நாள் வேண்டுகோளை நிறைவேத்திட்டீங்கன்னு ஆசையோட ஓடி வந்தேன்...... சரி வந்ததுக்கு ஒரு ஸ்டில்லாவது மிச்சம்......!
ஏனுங்... ஹீரோயின் போஸ்டர்ல பார்க்க சூப்பரா இருக்கே? நீங்க சுமாரா இருக்குன்னு எழுதியிருக்கீங்க? அப்போ போஸ்டர்ல இருக்கறது யாரு?
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
Contact No. pottu irrukae athu yaru number annae... heheheh
supera irukku
Post a Comment