sa
சத்தம் கேட்டாலே டென்ஷன் ஆகி விடும் சைக்கோ தனது மனைவியை ஒரு கட்டத்தில் கொலை செய்து விட அதைக்கண்ட சாட்சியான தன் மகனை கொல்ல மனம் இல்லாமல் ஒரு ஆப்பரேஷன் செய்து அவனை நடைப்பிணம் ஆக்குகிறார்.அவனை ஒரு யுவதி காதலிக்கிறாள்.ஒரு தீவிரவாத கும்பல் அவனை மனித வெடிகுண்டாக உபயோகிக்கிறது.முடிவு என்ன என்பது வெண்திரையில்..
அட்டகாசமான ஒன் லைன்,கேட்க்கும்போதே பிரமாதமான திரைக்கதை உருவாக்கி இருப்பார்கள் என தோன்றுகிறதா?ஆனால் எடிட்டிங்க்,திரைக்கதை 2இலும் சொதப்பி விட்டார்கள்.
பள்ளி மாணவிகள் யூனிஃபார்மில் கூட்டமாகப்போகும்போது நமக்கு ரசிக்கத்தோணாது,எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதால்..ஆனால் தனி தனி ஃபிகர் அணிவகுத்து வந்தால் ரசிப்போம்,(என்னே ஒரு கேவலமான கண்டுபிடிப்பு)அது போல இந்தப்படத்தின் சீன்கள் தனித்தனியாக பார்க்க
நல்லாதான் இருக்கு,ஆனா மொத்தப்படமா பார்க்கறப்ப எடுபடலை..அதுக்கு இயக்குநரின் கவனக்குறைவும்,எடிட்டரின் திறமைக்குறைவும்தான்.முக்கியக்காரணம்.
படத்தோட ஓப்பனிங்க் சீன்ல அந்த சைக்கோவின் பாடி லேங்குவேஜ்,நடிப்பு,தடுமாற்றம்,நடுக்கம் எல்லாத்தையும் பார்க்கறப்ப அடிச்சுட்டார்யா சிக்சர் என டைரக்டரை பாராட்டத்தோன்றியது.ஆனால் போகப்போக திரைக்கதையில் சொதப்பல்.சைக்கோ எதிர் வீட்டுப்பெண்ணை கொலை செய்யும்போது திடுக் என்றால் காரில் போகும்போது மனைவி “பேசாம என்னை கொன்னுடுங்க “என சும்மா ஒரு பேச்சுக்கு (?!)சொன்னதுக்கு உடனே காரை மரத்தின் மீது மோதி கொலை செய்வது அட்டகாசமான பதட்டம்.
அதே போல் மனைவியைக்கொன்றது தான்தான் என்பது மகனுக்கு தெரிந்து விட்டது என்றதும் சைக்கோ காட்டும் பதட்டம் கிளாஸ் ரக நடிப்பு.டாக்டரான அவர் உடனே மகனை மூளையில் ஆபரெஷன் பண்ணி ஏதோ நரம்பை கட் பண்ணி அவனுக்கு எந்த நினைவும் இல்லாமல் செய்வது நல்ல திருப்பம்.
அதுக்கப்புறம்தான் திரைக்கதை தள்ளாடுது.ஹீரோயின் வருகை,சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை காதலிப்பது (அது சரி ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலித்துத்தானே ஆகனும்?) பிறகு கதைக்கு சம்பந்தமே இல்லாமல் தீவிரவாதக்கும்பல் வருவது என தேவை இல்லாமல் இடி ஆப்பசிக்கல் திரைக்கதை முடிச்சுகள் எதற்கு?
ஆனா ஹீரோயின் புதுமுகம் செம ஃபிகரு தான் .பால்மணம் மாறா பாலகி (அட..)
அ
சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் ஹீரோவை மூக்கில் கிளிப் மாட்டி வாயைத்திறந்ததும் ஊட்டி விடும் குழந்தைத்தனம் கலந்த புத்திசாலித்தன நடிப்பு,அவர் சர்வசாதாரணமாக திரைக்கதையை தாங்குவது பிரமிப்பு.
படத்தின் முதல் பாட்டில் ஹீரோயின் போடும் டான்ஸ் ஸ்டெப்கள் மார்வலஸ்.
அதே போல் கவுரவ தோற்றத்தில் வரும் ஆஸ்திரேலியன் ஃபிகர் கூட ஓக்கே ரகம் தான்.ஆனால் அவர் ஒரு அஜால் குஜால் பேர்வழி என்பதும் ஹீரோவை ஒரு முறை யூஸ் பண்ணிக்கிறார் என்பதும் கதைக்கு சம்பந்தம் இலாதது.சும்மா கிளு கிளுப்புக்காக அந்த கேரக்டர் போல.
அதில் ஒரு காதல் ஒளீந்திருக்கிறது பாடல் செம கிக்கான வரிகள்.பாடல்கள் 5.அதில் 4 பாட்டுக்களின் லைன்கள் ஒன்றூகூட புரியவே இல்லை.எல்லாமே ஆங்கில கலப்பு.
படத்தின் முக்கிய பலம் கேமரா.ஆஸ்திரேலியாவின் அழகை அள்ளிக்கொள்கிறது.படத்தின் ரிசல்ட் சட்னி என்பதை சிம்பாலிக்காக சொல்லத்தான் படத்தின் படப்பிடிபை சிட்னியில் வைத்தாரோ?
படத்தின் இயக்குநருக்கு சில கேள்விகள்
1. கதைக்களன் ஆஸ்திரேலியவில் நடப்பதற்கு என்ன காரணம்?
2. ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள்,சைக்கோ கில்லர் நடமாடுகிறான்,ஆனால் போலீஸ் அரிச்சுவடி கூட தட்டுப்படவில்லையே?ஏன்?
3.அம்மாவைக்கொலை செய்த சைக்கோ அப்பாவை மகன் எப்படி திட்டமிட்டு கொலை செய்கிறான் என்பது தன் நீங்கள் எடுக்க இருந்த மெயின் தீம்,அதிலிருந்து ஏன் விலகி சொதப்பினீர்கள்?
4.க்ளைமாக்சில் சைக்கோ அப்பா கேரக்டருக்கு எந்த தண்டனையும் தராதது ஏன்?
5. ஹீரோயின் ஹீரோ மீது காதல் கொள்ள 1% காரணம் கூட காட்டாதது ஏன்?
வசனகர்த்தாவாக ஜொலித்த இடங்கள்
1. யூ வாண்ட் டூ டை? ( YOU WANT TO DIE?)
எஸ்,நீங்க கொல்ற கடைசி ஆளா நான் இருக்கனும்னு ஆசைப்படறேன்.
2. நாங்க மனித உரிமைக்கமிஷன்,இந்த உலகத்தின் எந்த மூலைல நீங்க போய்
ஒளிஞ்சிகிட்டாலும் கேள்விகள் உங்களை தேடிட்டு வரும்.
3. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் கடவுள் இருக்கறதா சொல்றீங்களே... நீங்க மனுஷனா இருங்க,நான் கடவுளா இருக்கேன்,கடவுள் பேசமாட்டார்.
சோ இந்த என்கொயரி வேஸ்ட்
4. என்னை யார் தொலைச்சாங்கன்னு இவ தேடிட்டு இருக்கா?இவளுக்குள்ளே நான் தொலைஞ்சு போயிடுவோனோன்னு பயமா இருக்கு.
5. தேவைகள் கிடைக்காதபோதும்,நியாயங்கள் மறுக்கப்படற போதும்,மக்கள் ஒடுக்கப்படற போதும் தீவிரவாதம் பிறக்குது.
6. இந்த லோகத்துல தொலைக்கறது ஈஸி ,கிடைக்கறது கஷ்டம்,கிடைச்சதை ஏன் தேடறீங்க?
7. நான் சாகறதுக்காக விற்கப்பட்டவன்,தீவிரவாதம் வளர்றதுக்காக அழியக்கூடியவன்.
8. எங்க நாட்ல உங்களுக்கென்ன டா வேலை?எத்தனை இந்தையர்களை நாங்க கொல்றது?
9. தான் யார்?னு கூட யோசிக்க முடியாத தண்டனை இந்த உலகத்துல யாருக்குமே வரக்கூடாது.
10 மனிதனைக்கொன்று மனிதனே தெய்வம் ஆகிறான்.
11, கஷ்டப்படறவங்களைப்பார்த்து ,துயரப்படறவங்களைப்பார்த்து நாம வேதனைப்பட்டா மட்டும் பத்தாது,அவங்களுக்கு ஏதாவது செய்யனும்..
இந்தப்படம் யாரெல்லாம் பார்க்கலாம்?தியேட்டர் இருட்டில் தனி இடம் தேடும் காதலர்கள்.,கள்ளக்காதலர்கள் மட்டும் பார்க்கலாம்,தியேட்டர் காலியாகத்தான் இருக்கு.
இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 10 நாட்கள், பி செண்ட்டர்களில் 7 நாட்கள் ,சி செண்ட்டர்களீல் 4 நாட்கள் ஓடும்.
ஆனந்த விகடன் விமர்சனத்தில் எதிர்பார்க்கப்படும் மார்க் - 36
டிஸ்கி 1 - இந்தப்படம் பார்க்கறப்ப தியேட்டர்ல ஒரு கூத்து நடந்தது,அதை தனி பதிவா போடலாம்னு ஐடியா( படத்தை விட அந்த மேட்டர் செம சுவராஸ்யம்)
டிஸ்கி 2-
ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
டிஸ்கி 3
18 comments:
அரிதான படம் போல!
இது தமிழ் படமா.. இப்படி ஒரு படம் வந்திச்சா...
ம் ...
நச்சுன்னு ஒரு விமர்சனம்
பாஸ் வணக்கம்
நான் படம் பாக்கள பாஸ்
மன்மதன் அம்பு படத்தை விட நல்லா இருக்குனு சொல்லுங்க...
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்..... :)
//வெறும்பய said...
இது தமிழ் படமா.. இப்படி ஒரு படம் வந்திச்சா...//
நல்லா கேட்டீங்க.....
ஹிஹிஹி
//டிஸ்கி 1 - இந்தப்படம் பார்க்கறப்ப தியேட்டர்ல ஒரு கூத்து நடந்தது,அதை தனி பதிவா போடலாம்னு ஐடியா( படத்தை விட அந்த மேட்டர் செம சுவராஸ்யம்)//
Waiting...........
படம் பேரே இப்போதான் கேள்விப்படறேன்..
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க..
உங்களின் சேவைக்கு நன்றி!
இந்த படமெல்லாம் வர்றது உங்களுக்கு எப்பிடி தெரியுது?!!
படம் ரீலீசுக்கு முன்னமே செந்தில்சாருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிருவாங்க போல இருக்கு :-)
//கதைக்களன் ஆஸ்திரேலியவில் நடப்பதற்கு என்ன காரணம்?//
நீங்க ஈரோடில் இருக்க என்ன காரணமோ அதே காரணம்தான்
//
பள்ளி மாணவிகள் யூனிஃபார்மில் கூட்டமாகப்போகும்போது நமக்கு ரசிக்கத்தோணாது,எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதால்..ஆனால் தனி தனி ஃபிகர் அணிவகுத்து வந்தால் ரசிப்போம்//
ennamaa yosikkiringa!!!!
// சத்தம் கேட்டாலே டென்ஷன் ஆகி விடும் சைக்கோ //
இப்படி ஒரு குறும்படத்தை சென்றவாரம் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன்...
// அவனை ஒரு யுவதி காதலிக்கிறாள்.ஒரு தீவிரவாத கும்பல் அவனை மனித வெடிகுண்டாக உபயோகிக்கிறது.முடிவு என்ன என்பது வெண்திரையில் //
இந்த இடத்தில் அவன் என்பது யார்... சைக்கோவா சைக்கோவின் மகனா...?
// பால்மணம் மாறா பாலகி //
ஏன் இந்த கொலைவெறி...?
ஆனாலும் உங்களுக்கு ஹீரோயின் ஸ்டில் சரியா செலக்ட் பண்ணத் தெரியல... நானா இருந்தா இன்னும்கூட நல்ல ஸ்டில் போட்டிருப்பேன்...
Post a Comment