Monday, December 27, 2010

மந்த்ரா பேடியா?நீரா ராடியா?புதிய ஊழல் வெடியா?

http://cinesouth.com/images/new/25012006-THN15image2.jpg
1. தலைவர் நாத்திகவாதியா இருக்கறதால நமக்கு என்ன பிரச்சனை?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்கறதால ஏழைகள்
சிரிக்கவே முடியாதபடி பண்ணிட்டாரே...

2. தலைவர் 2 G  அலைக்கற்றையை மறு ஏலம் விடனும்கறாரே? ஏன்?

மறுபடியும் ஊழல் பண்ணத்தான்,வேற எதுக்கு?


3.தலைவரே,உங்க தோள்ல கிடக்கற துண்டோட விலை ரூ 600 கோடியா?

ஏன் அப்படி கேக்கறீங்க?

பதவிங்கறது எனக்கு தோள்ல கிடக்கற துண்டு மாதிரின்னு சொன்னீங்களே?

4. தமிழ் தவிர வேற மொழில பேசுனா அபராதம்னு புதுசா ஒரு சட்டம் போடலாமா?

நாசமாப்போச்சு,தலைவரே,அபராதம்கறதே சம்ஸ்கிருத வார்த்தைதான்.

5. இலங்கைல தமிழ் தேசிய கீதம் ரத்து ஆனதை தலைவர் கண்டுக்கவே இல்லையே?

தமிழனுக்கு குத்து விழுந்தப்பவே கண்டுக்காதவர் ஆச்சே?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
6.குளிச்சாச்சா?ன்னு தலைவரை கேட்டது தப்பாப்போச்சு.

நீராடினீரா?ன்னு  ஏன் செந்தமிழ்ல கேட்டீங்க?நீரா ராடியாவா?எனக்கும் அவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லைன்னு பதட்டமா சொல்றாரே?

7. தினமும் காலைல ஆனியன் ரோஸ்ட்தான் சாப்பிடுவேன்.

அடேங்கப்பா,அவ்வளவு  பெரிய பணக்காரனா நீ?

8.தலைவரு சரியான ஜொள்ளு பார்ட்டின்னு எப்படி சொல்றே?

நீரா ராடியா பற்றி என்ன தெரியும்?னு கேட்டதுக்கு அவங்க மந்த்ரா பேடி ஃபேமிலியா?ன்னு சி பி ஐ கிட்டேயே திருப்பி கேட்டாரே?

9. மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சுன்னு சொல்றீங்களா?

அது தெரியலை,ஆனா நாட்ல எந்த ஊழல் நடந்தாலும் அதை தாங்கும் சக்தி வேணா மக்களிடையே வளர்ந்துடுச்சு.

10. ஒரு நபர் விசாரணைக்கமிஷன்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டாரு

எப்படி சொல்றே?

ஒரு நபரை மட்டும்தானே விசாரிக்கனும்?எதுக்கு ஃபேமிலில இருக்கற எல்லாரையும் விசாரிக்கனும்?னு நியாயம் கேக்கறாரு.

18 comments:

karthikkumar said...

vadai

மாணவன் said...

2 இருங்க படிச்சுட்டு வரேன்...

மாணவன் said...

//அது தெரியலை,ஆனா நாட்ல எந்த ஊழல் நடந்தாலும் அதை தாங்கும் சக்தி வேணா மக்களிடையே வளர்ந்துடுச்சு.//

இதுதான் உண்மை...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

ரஹீம் கஸ்ஸாலி said...

வழக்கம்போல் அட்டகாசம். வாக்களித்துவிட்டேன்

karthikkumar said...

ஆட்டோ வரபோகுது சித்தப்பா...

karthikkumar said...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்கறதால ஏழைகள்
சிரிக்கவே முடியாதபடி பண்ணிட்டாரே...///
தலைமை செயலகம் போகுமா...

THOPPITHOPPI said...

புகைப்படத்தில் நிரா ராடியா ஹாலிவுட் வில்லி மாதிரி இருக்காங்கனோ

Sathish said...

அண்ணே .. நீங்க பண்றது சரியில்ல.. என்னோட தளத்தில் இருந்து தான் இனிமே படங்கள் எடுப்பேன்னு சொல்லிட்டு. இப்போ வேற எங்கயோ போய்டிங்க... காலைல போன் பண்ணுங்க.... உங்களுக்கு சூப்பர் நியூஸ் ஒன்னு சொல்றேன்...

தினேஷ்குமார் said...

பாஸ் எல்லா ஜோக்கும் சூப்பர் கொஞ்சம் கடைக்கு வந்து போங்க பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப் போட்டுத்தாக்குங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அட்டகாசம்

Philosophy Prabhakaran said...

நீரா ராடியாவையும் பிகர் லிஸ்டுல சேத்துட்டீன்களா...

Philosophy Prabhakaran said...

// தினமும் காலைல ஆனியன் ரோஸ்ட்தான் சாப்பிடுவேன்.

அடேங்கப்பா,அவ்வளவு பெரிய பணக்காரனா நீ? //

செம ஜோக்... ஒருவேளை இதை யாராவது வெங்காய விலை கடுமையா குறைஞ்சதுக்கு அப்புறம் படிச்சாங்கன்னா ஒன்னும் புரியாது...

ரவி said...

ரெண்டு ஜோக் சூப்பர்.

வைகை said...

கேப் விடாம அடிக்கிறீங்க!

Unknown said...

என்ன சார்!? ஈரோட்டுல இருக்க தைரியமா!?(உபயம்- இளங்கோவன்னு ஏன் போடலை)

Arun Prasath said...

கமெண்ட் போட்டா தான் படிச்சேன்னு ஒத்து பீங்களோ? சரி சரி நல்ல இருக்கு தல..

சேக்காளி said...

//மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சுன்னு சொல்றீங்களா//
பின்ன ஒரு ஓட்டுக்கு மூவாஆஆஆஆஆஆயிரம்னா[அதென்ன "மூவாஆஆஆஆஆஆயிரம்", "மூவாயிரம்" அப்டிங்கறது கேட்குது]வாங்கும் சக்தி அதிகரிச்சுருக்குன்னு தானே அர்த்தம்.