தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.தமிழ்மணம் டாப் 20 பட்டியல் அறிவுப்பு வந்த பிறகு வினவு,உண்மைத்தமிழன் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை நெம்பர் ஒன் பிளேஸ் அடைந்துள்ளார்கள்.
எனவே 3வது வெற்றி பெற நான் போன வாரம் கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.23 12 2010 அன்று ஹிட்ஸ் ரேட்டை வைத்து பார்க்கையில் டெரர் கும்மி,ராம்சாமி,கே ஆர் பி செந்தில்,ரமேஷ் ஆகியோர் முதல் 4 இடங்க்ளில் இருந்தனர்.நான் 7 வது இடத்தில் இருந்தேன்.சரியான நேரம் பார்த்து என் லேப்டாப்பில் தமிழ்மணம் ஃபாண்ட் வேலை செய்யவில்லை.சரக்கும் கைவசம் இல்லை.எனவே 2 மீள் பதிவுகள் போட்டு சமாளித்தேன்.
ராம்சாமியின் சிம்ரனோமேனியா சூப்பர்ஹிட் ஆகி கலக்கிக்கொண்டிருந்தது.அதே போல் டெரர் கும்மியின் பதிவுலக அப்பெண்கள்காவலன் பதிவு பிரம்மாண்ட வெற்றி அடைந்து பதிவுலகை கலக்கியது.இனி வரும் வாரங்களில் டெரர் கும்மி எல்லாருக்கும் டஃப் ஃபைட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்..
வைகை டாப் 10க்குள் வந்துவிடுவார் என்று நான் வியாழன் அன்றே கணித்து அவரிடம் அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தேன்.அவர் நம்பவில்லை.பார்ப்போம் என்றார்.அவரது காமெடி எழுத்துக்கள் வரும் காலங்களில் இன்னும் பேசப்படும்.
பதிவுலகின் மும்மூர்த்திகள் என அழைக்கபடும் உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர் ஆகியோர் வைத்திருக்கும் ஹிட்ஸ் ரேட் அபாரமானது.ஆவ்ரேஜ் ஹிட்ஸ் தின்மும் 1700 சர்வசாதாரணமாக வும் அதிக பட்சம் 3000க்கும் குறையாமலும் உள்ளதை கவனிக்கிறேன்.அதையும் மீறி அவர்களை விட 3 மடங்கு ஹிட்ஸ் குறைவாகவும்,மொக்கைப்பதிவு போட்டும் எப்படி காலத்தினை ஓட்டுகிறேன் என்பதை கணக்குபோட்டால் ஒரு உண்மை விளங்குகிறது.தமிழ்மணம் வழியாக வரும் ஹிட்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.
இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் நான் ஏற்கனவே அவர் இயக்கிய சித்து பிளஸ் டூ படத்தின் விமர்சனத்தை
நெகட்டிவ்வாக எழுதி விட்டதால் தொடர்பு கொள்ள சங்கடப்பட்டு அவருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை.
நேற்று ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஏற்கனவே நான் சொன்னபடி பணீயின் காரணமாக செல்ல முடியவில்லை.வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.எனக்கும் அதே ஆவல்தான் .அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.
கோபி நாகராஜசோழன் ,திருப்பூர் கார்த்தி,சேலம் வெங்கட்,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்.ஆனால் அவர்களால் வர இயலவில்லை
மாலை 6 மணிக்கு ஈரோடு பிருந்தாவன் பார்க்கில் நான்,நல்லநேரம் சதீஷ்,கோமாளி செல்வா,நண்டு நொரண்டு,சித்தோடு 007 சதீஷ் போன்றோர் சந்தித்தோம்.சங்கவியை தொடர்பு கொண்டபோது கிளம்பி விட்டதாக சொன்னார்.ஜாக்கிசேகரை ஃபோனில் அழைத்தோம்.அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை.
ஃபோட்டோவில்
இடம் இருந்து வலமாக கோமாளி செல்வா, 007 சதிஷ்,நல்ல நேரம் சதீஷ்,நான் ,நண்டு நொரண்டு
சங்கவி பிறகு ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்,நான் வந்து சந்தித்தால் தனியாக மீட்டிங்க் போடறாங்க என சொல்லி விடுவார்கள் எனவே அதை தவிர்த்தேன் என்றார். அவர்து முன் ஜாக்கிரதை உணர்வுக்கு ஒரு சபாஷ்.
ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை.
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.
டிஸ்கி 1 - லீவ் நாட்களில் நெட் பக்கம் வராதவர்களுக்கு
தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-
சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 -
அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்ச
டிஸ்கி 3 -
39 comments:
சுடச்சுட பின்னூட்டம்...
விரிவான பின்னூட்டமிட இப்போது நேரமில்லை... மன்னிக்கவும்... இப்போதைக்கு வாழ்த்துக்கள்... இரவு வந்து மீண்டும் படிக்கிறேன்...
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம் .
பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.
தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் தமிழ்மணத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணே
தொடர்ந்து கலக்குங்க...........
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....
//வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.//
அடிக்கிறதுக்காக தேடிருப்பாங்க்களோ?
நான் பாராட்டு விழா எடுக்க அப்பாயின்மென்ட் கேட்டதை சொல்லலை!!
இப்போ சோனியா அகர்வால் உங்க கிட்டயா இருக்காங்க தோழியா?
அப்படியே வலைப்பதிவர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் இணைத்திருக்கலாமே?
எதுக்கு தல சோனியா அகர்வால்???
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.
yes boss i am redy
வாழ்த்துக்கள் சிபி!
உங்க ஜோசியம் பலிச்சிருச்சு சிபி!( சதீசுக்கு போட்டியா?!!)
வைகை said...
உங்க ஜோசியம் பலிச்சிருச்சு சிபி!( சதீசுக்கு போட்டியா?!!)
நம்ம பாஸ்கிட்ட போட்டி போடா முடியுமா சரி கட பக்கமே ஆள காணாமே
வாழ்த்துக்கள் தலைவரே
சைவ சூப் மறக்க முடியாது அதை விட்டுட்டீங்களே
உங்க ஜோசியம் பலிச்சிருச்சு சிபி!( சதீசுக்கு போட்டியா?!!)//
எனக்கு போட்டியா விட்டுடுவோமா
செந்தில், எனக்கு உங்களைப் பாக்கனும்னுதான் ஆசை. ஈரோடில் இருந்து கிளம்பவே மணி ஆறுக்கு மேல் ஆகிவிட்டது. பெங்களூர் வரை வண்டி ஓட்டி ஆக வேண்டும். மேலும் தாமதிக்க விரும்பவில்லை. விடுங்க அடுத்த வாட்டி வரும்போது பாக்கிறேன்:)
அருண்பிரசாத்,கார்த்திக் வரவில்லை என்பது வருத்தம் தான்
இன்னும் தொடர்ந்து நீங்கள் முதலிடம் பெற வாழ்த்துக்கள்
எப்போதும் நீங்கள்தான் முதல்வர்
நேத்து பாத்து நெறைய ஆணி ஆபிஸ்ல அதான் சார் வர முடியல சரி இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்
WE WILL MEET
WILL MEET
MEET.
ஈரோடு பதிவர்கள் சந்திப்பு..தர்மசங்கடம்.!
http://sathish777.blogspot.com/2010/12/blog-post_27.html
நம்பர் 1 - வாழ்த்துக்கள்
முதல்வனே!? 1
கலக்குங்கப்பு!
//இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.//
பாருயா ..?
//
ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை//
ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாதீங்க ..ஒற்றுமையே பலம்..!!
ஞாயிற்றுகிழமை என் வருமானத்தை இழக்க வ்சிரும்பாததால் நான் அந்த கூட்டத்திற்கு போக முடியவில்லை ந்னு உன்கிட்ட சொன்னேன் கோமாளி..அப்படியே நைசா கோர்த்து விடுறியா
ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாதீங்க ..ஒற்றுமையே பலம்..//
யோவ் அதான் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லைன்னு சொல்றாரு இல்ல
,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்//
மன்னிச்சிடுங்க அண்ணே... கண்டிப்பா சந்திப்போம்
என்னை சந்திக்க ஆர்வம் வேறையா... அடடா உங்க பாசம் புல் அரிக்க வைக்குது
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம் .
பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.
தொடர்ச்சியான நல்ல பதிவுகளுக்கு,
தமிழ்மணத்தில் முதலிடம் பெற்றமைக்கு,
அதோடு ஹாட்ரிக் இடம் பிடித்தமைக்கு,
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
பதிவுக்கு நடிகை படத்த நல்லா செலக்ட் பண்ணுரிங்க
சோனியா அம்மையார் படத்தை எப்போது இணைத்தீர்கள்... காலையில் இல்லையே... பதிவிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்...
நீங்கள் ஹிட்ஸ்ரேட்டை இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது... எப்படி கணக்கிடுகிறீர்கள்...?
காலை நண்டுவிடம் பேசும் போது உங்களிடம் பேச வேண்டி அலைபேசி எண் கேட்டேன்.
உண்மையில் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டிருக்கும்(போட்டோவில்) ஸ்டைலை பார்த்து தான் நேரில் பார்க்கும் ஆர்வம் வந்தது!
பரவால்ல - நேரடி ஒளிபரப்பு ந்ல்லாவே இருந்திச்சி - ஹாட்ட்ட்ரிக்கிற்கு பாராட்டுகள் - இன்னும் பல தடவை முதலில் வர நல்வாழ்த்துகள் - என்னது தனிச் சங்கமா ? அப்படி வேற பேச்சு இருக்கா என்ன ? ஒற்றுமையே வெற்றிக்கு அடையாளம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment