Thursday, December 23, 2010

கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை




ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி

ஜோடனை இல்லாத பிம்பமாய்

உன் முகம் இருக்கும்.

சொர்க்கத்துக்குப்போடப்பட்ட

ஒற்றையடிப்பாதை மாதிரி

உன் தலை வகிடு இருக்கும்.

பளிங்குக்கற்களில் ஊற்றிய

பாதரசம் போல்

அலை பாய்ந்து கொண்டே

உன் கண்கள் இருக்கும்.

நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்

இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்

உன் கூந்தல் இருக்கும்.

ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்

உன் நாசி இருக்கும்.

தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்

உன் உதடுகள் இருக்கும்.

 பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்

வைத்துக்கட்டியது போல்

நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான

 மென்மையில்


 உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.

இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்

கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்

நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்

சர்ச்சைப்பொருளாய்,

இல்பொருள் உவமை அணிக்கு

மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்


உன் இடை இருக்கும்.

குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்

ஒளிந்து கொள்ளும் விதமாய்

உன் குரல் இருக்கும்.


நல்லவரோ,கெட்டவரோ

எல்லா மனிதரிடத்தும்

ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி

உனக்கும் ஒரு ஓரத்தில்

ஒரு இதயம் இருக்கும்.

அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?


டிஸ்கி - 1 :  தமிழ்மணம் 2010 விருதுக்கான போட்டியில் சினிமா பிரிவில் மைனா விமர்சனமும் , நகைச்சுவை பிரிவில் கோர்ட்டில் நயன்தாரா  காமெடி கும்மி போஸ்ட்டும்,படைப்பு கவிதை பிரிவில் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை போஸ்ட்டும் இணைத்துள்ளேன்.இதில் கவிதை மட்டும் பலரால் படிக்கப்படாமல் இருந்தது.(நிறைய பேருக்கு நான் கவிதை எழுதுவேன்னே தெரியாது.)எனவே அதை மீள் பதிவாக்கி உள்ளேன்.


டிஸ்கி 2 - கவிதை எழுதுவதில் என்னை விட திறமையும்,அனுபவமும் அதிகம் உள்ள கேபிள் சங்கர்,கே ஆர் பி செந்தில்,கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர்,தேவா போன்றவர் கவிதைகளுடன் ஒப்பிடுகையில் 40 % பின்னடைவில் இருந்தாலும் சும்மா கல்லை விட்டு பார்ப்போம்னுதான் .....

38 comments:

Unknown said...

நல்கவிதை....வாழ்த்துக்கள்.

எல் கே said...

நல்ல கவிதை

ரஹீம் கஸ்ஸாலி said...

கவித,,,,,கவித......

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை..

வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

//(நிறைய பேருக்கு நான் கவிதை எழுதுவேன்னே தெரியாது.)//

அதான் இப்ப சொல்லியாச்சே!!

மாணவன் said...

அருமையான வரிகளுடன் அழகான ரசனை அண்ணே,

தமிழ்மணத்தில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல் .

Philosophy Prabhakaran said...

// கவிதை எழுதுவதில் என்னை விட திறமையும்,அனுபவமும் அதிகம் உள்ள கேபிள் சங்கர்,கே ஆர் பி செந்தில்,கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர்,தேவா போன்றவர் கவிதைகளுடன் //

வகுப்பறையில் அலப்பறை செய்த என் பெயரை இணைக்காத உங்களுக்கு எனது கண்டனங்கள் :)))

Philosophy Prabhakaran said...

// நிறைய பேருக்கு நான் கவிதை எழுதுவேன்னே தெரியாது //

எனக்கும் கூட தெரியாது... அது என்னவோ உங்களை பார்த்தால் ஒரு கவிஞர் பீல் வரமாட்டேங்குது... ப்ரோபைல் போட்டோவை ஒருமுறை மாற்றிப் பாருங்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தமிழ்மணத்தில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்..
கவிதை அருமை..

Admin said...

நல்ல வரிகள்... அழகான கவிதை...

Anonymous said...

NICE

Anonymous said...

SUPER

இம்சைஅரசன் பாபு.. said...

:):)nice

தினேஷ்குமார் said...

காதல் கவிதை சூப்பர் பாஸ் நான் நேற்றே ஒட்டு போட்டுட்டேன்

Anonymous said...

GOOD

'பரிவை' சே.குமார் said...

நீங்க கவிதை எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். உதயம், தினபூமி-கதைபூமி, பாக்யாவில் நான் எழுதியபோது நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். கும்மியை குறைத்து சில சமயங்களில் நல்ல கவிதைகளையும் எழுதலாமே.?
கவிதை அருமையா இருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

கவிதை.. கவிதை..

Arun Prasath said...

கவிதையா கொட்டுது போல... நல்லா இருக்கு அண்ணே

karthikkumar said...

கவிதை சூப்பர் நல்ல வர்ணிப்பு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

nice poem. my best wishes to you

செல்வா said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா ..!!

செல்வா said...

//கவிதை எழுதுவதில் என்னை விட திறமையும்,அனுபவமும் அதிகம் உள்ள கேபிள் சங்கர்,கே ஆர் பி செந்தில்,கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர்,தேவா போன்றவர் கவிதைகளுடன்//

இதில் என்னோட பேர் போடாதது கண்டு பெரும் கோபமடைகிறேன் ... ஹி ஹி ஹி

வைகை said...

கவிதை நல்லாயிருக்கு!

வைகை said...

செல்வா வடை எனக்கே!

வைகை said...

தமிழ்மண வாக்கெடுப்பில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

தல இந்த லிங்கில் பாருங்க உங்க பதிவு இருக்கு.... அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.
http://periyakulam.net/detailnews.php?id=380

ம.தி.சுதா said...

////உன் கூந்தல் இருக்கும்.

ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்///

அருமை... அறிவியல் , மொழி எல்லாம் புகுந்த விளையாடுது..
வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

Unknown said...

நல்ல கவிதை

வாழ்த்துக்கள்.

M.G.ரவிக்குமார்™..., said...

கூகுள் ரீட‌ரில் ம‌ட்டுமே நான் ப‌திவுக‌ளை ப‌டிக்கிறேன். பெரும்பாலான‌ க‌ம்பெனிக‌ளில் ப்ளாக் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தால் ரீட‌ரை ம‌ட்டுமே ந‌ம்பி என்னைப் போன்ற‌ ப‌ல‌ர் இருக்கிறோம்.
இப்போது உங்க‌ள் ப‌திவுக‌ள் முத‌ல் சில‌ வ‌ரிக‌ள் ம‌ட்டுமே ரீட‌ரில் வ‌ருமாறு செட்டிங்க்ஸ் மாற்றி இருக்கிறீர்க‌ள். இனிமேல் உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ந்தே ஆக‌ வேண்டும். ச‌ந்தேக‌ம் இல்லாம‌ல் உங்க‌ளுக்கு அதிக‌ ஹிட்ஸ் கிடைக்கும். ஆனால் என் போன்ற‌ ப‌ல‌ர் உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ இய‌லாம‌ல் போகும். இதைக் கொஞ்சம் மாற்ற முடியுமா?....நன்றி!

Unknown said...

மொக்க,விமர்சனம் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நீங்க கவிதையைத் தொடரலாம் , நன்றாக இருக்கிறது.

ஷஹி said...

அழகான வர்ணனைகள்....கடைசி வரி க்ளாஸ்....

R. Gopi said...

இது மாதிரி நிறைய எழுதுங்க செந்தில். நன்றி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

nalla kavithai. kanaiyaazhiyil vanthatharku vaazhththukkal

"உழவன்" "Uzhavan" said...

கவிதை சூப்பரா இருக்கு பாஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை நல்லாருக்கு சிபி.. வாழ்த்துக்கள்!