நான் நுட்பமானவன்.
ஒரு பூவை விட நான் அதிகம் நேசிப்பது
அதன் தண்டும்,சில இலைகளும்.
ஒரு கவிதையை விட நான் அதிகம் ரசிப்பது
அதை எழுதியவனின்
எனக்குப்பரிச்சயமான கவிதைக்காரனின் பெயரை,
அருவியில் நனைவதை விட எனக்கு அதிக
மகிழ்ச்சி தருவது அதில் நனைபவர்களின் ”ஹா”ரிரைச்சல்.
காதலர்களின் செல்ல சீண்டல்களை விட
எனக்கு பரவசத்தை ஏற்படுத்துவது
காதலை அவர்கள் வெளிப்படுத்தும் முதல் தருணம்.
நல்ல காலம் பிறந்திருச்சு என
எல்லோருக்கும் நல்வாக்கு அளிக்கும்
குடுகுடுப்பைக்காரனின் பேச்சை விட
என்னை அதிகம் கவனிக்க வைப்பது
அவனது நம்பிக்கையும்,அணுகுமுறையும்.
மழை பெய்யும்போது ஏற்படும் சாரலின் தீண்டலை விட
எனக்கு அதிக உற்சாகம் வரவழைப்பது
மழை கிளப்பும் மண்ணின் வாசம்.
பாம்புக்கும்.கீரிக்கும் சண்டை நடப்பதாக வாக்குதரும்
சந்தையின் லேகிய விற்பவனின்
பொய் வாக்குமூலத்தை விட
என்னை அதிகம் கவனிக்க வைப்பது
கூட்டத்தை அவன் கட்டுக்குள்
கொண்டு வரும் லாவகம்.
எல்லாவற்றையும் விட
என்னை அதிகம் பாதிப்பது
ஒரு நண்பனின் மரணத்தை விட
ஒரு நட்பின் மரணம்.
டிஸ்கி 1 - கணையாழி இதழில் 1999 ஆம் ஆண்டு வந்த எனது 2வது கவிதை.இந்தக்கவிதையில் ஏதேனும் குறை இருந்தால் கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர் போன்ற நல்ல கவிஞர்கள் என்னை மன்னிக்க.
37 comments:
online..
டிஸ்கி 1 - கணையாழி இதழில் 1999 ஆம் ஆண்டு வந்த எனது 2வது கவிதை.இந்தக்கவிதையில் ஏதேனும் குறை இருந்தால் கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர் போன்ற நல்ல கவிஞர்கள் என்னை மன்னிக்
//
கவிதை நல்லாயிருக்கு அங்கிள்...
கவிஞராக promotion வாங்கத்தான், எக்ஸாம் எழுத சென்னை போய் இருந்தீங்களா? வாழ்க வளமுடன்!
"என்னை அதிகம் பாதிப்பது
ஒரு நண்பனின் மரணத்தை விட
ஒரு நட்பின் மரணம்."
பிடித்த வரிகள்
கவிதை அருமை வாழ்த்துக்கள்
natpin maranam....... arumai.......
கவிதையும் எழுதுவோம்ள்ள
நல்லாருக்குண்ணே தொடருங்கள்.........
நடக்கட்டும்...நடக்கட்டும்..
இததான் நான் அன்னைக்கே சொன்னேன். கேட்டீங்களா.
கவிதை சூப்பர். எழுதினவரு பேர் போடாம விட்டுடீங்க :)
த்தோடா.. கவித..கவித..!! கருத்துப்பதிவ இலக்கன நடைல எழுதுனா போதும்போல கவிதைனு சொல்லிக்கிறதுக்கு..!! சும்மா சொல்லக்கூடாது ஒரே ஸ்டெப்ல 5 அடி தாவிட்டீங்க சி.பி.!! நல்ல துவக்கம். சிந்தனை சிறகடிக்க வாழ்த்துக்கள்..!!! ஸ்ரீநிவாசன், ஈரோடு.
//கவிதை சூப்பர். எழுதினவரு பேர் போடாம விட்டுடீங்க :)//
ஹி ஹி சூப்பர்....
தல பாஷையில சொல்லப்போனா....
அட டடா... வர வர இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கமுடியலப்பா.........
கவித கவித
neththu enkitta pesumpothu kooda nllaathaana irunthaaru. enna aachchunnu theriyalaiye. oru velai enakku saappaadu vankikoduththa varuththamaa irukkumo?
எனக்குப்பரிச்சயமான கவிதைக்காரனின் பெயரை, //
சி.பி.செந்தில்குமார்....அருமையான பேர் தலைவரே....பேரை ரசித்தேன்...
இன்னில இருந்து கவிஞர் சிபி செந்தில்குமார்...
அழகான அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
அட இது இலை மறை காயல்ல்... இலை மறை பூசணிக்காய்...
அருமைங்கோ...
//எனக்கு பரவசத்தை ஏற்படுத்துவது
காதலை அவர்கள் வெளிப்படுத்தும் முதல் தருணம்.//
செம செம .. கலக்கல் கவிதை அண்ணா ..!
மேலும் தொடர வாழ்த்துகள்!!
கவிதை நன்றாக இருக்கிறது.........
ம்ம்மம்மம்ம்ம்ம்.... நடத்துங்க!!
கவிதை நல்லாயிருக்கு சிபி
மழை பெய்யும்போது ஏற்படும் சாரலின் தீண்டலை விட
எனக்கு அதிக உற்சாகம் வரவழைப்பது
மழை கிளப்பும் மண்ணின் வாசம்.
arumai
Ramu
என்னை அதிகம் பாதிப்பது
ஒரு நண்பனின் மரணத்தை விட
ஒரு நட்பின் மரணம்...
கவிதை நல்லாயிருக்கு...........
பாஸ் கவிதை நல்லாருக்கு
அட்ரா சக்க!
நல்ல கவிதை. இது மாதிரி நிறைய எழுதுங்க சார்.
கவிதைஅருமை
சினிமா விமர்சனத்தில் மட்டும் நீங்கள் கிங் இல்லை, கவிதையிலும் நீங்க கிங் தான் பாஸ்
//பாஸ்,ஒரு ஷாக் நியூஸ்.நானும் கவிஞன் ஆகிட்டேன்//
:(
///வெறும்பய said...
டிஸ்கி 1 - கணையாழி இதழில் 1999 ஆம் ஆண்டு வந்த எனது 2வது கவிதை.இந்தக்கவிதையில் ஏதேனும் குறை இருந்தால் கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர் போன்ற நல்ல கவிஞர்கள் என்னை மன்னிக்//
கவிதை நல்லாயிருக்கு அங்கிள்...///
:) :) :)
கவிஞராக promotion வாங்கத்தான், எக்ஸாம் எழுத சென்னை போய் இருந்தீங்களா? வாழ்க வளமுடன்! ////
"ரிப்பீட்டு"
நல்லாயிருக்குங்க கவிதை..
// கவிதை நல்லாயிருக்கு அங்கிள்... //
யோவ் அவரு யூத்துய்யா...
எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கு. நம்ம செந்திலா இப்படி பிச்சு வாங்கியிருக்காரான்னு ஆச்சரியமா இருக்கு. அதுவும் கணையாழியா?
தொடருங்களேன்.
ஏண்ணே.......?
கணையாழி வரைக்கும் போயிட்டு இப்ப நெலமைய பாத்தீங்களா? எப்படி இருந்த சிபி, இப்பிடி ஆயிட்டாரு, பிட்டுப்படம் பாத்து பாத்து....?
என்னமோ போங்கப்பு, நல்லாத்தான் ஃபீல் பண்ணியிருக்கீக.......!
Post a Comment