Sunday, December 12, 2010

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.dinakaran.com/vellimalar/2009/nov/27/image/9.jpg
தம்பியை கொலை செய்த அரசியல் தலைவரை போட்டுத்தள்ளும் அண்ணன் கம் ஹீரோவின் சாதாரண பழிவாங்கல் கதையைக்கூட இவ்வளவு சுவராஸ்யமாய்த்தர முடியுமா? என வியக்க வைக்கிறார் இயக்குநர்.

ஆதிக்கு மிருகம்,ஈரம் என தொடர்ந்து வித்தியாசமான கதா பாத்திரம் வந்து மாட்டுகிறது. சர்வ சாதாரணமாய் ஊதித்தள்ளுகிறார்.ஆனால் ஃபைட் சீனில் எல்லாம் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பது ஓவர்.அதே போல் பக்கத்தில பவ்யமான பைங்கிளி இருக்கும்போது காதல் காட்சிகளில் கூட உம்மென்ற முகத்தோட இருப்பது ஏன் என தெரியவில்லை.(சம்பள பாக்கியோ?)

ஹீரோயின் மீரா நந்தன்.நல்ல ஃபிகர்தான்.ஆனால் ரொம்ப மெச்சூரிட்டியான முகம்.பொதுவாக காதலி கேரக்டர் என்றால் அப்பாவித்தனமான, ,குழந்தைத்த்தனமாக இருந்தால் செமயாக இருக்கும்.அவருக்கு வாய்ப்பும் குறைவுதான்.இந்த மாதிரி ஆக்‌ஷன் திரில்லரில் காதல் காட்சிகள் அதிகமாக வைத்தால் ரிலாக்ஸாக இருந்திருக்கும்.

படத்தோட ஓப்பனிங்கில் வரும் சாவுப்பாட்டுக்கு ஆடும் ஸ்டெப் டான்ஸ் செம.  வெல்டன் டான்ஸ் மாஸ்டர்.அதே போல் ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேனே பாட்டு ஒளிப்பதிவாளரின் ஒட்டுமொத்த திறமையையும் ஒருமுகப்படுத்தி கலக்கிய இடம்.

ஹீரோ டாஸ்மாக்கில் போடும் தெனாவெட்டான ஃபைட் டாப்.அந்த ஃபைட்டில் ஹீரோ காட்டும் ஆக்ரோஷம், முக உணர்வுகள் ஒண்டர்ஃபுல்.

படத்தின் கதையை நேரடியாக சொல்லாமல் அண்ணன்தான் தம்பியை கொலை செய்தான் என்று சந்தேகப்படும்படி காட்சியை நகர்த்துவது ஷிட்னி ஷெல்டனின் லாவகம்.ஆனால் தம்பி கேரக்டர் திக்குவாய் என காட்டியது தேவையே இல்லாதது.
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ayyanar.jpg
படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு எல்லாம் நாட்டில் அங்கங்கே நடக்கும் சென்சேஷனல் நியூஸ்களை சம்பவங்கள் ஆக்கி இடைச்செருகல் செய்த சாமார்த்தியத்தை பாராட்ட வேண்டும்.
சாதாரணமாக எல்லாருக்கும் புரிய வேண்டிய கதையை வேண்டுமென்றே சிக்கலான திரைக்கதையாகக்கொண்டு சென்ற நோக்கம்தான் எது என தெரியவில்லை.படத்தின் ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு,இசை,படத்தொகுப்பு என டெக்னிக்கல் ஐட்டங்கள் எல்லாமே சராசரிக்கும் மேலே.

வெறும் 3 சீன்கள் மட்டுமே வரும் சந்தானம் சிரிக்க வைத்தாலும் இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கலாம் என ஏங்க வைக்கிறார்.

படத்தின் வசனகர்த்தா அட போட வைத்த இடங்கள்

காமெடி

1. ஒயின்ஷாப்புல பிரச்சனை பண்ணுனியா?

ஆமா,மப்பு ஜாஸ்தியா இருந்தா வேற என்ன பண்றது?

2.  ஏன் யாரும் பேசவே மாட்டேங்கறீங்க?

சந்தானம் - சாப்பிடறப்ப பேசற பரம்பரை நாங்க கிடையாது.

3.  டேய்... ஏண்டா உன கையை அங்கே வெச்சிருக்கே...?

அப்பா....

மரியாதை தர்றாராம்... அடச்சே கையை எடு. அவர் என்ன குடும்ப கட்டுபாடு பண்ற டாக்டரா?

4.  டேய் ,உள்ளே உங்கம்மா பாத்திரம் உருட்டற சத்தம் கேக்குது,கோபமா இருக்காங்களோ?

ம்ஹூம்,சுத்தம் சோறு போடும்கறதால முதல்ல பாத்திரம் துலக்கறாங்க.

5.  அவன் என்னை மொட்டை போட்டுடுவானோன்னு பயமா இருக்கு.

கவலைப்படாதே,நான் உனக்கு விக்கு வாங்கித்தர்றேன்

ஒரு பெக்கு வாங்கவே கையாலாகாத நாய் ஓசில சரக்கு சாப்பிடுது,பேச்சை பாரு

6. டேய், வெறும் 80 ரூபா செப்பலுக்கே பூட்டு போடற குடும்பம்டா உங்களுது.

7. டேய்,உனக்கு அறிவு இருக்கா?

இருக்கு,ஆனா யூஸ் பண்றது இல்ல.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
செண்ட்டிமெண்ட்ஸ்

1.  லெட்டர் எழுதி வெச்சுட்டு சாகற எல்லா லேடீஸும் நல்லவங்களும் கிடையாது.அவங்க சாவுக்கு காரணம்னு சொல்லப்படற ஆம்பளைங்க கெட்டவங்களும் கிடையாது.

2. தப்பு பண்ணி  இருக்கான்,தட்டிக்கேட்டா தனிக்கட்சி ஆரம்பிச்சுடுவேன்னு மிரட்டறான்.இவ்வளவு தப்பு பண்ணி இருக்கானே ,எந்த தைரியத்துல?

மக்கள் மறந்துடுவாங்கங்கற தைரியத்துல.பணபலமும் ,ஜாதி ஓட்டும் இருந்தா அரசியல்ல என்ன வேணா பண்ணலாம்கற எண்ணத்துல...


3.  வில்லன் - போலீஸ்காரனுக்கே ஏதாவதுபிரச்சனைன்னா அவன் என்னைப்பார்க்கத்தான் வருவான்.

ஹீரோ - இப்போ உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ என்னை பார்க்க வந்திருக்கே?

4.  என் ஆள் ரமணியை ஏண்டா கொன்னே?

தப்பு பண்ணுனான்,அதனால (அப்படியே தளபதி பட ரிப்பீட்டு)

எங்க வேலையே தப்பு பண்றதுதான். (இந்த லைன் மட்டும் புதுசு)

5. காதலி - நீ எனக்கு செஞ்சது முக்கியமான உதவிதான்,ஆனா அதுக்காக உனக்கு தாங்க்ஸ் சொல்லி உன்னை தூரமா வெச்சுக்க விரும்பல.

இடைவேளைக்குப்பின் வரும் தனியே தனியே பாட்டு செம ஹிட்டு.
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/MeeraNandhanan.jpg
இயக்குநருக்கு சில அட்வைஸ்

1. படத்தின் பெரிய மைனஸ் டைட்டிலும் பட போஸ்டரும்.ஏதோ கிராமத்து தாதா கதையோ என பயத்தை ஏற்படுத்தும் விதம் உள்ளதை தவிர்த்திருக்கலாம்.இந்தப்படத்துக்கு கொலைக்கண்ணோட்டம் அல்லது சாதுர்யன் என டைட்டில் வைத்திருக்கலாம்..அதே போல் போஸ்டரில் 5 அடிக்கு அரிவாள் வைத்திருக்கும் ஸ்டில்சை யூஸ் பண்ணாமல்  மேலே உள்ள 4 ஸ்டில்ஸ்களை போட்டிருக்கலாம்.

2. படத்தின்பெரும்பாலான் காட்சிக்கான பின்ன்ணி இசை ஈரம் படத்திலிருந்து எடுக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

3. இந்தப்படத்தை தீபாவளிக்கோ ,பொங்கலுக்கோ ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.

4. படத்தின் முன் பாதியில் ஹீரோ வேலை வெட்டியே இல்லாதவர் என காண்பிக்கப்பட்டு பின் அவர் ஏற்கனவே செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை உள்ளவர் என குழப்பி இருக்கவேணாம்.

5. அண்ணன் தம்பிக்கு இடையே ஏன் வெறுப்பு என ஒரு காட்சியில் கூட விளக்கவே இல்லை.

இந்தப்படம் எல்லா தரப்பு மக்களையும்  கவரும் என சொல்ல முடியாது.ஆனால் வித்தியாசமான படம் பார்க்க விரும்புவர்கள்,ஆக்‌ஷன் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த  விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங் - நன்று

இந்தப்படம் ஏ செண்ட்டர்கள்,பி செண்ட்டர்களில் பொங்கல் வரை ஓடும். (35)

சி செண்ட்டர்களில் 10 நாட்கள் தான் ஓடும்.


டிஸ்கி 1 -

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

சித்து + 2 சினிமா விமர்சனம்

 

25 comments:

ம.தி.சுதா said...

/////டேய் ,உள்ளே உங்கம்மா பாத்திரம் உருட்டற சத்தம் கேக்குது,கோபமா இருக்காங்களோ?

ம்ஹூம்,சுத்தம் சோறு போடும்கறதால முதல்ல பாத்திரம் துலக்கறாங்க.////

ஏன்யா சிபிஎஸ் என்னோட சோறு விசயம் அவங்களுக்கும் தெரியுமா..??

ம.தி.சுதா said...

படம் பார்த்து விட்ட மிகுதிக்கு வருகிறேன்..

சிவகுமாரன் said...

இப்படி ஒரு படம் வந்திருக்கா? தெரியலையே. அம்பேத்கார் படம் பத்தி எழுதிட்டீங்களா?

Philosophy Prabhakaran said...

// தம்பியை கொலை செய்த அரசியல் தலைவரை போட்டுத்தள்ளும் அண்ணன் கம் ஹீரோவின் சாதாரண பழிவாங்கல் கதை //

ரத்த சரித்திர சாயல் தெரிகிறதே...

Philosophy Prabhakaran said...

// கொலைக்கண்ணோட்டம் அல்லது சாதுர்யன் என டைட்டில் வைத்திருக்கலாம் //

ஆஹா... இது வேற ஆரம்பிச்சுட்டீங்களா... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

// இந்தப்படத்தை தீபாவளிக்கோ ,பொங்கலுக்கோ ரிலீஸ் பண்ணி இருக்கலாம் //

ஏன்...? மண்ணோட மண்ணா போறதுக்கா...

a said...

ரொம்ப விரிவான விமர்சனம்........ அருமை...........

நாரதர் கலகம் said...

விமர்சனம் அருமை படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது . அப்படியே நம்ம கடிக்கும் வந்துட்டு போங்க
http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html

நாரதர் கலகம் said...

http://juniorsamurai.blogspot.com/2010/03/blog-post_21.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்போ இந்த படத்தை பாத்திரலாமுங்களா

மாணவன் said...

விமர்சனம் அருமை,

என்னாப்பா இது தொடர்ந்து ஒரே விமர்சனமா இருக்கு....

சூப்பர் தொடருங்கள்.....

Unknown said...

விமர்சனம் சூப்பர்..

அப்போ.. படம் பார்த்திட வேண்டியதுதான்..

சிவராம்குமார் said...

நேத்து நம்ம பய புள்ளைங்க பாத்துட்டு வந்து நொந்து போயி இருக்காங்க... நீங்க பாஸிடிவா சொல்றீங்!!! கண்ப்யூசண்!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok i will see

தினேஷ்குமார் said...

ஓகே பாஸ் படம் பாத்துடுறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 1-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

வைகை said...

ஒங்கள பாத்தா பொறாமையா இருக்கு அம்புட்டு படத்தையும் பாக்குரிகன்னு!! ஒரு பக்கம் ரெம்ப பாவமா இருக்கு சமயத்துல மொக்க படத்தையும் பாக்கவேடியிருக்கு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பப்ப்பா..எத்தன..?

pichaikaaran said...

நம்பர் ஒன் ஆனதற்கு வாழ்த்துக்கள்...

karthikkumar said...

வைகை said...
ஒங்கள பாத்தா பொறாமையா இருக்கு அம்புட்டு படத்தையும் பாக்குரிகன்னு!! ஒரு பக்கம் ரெம்ப பாவமா இருக்கு சமயத்துல மொக்க படத்தையும் பாக்கவேடியிருக்கு///

சமயத்துல இல்ல இவர் புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான். :))

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

Unknown said...

விமர்சனம் அருமை அப்படியே நம்ம கடைப்பக்கம் வர்றது

vikkiulagam.blogspot.com

முத்துசிவா said...

C.P.அண்ணே... உங்ககிட்ட ஒரு request... இந்த சினிமா
விமர்சனத்துக்குன்னு ஒரு format develop பண்ணி அதுலயே எல்லா
படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டு இருக்கீங்க... ரொம்ப சந்தோஷம்..
ஆனா எல்லா படத்துக்கும் இதே பாணி விமர்சனம் கொஞ்சம் bore
அடிக்குதுண்ணே... கெளரவர்கள் படத்துக்கு கூட இதே பாணியில்
ஒன்னரை பக்கத்துக்கு எழுதியிருந்தீங்க.... அந்த மாதிரி படங்களுக்கு
இவ்வளவு நேரம் ஒதுக்கி இவ்ளோ எழுதனும்னு ஒன்னும் தேவையில்லண்ணே
படத்தோட தரத்தை நீங்க ரெண்டு பார கிராஃப் ல சொன்னா கூட
போதும்....

அப்புறம் முடிஞ்ச வரைக்கும் பட்த்தோட கதைய சொல்லாம தரத்தை
மட்டும் சொல்லுங்கண்ணே... ஏன்னா இப்போ இந்த அய்யனார் படம்
சஸ்பென்ஸ் திரில்லர்னு சொல்றீங்க... ஆனா உங்க விமர்சனத்த படிச்சிட்டு
போயி படம் பாக்குரவங்களுக்கு அது சஸ்பென்ஸ் திரில்லரா இருக்காது.

இது என்னோட கருத்துண்ணே... "நா அப்புடித்தான் எழுதுவேன்,,, படிச்சா
படி படிக்கலன்னா போ" ன்னு பதில சொல்லிடாதீங்க... படிக்கனும்னு தான்
கேக்குறேன்..