ஜக்குபாய் என்ற டப்பா படமே ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்தான்.அந்தப்படத்தின் கதையை எடுத்துக்கொண்டு இயக்குநராக களம் இறங்கி இருக்கும் கேப்டனின் அசாத்திய துணிச்சல் +அசட்டுத்துணிச்சல்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்,திருநங்கைகள் கேட்பாரற்று இருப்பதால் அவர்களின் கொலை செய்து உடல் உறுப்புகளை விற்கும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டுவதில் வித்தியாசம் காட்ட நினைத்தாலும் படத்தின் மூலக்கதை ஃபாரீனில் இருக்கும் தனது சொந்தக்காரப்பெண்ணை வில்லன் குரூப்பிலிருந்து காப்பாற்றும் அதிகாரியின் கதைதான்.
படம் போட்டதுமே தீவிரவாதி,டைம்பாம் என்று வசனம் வைத்து ரசிகர்களுக்கு அபாய அலாரம் வைத்தாலும் இடைவேளை வரை படம் சுவராஸ்யமாகவே செல்கிறது.இடைவேளைக்குப்பிறகுதான் மெயின் கதை.(ஆவ்.தூக்கம்)
படிக்காதவன் படத்தில் அம்பிகா கஞ்சா கடத்த கர்ப்பிணி வேடம் போடுவதை உல்டா பண்ண இன்னும் எத்தனை இயக்குநர்கள் நினைத்திருக்கிறார்களோ?
படத்தோட முத ஃபைட்டில் புதுமை என நினைத்து அடி ஆட்கள் காலில் ஸ்பிரிங்க் கட்டி பறந்து பறந்து சண்டை போடுவது நல்ல காமெடி.(எந்த ஆங்கிலப்படத்திலிருந்து உருவுனாங்களோ?)
பாடி பில்டராக வரும் வில்லன்கள் தமிழ் சினிமாவில் மட்டும் ஃபைட் போடும்போது அதை கிழிப்பது ஏனோ?கழட்டினால் போதாதா?(கோபமா இருக்காங்களாம்)
ஒரு கொள்கை விளக்கப்பாடலில் டாப் ஆங்கிளில் இந்தியா மேப் போல் அணி வகுப்பது கிளாப்ஸ் அள்ளுகிறது.
மன்னவரே மந்திரரே பாட்டுக்கு ஆடுபவர் ஒரு டான்ஸ் மாஸ்டராக இருக்கவேண்டும்,பட்டையை கிளப்பி இருக்கிறார்.
கேப்டன் வருவது தெரிஞ்சதும் மன்சூர் அலிகான் காட்டும் பதட்டமும்,நெளிவும்,குழைவும் டாப்.
புலன் விசாரனை படத்தில் சுவரில் பிணங்களை வைத்த சீன் அதிர்ச்சியை கிளப்பியது போல் இதிலும் ஒரு சீன் உண்டு.அது சுவராஸ்யமாக இருந்தாலும் படத்தின் கதைக்கு தொடர்பில்லை.இடைவேளை வரை வரும் காட்சிகளை பார்க்காமல் இருந்தாலும் படம் புரியும்,அந்தளவுக்கு படத்தின் முன் பாதி கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஓடுது.
படத்தில் கேப்டன் கொன்னு கொலையெடுக்கும் பஞ்ச் டயலாக்ஸ்
1. அண்ணே,நீங்களா? வர மாட்டீங்கன்னு நினைச்சோம்,வந்துட்டீங்களே?
நான் வரக்கூடாதுன்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க.ஆனா காலம் என்னை வர வெச்சுடுச்சு. ( அந்த காலத்தின் தலையில் இடி விழ)
2. ஃபோன்ல டவர் இல்ல,என் வாய்ஸ் கேக்குதா?
உங்க வாய்ஸ்தான் டெல்லி வரை கேக்குதே.. (அவ்வளவு கட்டக்குரலா?)
3. எமன் கிட்டே மாட்டுனவன் கூட தப்பிச்சிடலாம் ,ஆனா விருதகிரிக்கிட்டே மாட்டுனவன் தப்பிக்கவே முடியாது. (ஆடியன்சை சொல்றாரோ?)
4. நான் பஞ்ச பூதத்தோட மொத்த உருவம்டா..(மொத்தமான உருவம்னு சொல்லுங்க)
5. அரசாங்கத்துக்கு எதிரா நீ இருக்கே
அது எனக்கு பழக்கமானதுதான்
தப்பு பண்றீங்க. தப்பு பண்றவங்களுக்கு எதிராத்தானே... (தத்துவமாம்)
6. எல்லா சூழ்நிலையிலும் நான் தாழ்வா இருப்பேன்,ஆனா தாழ்ந்து போக மாட்டேன். (மொத்தத்தில எங்களை வாழந்து போக விட மாட்டீங்க)
7.வாழ்க்கைங்கறது ஐஸ்கிரீம் மாதிரி,அது உருகறதுக்குள்ள நாம அதை சாப்பிட்டடனும்,புகழைத்தேடி நாம போகக்கூடாது,நம்மைத்தேடி புகழ் வரனும்.(இந்த எஸ் எம் எஸ் உங்களுக்கும் வந்துடுச்சா?)
8. என்னைப்பத்தி தெரியும் இல்ல,பேச்சு மூச்சு இல்லாம கோமால கிடக்கறவனைக்கூட விசாரனை பண்ணி உண்மையை வரவழைக்கறவன் நான். (உங்களைப்பத்தி தெரிஞ்சிருந்தா இப்படி வந்து மாட்டுவோமா?)
9. இருட்டுல கூட நிழலை கண்டுபிடிக்கறவண்டா நானு.கண் வெச்சாலும் சரி,GUN வெச்சாலும் சரி,என் குறி தப்பாது
(உங்க குறி ஆடியன்சா?)
10. நாம கூட்டணி ,அவன் தனி.
இதற்கு கேப்டன் குடுத்த ப்திலடி 10 நிமிஷம் ஓடுது,காது வலி வந்ததால சரியா வசனம் கேட்கலை).
படத்தில் காமெடி காட்சிகள் இல்லாத குறையை கேப்டனே தீர்த்து வைக்கிறார்
அவர் பஞ்ச் டயலாக் என நினைத்து பேசும் எல்லாமே காமெடி தான்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ்சில் தரைமட்டமாக வீழ்ந்து கிடப்பவர் 2 முஷ்டிகளை மட்டும் ஊன்றி அப்படிய்யே வீறு கொண்டு எழுவார் பாருங்கள்..அட அட அடா (மனசாட்சியே இல்லையா ஸ்டண்ட் மாஸ்டர்?)
வசனகர்த்தாவின் பெயர் சொல்லும் காட்சிகள்
1.குற்றம் நடந்த பிறகு பாதுகாப்பு தர்றது பெரிய விஷயம் இல்லை.குற்றம் நடப்பதற்கு முன்னாலயே புரொடக்ஷன் தர்றதுதான் போலீஸோட வேலை.
2. குளத்துல நீச்சல் பழகுனவன் ஆத்தை கண்டு பயப்படுவான்,ஆத்துல நீச்சல் பழகுனவன் கடலைக்கண்டு பயப்படுவான்.கடல்ல நீச்சல் பழகுனவன் எதைக்கண்டும் பயப்பட மாட்டான்.
3. போட்டி போடற அளவைத்தாண்டி பொறாமைப்படற ஸ்டேஜ்க்கு நம்ம இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுல சைன் பண்ணீட்டாங்க.
4. எதுக்குப்பிரச்சனை,அவங்களைத்திரும்பி வரச்சொல்லிடலாமா?
திரும்பி வர்றவன் நம்ம ஸ்டூடண்ட்ஸ் இல்லை,மத்தவங்களை திரும்பி பார்க்க வைக்கறவன் தான் உண்மையான ஸ்டூட்ண்ட்ஸ்.
5. அடிமாடுங்க காணாமப்போனாக்கூட கேக்க ஆள் இருக்கு,ஆனா அரவாணிங்க காணாமப்போனா கேக்க ஆள் இல்லை.
6. அட,ஸ்டேஷன்ல கேஸே இல்லைன்னு கவலைப்படற நேரத்துல ஒரு கேஸே நடந்து வருதே,,இன்னைக்கு மடக்கிட வேண்டியதுதான்.
7. போலீஸாய்யா நீங்க எல்லாம்?யார் வந்து புகார் குடுத்தாலும் அவங்களுக்கு ஏற்பட்டிருக்கற நஷ்டத்தைத்தான் பார்க்கனும்,உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை பார்க்கக்கூடாது.
8. பைப் மட்டும்தான் போட்டாங்க,தண்ணீர் வர்லை.
பைசா வாங்கிட்டு ஓட்டு போட்டா பைப் மட்டும்தான் வரும்.
9. மத்தவங்க முடியற தூரம் வரை மட்டும்தான் ஓடுவாங்க..ஆனா நான் முடிக்கற தூரம் வரை ஓடுவேன்.
10. சன் டி விக்காரங்க படம் எடுத்தா அந்தப்படம் வேற எங்கேயும் டி வி டி கிடைக்க மாட்டேங்குது,ஆனா மத்தவங்க எடுத்தா படம்ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி டி வி டி ரிலீஸ் ஆகிடுது, இது என்ன மர்மனே புரியல.
11. இன்னைக்கு ஆளுங்கட்சிப்போலீஸா இருக்கறவங்க நாளைக்கே எதிர்க்கட்சி போலீஸா ஆக ரொம்ப நாள் ஆகாது,
12. தண்ணி பிடிக்க வந்த பொம்பளையும் ,தண்ணி அடிக்க வந்த ஆம்பளையும் சணடை போடாம போனதா சரித்திரமே இல்லை.( SMS JOK)
13. அரசாங்கத்துல வேலை செய்யறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே,அரசாங்கமே உங்க கைல வந்தா?
14. நான் எந்தத்தப்பும் பண்ணலை.
தப்புப்பண்ற எல்லா மோசடிக்காரங்களும் தர்ற முத ஸ்டேட்மெண்ட் இதுதானே..
15.சட்டம் உனக்கு வார்த்தையாத்தான் இருக்கு ,எனக்கு வாழ்க்கையாவே இருக்கு.
16.பணம் வர்ற வழி எல்லாம் நான் போறதில்லை,ஆனா நான் போற வழி எல்லாம் பணமா வருது. (இது வில்லன் பன்ச்)
17, உள்ளூர்லயே சம்பாதிக்க நினைக்கறவனுக்கு ஒரு மொழி தெரிஞ்சிருந்தா போதும் ஆனா உலகத்தையே ஜெயிக்க நினைக்கறவன் எல்லா மொழியையும் கத்துக்குவான்.
18. பசிக்கு இரை தேடற சிங்கத்தோட வேகத்தை விட உயிரைக்காப்பாத்திக்கற மானோட வேகம் ஜாஸ்தியாத்தான் இருக்கும்.
இது போக கேப்டனின் காமெடி சீன்கள்
1. ஆறு குண்டுகளே போட முடியும் ரிவால்வரில் தொடர்ச்சியாக 18 முறை சுடுவது.
2. ஒரு கையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டே இன்னொரு கையில் அசால்ட்டாக சுடுவது. (ரிஃப்ளக்ஷன் ஃபோர்ஸ் வராதா/)
3. மனோகரா படத்தில் வருவது போல் இரும்புச்சங்கிலியை உடைத்து தப்பிப்பது.
இது போக அருண் பாண்டியன் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி வசனத்தை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் ரிப்பீட் செய்கிறார்.
வாட் ஈஸ் யுவர் பிராப்ளம்? உங்க பிரச்சனை தான் என்ன? (இந்தப்படத்துக்கு வந்ததுதான்).
இடைவேளைக்குப்பிறகு வரும் முதல் சீனில் ஃபோட்டோகிராஃபர் உள்ளேன் ஐயா சொல்லுகிறார்.
இயக்கம் விஜய்காந்த்தா பினாமியா தெரியவில்லை, விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 40
எதிர்பார்க்கும் குமுதம் விமர்சனம் - ஓக்கே
ஏ செண்ட்டர்களில் 34 நாள் (அதுக்குள்ள பொங்கல் வந்துடுமே)
பி செண்ட்டர்களில் 20 நாட்கள், சி செண்ட்டர்களில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை ஓடும்.
டிஸ்கி 1-
57 comments:
vadai
சார் உங்களுக்கு சேதாரம் எதுவும் இல்லையே...நல்லாயிருக்கீங்க தானே...
நேத்தைக்கு முதல் ஷோ பார்த்த சிரிப்பு போலீசை ஏர்வாடியில் அட்மிட் பண்ணியிருக்காங்களாம்...
2. ஒரு கையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டே இன்னொரு கையில் அசால்ட்டாக சுடுவது. (ரிஃப்ளக்ஷன் ஃபோர்ஸ் வராதா/)
//
ஒரு வேளை கப்பல் கட்டுற கயிறா இருக்குமோ...
தலைவா நேத்து நைட்டுதான் இத பாத்தேன் தலைவா. என்ன சொல்றதுன்னே தெரியல நான் அப்புறமா வரேன் என்னால முடியல
3. மனோகரா படத்தில் வருவது போல் இரும்புச்சங்கிலியை உடைத்து தப்பிப்பது.
//
ஏர்வாடியிலிருந்து தானே...
இடைவேளைக்குப்பிறகு வரும் முதல் சீனில் ஃபோட்டோகிராஃபர் உள்ளேன் ஐயா சொல்லுகிறார்.
//
ஏன் ஏதாவது ஸ்கூல் ஸ்டுடண்டா வர்றாரா..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 40
//
வெறும் எதிபார்ப்பு தானே... ஒரு பிரச்சனையுமில்ல...
15.சட்டம் உனக்கு வார்த்தையாத்தான் இருக்கு ,எனக்கு வாழ்க்கையாவே இருக்கு
//
அதனால தான் இத்தனை போலீஸ் படம் நடிச்சதா...
14. நான் எந்தத்தப்பும் பண்ணலை.
தப்புப்பண்ற எல்லா மோசடிக்காரங்களும் தர்ற முத ஸ்டேட்மெண்ட் இதுதானே..
//
ஏதாவது ஊழலில் சிக்கும் போது இது தான் உதவும்...
வெறும்பய said...
சார் உங்களுக்கு சேதாரம் எதுவும் இல்லையே...நல்லாயிருக்கீங்க தானே...
பாஸ் சேம் கொஸ்டியன் உங்களுக்கு ஒன்னும் ஆகலியே எப்படி இருக்கீங்க கொஞ்சம் வந்து தலைய காட்டுங்க பாஸ்
13. அரசாங்கத்துல வேலை செய்யறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே,அரசாங்கமே உங்க கைல வந்தா?
//
மச்சானுக்கும், பொண்டாட்டிக்கும் பிரிக்கு குடுத்திருவாறு...
12. தண்ணி பிடிக்க வந்த பொம்பளையும் ,தண்ணி அடிக்க வந்த ஆம்பளையும் சணடை போடாம போனதா சரித்திரமே இல்லை
//
இதென்னமோ உண்மை தான்..
/வெறும்பய said...
நேத்தைக்கு முதல் ஷோ பார்த்த சிரிப்பு போலீசை ஏர்வாடியில் அட்மிட் பண்ணியிருக்காங்களாம்...
///
.ரசனை கெட்ட மனிதர்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..
படம் எந்திரன் வசூலை மிஞ்சும்
9. மத்தவங்க முடியற தூரம் வரை மட்டும்தான் ஓடுவாங்க..ஆனா நான் முடிக்கற தூரம் வரை ஓடுவேன்.
//
இந்த உடம்ப வச்சு அதுக்கு மேல ஓட முடியாதே...
விருதகிரி பேர கேட்டா சும்மா அதிருதில்ல
வெறும்பய எங்க ஆளை கலாய்ச்சா நானும் பதிலுக்கு....
$%#RT$#%$%^$#%67
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/வெறும்பய said...
நேத்தைக்கு முதல் ஷோ பார்த்த சிரிப்பு போலீசை ஏர்வாடியில் அட்மிட் பண்ணியிருக்காங்களாம்...
///
.ரசனை கெட்ட மனிதர்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..
//
ரிலீஸ் பண்ணிட்டாங்களா...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விருதகிரி பேர கேட்டா சும்மா அதிருதில்ல
//
ஆமா.. ஆமா உடம்பெல்லாம் நடுங்குது.. நேத்தைக்கு படம் பார்த்த 500 பேருக்கு கண்ணு நோள்ளையாயிருசாம்..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் எந்திரன் வசூலை மிஞ்சும்
//
எந்திரன் படத்துக்கு போஸ்டர் அடிச்ச வசூலை தானே...
ஐயோ நான் மட்டும் தனியா இருக்கேனே.. பயமா இருக்கு யாராவது துணைக்கு வாங்கப்பா..
24
24
25
vadai enakku
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai enakku
//
இன்னும் போகலையா...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் எந்திரன் வசூலை மிஞ்சும்///
கொஞ்ச நாள் தலைமறைவா இருங்க. வெளிய வராதீங்க
தனியொரு ஆளாக இந்தப்படத்தை பார்த்துவிட்டு, எந்த பின் விளைவுகளும் ஏற்படாமல் விமர்சனம் எழுதிய அண்ணன் சி.பி.செ-யின் மன வலிமையை பாராட்டி அவருக்கு அஞ்சாநெஞ்சன் பட்டம் வழங்கி கவுரவிக்கிறோம்.
Anybody here
அட அதுக்குள்ள விமர்சனமா எங்க ஒன்றியத் தலைவரே இன்னும் எழுதலை நீங்க எழுதிட்டீங்க அருமை...
யார் வந்து புகார் குடுத்தாலும் அவங்களுக்கு ஏற்பட்டிருக்கற நஷ்டத்தைத்தான் பார்க்கனும்,உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை பார்க்கக்கூடாது.
.....இந்த படத்து ஆடியன்ஸ் நஷ்டத்தை பற்றிதானே சொன்னாங்க.... நல்லா கேட்டீங்களா?
இந்த ரணகளத்துக்கு அப்புறமும், damage இல்லாமல் வந்து விமர்சனம் எழுத முடிந்து இருக்கே. இரும்பு இதயமப்பா, உங்களுக்கு!
படம் பெரிய குப்பை .....யாரும் போய்ராதீங்க
அண்ணனோட சிங்கிள் பேக்-ஐப் பற்றி எழுதாமல் விட்டது நியாயமா?..
ஒரு விளம்பரம்:
இன்று முதல் என் வலைப்பூ “செங்கோவி” ஆரம்பம் ...முகவரி:
http://sengovi.blogspot.com/
அனைவரும் வாருங்கள்..வாழ்த்துங்கள்..
--செங்கோவி
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விருதகிரி பேர கேட்டா சும்மா அதிருதில்ல//
எங்க வீட்டு டிவி ஒடன்சிடுச்சு.
சிபி அண்ணே உங்களை எந்த ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க?
//படம் போட்டதுமே தீவிரவாதி,டைம்பாம் என்று வசனம் வைத்து ரசிகர்களுக்கு அபாய அலாரம் வைத்தாலும் இடைவேளை வரை படம் சுவராஸ்யமாகவே செல்கிறது.இடைவேளைக்குப்பிறகுதான் மெயின் கதை.(ஆவ்.தூக்கம்)//
அப்படின்னா பதிக்கு மேல நீங்க எழுதினது தப்பா ..?
//நான் வரக்கூடாதுன்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க.ஆனா காலம் என்னை வர வெச்சுடுச்சு. ( அந்த காலத்தின் தலையில் இடி விழ)/
ஹி ஹி ஹி .. வலிக்காதா ..?
என்னவொரு படம்!!
ஏழைகளின் விடிவெள்ளி! எங்கள் தங்கம் இதய தெய்வம் விஜயகாந்தின் விருத்தகிரி மாபெரும் வெற்றி!! வெற்றி!!
என்ன ரமேசு சரியா எழுதிருக்கேனா?!!
சொன்னமாதிரி வரும்போது தேன்பாட்டில்.................!
1. ஆறு குண்டுகளே போட முடியும் ரிவால்வரில் தொடர்ச்சியாக 18 முறை சுடுவது.
---------------------
18 குண்டுகள் என்பது சரியான கணக்குதான். இப்போது காவல்துறைக்கு கொடுக்கபட்டு இருக்கும் ரிவால்வரில் 18 தோட்டாக்கள் வரை லோடு செய்யலாம்.
இவ்வளவு டயலாக்ஸயும் ஞாபகம் வச்சு பொறுமயா படத்த பாத்து சூப்பரா விமர்சனம் எழுதியிருக்கீங்கன்னா படத்த தியேட்டர்ல பாத்த மாதிரி தெரியலியே...!!!
என்னது படம் விறுவிறுப்பா போகுதா ? ஐயயோ அப்படின்னா விருதகிரி பார்ட் 2 வெல்லாம் வருமே?
ஆனாலும் இந்த படத்த முதல் நாள் பார்த்த உங்க மனதைரியத்த பாராட்டியே ஆகனும் எனக்கு இன்னமும் அந்த தைரியம் வரவே மாட்டேங்கிது தல
இதை படித்ததும் மனது கொக்கியதால் இதற்கு மேல் பேச முடியவில்லை. நாக்கு ரோலிங் ஆகிறது. படத்தை பற்றி ஒரு மிகப்பெரிய ஆய்வையே நடத்தி முடித்ததால் செந்தில் அவர்களுக்கு 'டாக்டர்' பட்டம் வழங்க முடிவு செய்துள்ளோம். பட்டம் வாங்க மறுத்து பம்மினால்... மான(!)நஷ்ட வழக்கு தொடருவோம்!!!!! இப்படிக்கு,டாக்டர் கேப்டன் ரத்தவெறி ரசிகர் மன்றம், எண் 007, டுமீல் நகர், ஆப்கானிஸ்தான். நாங்கள் கேப்டன் ரசிகர்களா என சந்தேகம் இருப்பின்...... வருக... http://madrasbhavan.blogspot.com/2010/12/3.html
47
50
இந்த ரமேஷ் இம்சை தாங்க முடியலையே...Dangerous Fellow! கேர் புல்லாதான் டீல் பண்ணனும்!
படம் பாக்கலாமா? வேணாமா? சொல்லவே இல்லையே...
//வெறும்பய said...
சார் உங்களுக்கு சேதாரம் எதுவும் இல்லையே...நல்லாயிருக்கீங்க தானே...//
Repeatu..
////குளத்துல நீச்சல் பழகுனவன் ஆத்தை கண்டு பயப்படுவான்,ஆத்துல நீச்சல் பழகுனவன் கடலைக்கண்டு பயப்படுவான்.கடல்ல நீச்சல் பழகுனவன் எதைக்கண்டும் பயப்பட மாட்டான்.////
உண்மையில் ஒரு அருமையான வசனம்....
ஒரு சந்தேகம் ஒர படத்தில் அடியாளெல்லாம் மேல் சட்டை இன்றி நிற்க கப்டன் மட்டும் அங்கியுடன் நிற்கிறாரே என்ன காரணம்.. குளிரா..??
இந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது?
விருதகிரி..........வறுத்தகரி......!
எதிரிகள் வருத்த கறி ஆகும் விருத்தகிரி ...
I would definitely accept Captain as one of the good actors in Tamizh.
He has survived in kollywood for more than 30 years amidst senseless reviews of bloggers such as these!!
செந்தில் உங்க விமர்சனப் பதிவுகள் அனைத்தும் அருமை........உங்க எல்லா பட விமர்சனத்துலயும் சி செண்டர் ல கொஞ்ச நாள் தான் ஒடும்னே எழுதுறீங்களே ஏன்?
Post a Comment