நீங்க காரோ,பைக்கோ பிரைவேட் பேங்க்ல லோன்ல வாங்கி இருக்கீங்களா?
அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ நீங்க அவசியம் படிக்க வேண்டிய
விஷயம் இது.
10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆன்லைன் வசதி வராத போது
லோன் வாங்கும்போது முன் தேதி இட்ட காசோலைகள் வாங்குவார்கள்.
PDC (POST DATED CHEQUES) என ஆங்கிலத்தில் சொல்வார்கள்,தவணைத்
தேதியைப்பொறுத்து மாதாமாதம்
1ந்தேதியோ அல்லது 10ந்தேதியோ பேங்க்கில் பணம் கட்ட வேண்டும்.
நாம் கொடுக்கும் செக் பேங்க்குக்கு 2ந்தேதியோ அல்லது 11ந்தேதியோ
கலெக்ஷனுக்கு வரும்.
ஆனால் இப்போது ஆன்லைன் வசதி வந்த பிறகு நிலைமையே தலைகீழ்.
1ந்தேதி உங்களுக்கு தவணைத்தேதி என்றால் அதற்கு முந்தின நாளே
பேங்க்குக்கு செக் அனுப்பப்பட்டு விடுகிறது.1ந்தேதி காலை 9.30
மணிக்கு உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் பண்னி பேலன்ஸ் பார்க்கும்போது
உங்கள் அக்கவுண்ட்டில் பணம் இருக்க வேண்டும்.நீங்கள் சாவகாசமாக
காலை 10 மணிக்கோ 12 மணிக்கோ பேங்க் வந்து பணம் கட்டினால்
ஏற்கனவே செக் ரிட்டர்ன் ஆகி இருக்கும்.
செக் ரிட்டர்ன் சார்ஜ் ரூ 500 வசூலிக்கப்படும்.இது நீங்கள் லோன்
வாங்கிய பேங்க்கில்,அக்கவுண்ட் வைத்த பேங்க்கில் ரூ 200 பெனால்டி
வசூலிக்கப்படும்.
இப்போது நடந்த சம்பவத்தை சொல்கிறேன்.எனது நண்பர் ஒருவர்
ஈரோடு செஞ்சுரியன் பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி
36 செக் லீவ்ஸ்ஸை கொடுத்து மாருதி கார் லோனில் வாங்கினார்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் லோன் வாங்கினார்.
மாதாமாதம் 1ந்தேதி அவருக்கு டியூ டேட்.அவருக்கு எந்த மார்க்கட்டிங்க்
எக்ஸ்சிகியூட்டிவ்வும் ஒரு நாள் முன்பாக பணம் கட்ட வேண்டும் என
சொல்ல வில்லை.செக் 1ந்தேதி காலையே ரிட்டர்ன் ஆகி விட்டது.
இவர் காலை 10 மணிக்கு பணம் கட்டி விட்டார்.ஆனா நோ யூஸ்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் 1270 பேர் ஈரோடு பிராஞ்ச்சில்
மட்டும் லோன் வாங்கி இருக்கிறார்கள்.
இது போக ஐ சி ஐ சி ஐ பேங்க்,ஹெச் டி எஃப் சி பேங்க்,சுந்தரம் ஃபைனான்ஸ்,ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ்,மஹேந்திரா &மஹேந்திரா ஃபைனான்ஸ்,இந்தஸ் இந்த் பேங்க்,அசோக் லைலேண்ட் ஃபைனான்ஸ் உட்பட ஈரோட்டில் மட்டும் 17 தனியார் வங்கிகள் உள்ளன.ஒவ்வொரு வங்கியிலும் சராசரியாக 1000 அக்கவுண்ட் என கணக்கு வைத்தாலும் 17000 அக்கவுண்ட் ஆச்சு. செக் ரிட்டர்ன் சார்ஜ் மட்டும் மொத்தம் ரூ எட்டரை லட்சம் வருகிறது.
பொதுமக்கள் பணம் வீணாக பறிக்கப்படுகிறது,
நேஷனலைஸ்டு பேங்க்கில் ரூ 80ம், சில வங்கிகளில் ரூ 180ம் பிடித்தம் செய்யப்படுகிறது.ஆனால் மற்ற பிரைவேட் பேங்க்கில் ரூ 500 சார்ஜ் போடப்படுகிறது.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.
நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்
1.நம் கணக்கில் பணம் இருந்தால் மட்டும் செக் குடுக்க வேண்டும்.அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ 1000 மட்டும் வைத்துக்கொண்டு பின் தேதி இட்ட காசோலையாக ரூ.50,000 ,ரூ.75,000 என தருவது தவறு.
2.பிரைவேட் பேங்க்கில் லோன் வாங்கும்போது மாதாமாதம் பணமாக கட்டி விடுகிறேன்.செக் தர மாட்டேன் என கறாராக கூறி விடவும்.
3. அப்போதைக்கு மார்க்கெட்டிங்க் எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்போகும இன்செண்ட்டிவ்வுக்காக ஏதாவது கதை அளந்து விடுவார்கள்,நம்ப வேண்டாம்,அவர்கள் வாய் மொழியாக என்ன வாக்கு கொடுத்தாலும் அதை பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்கவும்.
4.தவணைத்தொகையை மாதாமாதம் நீங்களே பேங்க்கில் நேரடியாக போய்க்கட்டவும்.கலெக்ஷன் எக்சிகியூட்டிவ் வீட்டுக்கு வந்தார் ,கொடுத்தேன் என சொல்ல வேண்டாம்,பின்னால் என் ஓ சி (NO OBJECTION CERTIFICATE) வாங்கும்போது கலெக்ஷன் சார்ஜ் என ஒரு விசிட்டுக்கு ரூ 100 வசூலிப்பார்கள்.நியாயம் கேட்டால் எல்ல கண்டிஷனுக்கும் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணி இருக்கிறீர்கள் என்பார்கள்.
5.லோன் வாங்கும்போது செக்யூரிட்டி செக் லீவ்ஸ் என பிளாங்க்காக 4 செக் லீவ்ஸ் வாங்கி வைப்பார்கள்,நீங்கள் டியூ சரியாக கட்டத்தவறினால் அந்த் பிளாங்க் செக்கில் ரூ 2 லட்சம் ரூ 3 லட்சம் என ஃபில் பண்ணி கலெக்ஷன் போட்டு அது ரிட்டர்ன் ஆனதும் செக் ரிட்டர்ன் கேசில் சிக்க வைப்பார்கள்.
6.தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.
7.இத்தனை பிரச்சனை எதற்கு என நினைப்பவர்களும் ,கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்வடைக்கு ஏற்ப மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.
டிஸ்கி 1- டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க
டிஸ்கி 2- தனியார் வங்கிகளைப்பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி பேசறியே,கம்பெனியின் ரூல்ஸ் & ரெகுலேஷன் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று மிரட்ட நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை ,நானும் ஒரு தனியார் வங்கி ஊழியனே..
டிஸ்கி 3 - என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.
48 comments:
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை அண்ணே,
தொடருங்கள்.......
//என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.//
கோட், சூட். டை எல்லாம் போட்டுட்டு வரலாமா?
டிசம்பர் 26ம் தேதி உங்கள் ஆபீஸ் திறந்திருக்குமா? அன்னைக்குத்தான் ஈரோடு வரலாம் என்றிருக்கிறேன். உங்களை அவசியம் பார்க்கவேண்டுமே. எனக்கு அவசரமாக ஒரு 1000 கோடி கார் லோன் வேண்டும். அரேன்ஜ் பண்ணமுடியுமா? எங்கியும் கையெழுத்தோ ரேகையோ வைக்கமாட்டேன். சரியா?
இப்படி தலைப்பு வெச்சு பதிவிடுறதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க, மன்னிக்கவும். தெரிஞ்சே பண்றதுக்கு பேரு என்னான்னு உங்களுக்கும் தெரியும். பொறுப்புங்கிறது அடுத்தவங்க தர்றது இல்லே. நாமளே எடுத்துக்கிறது. உங்க மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கிறதாலதான் இந்தப் பின்னூட்டமே
// இப்படி தலைப்பு வெச்சு பதிவிடுறதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க, மன்னிக்கவும். தெரிஞ்சே பண்றதுக்கு பேரு என்னான்னு உங்களுக்கும் தெரியும். பொறுப்புங்கிறது அடுத்தவங்க தர்றது இல்லே. நாமளே எடுத்துக்கிறது. உங்க மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கிறதாலதான் இந்தப் பின்னூட்டமே //
ரிப்பீட்டு...
நல்ல பதிவு..!! ஆனா ஹிட்ஸ்
வாங்கறாதுக்காக இந்த தலைப்பு
வெச்சது சரியில்ல..
பதிவுக்கு ++
தலைப்புக்கு --
கடன் பட்டார் காசோலை போல் ...
// டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க //
துரோகி....
// நானும் ஒரு தனியார் வங்கி ஊழியனே.. //
ஆஹா.... அண்ணனுக்கு சூடா ஒரு டீ சொல்லுப்பா...
உங்கள் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டேன்... மெசேஜ் பண்ணுகிறேன்...
//அப்போதைக்கு மார்க்கெட்டிங்க் எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்போகும இன்செண்ட்டிவ்வுக்காக ஏதாவது கதை அளந்து விடுவார்கள்,நம்ப வேண்டாம்,அவர்கள் வாய் மொழியாக என்ன வாக்கு கொடுத்தாலும் அதை பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்கவும்.//
எனக்கும் ஒரு பேங்க்கில் இந்த அனுபவம் உண்டு. அதனால் வேறு பேங்க் போகும்போது பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்டு வாங்கிவிட்டேன்
// philosophy prabhakaran said...
உங்கள் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டேன்... மெசேஜ் பண்ணுகிறேன்...//
இரவு ஏழு மணிக்கு மேல் பண்ணவும். பகலில் பண்ணினால் அவரது மேனேஜர் திட்டுவார்
தனியார் வங்கி?
//தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.///
அதற்க்கு முந்தின நாளும் லீவா இருந்தா?
//சொல்வடைக்கு //
வடைவடைவடை
//என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.///
நல்ல டிரஸ்ஸா வாடைக்கு எடுத்து போட்டுட்டு வந்தா வாடகை காசு கொடுப்பீங்களா?
லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.///
நல்ல டிரஸ்ஸா வாடைக்கு எடுத்து போட்டுட்டு வந்தா வாடகை காசு கொடுப்பீங்களா?////////////
அதுக்காக நமீதாவுட்ட போட்டுட்டு வந்தா கொடுக்கமுடியாது!!
அரசு வங்கிதான் அப்பிடின்னா! தனியார் வங்கிகளும் இப்பிடித்தானா?!! நெருப்புக்கு பயந்து எண்ணெய் சட்டியில் விழுந்த மாதிரி!!
நானும் பேங்க் ல அஜால் குஜால் நடக்குதுன்னு வந்து படிக்க வந்தா...............
இந்த பாங்க்ல மாட்டும் இல்ல மக்க எல்லா பாங்கும் இப்படி தான் ........இது மட்டும் இல்ல ..பாங்க்ல பொய் மக்கள் படும் பாடு இருக்கே ......கொஞ்சம் நஞ்சமா
நல்ல பதிவு..!!
செந்தில் எனக்குத் தெரிந்து அனைத்து தனியார் நிதி நிறுவனங்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி விடும். அப்படியும் உதாசீனப் படுத்தினால் ஒன்றும் செய்ய இயலாது. எனக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி பணம் கட்ட வேண்டும் என்றால் இரண்டாம் தேதியே நினைவூட்டி குறுந்தகவல் வந்துவிடும்
தலைப்பு எப்படி இருந்தால் என்ன? அவர் சொல்லியுள்ள செய்திகளை பாருங்கள்!
படித்த மேதாவிகளாக நடந்துகொள்பவர்கள் கூட இது போன்ற விஷயங்களில் மாட்டிகொண்டு
தண்டம் கட்டி அல்லல் படுவது தினசரி வாழ்கை.
// மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.//
இந்த வரிகள் தான் இங்கு மிக முக்கியம். ஊரில் இருக்கும் பாங்க அனைத்திலும் கணக்கை வைத்துக்கொண்டு அவர்கள் நம் தலையில் கட்டும் அணைத்து திட்டங்களிலும் சேர்ந்துகொண்டு....விதவிதமாக பிளாஸ்டி அட்டை வைத்துக்கொண்டு வெறும் டம்பதில் பெருமைகொண்டு இறுதியில் திண்டாடி தெருவில் நிற்கவேண்டுமா?
கிடைகிறது என்று கடன் வாங்குவது, பொருள் வாங்கி குவிப்பது மகா முட்டாள்தனம்.
--
பேங்க்னாலே பிரச்சினைதாங்க.. கவனமாகவே இருக்கனும்.. டிப்ஸ் எல்லாம் சூப்பர்..
என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது. /// பிரபலம் ஆயிட்டாலே இந்த பிரச்சினைதான். தலைப்பை மாற்றவும் எங்கள மாதிரி வயசு பசங்க ஏமாறுவாங்க அப்டிங்கறத விட உங்கள மாதிரி வயசான ஆளுக ஏமாறுவாங்க.
ஏமாறுவாங்க அப்டின்னு நான் சொன்னத தலைப்பை பார்த்து. ஹி ஹி
இந்த கடனை கட்டாம இருக்கறதுக்கு வழி இல்லையா...
- டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க///
ஏமாற்றம்!!! இருந்தாலும் மன்னிச்சாச்சு !!!!
கொஞ்சம் ஏமாற்றம் தான்... இருந்தாலும் தேவையான தகவல்
ரைட்டு!
உபயோகமான தகவல் தல... பகிர்வுக்கு நன்றி
பரபரப்பான தலைப்பு வைக்க உங்கட்ட தாங்க கத்திக்கிடனும். செக்ன்னு போடவேண்டிய தலைப்புக்கு செக்ஸ்ன்னு போட்டு பரபரப்ப கிளப்பிட்டீங்களே....
பிரைவேட் பேங்க்கில் லோன் வாங்கும்போது மாதாமாதம் பணமாக கட்டி விடுகிறேன்.செக் தர மாட்டேன் என கறாராக கூறி விடவும்.//
ஆனா செக் லீஃப் கொடுக்கிறது கட்டாயம் என்கிறார்களே...
நல்ல தகவல்களை மோசமான தலைப்பில் வைத்து அளித்திருக்க வேண்டாம்
Matters are OK for people awarness but why you have mentioned the company names? i am not accept that because you also a private finance employee now and in past
வர பிந்திவிட்டது மன்னிக்கவும்...
இது தெரிந்து தான் நான் உண்டியலிலேயே பணத்தை போட்டுவிட்டு ஒரு கம்பியால் தட்டி எடுக்கிறேன்..
தவறான தலைப்பின் கீழ் ஒரு நல்ல பதிவு அண்ணே!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.///
அதற்க்கு முந்தின நாளும் லீவா இருந்தா?//
அதற்கு முந்தின நாள் நைட்ல கட்டிடுங்க (டாஸ்மாக்ல). இதெல்லாம் ஒரு கேள்வியா?
என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது
//
அடடா.... லுங்கிக்கே கூச்சமா இருந்தா.... ’பட்டாபட்டியோட’ பார்க்ககூட மாட்டீங்க போல...
வருத்தம் எனக்கு...
:-(
பதிவு நன்று..
Due date வரைக்கும் வெயிட் பண்ணாம , முன்னாடியே கட்டலாம்.. ஏன்னா, நாம ராசா இல்லையே ராசா...
இந்த மாதிரி எல்லாம் டைட்டில் வைக்க எந்த யுனிவர்சிட்டியில கத்துக்கிட்டீங்க??
மிகவும் அவசியமான பதிவு..
//மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.//
ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்க.
சரி இந்த வாட்டி போனா போவுது, அடுத்த வாட்டி, அதப் பத்தி எழுதிடுங்க, அந்த நம்பிக்கைல தான் இப்போ ஓட்டு போட்டுட்டுப் போறேன்!
இந்த மாதிரியான நல்ல விசயங்களை நம்மாளுங்கலுக்கு இந்த மாதிரி தலைப்பில் கொடுத்தாத்தான் எடுபடும்.....நாமெல்லாம் இன்னும் விட்டில் பூச்சியாத்தான் இருக்கோம்.... என்ன செய்ய......
anaivarumee therinthu koLLa veentiya thakaval.
//டிஸ்கி 3 - என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது////
எலே மக்கா நான் கோட் சூட், போட்டுட்டு வரணுமா அல்லது சூட் கோட் போட்டுட்டு வரணுமா....:]]]
///அரசு வங்கிதான் அப்பிடின்னா! தனியார் வங்கிகளும் இப்பிடித்தானா?!! நெருப்புக்கு பயந்து எண்ணெய் சட்டியில் விழுந்த மாதிரி!!///
நீங்க எண்ணைக்கு பயந்து நெருப்புல விழுந்துராதீங்க வைகை....:]]]
Nan home Loan vankalmnu irukiren..
i don't have form 16.
Is it possible to get the home loan( to buy a built house) without Form16. I m working in company with take home salary as 24k.
Post a Comment