Saturday, December 04, 2010

சிக்குபுக்கு - சினிமா விமர்சனம்

http://www.maniyosai.com/cms/images/stories/cinemanews/chikku%20bukku.jpgஅட



பையா,காதல் சொல்ல வந்தேன்,ஜப் வி மெட் (ஹிந்தி) படங்களின் வரிசையில்
இதுவும் ஒரு பயண காதல் கதைதான்.ஆனால் கூடவே ஃபிளாஸ்பேக்கில் இன்னொரு காதல் கதையையும் இணைத்திருப்பது புதுசு.

ஆர்யாவுக்கு டபுள் ரோல்.அப்பா,பையன் என.2க்கும் மனுஷன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சைடு வகிடு எடுத்து தலை சீவினால் 1985 கால கட்டத்தில் வரும் அப்பா கேரக்டர். தலையே சீவாமல் அசால்ட்டாக காற்றில் பறக்க விட்ட ஹேர் ஸ்டைல் 2010 மகன் கேரக்டர். வாழ்க தமிழ் சினிமாவின் மெனக்கெடல்.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன்,இதில் ஸ்ரேயா செகண்ட் ஹீரோயின் தான்.வந்தவரை வாங்கிய சம்பளத்துக்கு பழுதில்லாமல் நடித்திருக்கிறார்.துடுக்கான பெண்ணாக இவர் வரும் சீன் எல்லாம் ஓக்கேதான்.ஆனால் ஆர்யாவுடன் பழகும் காட்சிகளில்,காதல் காட்சிகளில்
எல்லாம் செயற்கையான நடிப்பு.அதீத மேக்கப்பும்,கஷ்டப்பட்டு வரவழைக்கும் துடுக்குத்தனமும் மைனஸ்.மற்றபடி ஆள் பர்பி பொம்மை மாதிரி அழகாகவே இருக்கிறார்.பாடல்  காட்சிகளில் நடிக்கும்போது தான் அழகி என்ற கர்வத்துடன் முக பாவனைகள் அவரையும் மீறி வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம்.

புதுமுகம் ப்ரீத்திகா நல்ல முக லட்சணம்.இளமை பொங்கி வழியும் ,காதல் உணர்வுகள் ஓங்கி எழும் விழியும்,வெட்க உணர்வுகள் அட்டகாசமாக வெளிப்படுத்தும் சிவந்த கன்னக் கதுப்புகளும் கொண்ட 20 வயது இளமைப்பெட்டகம்.முக வெட்டு மட்டும் சைனீஸ் மாதிரி  இருப்பதால் எல்லா தமிழர்களுக்கும் பிடித்துப்போகும் என சொல்ல முடியாது.ஓர விழிப்பார்வையில் இவர் பார்வைக்கணைகளை தொடுக்கும்போது ஆர்யா மட்டும் அல்ல ,நாமும் வீழ்கிறோம். பாடல் காட்சிகளிலும்,சில காதல் காட்சிகளிலும் இயக்குநர் இவரிடம் குழந்தைத்தனமான சேஷ்டைகளை எதிர்பார்க்கிறார்.ஆனால் அம்மணி ஒரு விளைஞ்ச கட்டை (மாதர் குல மாணிக்கங்கள் மன்னிக்க)போல் நடந்து கொள்வது மைனஸ்.
http://www.vanakham.com/Admin/NewsAdmin/Upload/News/OYXKauYN.jpg
இந்த மாதிரி காதல் கதைகள் ஆர்யாவுக்கு அல்வா சாப்பிடுவது போல ,அசால்ட்டாக நடிக்கிறார்.
டூயட் சீனில் போகிற போக்கில் ஆர்யா ஒரு ஹை ஜம்ப் பண்றார் பாருங்க சான்சே இல்ல , கலக்கி எடுத்துட்டார் மனுஷன்.

படத்தின் ஓப்பனிங்கிலேயே 1985இல் ஒரு காதல் கதையும்,2010 இல் இன்னொரு காதல் கதையும் நடக்கிறது என்பதை சொல்லி விடுவது தெளிவான முடிவு.
1985இல் எழுதப்பட்ட அப்பாவின் டைரியை ஆர்யா படிக்கும்போது டைரியின்
எழுத்துக்கள் அப்படியே ஃபிரீஸ் ஆகி 2010இல் நடக்கும் கதையில் கோல மாவின் வரிகளோடு கனெக்டிங்க் ஷாட் வைக்கும்போது இயக்குநரின் அழகியல் ரசனை  வெளிப்படுகிறது.

ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் ஃபிகர்சை யூஸ் பண்ணியது ஓக்கே,ஆனால் எல்லாருமே 35 வயசு ஆண்ட்டிகளாக இருப்பது மைனஸ்.கண்ணுக்கு குளிர்ச்சியாக 18 வயசு ஃபிகர்களை ஆட விட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.

நண்டு சிண்டு ஜெயன் ஆர்யாவின் நண்பராக வந்து ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி  1000 தாமரை மொட்டுக்களே பாட்டுக்கு முக எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் காட்டுவது செம காமெடி.அதே போல் பின் பாதியில் ஃபிளாஸ்பேக் கதையில் ஆர்யாவின் நண்பராக சந்தானம் வந்ததும் காமெடி களை கட்டுகிறது.

ஆர்யா கல்யாண விசேஷத்தில் ப்ரீத்தாவுக்கு காகித ராக்கெட் விடுவதும் அது பாதை மாறி வேறொரு மொக்கை ஃபிகரிடம் பட்டு அவர் காதலுடன் ஆர்யாவை லுக் விடுவது  டைமிங்க் காமெடி.

நீளமான காகித பீப்பீ செய்து அதன் மூலம் ஹீரோயின் கன்னத்தை ஹீரோ தொடும் சீன் செம கிளு கிளு.தெளிவாக நீரோடை மாதிரி செல்லும் திரைக்கதையில் ஆர்யாவின் ரூம் மேட் கேரக்டர் ஆர்யாவின் காதலியை அத்தை பெண் என ட்விஸ்ட் வைத்ததும்,அவருக்காக  ஆர்யா தன் காதலை ,காதலியை விட்டுத்தருவதும் நம்ப முடியாதது மட்டும் அல்ல பார்வையாளனுக்கு எரிச்சலை வர வைக்கும் சீன்.

அதே போல் அப்பா ஆர்யா காதலித்த பெண் தனது அத்தை பையனை மணக்க ஒத்துக்கொள்ளும்  காட்சி சும்மா வசனம் மூலமே கட்டப்படுவது அழுத்தம் இல்லை.ஆர்யாவுக்கு வேற இடத்தில்  கல்யாணம் ஆகிடுச்சு என சொன்னதும் ,அதை நம்பி அவர் அத்தை பையனை மேரேஜ்  பண்ண ஒத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

அப்பா கேரக்டர் ஆர்யாவின் காதலி வேறொருவரை திருமணம் செய்வதையே
ஏற்க முடியாத நிலையில் அவருக்குப்பிறந்த மகளை மகன் ஆர்யா காதலிப்பதும் , மணப்பதும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?சித்தி மகள் முறை ஆகாதா?

இந்த 2 மைனஸ்களும் படத்தின் வெற்றியை நிரம்பவே பாதிக்கும்.

ஸ்ரேயா பாடல் காட்சிகளில் தனது கூந்தல் கற்றைகளை மீசையாக்கி அழகு காண்பிப்பது கவிதை.ஆர்யாவின் நண்பராக வந்து காதல் கதையில் குழப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் ஒரு பெரிய ஸ்டாரை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தூறல் என்றாலும் சாரல் என்றாலும் ஈரம் மண்ணில்தான் என்ற பாடல்
பல கவிதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.அதே போல் நடுக்காட்டில் ஸ்ரேயாவின் பர்த்டே கொண்டாட காய்கறிகளைக்கொண்டே ஆர்யா கேக் ரெடி பண்ணுவது ,அதன் மூலம் லவ் ஸ்டார்ட் ஆவது THE BLUE LAGUNE படத்தை நினைவுபடுத்தினாலும் கவிதையான காட்சி.

லேடீஸ் பஸ்சில் பார்வை இல்லாதவராக நடிக்கும் ஆர்யா பண்ணும் சேஷ்டைகள் இனி டாப் டென் காமெடியில் ரொம்ப நாளுக்கு இருக்கும்.அதே போல் ஸ்ரேயாவுக்கு  உள்ளங்கால் ஜோசியம் பார்ப்பதும் செம கிளு கிளுப்பு.
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1591.jpg
கதா விலாசம் எஸ் ராமகிருஷ்ணனின் மேதாவிலாசம் தென் பட்ட இடங்கள்

1.காதலிக்கறவங்க யோசிக்கறது கிடையாது,யோசிக்கறவங்க காதலிக்கறது கிடையாது.

2. ஹாய்... ஹேப்பி மேரீடு லைஃப்...

சாரி,இந்தக்கல்யாணம் நடக்காது,நான் ஓடிப்போகப்போறேன்.

3. யோவ்,மதுரைக்கு ஒரு டிக்கெட் வேணும்.

மரியாதை வேணும்.

மதுரை வேணும்.

ஏம்மா,நீயே ஒரு டிக்கெட் மாதிரிதான் இருக்கே உனக்கு எதுக்கு டிக்கெட்?

4.மேடம்,நீங்க லவ் மேரேஜா?      ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க?

உங்க ஆளு என்னை சைட் அடிச்சிட்டு இருக்காரே,லவ் பண்ணும் வரைதான் உங்களைப் பார்ப்பாரு,மேரேஜ் ஆகிட்டா போர் அடிச்சிடும்,வெளில பார்ப்பாரு.

5. நம்ம கூடப்படிச்சாளே வள்ளி ,அவ இப்போ எப்படி இருக்கா?

ராயல் தியேட்டர் ஓனரை கட்டிட்டு சினிமாஸ்கோப் மாதிரி இருக்கா.

6. யோவ்,தில்லு இருந்தா என் சைக்கிளை உன் டப்பா காரால ஓவர்டேக் பண்ணுய்யா பார்ப்போம்.

7.  தம்பி,நமக்கு எதுக்கு இந்த போலீஸ் வேலை  எல்லாம்?

மாமூல் கிடைக்குமே.

8.  இது பிளாக் டிக்கட்டா?       நோ டிரெயின் டிக்கட்

9. வயசுப்பையனை இப்படி தனியா விட்டுட்டுப்போனா எப்படி?மோகினிப்பொண்ணு பார்த்தா இழுத்துட்டுப்போயிடாது?

அப்படி இழுத்துட்டுப்போனா அவளை இழுத்து வெச்சு அறுத்துடறேன்.

10. அய்யய்யோ,என் பேக்கை அபேஸ் பண்ணிட்டு ஓடறான்,என் பாஸ்போர்ட்,விசா எல்லாம் அதுலதான் இருக்கு,

அப்போ உன் ஹேண்ட்பேக்ல என்னதான் இருக்கு?     லிப்ஸ்டிக்,கண்ணாடி,பவுடர் பஃப்

11. டீச்சர்,ஷாஜகான் மும்தாஜ் இறந்ததும் தாஜ்மகால் கட்டுனாரு,பக்கத்து வீட்டு முத்து அவரோட மனைவி இறந்ததும் அவளோட தங்கையை கட்டுனாரு.2 பேருல யார் புத்திசாலி?

12.  சார்,ஒரு ஹெல்ப்,நீங்க ஃபோட்டோகிராஃபர்தானே,என் ஆள் கோயிலுக்குப்போறப்ப நடக்கறப்ப,குளிக்கறப்ப ஃபோட்டோ எடுக்கனும்.

குளிக்கறப்பவுமா?

13. என் ஃபோட்டோவுக்கு கிஸ் குடுக்காதே.    சரி ,அப்போ நேரடியா நீயே குடு.


14. இங்கே இருந்து மதுரைக்கு ஸ்ட்ரெயிட் பஸ் இருக்கா?   பஸ்சே கிடையாது.


15. அப்பன் சேர்த்து வெச்ச சொத்தை கரைக்கறவன்தான் உண்மையான ஆம்பளை.

16. நான் வயிற்றுல தொப்பையை பார்த்திருக்கேன்,முகத்துலயே தொப்பை உள்ளவனை இப்போதான் பார்க்கறேன்.

17. நாம 2 பேரும் ஃபிரண்ட்சா இருக்கலாமா?   ஃபிரண்ட்ஸிப்ங்கறது தானா உருவாகனும்.

18. எல்லாருக்கும் ஒவ்வொரு வயசுல ஒவ்வொண்ணைப்பிடிக்கும்.எனக்கு எப்பவும்  அவளை மட்டும் தான் பிடிக்கும்.

19. பொண்ணுங்க யாரை எப்போ லவ் பண்ணுவாங்கன்னு சொல்லவே முடியாதுஅது அவங்களுகே. தெரியாது.

20.  4 லார்ஜ்ஜூகு கம்மியா சரக்கு அடிச்சா என் பரம்பரைக்கே கேவலம்.

21. சார்,7.30 க்கு வர்ற டிரெயின் எப்போ வரும்?

       இதென்ன கேள்வி? 7.30க்குத்தான் வரும்.

22. சார்,டிரெயின் ஏன் இன்னும் வர்லை?   பஞ்சர் ஆகியிருக்கும்.

டிரெயின் எப்படி பஞ்சர் ஆகும்?

23. ஒரு ஆம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா பிரச்சனை அவனுக்கு மட்டும்தான்,ஒரு பொம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா அவ குடும்பத்துக்கே பிரச்சனை.

24. நான் ஏகப்பட்ட பேரை அலைய விட்டிருக்கேன்,மாட்டி விட்டிருக்கேன்.

அது சரி ,நீ எத்தனை பேரு கிட்டே மாட்டி இருக்கே?

அது சீக்ரெட்,ஒரு பொண்ணு கிட்டே அதை மட்டும் வரவைக்கவே முடியாது.

25. எக்ஸ்கியூஸ் மீ சார்,நீங்க சூசயிடுதானே பண்ணிக்கப்போறீங்க,உங்க பைக் சாவியை குடுங்க ,நாங்க யூஸ் பண்ணிக்கறோம்.

26. நான் உங்களுக்கு மட்டும்தான் என் பைக்ல லிஃப்ட் குடுப்பேன்,திமிராப்பேசுதே இந்தப்பொண்ணு,அதுக்கு லிஃப்ட் தரமாட்டேன்.

ஓக்கே,நீங்க எனக்கு மட்டும் லிஃப்ட் குடுங்க.

அப்புறம் ஏன் அந்தப்பொண்ணு ம் பைக்ல ஏறுது?

நீங்க எனக்கு லிஃப்ட் தந்தீங்க,நான் அந்தப்பொண்ணுக்கு லிஃப்ட் தந்திருக்கேன்.

(இந்தக்காமெடி கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கரகாட்டக்காரன் வாழைப்பழ ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கும்)

27.   ஸ்ரேயா - எனக்கு பயமா இருக்கு.

ஆர்யா - நாந்தான் கூட இருக்கேனே?

ஸ்ரேயா - அதனாலதான் பயமே...

28. சந்தானம் - நைனா,என் காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணலைன்னா இந்த வீட்ல ஒரு பொணம் விழும்.

அவசரப்பட்டு தற்கொலை பண்ணிக்காதே...

நைனா,நான் உன்னைத்தான் கொலை பண்ணப்போறேன்..

29. அடடே,சொல்லாம கொள்ளாம நம்ம ஊருக்கு வந்துட்டீங்க?

இல்லையே,மனைவி கிட்டே சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.

யோவ்,என் கிட்டே சொல்லாம வந்துட்டேன்னு சொல்ல வந்தேன்.

30. என்ன போட்டின்னா அதோ அந்த ரவுண்டுக்குள்ள நீ சுடனும்.

சந்தானம் - நான் முதல்ல சுடறேன்,அப்புறமா ரவுண்ட் போட்டுக்கறேன்.

31. ஸ்ரேயா- வண்டில ஏ சி இல்லை,குடிக்க தண்ணி இல்லை...

ஆர்யா - அது கூட தேவலை,பிரேக்கும் இல்லை.

32. நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியலை.

லவ் பண்றவங்க பேசறது அப்படித்தான் இருக்கும்.

33.இந்த உலகத்துலயே கஷ்டமான விஷயம் பிடிச்சவங்களை  பிரியரதுதான்,
சந்தோஷமான விஷயம் பிரிஞ்சவங்க சேர்றதுதான்.

34. ஒவ்வொருத்தன் லைஃப்லயும் அடடா மிஸ் பண்ணீட்டமேன்னு வருத்தப்படற விஷயம் கண்டிப்பா ஒண்ணாவது இருக்கும்.

35. யாரோட காதலுக்காகவும் என்னோட காதலை நான் விட்டுத்தர முடியாது.

படத்தில் வசனங்கள் பெரிய பலம்.அதே போல் சந்தானம் காமெடியும்.ஒளிப்பதிவு டாப்.இசை சுமார்

ரன்னிங்க் ரேஸ்சில் கலந்து கொள்ளும் சந்தானம் ஏதோ பேதியை வரவைக்கும் சரக்கை தெரியாமல் குடித்து விட்டு நெம்பர் டூ போவதற்காக வேகமாக ஓடுவதும் அட பிரமாதமாக ஓடறியே என பாராட்டப்படுவதும் கண்ணில் நீரை வர வைக்கும் காமெடி.

நீ எங்கேயோ போகப்போறே?

இன்னும் கொஞ்ச நேரம் ஆனா நான் இங்கேயே போயிடுவேன்.

ம் ம் தேறிடும்.      ம்ஹூம் நாறிடும்.
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/8383_1.jpg
படத்தின் இயக்குநருக்கு சில அட்வைஸ்

1. உலகப்படத்திலிருந்து கதையையோ காட்சியையோ உருவும்போது நமது கலாச்சாரத்துக்கு அது செட் ஆகுமா என எண்ணிப்பார்க்கவும் அல்லது கொஞ்சம் ஆல்டர் பண்ணவும்.

2. எடிட்டிங்கில்,திரைக்கதையில் டவுட் என்றால் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவும்,எந்தத்தவறும் இல்லை.12 பி என்ற படத்தின் திரைக்கதை எடிட்டிங்க்கிற்கு அமரர் ஜீவா கே பாக்யராஜிடம் ஆலோசனை பெற்றார்.( அது ஒரு சிக்கலான திரைக்கதை)

3. டி வி டி பார்த்து அறிவை வளர்ப்பதை விட புத்தக படிப்பு அனுபவம் தேவை.இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என பெயர் பெற்ற கே பாக்யராஜின் திரைக்கதை எழுதுவது எப்படி புக்கை நெட்டுரு போடவும்,அதே போல் அமரர் சுஜாதாவின் சினிமாக்கட்டுரைகளை படிக்கவும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் விமர்சனம் - ஓக்கே.

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள்  சி செண்ட்டர்களீல் 20 நாட்கள் ஓடலாம்.

காதலர்கள்,இளைஞர்கள்,கல்லூரி இளைஞர்கள்,இளைஞிகள் பார்க்கலாம்.

50 comments:

தினேஷ்குமார் said...

ஹையா வட வட

தினேஷ்குமார் said...

பாஸ் தமிழ்மனத்தில் இனச்சிட்டேன்

தினேஷ்குமார் said...

ஆமாம் பாஸ் இப்படி வேலைக்குபோரன்னு சொல்லிட்டு ஒரு நாளைக்கு மூன்று படம் பாக்கரிங்களே இது ஞாயமா????

சும்மா தமாசுக்கு

சிவராம்குமார் said...

ஒருத்தர் கூட நல்லா இருக்குன்னு சொல்லலை!!!!

தினேஷ்குமார் said...

ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் ஃபிகர்சை யூஸ் பண்ணியது ஓக்கே,ஆனால் எல்லாருமே 35 வயசு ஆண்ட்டிகளாக இருப்பது மைனஸ்.கண்ணுக்கு குளிர்ச்சியாக 18 வயசு ஃபிகர்களை ஆட விட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.

சரியான கேள்வி பாஸ்

தினேஷ்குமார் said...

பாஸ் நேற்று நந்தலாலா பார்த்தேன் அருமையா இருந்தது படம் உங்க விமர்சனத்துக்கு அப்புறம் தான் நான் இப்பவெல்லாம் படம் பார்க்கிறேன் பாஸ்

தினேஷ்குமார் said...

பாஸ் கட பக்கமும் கொஞ்சம் வந்து போங்க பழைய பாக்கி பேலன்ஸ்

Unknown said...

விமர்சனம் நல்லாயிருக்குங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நண்டு சிண்டு ஜெயன் ஆர்யாவின் நண்பராக வந்து ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி 1000//

அது ஜெயன் இல்லை ஜெகன்

அன்பரசன் said...

வழக்கம்போல கலக்கல் விமர்சனம்.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நல்லாயிருக்குங்க.. .

எஸ்.கே said...

மொத்தத்தில் சிக்குபுக்கு ஊத்திகிச்சு!

Philosophy Prabhakaran said...

காதல் சொல்ல வந்தேன் பயணக்காதலா...? ம்ம்ம்.... நான் அந்த படத்தை பார்க்கவில்லை...

Philosophy Prabhakaran said...

// சைடு வகிடு எடுத்து தலை சீவினால் 1985 கால கட்டத்தில் வரும் அப்பா கேரக்டர். தலையே சீவாமல் அசால்ட்டாக காற்றில் பறக்க விட்ட ஹேர் ஸ்டைல் 2010 மகன் கேரக்டர் //
செம நக்கலு...

Philosophy Prabhakaran said...

// பாடல் காட்சிகளில் நடிக்கும்போது தான் அழகி என்ற கர்வத்துடன் முக பாவனைகள் அவரையும் மீறி வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். //
இதை நீண்ட நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்...

Philosophy Prabhakaran said...

// முக வெட்டு மட்டும் சைனீஸ் மாதிரி இருப்பதால் எல்லா தமிழர்களுக்கும் பிடித்துப்போகும் என சொல்ல முடியாது //
எனக்கு பிடிக்கவில்லை... ஆனாலும் ஸ்டில் எங்கே...?

Philosophy Prabhakaran said...

// சித்தி மகள் முறை ஆகாதா? //
ச்சே... பிடிக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

விமர்சனம் ரொம்பவே நீளமாக போய்விட்டது...

டிலீப் said...

விமர்சனம் சூப்பர் சேர்...
தகவல் உலகம்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஹையா வட வட


appooஅப்போ அரை மணீ நேரமா காத்து வாங்கிட்டுதான் இருந்ததா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் தமிழ்மனத்தில் இனச்சிட்டேன்

நண்பேண்டா

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஆமாம் பாஸ் இப்படி வேலைக்குபோரன்னு சொல்லிட்டு ஒரு நாளைக்கு மூன்று படம் பாக்கரிங்களே இது ஞாயமா????

சும்மா தமாசுக்கு

ஹி ஹி என் வேலையே அதானே

சி.பி.செந்தில்குமார் said...

சிவா என்கிற சிவராம்குமார் said...

ஒருத்தர் கூட நல்லா இருக்குன்னு சொல்லலை!!!!

எஸ் சிவா

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் ஃபிகர்சை யூஸ் பண்ணியது ஓக்கே,ஆனால் எல்லாருமே 35 வயசு ஆண்ட்டிகளாக இருப்பது மைனஸ்.கண்ணுக்கு குளிர்ச்சியாக 18 வயசு ஃபிகர்களை ஆட விட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.

சரியான கேள்வி பாஸ்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் நேற்று நந்தலாலா பார்த்தேன் அருமையா இருந்தது படம் உங்க விமர்சனத்துக்கு அப்புறம் தான் நான் இப்பவெல்லாம் படம் பார்க்கிறேன் பாஸ்

ஓக்கே பாருங்க ,இதை என் எழுத்துக்கு கிடைச்ச வெற்றியா நினைச்சுக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் கட பக்கமும் கொஞ்சம் வந்து போங்க பழைய பாக்கி பேலன்ஸ்

ஓக்கே மதியம் 2 மணீக்கு

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

விமர்சனம் நல்லாயிருக்குங்க..

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நண்டு சிண்டு ஜெயன் ஆர்யாவின் நண்பராக வந்து ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி 1000//

அது ஜெயன் இல்லை ஜெகன்

சாரி பெயர் மாறு தோற்றப்பிழை

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

வழக்கம்போல கலக்கல் விமர்சனம்.

நன்றி அன்பு சார்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

விமர்சனம் நல்லாயிருக்குங்க.. .

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

மொத்தத்தில் சிக்குபுக்கு ஊத்திகிச்சு!

அதுல உங்களுக்கு அப்படி என்ன ஒரு கொண்டாட்டம்/

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

காதல் சொல்ல வந்தேன் பயணக்காதலா...? ம்ம்ம்.... நான் அந்த படத்தை பார்க்கவில்லை...

பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// சைடு வகிடு எடுத்து தலை சீவினால் 1985 கால கட்டத்தில் வரும் அப்பா கேரக்டர். தலையே சீவாமல் அசால்ட்டாக காற்றில் பறக்க விட்ட ஹேர் ஸ்டைல் 2010 மகன் கேரக்டர் //
செம நக்கலு...

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

// பாடல் காட்சிகளில் நடிக்கும்போது தான் அழகி என்ற கர்வத்துடன் முக பாவனைகள் அவரையும் மீறி வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். //
இதை நீண்ட நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்...

குட்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

// முக வெட்டு மட்டும் சைனீஸ் மாதிரி இருப்பதால் எல்லா தமிழர்களுக்கும் பிடித்துப்போகும் என சொல்ல முடியாது //
எனக்கு பிடிக்கவில்லை... ஆனாலும் ஸ்டில் எங்கே...?

இப்போதான் போட்டேன் ,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

விமர்சனம் ரொம்பவே நீளமாக போய்விட்டது...

வசனம் நிறைய சூப்பரா இருந்ததால

சி.பி.செந்தில்குமார் said...

டிலீப் said...

விமர்சனம் சூப்பர் சேர்...
தகவல் உலகம்

நன்றி டிலீப்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நேத்திக்கே படம் பாத்திட்டேன்.. ஒண்ணும் பெருசா சொல்ற மாதிரி இல்லையே...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தன இந்த ஆளு சலிக்காம டெய்லி படம் பார்க்கிறாரோ

ஆமினா said...

//18 வயசு ஃபிகர்களை ஆட விட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.//

:)))

நல்ல விமர்சனம்

தினேஷ்குமார் said...

பாஸ் வாழ்த்துக்கள் தமிழ் மனத்தில் 2 வது இடத்தில் முன்னணியில் உள்ளீர்கள்

வைகை said...

நேத்து நீங்க இந்த பதிவ போடும் போது இந்த படம் பாத்துகிட்டு இருந்தேன், அப்பறம் உங்க விமர்சனம் படித்தேன், எனக்கு என்ன தோணியதோ அதையெல்லாம் நீங்க சொல்லியிருக்கிங்க, இன்னொன்னும் சொல்லலாம் உடைகள் விசயத்தில் இன்னும் அக்கறை எடுத்திருக்கலாம், எனக்கு தெரிந்து 1985 - இல் காரைக்குடியில் இவ்வளவு மாடர்னா போட்டதில்லை, நல்ல விமர்சனம் சிபி

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
எப்படி தன இந்த ஆளு சலிக்காம டெய்லி படம் பார்க்கிறாரோ///

அதானே ஒரு வேலை தியேட்டர்ல ஆப்பரேட்டரா இருப்பாரோ

வெற்றி நமதே said...

கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்

தினேஷ்குமார் said...

karthikkumar said...
இம்சைஅரசன் பாபு.. said...
எப்படி தன இந்த ஆளு சலிக்காம டெய்லி படம் பார்க்கிறாரோ///

அதானே ஒரு வேலை தியேட்டர்ல ஆப்பரேட்டரா இருப்பாரோ

பங்கு பப்ளிக் பப்ளிக்

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
இம்சைஅரசன் பாபு.. said...
எப்படி தன இந்த ஆளு சலிக்காம டெய்லி படம் பார்க்கிறாரோ///

அதானே ஒரு வேலை தியேட்டர்ல ஆப்பரேட்டரா இருப்பாரோ

பங்கு பப்ளிக் பப்ளிக்///

அப்போ அவர நம்மள கவனிக்க சொல்லுங்க

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

விமர்சனம் நன்றாக இருந்தாலும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாமோ?

NaSo said...

அண்ணா இவ்வளவு பெரிய விமர்சனமா?

NaSo said...

//புதுமுகம் ப்ரீத்திகா நல்ல முக லட்சணம்.இளமை பொங்கி வழியும் ,காதல் உணர்வுகள் ஓங்கி எழும் விழியும்,வெட்க உணர்வுகள் அட்டகாசமாக வெளிப்படுத்தும் சிவந்த கன்னக் கதுப்புகளும் கொண்ட 20 வயது இளமைப்பெட்டகம்.//

உங்களுடைய இந்த விமர்சனம் சூப்பர்!

NKS.ஹாஜா மைதீன் said...

கதாநாயகியை பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர்....நல்ல ரசனை.