Friday, December 10, 2010

சித்து + 2 சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/11/siddhu2-oc22-2009.jpg
இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் பெற்ற கே பாக்யராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கும் படம்.
சக்கரக்கட்டி என்ற முதல் படம் ஓடாவிட்டாலும் நடிப்பு,நடனம் என கலக்கிய சாந்தனுவின் 2 வது படம்.

முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு,மவுன கீதங்கள் என்று திரைக்கதையில் வித்தை காண்பித்தவரும் இவர்தான்.வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே ,ஞானப்பழம் என சறுக்கியவரும் இவர்தான்.

பிளஸ் 2 ரிசல்ட் ஃபெயில் என்பதால் ஊரை விட்டு ஓடி வரும் 2 பேர் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்வில் இணைவதுதான் கதை.

முற்போக்குவாதி என பெயர் பெற்ற குமுதம் உதவி ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி ஏன் இந்த மாதிரி பிற்போக்குத்தனமான கதையை தேர்ந்தெடுத்தார் என புரியவில்லை.அதே போல் தொட்டால் தொடரும் என்ற அற்புதமான காதல் கதையை கொடுத்த பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப்படத்தின் திரைக்கதையில் பணி புரிந்தும் அங்கங்கே தடுமாறுவது ஏன்?

முதலில் இந்தக்காலத்தில் ஐ ஏ எஸ் எக்சாமில் ஃபெயில் ஆனால் கூட யாரும் கவலைப்படுவதில்லை.வெறும் பிளஸ் டூ ஃபெயிலுக்கு யாராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா?ஹீரோயின் கால் ஆண்டு,அரை ஆண்டு தேர்வில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தவர்,ஏதோ மிஸ்டேக்கில் ஃபெயில் என தவறான தகவல் வந்ததும் ஊரை விட்டு  ஓடுவாரா?அடிப்படையான இந்தக்கேள்விகள் மொத்தப்படத்தையே ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.

சாந்தனு சக்கரக்கட்டியில் ரொம்ப இயல்பாக நடித்தார்.ஆனால் இந்தப்படத்தில் சொந்த அப்பாதானே டைரக்டர் என்ற தெனாவெட்டுடன் நடித்திருக்கிறார்.அது தெள்ளத்தெளிவாக ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

புதுமுகம் சாந்தினி நல்ல அறிமுகம்தான்.ஆனால் அவரை லட்டு ஃபிகர் என அள்ளிக்கவும் முடியல.அட்டு ஃபிகர் என தள்ளிக்கவும் முடியல.ஆனால் நடிப்பில் புதுமுகம் போல் தெரியாத அளவு நல்ல பர்ஃபார்மென்ஸ்.ஆனால் அவர் ஜோதிகாவின் தங்கை மாதிரி பல காட்சிகளில் நடந்து கொள்கிறார்.50,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்.ஓவர் ஆக்டிங்க்கை குறைத்தால் முன்னேறலாம்.

ஹீரோ அறிமுகக்காட்சியில் நல்ல காமெடி.போலீஸில் மாட்டிக்கொண்ட ஹீரோ அட்ரஸ் சொல்லும்போது ஏதோ பழனி லேகிய டாக்டர் அட்ரஸ் சொல்லி கலாய்ப்பதும்,அது தெரியாமல் நெல்லை சிவா அவரை விட்டு விடுவதும் நகைப்பு.

ஓப்பனிங்க் சாங்கில் சாந்த்னு ரொம்ப அருமையாய் நடனம் ஆடி இருக்கிறார்.நடனத்தில் விஜய்க்கு நிகராய் பெயர் எடுக்க வேண்டும் என்ற அவரது துடிப்பு ஒவ்வொரு அசைவிலும் ,டான்ஸ் ஸ்டெப்பிலும் தெரிகிறது.
அந்தப்பாடலில் வரும் முகம் தெரியாத ஒரு ஃபிகரின் இடை அழகு டாப்.ஃபேஷன் என நினைத்து அந்தப்பாடலில் சாந்தனு போட்டிருக்கும் பெல்ட் சகிக்கலை.



ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளும் ஹீரோ- ஹீரொயினிடம் ஒரு ஃபிகர் கம்ப்பெனிக்கு ரேட் பேசுவதும்,ஹீரோவுக்கு ரூ 15,000 பணமும்,ஹீரோயினுக்கு ரூ 10,000 பணமும் தருவதாக பேரம் பேசுவது தியேட்டரில் கலகலப்பை கிளப்பினாலும் மாபெரும் கலாச்சார சீர்கேடு.
 
அதே போல் ஹீரோவும் ஹீரோயினும் படகுக்குள் சும்மா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் ,ஹீரோ காலை ஆட்டிக்கொண்டிருப்பதால் வெளியிலிருந்து பார்க்க படகு ஆடுவதைப்பார்த்து போலீஸ் + ஆடியன்ஸ்  தவறாக நினைப்பது அக்மார்க் பாக்யராஜ் டச்.அதே போல் ஹீரோயினுக்கு ஹீரோ விடும் காகித ராக்கெட் மிஸ் ஆகி அவரது தங்கை (இவரும் சுமார் ஃபிகரே)மீது விழுவதும் அவர் பதிலுக்கு ஹீரோவுக்கு ரூட் விடுவதும் ஜாலி கலாட்டா.


படத்தில் வரும் என்கவுண்ட்டர் இன்ஸ்பெக்டர் கேரக்டர் கதைக்கோ,திரைக்கதைக்கோ தேவையே இல்லை,சும்மா இடைவேளை ட்விஸ்ட்டுக்காகவும் ,ஒரு ஃபைட்டுக்காகவும் வலிய திணிக்கப்பட்டு இருக்கிறார்.அதே போல் ஹீரோயினின் மாமாவாக வரும் கேரக்டர் அசட்டுத்தனமாய் ஹீரோயினை லவ் பண்ணுவதை பிளாக் அண்ட் ஒயிட் ஃபிளாஸ்பேக்குடன் சொல்ல வேண்டுமா?வழக்கமாக பாக்யராஜ் படங்களில் தேவையில்லாத கேரக்டரே வராது,இது விதி விலக்கு .

ஒரு சீனில் ரெட் & ரெட் காஸ்ட்யூமில் ஹீரோயின் சோபாவில் படுத்திருக்க அதை ஹீரோ ரசிப்பது ஒளிப்பதிவாளருக்கு பெயர் சொல்லும் சீன்.
ஒரு குடோனில் ரவுடிகள் கூட்டம் இருப்பதும் அவர்களுடன் ஹீரோ சண்டை போடுவதும் படு செயற்கை.ஒவ்வொரு முறை ஹீரோயின் ஹீரோவிடம் தனது ஃபிளாஸ்பேக்கை சொல்ல விழையும் போதும் ஹீரோ தூங்கிவிடுவது செம காமெடி.

ஏழைக்கேத்த எள்ளுரண்டை, 2 இட்லி ஒரு வடை ,மெது வடையா?மசால் வடையா?போன்ற வசனங்களை தனது மகன் பேச அப்பா கேட்டுக்கொண்டு இருக்கிறாரே என நமக்குத்தான் கூச்சமாக இருக்கிரது,சாந்தனு சர்வசாதாரனமாக பேசுகிறார்.
பாக்யராஜ் படங்களில் பொதுவாக சொல்லப்படும் குறை இதிலும் உண்டு.அதாவது ஒரு கேரக்டரை பற்றி ஒருவர் சொல்வதும் அதை ஒளிந்திருந்து மற்றவர் கேட்டு திருந்துவதும் ரொம்ப நாடகத்தனம்.

வில்லனின் மகளை ஸ்கூலில் திட்டிய ஆசிரியர் வாயை நிஜமாகவே தைப்பது காதில் பூ சுற்றும் வேலை,ஹீரோ ஹீரோயினின் பக்கத்து வீட்டுக்கு குடி வருவது ,அவர் மனதில் இடம் பிடிக்க முயல்வது எல்லாம் அரதப்பழசான சிச்சுவேஷன்ஸ்
தூறல் நின்னு போச்சு பட பாடலான என் சோகக்கதையை கேளு தாய்க்குலமே பாட்டு ரீ மிக்ஸ்சாக ஒலிக்கும்போது அதற்கு பாக்யராஜ் அளிக்கும் விளக்கம் கலகல.சாந்தனு “டான்ச் ஆட வாங்க,உங்க எக்சசைஸ் பார்த்து மக்களுக்கு ரொம்ப நாள் ஆச்சாம் என கலாய்ப்பது செம.இந்தக்காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டது ஒரு தந்தையாக மகனுக்கு ஆற்றும் உதவி.



அந்தப்பாட்டில் கரகாட்டக்காரியாக வரும் ஃபிகர் சூப்பர் சரக்கு.திருவிழாவில் தீவிரவாதி வைத்த டைம்பாம்பை ஹீரோ அகற்றும் சீன் விஜய்காந்த் படத்துக்கு வந்து விட்டோமோ என எண்ண வைக்கிறது.ஹீரோயினின் மாமாவாக வரும் கேரக்டர் ஒரு சீனில் பாம்பை கடித்தே கொல்வது அருவெறுப்பு.பாய்சன் பாட்டிலை ஒரு சீனில் உடைத்த ஹீரோயினை ஹீரோ பளார் என அறைகிறார்,அது என்ன காணக்கிடைக்காத சீமைச்சர்க்கரையா?ரூபாய்க்கு 4 பாக்கெட் எலி மருந்து ஊரில கிடைக்குமே?


வசனகர்த்தா டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆன இடங்கள்

1.  கைல எவ்வளவு  வெச்சிருக்கே?

37 ரூபாவும் கொஞ்சம் சில்லரையும்.

37 ரூபாயே சில்லரைதான்.

2. நீ எந்த சப்ஜெக்ட்ல வீக்?       ஹி ஹி படிக்கற எல்லா சப்ஜெக்ட்லயும்.

3. யோவ்,வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா?

இல்லை 2 பேருமே சொல்லாம வந்துட்டோம்.

4. ஹீரோயின் - எனக்கு பயமா இருக்கு.

ஹீரோ - என்ன பயம்?

ஹீரோயின் - உன்னை தனியா விட்டுட்டு போறேனே,நீ பயந்துக்குவியோன்னு.

5.அவ உனக்கு ஆண்ட்டி மாதிரி இருக்கா,அவ கிட்டே போய் வழியறியே...

சோ வாட்....?கத்துக்கறேன்.


6. பிளாட்ஃபார்ம் கடைல  எச்சில் பிளேட் கழுவறேனேன்னு கவலைப்படாதே,இன்னும் 3 மாசத்துல....

நல்ல கவுரவமான வேலைல இருப்பியா?

ம்ஹூம்,சரவணபவன்ல கழுவற அளவு முன்னேறிக்காட்டறேன்.

7.  யாரு ஃபோன்ல?டி ஜி பியா?       இல்லை சார்.     பின்னே சி எம்மா?

சார் ,நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா?


8.என்னை எப்படியும் சாகடிக்கப்போறே,பாலிடால்ல சாராயத்தைன் கலந்து குடுத்துடு,கிக்கோட சாகறேன்.

படத்தில் பொறுமையை சோதிக்கும் சீன்கள் அதிகம்.ஒரு காட்சியில்

ஹீரோ - எல்லாத்தையும் சாகடிக்கறதை விட நான் செத்துடறேன்.

ஹீரோயின்  - முதல்ல நாந்தான் சாவேன்.

ஆடியன்ஸ் - ஏய்யா எங்களை சாகடிக்கறீங்க?

எதிர்பர்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39
எதிர்பர்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

ஏ செண்ட்ட்ரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள் ,சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்.

டிஸ்கி - 1 

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

39 comments:

புரட்சித்தலைவன் said...

present

புரட்சித்தலைவன் said...

ஹீரோ - எல்லாத்தையும் சாகடிக்கறதை விட நான் செத்துடறேன்.

ஹீரோயின் - முதல்ல நாந்தான் சாவேன்.

ஆடியன்ஸ் - ஏய்யா எங்களை சாகடிக்கறீங்க?//
ha...ha....

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ் இன்டலி ல இனச்சுட்டேன் தமிழ் மனத்துள இணைக்க முடியல பாஸ் என்னன்னு பாருங்க

வைகை said...

பதிவுலக பக்கங்களில் முதல் முறையாக.................

தினேஷ்குமார் said...

பாஸ் ஒரு ஆர்வத்துல இன்டலி ல இணைச்சேன் அது என்னோட கணக்குல இணைந்துருச்சு பாஸ் இப்ப என்ன பன்றது பாஸ்

வைகை said...

சொதப்பிய இடங்கள் சொல்லவே இல்லை?.

வைகை said...

படமே சொதப்பலா?!

தினேஷ்குமார் said...

வைகை said...
பதிவுலக பக்கங்களில் முதல் முறையாக.................

என்னது முதல் முறையா பங்கு அப்பா வாங்க இது நம்ம சி.பி.சித்தப்பா வீடுதான்

வைகை said...

சித்து +2 ங்கறது தமிழ் டைட்டிலா சிபி?

தினேஷ்குமார் said...

வைகை said...
படமே சொதப்பலா?!

பங்கு அங்க பாருங்க பத்து நாள் தான் டைம் வச்சிருக்காரு

வைகை said...

மேல உள்ள ஸ்டில் எல்லாம் படத்துல வருதா?

வைகை said...

dineshkumar said...
வைகை said...
படமே சொதப்பலா?!

பங்கு அங்க பாருங்க பத்து நாள் தான் டைம் வச்சிருக்காரு//////////////

இப்பிடியெல்லாம் டைம் வச்சா கைலி கட்டிக்கிட்டு வரப்போறாங்கே!!!!!!!

வைகை said...

அப்பறம் சிபி ரெம்ப ஆணியா? கடப்பக்கம் காணும்?!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி விமர்சனம் எப்போ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த படமும்போச்சா?

ம.தி.சுதா said...

சிபிஎஸ் படத்தை எழுத்து வடிவிலும் பார்க்கலாம் என நிருபித்து விட்டீர்கள்....

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅப்பறம் சிபி ரெம்ப ஆணியா? கடப்பக்கம் காணும்?ஃஃஃஃ

ஆமா அப்படி போல தான் இருக்கு...

Chitra said...

சாந்தனு “டான்ச் ஆட வாங்க,உங்க எக்சசைஸ் பார்த்து மக்களுக்கு ரொம்ப நாள் ஆச்சாம் என கலாய்ப்பது செம.இந்தக்காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டது ஒரு தந்தையாக மகனுக்கு ஆற்றும் உதவி.


......டிவில எப்படியும் இந்த பாட்டை போடுவாங்க... அப்போ பார்த்துக்கிறேன். படத்துக்கு, ரெடி, ஜூட்! எஸ்கேப்பு!

உண்மைத்தமிழன் said...

[[[இந்தக் காலத்தில் ஐ ஏ எஸ் எக்சாமில் ஃபெயில் ஆனால்கூட யாரும் கவலைப்படுவதில்லை. வெறும் பிளஸ் டூ ஃபெயிலுக்கு யாராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா?]]]

பேப்பரெல்லாம் படிக்கிறதில்லீங்களா ஸார்..? இந்த வருஷ ஏப்ரல் மாச பேப்பரையெல்லாம் புரட்டிப் பாருங்க. எத்தனை தற்கொலை நடந்திருக்குன்னு தெரியும்..!

ILA (a) இளா said...

படம் டப்பா.. :)

Unknown said...

நல்ல விமர்சனங்க.. ஓகே படம் பார்க்கப் போறது இல்ல..

எஸ்.கே said...

attempt fail??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இந்தக் காலத்தில் ஐ ஏ எஸ் எக்சாமில் ஃபெயில் ஆனால்கூட யாரும் கவலைப்படுவதில்லை. வெறும் பிளஸ் டூ ஃபெயிலுக்கு யாராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா?]]]

பேப்பரெல்லாம் படிக்கிறதில்லீங்களா ஸார்..? இந்த வருஷ ஏப்ரல் மாச பேப்பரையெல்லாம் புரட்டிப் பாருங்க. எத்தனை தற்கொலை நடந்திருக்குன்னு தெரியும்..!
//

s true

Prasanna Rajan said...

அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ புரியலை. நீங்க ஓடும்னு சொன்ன படமெல்லாம் த்யேட்டரை விட்டு தான் ஓடுச்சு. உ.தா.க்வாட்டர் கட்டிங்.

தினத்தந்தி படிக்கிறதே இல்லையா? ஒவ்வொரு வருடமும் +2 ரிசல்ட் வந்த பிறகு 'மாணவர் (அ) மாணவி தற்கொலை'ன்னு ந்யூசே கண்ணுல பட்டது இல்லையா என்ன?

Philosophy Prabhakaran said...

// முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு,மவுன கீதங்கள் என்று திரைக்கதையில் வித்தை காண்பித்தவரும் இவர்தான்.வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே ,ஞானப்பழம் என சறுக்கியவரும் இவர்தான். //

சொக்கத்தங்கம் ன்ற மொக்க படம் எடுத்தது கூட இவர் தானுங்கோ...

Philosophy Prabhakaran said...

// முதலில் இந்தக்காலத்தில் ஐ ஏ எஸ் எக்சாமில் ஃபெயில் ஆனால் கூட யாரும் கவலைப்படுவதில்லை.வெறும் பிளஸ் டூ ஃபெயிலுக்கு யாராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா? //

ஐ.ஏ.எஸ் எக்சாமில் பெயில் ஆனால் யாரும் தற்கொலை செய்துக்கொள்ள மாட்டார்கள்... ஆனால் +2 எக்சாமில் பெயில் ஆகி நிறைய பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்...

Philosophy Prabhakaran said...

// புதுமுகம் சாந்தினி நல்ல அறிமுகம்தான்.ஆனால் அவரை லட்டு ஃபிகர் என அள்ளிக்கவும் முடியல.அட்டு ஃபிகர் என தள்ளிக்கவும் முடியல //

எனக்கு சுத்தமா பிடிக்கலை... மொக்க பிகர் தான்...

Philosophy Prabhakaran said...

பாடல்களுக்காக நான் மிகவும் எதிர்பார்த்த படம்... பூவே பூவே பாடல் திரையில் எப்படி வந்திருக்கிறது...

Philosophy Prabhakaran said...

வெறும் எட்டே எட்டு உருப்படியான வசனங்கள் தான் கிடைத்ததா... அதுவும் பாக்யராஜ் படத்தில்... ஆச்சர்யம்தான்...

மாணவன் said...

அருமையான் விமர்சனம்....

//ஹீரோ - எல்லாத்தையும் சாகடிக்கறதை விட நான் செத்துடறேன்.

ஹீரோயின் - முதல்ல நாந்தான் சாவேன்.

ஆடியன்ஸ் - ஏய்யா எங்களை சாகடிக்கறீங்க?//

செம்ம கலக்கல்.....

தொடருங்கள்....

Unknown said...

நல்ல விமர்சனம் பதிவுலக பதிவேட்டில் முதல் முறையாக.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை.

சில பேர் கஷ்டப்பட்டு நடனமாடி பேர் வாங்கியுள்ளார்கள். ஆனால், பாக்கியராஜைப்பாருங்கள் இன்றும் அவர் நடனம் போற்றப்படும் விஷயம் அல்லவா!

ரஹீம் கஸ்ஸாலி said...

கேப்டன் படம் வந்து ஒரு நாளாகியும் இன்னும் விமர்சனம் எழுதாமல் இருக்கும் உங்களுக்கு தண்டனையாக சமீபகால கேப்டன் படங்களின் டி .வி .டி -யை அனுப்பிவைக்கிறோம்
இப்படிக்கு
இன்றைய கேப்டன்
நாளைய முதல்வர்
பேரவை ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொத்தத்தில படம் மொக்கை தானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொத்தத்தில படம் மொக்கை தானே...

karthikkumar said...

ஓப்பனிங்க் சாங்கில் சாந்த்னு ரொம்ப அருமையாய் நடனம் ஆடி இருக்கிறார்.நடனத்தில் விஜய்க்கு நிகராய் பெயர் எடுக்க வேண்டும் என்ற அவரது துடிப்பு ஒவ்வொரு அசைவிலும் ,டான்ஸ் ஸ்டெப்பிலும் தெரிகிறது.// வெளங்கிடும்

karthikkumar said...

வெறும்பய said...
மொத்தத்தில படம் மொக்கை தானே.//இதுலென்ன சந்தேகம்

ரிஷபன்Meena said...

நல்ல விமர்சனம்.படம் பார்க்க போயீடாதீங்கன்னு சொல்றீங்க

Ram Sridhar said...

அது என்ன ரொம்ப சர்வசாதரணமாக +2 பெயில் ஆனா யாராவது தற்கொலை செய்துகொள்வார்களா என்று கேட்டிருக்கிறீர்கள்? இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழகமெங்கும் இன்னும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. செய்திதாள்கள் பார்ப்பதில்லையா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு இந்த விமர்சனமே போதும், படம் பாக்க தேவயில்ல!