Wednesday, November 24, 2010

ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்ட தலைவர்

1. கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!

2. “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”

3. “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே...  ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”

“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”

4. “இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?”

“எப்படி  மன்னா  கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல்,  ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”

5. “போர்களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”

“யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”

“வேண்டாம்.  போர்க்களத்தில்  பின்வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”

6. “மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”

“ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’  என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”

7. “அமைச்சரே!  நாட்டு  மக்கள்  என்னைப்  பற்றி  என்ன  பேசிக்கொள்கிறார்கள்?”

“போர்க்களத்தில்  மண்ணையும்,  அந்தப்புரத்தில்  பெண்ணையும்  அசராமல்  கவ்வும்  அசகாய  சூரர்  என்று  பேசிக்கொள்கிறார்கள்,  மன்னா!”

8. “மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”

9. “அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”

“எப்படி?”

“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார்.  நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”

10. “புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக  ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

“ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைபிடிக்கறாராம்!”

79 comments:

சௌந்தர் said...

2. “தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”

“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?///

எனக்கு இது தோணவே இல்லையே ஓஹ கண்ணாடி போட்ட தான் இது எல்லாம் தோனும் போல

சௌந்தர் said...

3. “தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”

“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே...”

“சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!”////

ஹி ஹி ஹி இவர் இப்படி தான் லீவ் எடுக்கிறார் போல

சௌந்தர் said...

6. “மாறுவேடத்தில் மன்னர் நகர்வலம் வந்தது வேஸ்ட் ஆகிவிட்டதா?”

“ஆமாம! ‘மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!’ என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!”///

அவன் இம்சை அரசன் மாதிரி போல உளறி விட்டான்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

2. “தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”

“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?///

எனக்கு இது தோணவே இல்லையே ஓஹ கண்ணாடி போட்ட தான் இது எல்லாம் தோனும் போல

hi hi என்ன ஆச்சரியம் ?பதிவுலக விதியை மீறீட்டீங்களே?முத வட எனக்கு டயலாக் எங்கே?

சி.பி.செந்தில்குமார் said...

3. “தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”

“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே...”

“சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!”////

ஹி ஹி ஹி இவர் இப்படி தான் லீவ் எடுக்கிறார் போல

நான் என்ன ரமேஷா?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் சவுந்தர்,இப்போ தான் இம்சை லைனுக்கு வந்தார்,இருங்க போட்டு விடறேன்

KANA VARO said...

காமடி சூப்பருங்கண்ணா!

சௌந்தர் said...

இந்த பதிவுக்கு முதல் ஆளைய் வந்தால் தமிழ்மணத்தில் வேறு இன்னைக்கு வேண்டியதா போச்சி

சௌந்தர் said...

hi hi என்ன ஆச்சரியம் ?பதிவுலக விதியை மீறீட்டீங்களே?முத வட எனக்கு டயலாக் எங்கே?///

அது சின்ன பசங்க வேளை இந்த இம்சை செல்வா வுக்கு தான் வீட்டில் சாப்பாடு கிடைக்காது அதான் அப்படி பண்றானுங்க

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
யோவ் சவுந்தர்,இப்போ தான் இம்சை லைனுக்கு வந்தார்,இருங்க போட்டு விடறேன்/////

சரி சரி நீங்க உளறதீங்க.....

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

காமடி சூப்பருங்கண்ணா!

நன்றி ,ஆனா நான் அண்ணன் இல்ல.உங்களை விட 15 வயசு இளசு

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இந்த பதிவுக்கு முதல் ஆளைய் வந்தால் தமிழ்மணத்தில் வேறு இன்னைக்கு வேண்டியதா போச்சி

ஓ நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

hi hi என்ன ஆச்சரியம் ?பதிவுலக விதியை மீறீட்டீங்களே?முத வட எனக்கு டயலாக் எங்கே?///

அது சின்ன பசங்க வேளை இந்த இம்சை செல்வா வுக்கு தான் வீட்டில் சாப்பாடு கிடைக்காது அதான் அப்படி பண்றானுங்க

நல்லா மாட்டிக்கிட்டீங்க,அப்போ ரமேஷ்,சுதா கோமாளி எல்லாம் சின்னப்பசங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
யோவ் சவுந்தர்,இப்போ தான் இம்சை லைனுக்கு வந்தார்,இருங்க போட்டு விடறேன்/////

சரி சரி நீங்க உளறதீங்க.....

டூ லேட்,மெயில் பண்ணீஇட்டேன்

ம.தி.சுதா said...

/////“வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”////
எப்படி சிபிஎஸ் உம்மால மட்டுமெ முடியுது... சிரிச்சு குடல் அறுந்து போய் விட்டது...

KANA VARO said...

நன்றி ,ஆனா நான் அண்ணன் இல்ல.உங்களை விட 15 வயசு இளசு//

இதே பிழைப்பா எத்தினை பேருய்யா கிளம்பியிருக்கீங்க!

ம.தி.சுதா said...

சுதா என் கொமண்ட்ஸ் போட பம்முறான் என்று சொல்ல முடியுமா...???

சௌந்தர் said...

நல்லா மாட்டிக்கிட்டீங்க,அப்போ ரமேஷ்,சுதா கோமாளி எல்லாம் சின்னப்பசங்களா?///

@@@சி.பி.செந்தில்குமார் said...
ஆமா ஆமா ரொம்ப சின்ன பசங்க

ம.தி.சுதா said...

சேளந்தர் அண்ணா... தம்பிக்கு குச்சி மிட்டாய் எங்கே....

NaSo said...

கலக்குறீங்க. அப்படியே தொடருங்க அண்ணா!!

NaSo said...

இந்த முறை நல்ல போட்டோ ஒன்னும் கெடைக்கலியா?

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

காமடி சூப்பருங்கண்ணா!

நன்றி ,ஆனா நான் அண்ணன் இல்ல.உங்களை விட 15 வயசு இளசு//

அப்போ உங்க வயசு 75 ஆ?

ம.தி.சுதா said...

ஒரு லட்சம் வருகையாளரை அண்மிக்கும் சீபிஎஸ் இற்கு யாழ் நூலகத்தில் சிறப்பு விழா அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம்..... வரும் அனைவருக்கும் சிபிஎஸ் ஒவ்வொரு டிவீடி வழங்குவார்... சோடியாக வருபவருக்கு சிறப்பு டிவீடிக்கள் வழங்கப்படும்...

எஸ்.கே said...

வாய்விட்டு சிரிச்சேங்க! ஜோக்ஸ் சூப்பர்!

சௌந்தர் said...

ம.தி.சுதா said...
சேளந்தர் அண்ணா... தம்பிக்கு குச்சி மிட்டாய் எங்கே..////

நீ என்னை போய் அண்ணா சொல்றே அதுவும் இல்லமா சேளந்தர் சொல்லிட்டே

சௌந்தர் said...

எஸ்.கே said...
வாய்விட்டு சிரிச்சேங்க! ஜோக்ஸ் சூப்பர்!////

சரி சரி போய் வாய்யை விட்ட இடத்தில் இருந்து கொண்டுவந்து வைத்து கொள்

இம்சைஅரசன் பாபு.. said...

//“அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்//

இம்சை அரசன் ன்னு இன்னொரு பேரும்,புகழும் வாய்ந்த அரசன் உன்னை வந்து அடி அடி ன்னு அடிக்கனும்னு பேசி கொள்கிறார்கள்

எஸ்.கே said...

//சரி சரி போய் வாய்யை விட்ட இடத்தில் இருந்து கொண்டுவந்து வைத்து கொள்
//
இங்கதான் வாயை விட்டேன்! அடுத்த தடவை உஷாரா இருக்கேன்!:-)

அன்பரசன் said...

5ம், 8ம் சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema comedy பிரபல பதிவர் சார்

Anonymous said...

செம ஹிட் ஜோக்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

/////“வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”////
எப்படி சிபிஎஸ் உம்மால மட்டுமெ முடியுது... சிரிச்சு குடல் அறுந்து போய் விட்டது...

நன்றி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

நன்றி ,ஆனா நான் அண்ணன் இல்ல.உங்களை விட 15 வயசு இளசு//

இதே பிழைப்பா எத்தினை பேருய்யா கிளம்பியிருக்கீங்க!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சுதா என் கொமண்ட்ஸ் போட பம்முறான் என்று சொல்ல முடியுமா...???

அதுக்குத்தனியா ஒரு பதிவு ரெடி பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

நல்லா மாட்டிக்கிட்டீங்க,அப்போ ரமேஷ்,சுதா கோமாளி எல்லாம் சின்னப்பசங்களா?///

@@@சி.பி.செந்தில்குமார் said...
ஆமா ஆமா ரொம்ப சின்ன பசங்க

உமக்கு விபரமே தெரியாதா?ரமேஷ்க்கு ஆஃபீஸ்லயே 5 வயசு மகன் இருக்கான்

kumar said...

ரூம் போட்டு யோசிபின்களோ!
இப்படி எல்லாரையும் சிரிக்க வைங்கயா உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
இன்றைய கால கட்டத்துல எல்லோரும் சிரிப்ப தொலைச்சிட்டு இருக்காங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சேளந்தர் அண்ணா... தம்பிக்கு குச்சி மிட்டாய் எங்கே...

சுடு சோறு போய் குச்சி மிட்டாய் வந்தது டும் டும் டும்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

கலக்குறீங்க. அப்படியே தொடருங்க அண்ணா!!

என்னய்யா ஆளாளுக்கு அண்ணன்னு சொல்லி என் வயசை ஏத்தி விடறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

இந்த முறை நல்ல போட்டோ ஒன்னும் கெடைக்கலியா?

குஜாலா இருந்தா நல்லாருக்கும்பீங்க>...டீசண்ட்டா போட்டா சரி இல்லைன்னு சொல்வீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

காமடி சூப்பருங்கண்ணா!

நன்றி ,ஆனா நான் அண்ணன் இல்ல.உங்களை விட 15 வயசு இளசு//

அப்போ உங்க வயசு 75 ஆ?

25

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஒரு லட்சம் வருகையாளரை அண்மிக்கும் சீபிஎஸ் இற்கு யாழ் நூலகத்தில் சிறப்பு விழா அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம்..... வரும் அனைவருக்கும் சிபிஎஸ் ஒவ்வொரு டிவீடி வழங்குவார்... சோடியாக வருபவருக்கு சிறப்பு டிவீடிக்கள் வழங்கப்படும்...

ஆமா,ஜோடியா வந்தா ஜோடியோட கறுக்கு நான் கேரண்ட்டி இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ,கற்புக்கு கேரண்டி இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

வாய்விட்டு சிரிச்சேங்க! ஜோக்ஸ் சூப்பர்!

நன்றி சார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லா ஜோக்கும் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//“அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்//

இம்சை அரசன் ன்னு இன்னொரு பேரும்,புகழும் வாய்ந்த அரசன் உன்னை வந்து அடி அடி ன்னு அடிக்கனும்னு பேசி கொள்கிறார்கள்

ஹஹஹா

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

5ம், 8ம் சூப்பர்.

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema comedy பிரபல பதிவர் சார்

நான் சாதா தான் இன்னும்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம ஹிட் ஜோக்ஸ்

நன்றி சதீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

எல்லா ஜோக்கும் சூப்பர்

நன்றி

கவி அழகன் said...

அருமை வாழ்த்துகள்

karthikkumar said...

போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!”///
யாரை மனதி வைத்து இதை எழுதினீர்கள்

தினேஷ்குமார் said...

பாஸ் உங்களுக்காக ரெண்டு நாளா வெய்ட்டிங் பிளீஸ் கம்

RAVI said...

நல்லா சிரிச்சு எங்க மேனேஜர்கிட்ட மாட்டி அப்புறம் அவருக்கும் காட்டி எங்க ஆபீஸ்ல எல்லோரும் சிரிச்சோம்.
நன்றி.

Chitra said...

“மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!”

....Good one. :-))

என்னது நானு யாரா? said...

அருமை! அருமை! சூப்பரோ சூப்பரு!

Philosophy Prabhakaran said...

வழமையை விட அருமை... குறிப்பாக 1, 2, 3, 8.... இவை நான்கும் அதிகம் ரசிக்க வைத்தன...

வைகை said...

என்ன செந்தில் வேலை அதிகமா?( சத்தியமா நான் அலுவலக வேலையத்தான் சொன்னேன்), ரெண்டு நாளா காணும்? ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கிங்க!! இப்ப நான்தான் லேட்டா வந்துருக்கேன்!!( ஆனா எனக்கு வேலையே இல்ல செந்தில், இருந்தா சொல்லுங்க!!!!)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

க்க்க்க்க்க்க்கிக்கீ.....
உக்க்க்க்க்க்க்கிக்கீஈஈஈஈஈ

..

ஹி..ஹி.. நல்லாத்தான் இருக்கு,... இன்னும் நாலு வரி சேர்த்து எழுதினா...

முதல்வர் கோவிச்சுக்குவாரா?...

THOPPITHOPPI said...

2. “தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”

“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
/////////////

ஹஹ ஹா

THOPPITHOPPI said...

4. “இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?”

“எப்படி மன்னா கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர் அபாயம்... ஓடுங்கள்’ என்று குரல் தராமல், ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று உளறுகிறானே...”

5. “போர்களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!”

“யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?”

“வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”
//////////////////
ஹஹஅஹா

ஒவ்வொன்றும் அருமையா இருக்கு

சசிகுமார் said...

எல்லாமே சூப்பர் செந்தில் இதிலும் இந்த "ஆளே இல்லை எப்படி ஆக்சிடென்ட் நடக்குது" காமெடி கலக்கல்.

தமிழ்க்காதலன் said...

மிகவும் ரசிக்க முடிந்தது. நன்றாக சிரிக்க முடிந்தது. மிக்க நன்றி. நம்மப் பக்கம் வாங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///1. கண்டதும் காதலில் விழுந்தேன்; அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், ‘பொத்’ தென காலில் விழுந்தேன்!/////

யாரு காலுலே? பொண்ணோட காலுலேயா.. அப்பாவோட காலுலேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த முறை எல்லா ஜோக்குகளுமே டாப் டக்கர்..! வாழ்த்துக்கள் செந்தில்!

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

50

நெம்பர் போட ஆரம்பிச்சாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

அருமை வாழ்த்துகள்
நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!”///
யாரை மனதி வைத்து இதை எழுதினீர்கள்

மங்குனியை அல்ல

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் உங்களுக்காக ரெண்டு நாளா வெய்ட்டிங் பிளீஸ் கம்

ஆஃபீஸ்ல ஆணி புடுங்கற வேலை அதிகம்,வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

RAVI said...

நல்லா சிரிச்சு எங்க மேனேஜர்கிட்ட மாட்டி அப்புறம் அவருக்கும் காட்டி எங்க ஆபீஸ்ல எல்லோரும் சிரிச்சோம்.
நன்றி.

நன்றி ரவி,ஆஃபீஸ்ல ஃபிகரு உண்டா?

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

“மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!”

....Good one. :-))

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நானு யாரா? said...

அருமை! அருமை! சூப்பரோ சூப்பரு!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

வழமையை விட அருமை... குறிப்பாக 1, 2, 3, 8.... இவை நான்கும் அதிகம் ரசிக்க வைத்தன..]

நன்றி பிரபா

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

என்ன செந்தில் வேலை அதிகமா?( சத்தியமா நான் அலுவலக வேலையத்தான் சொன்னேன்), ரெண்டு நாளா காணும்? ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கிங்க!! இப்ப நான்தான் லேட்டா வந்துருக்கேன்!!( ஆனா எனக்கு வேலையே இல்ல செந்தில், இருந்தா சொல்லுங்க!!!!)

வைகை எனக்கே வேலை இல்லை.இதுல உங்களுக்கு வேற பார்க்கனுமா./

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

க்க்க்க்க்க்க்கிக்கீ.....
உக்க்க்க்க்க்க்கிக்கீஈஈஈஈஈ

..

ஹி..ஹி.. நல்லாத்தான் இருக்கு,... இன்னும் நாலு வரி சேர்த்து எழுதினா...

முதல்வர் கோவிச்சுக்குவாரா?...

பட்டாபட்டி,பதிவின் நீளம் நீலம் அதிகம்னு சொல்றாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி தொப்பி தொப்பி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

எல்லாமே சூப்பர் செந்தில் இதிலும் இந்த "ஆளே இல்லை எப்படி ஆக்சிடென்ட் நடக்குது" காமெடி கலக்கல்.

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்க் காதலன். said...

மிகவும் ரசிக்க முடிந்தது. நன்றாக சிரிக்க முடிந்தது. மிக்க நன்றி. நம்மப் பக்கம் வாங்க.

நீங்க கவிதைக்காதலன் தம்பியா?சண்டே வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///1. கண்டதும் காதலில் விழுந்தேன்; அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், ‘பொத்’ தென காலில் விழுந்தேன்!/////

யாரு காலுலே? பொண்ணோட காலுலேயா.. அப்பாவோட காலுலேயா?

மச்சினி கால்ல

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த முறை எல்லா ஜோக்குகளுமே டாப் டக்கர்..! வாழ்த்துக்கள் செந்தில்!

நன்றி ராம்சாமி