Saturday, November 20, 2010

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்

குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி மனச்சிதைவு நோய்க்கு ஆளான ஹீரோ  மீது கல்கி ஹீரோயின் மாதிரி முற்போக்கு எண்ணம் உள்ள பெண் காதலிப்பதே  கதை.தான் அன்பு வைத்த அம்மா அப்பாவுக்கு துரோகம் செய்து ஓடி விடுவதால் தன் மேல் அன்பு வைக்கும் பெண்ணும் அதே போல் தனக்கு துரோகம் செய்து விடுவாள் என கற்பனை பண்ணிக்கொள்ளும் இளைஞன்,அந்த பெண்ணுடன் நடத்தும் நாடகம் தான் திரைக்கதை

கரு பழனியப்பன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விக்குப்போகும் முன் இந்தப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஹீரோவுக்கு ஏன் அப்படி ஒரு நோய் வந்தது என்பதற்கு இயக்குநர் படத்தின் பின் பாதியில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்திருக்கிறார் பாருங்கள்.. அது சுந்தர ராமசாமியின் கதை போல் அழகிய சிறுகதை.அப்பா,அம்மா வாக வரும் கேரக்டர்கள் மனதில் பதிந்து போகும் அளவுக்கு இயற்கையான நடிப்பு.

ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி குடி,கூத்தி என அலையும் ஒரு ஆணை ஒரு பெண் விரும்புகிறாள் என்பதை ஜீரணிக்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது..ஹீரோயின் முக சாயலில் மீனா மாதிரியும்,நடிப்பில் பூஜா மாதிரியும் முயன்று இருக்கிறார்.

மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் வசனங்கள் -

1. பிள்ளைகளால பெத்தவங்க வயிறு நிறையாட்டி பரவால்ல,மனசு நிறைஞ்சா போதும்

2. பொலைட்டா( POLITE ) கும்புடு போட்டு பணிஞ்சு நடக்கறவன் ஒழுங்கா வேலை செய்ய மாட்டான்.நல்லா வேலை செய்யறவன் கூழைக்கும்புடு போட மாட்டான்.

3. பொம்பள பாக்கற வேலையை அவரு பாக்கறாரு,அவரு பாக்கற வேலையை நீ பாக்கறே ,ஏன்?

வேலைல பொம்பள என்ன? ஆம்பள என்ன? திங்கள் டூ புதன் அவர் சமைப்பாரு.வியாழன் டூ சனி நான் சமைப்பேன்,ஞாயிறு 2 பேருக்கும் லீவ்,ஹோட்டல் சாப்பாடு.

4. சீரியஸா இருக்கற பாட்டியை போய்ப்பாக்க ஏன் மாட்டேங்கறே?

நான் போய் பார்த்தா அவங்களுக்கு வாழனும்கற ஆசை வந்துடும்.அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.சாக வேண்டிய தருணம் இது.சாவுதான் ஒரு மனுஷனுக்கு பூரண விடுதலை.

5. காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்.

6. உன் ஆளு குடுத்த கிஃப்ட் பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?

பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு கிக் இருக்கு.

7.ஒரு அரசியல்வாதியை புரிஞ்சுக்க நாம அரசியல்வாதியா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஒரு நடிகனை புரிஞ்சுக்க நாம நடிகனா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஆனா ஒரு அப்பாவைப்புரிஞ்சுக்க நாம அப்பாவா இருந்து பாக்கனும்.அப்போதான் புரியும்.

8.வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.

9. எந்தப்புருஷனும் தன் மனைவியை தினம் பாராட்டிட்டு  இருக்க மாட்டான்.

10.நாம எப்படி இருந்தாலும் நமக்கு வரப்போற மனைவி ஒழுக்கமானவளா அமையனும்கறதுதான் ஆம்பளையோட புத்தி.

11. ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?

12. எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான்.

13.காதலிக்கறவங்களை நிப்பாட்டி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.

14.கொடுமையைத்தாங்க முடியாதவங்க இருக்கலாம்,கோபத்தை தாங்க முடியாதவங்க இருக்கலாம்,அன்பைத்தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா?உன்னால அதை தாங்க முடியலை,அதனால தான் உன்னை காதலிக்கறேன்.

15, நீ நல்லவன் கிடையாது,உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா,உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா அப்புறம் நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?

16. என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான்,மேனுஃபேக்சரிங்க் டிஃபக்ட்,மாத்த முடியாது..

நினைவில் நின்ற காமெடி வசனங்கள்

1.மாமி,ஆத்துல உங்க வீட்டுக்காரர் இல்லியா?      எப்படி கண்டு பிடிச்சேள்?

அதுதான் தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சி கும்முன்னு இருக்கீங்களே...

2.உனக்கு புரியாது,அவர் இருக்கறப்ப இப்படி இருந்தா அட்டாக் பண்ணிடுவாரு.

3.ஒரு மேரேஜ் கூட இன்னும் பண்ணலை,எதுக்கு மன்மத நாயுடுன்னு பேரு,முதல்ல அதை மாத்தனும்.

4.டே,நாயே  நில்லு எங்கே போறே?     கோமணம் கட்ட மறந்துட்டு வந்துட்டேன்,போய் கட்டிட்டு வர்றேன்.

செத்துப்போன கிளி பறந்து போகவா போகுது?

5.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதா....இதையே எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பீங்க,நங்க இன்ஸ்பெக்டர் சுரைக்காயை வெச்சு சாம்பார் வெச்சுக்குவோம்ல?

6.உங்க குழந்தைக்கு இன்னுமா சீட் கிடைக்கல?

ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் கியூல நின்னு பார்த்தாச்சு,ம்ஹூம்,பிரயோஜனம் இல்ல.

7.இந்த ஸ்கூல்ல என் பையனை சேர்த்துட்டேன்,நான் 25 வயசுல கத்துக்கிட்டதை எல்லாம் இந்த ஸ்கூல்ல 8 வயசுலயே கத்து தர்றாங்க..
நீ அந்த வயசுல தண்ணி அடிச்சே,,,,,அப்போ உன் பையன் இந்த வயசுல தண்ணி அடிப்பானா?இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்கூல்ல சேர்த்தறியே பையன் படிக்கலைன்னா என்ன செய்வே?

8.அந்தாளு உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமாடி?

தெரியும்,அப்படிப்பார்த்தா என் கற்பு ஒன்னும் கெட்டுப்போயிடாது..

9.எல்லோருமே இப்போ டிஃப்ரெண்ட்டாதான் திங்க் பண்றாங்க..நாம நார்மலா திங்க் பண்ணுனாலே அது டிஃப்ரெண்ட் ஆகிடும்..

10.நைட் 10 மணீ ஆனாலும் பரவால்ல... உடனே இப்போ ஆஃபீஸ் வா,..

பாஸ்,, அது வந்து ... நான் என் ஒயிஃப் கூட ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்.

அத வேற யாராவது பண்ண சொல்லீட்டு நீ உடனே வா.    அது முடியாது...

11.அடியே,ஆன்னா ஊன்னா உங்கப்பனுக்கு ஃபோன் போடறியே, அவர் என்ன கஸ்டமர் கேரா?

12, மாப்ளை,எந்த வேலைக்குப்போறதா இருந்தாலும் நைட் 10 மணீக்கு வீட்டுக்கு வர்ற மாதிரி வேலையா பார்த்து போங்க.

மாமா,நான் போறது நைட் டியூட்டி ....

சரி நட் 10 மணீக்குள்ள வரப்பாருங்க.

13.நான் ஒரு குடிகாரன்னு உன் மனைவி கிட்டே ஃபோன் போட்டு இப்பவே சொல்லு.

ஆமா,என்னமோ குடியரசுத்தலைவர் மாதிரி பெருமையா சொல்லிக்கறான் பாரு.

14.வழக்கமா எல்லாரும் சம்பளம் வாங்குன பிறகுதான் சரக்கு அடிக்கப்போவாங்க,நீ சரக்கு வாங்கி பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத்தான் வேலைக்கே  கிளம்புவே போல.

15  உடம்புக்கு கெடுதல் பண்ற கோக் ,பெப்சி இதை எல்லாம் சத்தம் போட்டு கேட்டு வாங்கறோம்,ஆனா உடம்புக்கு நல்லது பண்ற காண்டம் வாங்க மட்டும் ஏன் கூச்சப்பட்டு நிக்கறோம்?

16  இந்தாங்க என் விசிட்டிங்க கார்டு..

அடடா,பதிலுக்கு தர என் கிட்டே விசிட்டிங்க கார்டு இல்லையே..?

17. குடிக்கற நான் இவ்வளவு தெளிவா இருக்கேன்,குடிக்காத நீங்க இவ்வளவு குழப்பத்துல இருக்கீங்களே?

18. அட்டு ஃபிகரா இருந்தாலும் இந்தக்காலத்துல 1008 கண்டிஷன் போடுவாங்க..எந்த கண்டிஷனுமே போடாத நந்தினியை நீ மிஸ் பண்ணிடக்கூடாது..

19.அய்யய்யோ,ஆம்னி பஸ்ல இருந்து மாயாண்டி குடும்பம் வருதே ,அழுதே இவன் ஆஸ்கார் அவார்டு வாங்கறவனாச்சே..

20. ராத்திரி ஏன் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றீங்க?

அதுவா,,பகல்ல குடிச்சிட்டு ஆஃபீஸ் போக முடியாதே,... அதான்

21.. டே நாயே உன் வாய் ஏன் இப்படி கப்பு அடிக்குது,உன் மூக்குக்கு கீழே ஆணி அடிச்சு மல்லிகைப்பூ தொங்க விட்டாதான் வாசம் போகும் போல..நீ உயிரோட இருக்கறப்பவே பொண நாத்தம். அடிக்குதே நீ செத்துட்டா ..எப்படி நாறப்போறியோ?

22. உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி தோணுது..

இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்ட் டைரக்‌ஷனில் செம இன்ட்ரஸ்ட் போல.அதற்கு தீனி போடும் விதமாக தனது கேரக்டரை டிசைனிங்க் இஞ்சினியராக வடிவமைத்துக்கொண்டது அவரது புத்திசாலித்தனம்.

படத்தின் ஓப்பனிங்கலயே ஹீரோ அந்த மாதிரி பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளவர் என காண்பித்து அழகிய தவறு என்ற நாவல் டைட்டிலை காண்பிப்பது கே பாலச்சந்தர் டைப் முத்திரை.

கார் ஷோ ரூமில் வேலை பார்க்கும் ஹீரோயின் கஸ்டமரிடம் டெமோ காண்பிக்கும் சீனில் அவர் காட்டும் கிளாமர் செம கில்மா.கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

வீட்டில் அகல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்க சிகரெட் பற்ற வைக்க ஹீரோ மக்கர் பண்ணும் சிகரெட் லைட்டரையே ட்றை பண்ணும் சீனில்  அவர்து கேரக்டர் தெளிவாக விளக்கப்படுகிறது.

படத்துக்கு தூண் மாதிரி சந்தானம்,விவேக்குக்கு பிறகு டிரஸ்ஸிங்க சென்ஸில் கலக்கும் காமெடியன் இவர்தான்.ஹீரோவை விட சூப்பராக டிரஸ் பண்ணீ வருகிறார்.மெடிக்கல் ஷாப்பில் காண்டம் கேட்க கூச்சப்படும் காட்சியில் பின்னிப்பெடல் எடுக்கிறார்.அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.

தண்ணி போட்ட பாப்பா நீ எனும் ஓப்பனிங்க குடி பாட்டில் டான்ச் மூவ்மெண்ட் ஏழையின் சிரிப்பில் பட பிரபு தேவா பாணி.

ஒரு காதல் பாட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஸ்லோ மோஷனில் சிதறுவது,மழையில் சிறுவர்கள் நனைவது,சோப்புக்குமிழிகள் பறப்பது என கேமரா விளையாடி இருக்கு.

டூயட்டில் ஹீரோ ஹீரோயின் கட்டிப்பிடிப்பது மாதிரி காண்பித்து விட்டதால் இருவரும் பிறகு முதன் முதலாக கைகளை இணைப்பது மாதிரி காண்பிக்கும் சீனில் டைரக்டர் எதிர்பார்த்த எஃபக்ட் கிடைக்கவில்லை.

ஒரு சீனில் ஹீரோ 4 நாட்களாக ஏன் ஆஃபீஸ் வர்லை? என கேள்வி கேட்கப்படுகிறது,அடுத்த சீனிலேயே ஏன் 2 நாளா வர்லை? என்கிறார்கள்.கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்.

குணா,மனசுக்குள் மத்தாப்பு,ஆளவந்தான்,குடைக்குள் மழை, கற்றது தமிழ் போன்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள் கதை வெற்றி பெறவில்லை.அந்த லிஸ்ட்டில் இந்தப்படமும் சேரும். சேது,காதல் கொண்டேன், படங்கள் விதி விலக்கு.

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்

.

75 comments:

சௌந்தர் said...

ஹி ஹி ஹி சரி சரி நான் இந்த படத்தை பார்க்கலை...!

karthikkumar said...

வட போச்சே

karthikkumar said...

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்.///
எதுக்கு இந்த அவசரம். தேவை இல்லாம இப்ப அனுபவிங்க

karthikkumar said...
This comment has been removed by the author.
ஆர்வா said...
This comment has been removed by the author.
ஆர்வா said...

இவ்ளோ டயலாக்ஸ்-ஐ நியாபகம் வெச்சிகிட்டு இதுக்கு முன்னாடி யாரும் விமர்சனம் எழுதுனதா நான் கேள்விப்பட்டதே இல்லை... விமர்சனத்துல இது ஒரு புது ஸ்டைலா இருக்கு

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி///

super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!//

படத்துக்கு போகும்போது பேனா பென்சில், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு போவாரு...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்போ DVD வெளிவரும் ......அதுவரை வெயிட் பண்ணலாம்

Unknown said...

பி.சி.சென்டர்ல இந்தப் படம் பத்து நாள் தான் ஒடும்ன்னு சொல்றதுக்கு நீ யாருய்யா?... இந்தப் படத்தை எடுத்து ரிலீஸ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நான் எதிர்க்க இருந்து பார்த்தவன். நீ என்னவோ பெரிய வெண்ணைமாதிரி விமர்சனம் எழுதுரியே... உனக்கு என்ன பெரிய பத்திரிக்கைதர்மத்தை காப்பாத்தரோம்ன்னு நினைப்பா?.. நாலு பேருனக்கு ஜால்ரா பொடரதுக்காக கண்டபடி எழுதறதை நிருத்து.

Unknown said...

இப்ப தான் உன் பழய பதிவு ஒண்ணு பார்த்தேன். அதுல முன்னாள் அமைச்சர் ராசாவயும், கனிமொழியையும் சம்பந்தப் படித்தி எழுதி இருக்கே. மவனே, அதை காப்பி எடுத்து தலைமைசெயலகத்துக்கு அனுப்பினா நீ காலி!. செய்யட்டுமா?

செல்வா said...

நானும் இன்னும் பார்க்கலைங்க ..!!

எஸ்.கே said...

எப்படியும் கொஞ்ச நாளில் டிவில போட்ருவாங்கல்ல! பார்த்திடலாம்!

செல்வா said...

//அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.///

இது மாதிரி சாமர்த்தியமான சீன்ஸ் கூட இருக்கா ..? அப்படின்னா பார்க்கிறேன் .. அதே மாதிரி க.ரு.பழனியப்பனோட பார்த்திபன் கனவு அருமையா இருக்கும் . இது அவரோட முதல் முயற்சிதானே (நடிகராக).. அதனால சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம் ..

சசிகுமார் said...

//இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?//

படத்துக்கு போகும் போதே நோட்டு பேனா எல்லாம் கொண்டு போயிடுவீங்களோ.

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம் பாஸ்

நேற்று கொஞ்சம் பிஸி வீக் என்டில்லையா அதான் பாஸ் லேட்

தினேஷ்குமார் said...

பாஸ் அது எப்படி உங்களால மட்டும் முடியுது பாஸ் இருந்தாலும் உங்களுக்கு தில் அதிகம் பாஸ்

settaikkaran said...

தல, ஒரு படம் கூட விடுறதில்லே போலிருக்கு! நடத்துங்க! :-)

கரடிமடை ஆனந்தன் said...

தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. நன்றி

Anonymous said...

வசனமெல்லாம் இருட்டுல எழுதிகினு வந்த உங்களுக்கு நிச்சயமா என் ஓட்டு உண்டு

Anonymous said...

சந்தானம் சத்துலதான் படம் ஓடும்

Anonymous said...

டைரக்டர் தன் அறிவு ஜீவித்தனத்தை காட்ட நினைச்சிருப்பார் பொல..அவன் காசும் போயி நம்ம காசும் போயி என்ன பொழப்பு

"ராஜா" said...

தல ...கடைசிவரைக்கும் மீனாச்சிய பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலையே.....

இப்படி ஏமாத்திடீங்களே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெல்லாம் சரி, படத்த பாக்கலாமா வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.எஸ்.பூங்கதிர் said...
இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!///

சார் நீங்ளும் குமுதம் ஆனந்த விகடன்ல ஜோக்ஸ் எழுதறீங்கள்ல?
சமீபத்துல படிச்சேன்!

Unknown said...

அப்பா மந்திர புன்னகை மந்தாரமில்லாத புன்னகைனு சொல்லுங்க

சென்ஷி said...

இத்தனை வசனமும் நினைவுல வைச்சு டைப் செஞ்சீங்கன்னா நீங்க பெரிய ஆளுதான் :))

karthikkumar said...

சிபி சித்தப்பா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க

நவீன் said...

எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு எல்லாம் புரியவே புரியாதா..?
அதென்ன சார்..
விமர்சனம் என்ற பெயரில் படத்தின் முக்கிய முடிச்சை சொல்லிட்டீங்க...
இந்தப்படம் ஓடாது .. எ சென்டரில் இருவத்தஞ்சு நாள், பி சி சென்டரில் பத்து நாள் என்று
அதை சொல்ல நீங்கள் யார்..?

ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும்போது எதிர்பார்க்காத திருப்பம் தான் ரசிகனை
படத்துடன் ஒன்றிப்போக வைக்கும்.. படம் பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகம்..
உங்க ஒருத்தரோட பார்வையில படம் எனக்கு பிடிக்கலைன்னு எழுதலாம்
யாருக்குமே புடிக்காதுன்னு எழுதறது என்ன நியாயம்
ஒரு படைப்பாளி ரெண்டு மூணு கோடி ரூவா போட்டு படம் எடுக்கறது எவ்வளவு கஷ்டம்
இணையத்தின் மூலம் படத்தினை ஒலிபரப்பு செய்வது, திருட்டு வி சி டி, ' நிதி' கள் என்று சினிமாவை
அழித்தொழிக்க ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது... அது அதனையும் தாண்டி தான் இங்க சினிமா எடுத்துட்டு இருக்காங்க..
படத்தில் ஆயிரம் நிறை குறை இருந்தாலும் அதை மேலோட்டமா சொல்லுவது தான் நல்லது...
உங்களை மாதிரி நாலு பேரு இருந்தா போதும் ஒரு பய சினிமா எடுக்க முடியாது...
உங்களை எல்லாம் என்ன செஞ்சா தகும் ?

அன்பரசன் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!//

படத்துக்கு போகும்போது பேனா பென்சில், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு போவாரு...///

Repeatu..

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

ஹி ஹி ஹி சரி சரி நான் இந்த படத்தை பார்க்கலை...!

என்னய்யா ,ஆளாளுக்கு புது ஃபோட்டோ மாத்தறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

வட போச்சே

எல்லாத்துக்கும் ஒரு பிரச்சனை,உங்களுக்கு வட பிரச்சனையா?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்.///
எதுக்கு இந்த அவசரம். தேவை இல்லாம இப்ப அனுபவிங்க

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

இவ்ளோ டயலாக்ஸ்-ஐ நியாபகம் வெச்சிகிட்டு இதுக்கு முன்னாடி யாரும் விமர்சனம் எழுதுனதா நான் கேள்விப்பட்டதே இல்லை... விமர்சனத்துல இது ஒரு புது ஸ்டைலா இருக்கு

நன்றி மணி,எல்லாம் உங்க கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான்,எப்பவோ நடந்த சமப்வங்களை அசை போட்டு கவிதைல கலக்கறீங்களே....

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!

நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி///

super

நல்ல ரசனைய்யா உமக்கு

சி.பி.செந்தில்குமார் said...

உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி///

super

November 20, 2010 10:46 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!//

படத்துக்கு போகும்போது பேனா பென்சில், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு போவாரு...

ஆமா,பேப்பர்,ஸ்கெட்ச்,நோட்ட் புக் எல்லாம் எடுத்துட்டு போவேன்,யோவ் நான் என்ன பரீட்சை எழுதவா போறேன்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

எப்போ DVD வெளிவரும் ......அதுவரை வெயிட் பண்ணலாம்

அடுத்த மாசம் சன் டி வி ல போடறாங்களாம்.

சி.பி.செந்தில்குமார் said...

raman said...

பி.சி.சென்டர்ல இந்தப் படம் பத்து நாள் தான் ஒடும்ன்னு சொல்றதுக்கு நீ யாருய்யா?... இந்தப் படத்தை எடுத்து ரிலீஸ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நான் எதிர்க்க இருந்து பார்த்தவன். நீ என்னவோ பெரிய வெண்ணைமாதிரி விமர்சனம் எழுதுரியே... உனக்கு என்ன பெரிய பத்திரிக்கைதர்மத்தை காப்பாத்தரோம்ன்னு நினைப்பா?.. நாலு பேருனக்கு ஜால்ரா பொடரதுக்காக கண்டபடி எழுதறதை நிருத்து.

அண்ணே ,வணக்கம்.நான் என்ன ஜோசியரா? நான் சொல்றது எல்லாம் நடக்கறதுக்கு?ஏதோ எனக்கு தோணுனதை சொன்னேன்.வ குவாட்டர் கட்டிங்க் 50 நாள் ஓடும்னேன்.7 நாள்ல ஊத்திக்குச்சு?அதுக்கு என்ன பண்ண முடியும்?

தினேஷ்குமார் said...

பாஸ் ஆன்லைனா அப்ப கடைக்கு வரவும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger raman said...

இப்ப தான் உன் பழய பதிவு ஒண்ணு பார்த்தேன். அதுல முன்னாள் அமைச்சர் ராசாவயும், கனிமொழியையும் சம்பந்தப் படித்தி எழுதி இருக்கே. மவனே, அதை காப்பி எடுத்து தலைமைசெயலகத்துக்கு அனுப்பினா நீ காலி!. செய்யட்டுமா?

ரொம்ப நன்றி அண்ணே,நான் இப்போ சாதா பதிவரா இருக்கேன்,ஏதோ உங்க புண்ணியத்துல கோட்டை வரை என் பிளாக் போனா நான் சந்தோஷப்படுவேன்.

தினேஷ்குமார் said...

பாஸ் உங்கள தொடர் பதிவுக்கு கார்த்தி கூட்டிருக்கார் பார்த்தீங்களா

தினேஷ்குமார் said...

http://muraimaman.blogspot.com/2010/11/blog-post.html

போய் பாருங்க பாஸ்

Sai said...

எதுக்கு இவ்வளவு திமிர்த்தனமான விமர்சனம்..? படத்த நல்ல வாயா பொழந்து பார்த்து இருக்கிங்க அப்படின்றது நீங்க வசனம் மாறாமல்..டைப் செய்து இருப்பதில் இருந்தே தெரிகிறது..பின் மேதாவி மாதிரி பி அண்ட் சி பற்றிய கருத்து கணிப்பு வேறு.. நீங்களே வ படத்தில் உங்க கணிப்பு தவறுன்னு சொல்லிட்டிங்க பின் ஏன் இந்த பொழப்பு? திருட்டு டிவிடி போல சில அறை குறை விமர்சன பதிவாளர்களாலும் இனி சினிமாக்கு பிரச்சனை என்றால் மிகையாகாது.

Unknown said...

உங்க பதிவுக்கு நன்றி

அப்படியே எந்த site ல பாக்க முடியும்னு சொல்லி இருந்தீங்கன்னா இன்னும் சூப்பர். ஏன்னா என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருக்கறவங்க பாக்கறதுக்கு ஏதுவ இருக்கும். ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நன்றாக உள்ளது.

அலைகள் பாலா said...

யாருப்பா அது? அதான் தலைப்புலயே விமர்சனம்னு போட்டுருக்குல. உள்ள வந்து சவுன்ட் விட்டா?

இந்த பிஸ்கட் நல்லா இல்ல- பிஸ்கட் தொழிலை அழிக்க வந்த நாதாரி ஒழிக.

இந்த பள்ளிக்கூடம் சரி இல்ல - கல்வியை கெடுத்த காமக் கொடூரன் ஒழிக

அந்த மெக்கானிக் சரி இல்ல - மெக்கானிக் வாழ்க்கையை அழிக்க வந்த பிக்காளி ஒழிக...

இப்படிலாம் ஆரம்பிக்க போறாங்க... ஒரு படத்த நல்லா இல்ல, இருக்குனு சொல்ல பி.ஹச்.டி படிச்சுட்டு தான் வரனும் போல

Philosophy Prabhakaran said...

குடைக்குள் மழையா... அது எனக்கு பிடித்த படங்களுள் ஒன்றாச்சே...

// எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான். //
அப்படியா...?

காமெடி வசனங்களில் காமநெடி அடிக்கிறது...

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

நானும் இன்னும் பார்க்கலைங்க ..!!

மெதுவா பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

எப்படியும் கொஞ்ச நாளில் டிவில போட்ருவாங்கல்ல! பார்த்திடலாம்!

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.///

இது மாதிரி சாமர்த்தியமான சீன்ஸ் கூட இருக்கா ..? அப்படின்னா பார்க்கிறேன் .. அதே மாதிரி க.ரு.பழனியப்பனோட பார்த்திபன் கனவு அருமையா இருக்கும் . இது அவரோட முதல் முயற்சிதானே (நடிகராக).. அதனால சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம் ..

எஸ் கரெக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

//இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?//

படத்துக்கு போகும் போதே நோட்டு பேனா எல்லாம் கொண்டு போயிடுவீங்களோ.

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் வணக்கம் பாஸ்

நேற்று கொஞ்சம் பிஸி வீக் என்டில்லையா அதான் பாஸ் லேட்

ஓக்கே நோ பிராப்ளம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் அது எப்படி உங்களால மட்டும் முடியுது பாஸ் இருந்தாலும் உங்களுக்கு தில் அதிகம் பாஸ்

சினிமா பார்க்க எதுக்கு தில்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேட்டைக்காரன் said...

தல, ஒரு படம் கூட விடுறதில்லே போலிருக்கு! நடத்துங்க! :-)

நன்றி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

தல, ஒரு படம் கூட விடுறதில்லே போலிருக்கு! நடத்துங்க! :-)

November 20, 2010 12:35 PM
Delete
Blogger கரடிமடை ஆனந்தன் said...

தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. நன்றி

நன்றி ஆனந்தன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

வசனமெல்லாம் இருட்டுல எழுதிகினு வந்த உங்களுக்கு நிச்சயமா என் ஓட்டு உண்டு

நன்றி சதீஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சந்தானம் சத்துலதான் படம் ஓடும்

அதே போல் வசனமும் பிளஸ் தான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

டைரக்டர் தன் அறிவு ஜீவித்தனத்தை காட்ட நினைச்சிருப்பார் பொல..அவன் காசும் போயி நம்ம காசும் போயி என்ன பொழப்பு

பெரிய லாஸ் வராது,மினிமம் பட்ஜெட் படம்தான் போட்ட காசை எடுத்துடுவாங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger "ராஜா" said...

தல ...கடைசிவரைக்கும் மீனாச்சிய பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலையே.....

இப்படி ஏமாத்திடீங்களே

சொல்ற அளவுக்கு ஒண்ணும் இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெல்லாம் சரி, படத்த பாக்கலாமா வேணாமா?

டி வி ல போட்டா....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.எஸ்.பூங்கதிர் said...
இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!///

சார் நீங்ளும் குமுதம் ஆனந்த விகடன்ல ஜோக்ஸ் எழுதறீங்கள்ல?
சமீபத்துல படிச்சேன்!

பூங்கதிர் பல வருடங்களாக குங்குமம்,குமுதம்,விகடனில் எழுதுகிறார்.சமீபத்தில் பிளாக்கும் ஆரம்பிச்சிருக்காரு.பார்ட்டி உங்களை ,மாதிரியே செம நக்கல் பார்ட்டி ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நா.மணிவண்ணன் said...

அப்பா மந்திர புன்னகை மந்தாரமில்லாத புன்னகைனு சொல்லுங்க

உங்க கமெண்ட் சூப்பர் மணி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சென்ஷி said...

இத்தனை வசனமும் நினைவுல வைச்சு டைப் செஞ்சீங்கன்னா நீங்க பெரிய ஆளுதான் :))

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

சிபி சித்தப்பா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க

யோவ் அடிச்சு பல்லை எல்லாம் கழட்டுவேன் யாருக்கு யாருய்ய்யா சித்தப்பா எனக்கு உங்க தம்பி வயசுதான் ஆகுது,,,(வயசினை ஏத்திப்புட்டீங்களே அதான் கோபம் ஹி ஹி வர்றேன்)

சி.பி.செந்தில்குமார் said...

சிபி சித்தப்பா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க

November 20, 2010 5:05 PM
Delete
Blogger நவீன் said...

எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு எல்லாம் புரியவே புரியாதா..?
அதென்ன சார்..
விமர்சனம் என்ற பெயரில் படத்தின் முக்கிய முடிச்சை சொல்லிட்டீங்க...
இந்தப்படம் ஓடாது .. எ சென்டரில் இருவத்தஞ்சு நாள், பி சி சென்டரில் பத்து நாள் என்று
அதை சொல்ல நீங்கள் யார்..?

ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும்போது எதிர்பார்க்காத திருப்பம் தான் ரசிகனை
படத்துடன் ஒன்றிப்போக வைக்கும்.. படம் பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகம்..
உங்க ஒருத்தரோட பார்வையில படம் எனக்கு பிடிக்கலைன்னு எழுதலாம்
யாருக்குமே புடிக்காதுன்னு எழுதறது என்ன நியாயம்
ஒரு படைப்பாளி ரெண்டு மூணு கோடி ரூவா போட்டு படம் எடுக்கறது எவ்வளவு கஷ்டம்
இணையத்தின் மூலம் படத்தினை ஒலிபரப்பு செய்வது, திருட்டு வி சி டி, ' நிதி' கள் என்று சினிமாவை
அழித்தொழிக்க ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது... அது அதனையும் தாண்டி தான் இங்க சினிமா எடுத்துட்டு இருக்காங்க..
படத்தில் ஆயிரம் நிறை குறை இருந்தாலும் அதை மேலோட்டமா சொல்லுவது தான் நல்லது...
உங்களை மாதிரி நாலு பேரு இருந்தா போதும் ஒரு பய சினிமா எடுக்க முடியாது...
உங்களை எல்லாம் என்ன செஞ்சா தகும்

நீங்க சொல்றதுல பாயிண்ட் இருக்கு. ஆனா ஒரு சாதாரண பெஞ்ச் ரசிகன் படம் போட்ட 20வது நிமிஷத்துல படம் பற்றிய தீர்ப்பை சொல்லிடறான்,இடைவேளைல பகிர்ந்துக்கறான்.மக்களின் மவுத் டாக்கை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.ஒரு நல்ல படம் எப்படியும் மக்களை போய் சேரும்.ஒரு டப்பா படம் எப்படியும் ஊத்திக்கும் விமர்சனம் போடாம இருந்தா மட்டும் இந்தப்படம் ஓடிடவா போகுது?

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இவ்வளவு வசனங்களை எப்படி நினைவு வைச்சுட்டு எழுதுறிங்களோ?.. உங்க திறமையை நினைச்சா மலைப்பா இருக்கு சார்!//

படத்துக்கு போகும்போது பேனா பென்சில், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு போவாரு...///

Repeatu..

ஹி ஹி ஹி நான் அப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் ஆன்லைனா அப்ப கடைக்கு வரவும்

சாரி தினேஷ் மதியம் 12 மணிக்கு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் உங்கள தொடர் பதிவுக்கு கார்த்தி கூட்டிருக்கார் பார்த்தீங்களா

பாக்கலையே இதோ போறேன் 12 மணீக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Sai said...

எதுக்கு இவ்வளவு திமிர்த்தனமான விமர்சனம்..? படத்த நல்ல வாயா பொழந்து பார்த்து இருக்கிங்க அப்படின்றது நீங்க வசனம் மாறாமல்..டைப் செய்து இருப்பதில் இருந்தே தெரிகிறது..பின் மேதாவி மாதிரி பி அண்ட் சி பற்றிய கருத்து கணிப்பு வேறு.. நீங்களே வ படத்தில் உங்க கணிப்பு தவறுன்னு சொல்லிட்டிங்க பின் ஏன் இந்த பொழப்பு? திருட்டு டிவிடி போல சில அறை குறை விமர்சன பதிவாளர்களாலும் இனி சினிமாக்கு பிரச்சனை என்றால் மிகையாகாது.

அண்ணே ஏன் டென்ஷன் ஆகறீங்க? பிளாக் படிக்கறவங்க 1000 பேர் இருப்பாங்க,அதுவும் என் பிளாக்க்கை 300 பேர் படிப்பாங்க அதுல என்ன பெரிய பாதிப்பு வந்துடப்போவுது,,?கூல் பிளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உங்க பதிவுக்கு நன்றி

அப்படியே எந்த site ல பாக்க முடியும்னு சொல்லி இருந்தீங்கன்னா இன்னும் சூப்பர். ஏன்னா என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருக்கறவங்க பாக்கறதுக்கு ஏதுவ இருக்கும். ஹி ஹி

அண்ணே கேட்டு சொல்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சே.குமார் said...

விமர்சனம் நன்றாக உள்ளது.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அலைகள் பாலா said...

யாருப்பா அது? அதான் தலைப்புலயே விமர்சனம்னு போட்டுருக்குல. உள்ள வந்து சவுன்ட் விட்டா?

இந்த பிஸ்கட் நல்லா இல்ல- பிஸ்கட் தொழிலை அழிக்க வந்த நாதாரி ஒழிக.

இந்த பள்ளிக்கூடம் சரி இல்ல - கல்வியை கெடுத்த காமக் கொடூரன் ஒழிக

அந்த மெக்கானிக் சரி இல்ல - மெக்கானிக் வாழ்க்கையை அழிக்க வந்த பிக்காளி ஒழிக...

இப்படிலாம் ஆரம்பிக்க போறாங்க... ஒரு படத்த நல்லா இல்ல, இருக்குனு சொல்ல பி.ஹச்.டி படிச்சுட்டு தான் வரனும் போல

விடுங்கண்ணே,நமக்கு எப்படி படம் நல்லாலைனு சொல்ல உரிமை இருக்கோ அதே போல் அவங்களுக்கும் அப்படி விமர்சனம் போடறது தப்புனு சொல்ல உரிமை இருக்கு.

எனிவே எனக்கு ஆதரவா குரல் கொடுத்ததுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

யாருப்பா அது? அதான் தலைப்புலயே விமர்சனம்னு போட்டுருக்குல. உள்ள வந்து சவுன்ட் விட்டா?

இந்த பிஸ்கட் நல்லா இல்ல- பிஸ்கட் தொழிலை அழிக்க வந்த நாதாரி ஒழிக.

இந்த பள்ளிக்கூடம் சரி இல்ல - கல்வியை கெடுத்த காமக் கொடூரன் ஒழிக

அந்த மெக்கானிக் சரி இல்ல - மெக்கானிக் வாழ்க்கையை அழிக்க வந்த பிக்காளி ஒழிக...

இப்படிலாம் ஆரம்பிக்க போறாங்க... ஒரு படத்த நல்லா இல்ல, இருக்குனு சொல்ல பி.ஹச்.டி படிச்சுட்டு தான் வரனும் போல

November 21, 2010 1:14 AM
Delete
Blogger philosophy prabhakaran said...

குடைக்குள் மழையா... அது எனக்கு பிடித்த படங்களுள் ஒன்றாச்சே...

// எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான். //
அப்படியா...?

காமெடி வசனங்களில் காமநெடி அடிக்கிறது...

வாங்க பிரபா,2 தமிழ்ப்படத்தை விட்டூட்டு ஹாரிபாட்டர் விமர்சனம் போட்டிருக்கீங்க போல...11 மணிக்கு வர்றேன் உங்க பிளாக்குக்கு