1. “குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே?”
“போரில் இருந்து திரும்பி வரும்போது தோற்றவனே என்று அழைத்தீரே!”
2. “மன்னா! இந்த அர்த்த ஜாமத்தில் கூட ஏதாவது யோசித்துக்கொண்டு இருக்கிறீரே! என்னது?”
“ஜாமம் என்றால் என்ன அர்த்தம் என்றுதான் ராணி!”
3. “எதுக்காக நடிகை அசின் வீட்டுக்கு முன்னாடி மறியல் போராட்டம் நடத்துறாங்க?”
“அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்னு மேடையில பேசுறப்ப, நம்ம தலைவருக்கு நாக்கு தடுமாறி ‘அசின் கவனத்தை’னு பேசிட்டாரு!”
4. “மேடம்... நீங்க சேலை கட்டி ஃபுல்லா கவர் பண்ணி ஒரு ஸ்டில் பார்த்தோமே?”
“ஐயையோ... நம்பாதீங்க...! அது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்!”
5. “மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களை மன்னர் ஏன் நாடு கடத்துகிறார்?”
“ஆண் மூலம் அரசாளும்னு யாரோ சொன்னாங்களாம், தன்னோட பதவிக்கு ஆபத்து வந்துடுமோனு பயப்படறார் மன்னர்!”
6. “போர்க்களத்துக்குச் செல்ல மன்னர் தயங்குகிறாரே... அவரோட ‘மூப்பு’தான் காரணமா?”
“இல்லை. ஏற்கெனவே ஒருமுறை எதிரி நாட்டு மன்னன் இவருக்கு வைத்த ‘ஆப்பு’தான் காரணம்!”
7. “அவ்வப்போது நகர்வலம் செல்கையில் பிச்சைக்காரன் வேடத்தில் சென்றது, போர்க்களத்தில் உபயோகமாக இருக்கிறது!”
“எப்படி மன்னா?”
“உயிர் பிச்சை கேட்க உதவியாக இருந்தது!”
8. “ஸ்கோப் இல்லைனு சொல்றீங்களே டாக்டர்... இனி என் மாமியார் பிழைக்க மாட்டாங்களா?”
“அவசரப்படாதீங்க! ஸ்டெதஸ்கோப் இல்லை, மறந்துட்டு வந்துட்டேன்னு சொல்ல வந்தேன்!”
9. “போர் செய்தி
கே ட்டதும் மன்னர் பதறுகிறார். மகாராணி பரவசப்படுகிறார்... ஏன்?”
“இரண்டுக்கும் ஒரே காரணம்... புது ராஜா வரப் போறதுதான்!”
10. “போலி டாக்டர்னு தெரிஞ்சும் அதே க்ளினிக்குக்கு ஏன் போனே?”
“டாக்டர் போலியா இருந்தா என்ன... நர்ஸ் ஜாலியா இருக்காங்களே!”
11. “மன்னா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாக புரிந்துகொண்டு உள்ளனர்!”
“எப்படி?”
“அந்தப்புரத்தில் உள்ள பெண்களின் இடுப்பளவு எவ்வளவு என்ற தகவல் வேணுமாம்!”
12. “மன்னர் புலவர் மேல் ஏன் கடுப்பாக உள்ளார்?”
“ஏற்கெனவே வேறு ஒரு புலவர் 10 வருடம் முன்பு பாடிய பாடலை இவர் ரீ-மிக்ஸ் செய்து பாடினாராம்!”
13. “மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.”
“என்ன, போர் அறிவிப்பா?”
“ம்ஹும்... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.”
14. ஒரு வீட்டில் விருந்தாளியும் குழந்தையும்...
“உனக்கு அம்மா புடிக்குமா, அப்பா புடிக்குமா?”
“எனக்கு இந்தியன் கிரிக்கெட் டீமைத்தான் புடிக்கும். ஏன்னா, அவங்கதான் அடிக்கவே மாட்டாங்க!”
15. ஒரு பூங்காவில் காதல் ஜோடி...
“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”
16. “புடவை, புருஷன் என்ன வித்தியாசம்?”
“புடவை எடுக்கறப்ப புரட்டிப் புரட்டி பார்த்து எடுத்து கட்டிக்குவாங்க. புருஷனை கட்டிட்டு அப்புறமாதான் புரட்டி புரட்டி எடுப்பாங்க.”
54 comments:
y raja mela ivlo gaundu? ha ha ha..
park lover joke super...
ஹ ஹா.............குறிப்பா இந்த 15 ,16 ...........சூப்பர் மக்கா...........
"காதலுக்கும்" "கள்ள காதலுக்கும்" என்ன வித்தியாசம்?
காதல்னா பிரிச்சு வச்சு ஆப்பு அடிப்பாங்க!! கள்ளக்காதல்னா மேடைல கூப்ட்டு விருது கொடுப்பாங்க!!!!
இதுக்கு பொருத்தமான படம் உங்கள்ட்ட இருக்கா செந்தில்?
//“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”//
யோவ் என்னைய அசிங்க படுத்துரதிலையே குறியா இரு. ஆமா ரெண்டு அசின் போட்டோவுக்கும் டிஸ்கி இல்லியே ஏன்?
நன்றி பாலா
இம்சைஅரசன் பாபு.. said...
ஹ ஹா.............குறிப்பா இந்த 15 ,16 ...........சூப்பர் மக்கா...........
நன்றி பாபு
VAIGAI said...
"காதலுக்கும்" "கள்ள காதலுக்கும்" என்ன வித்தியாசம்?
காதல்னா பிரிச்சு வச்சு ஆப்பு அடிப்பாங்க!! கள்ளக்காதல்னா மேடைல கூப்ட்டு விருது கொடுப்பாங்க!!!!
இதுக்கு பொருத்தமான படம் உங்கள்ட்ட இருக்கா செந்தில்
இப்போ டைம் இல்ல,நைட் ட்ரை பண்றேன்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”//
யோவ் என்னைய அசிங்க படுத்துரதிலையே குறியா இரு. ஆமா ரெண்டு அசின் போட்டோவுக்கும் டிஸ்கி இல்லியே ஏன்?
ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு
கடைசி ரெண்டு ஜோக்கும் சூப்பர் தலைவா...
ஆனாலும் நீங்க ரமேஷ இப்படி கேவல படுத்திருக்க கூடாது...
எங்க போலிஸ இப்படியா வறுத்தெடுக்கிறது? இதெல்லாம் முறையில்ல
வேற எப்படி கேவலப்படுத்தறதுன்னு சொல்லுங்க செஞ்சிடுவோம்
யோவ் கார்த்தி மொத்தம் 16 ஜோக் இருக்கு,மீதி 15 பத்தி சொல்லுங்கய்யா
4. “மேடம்... நீங்க சேலை கட்டி ஃபுல்லா கவர் பண்ணி ஒரு ஸ்டில் பார்த்தோமே?”
“ஐயையோ... நம்பாதீங்க...! அது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்!”///
சூப்பர்
தலைவரே தொடர்பதிவுக்கு உங்கள சதீஷ் சார் கூப்டாரே எப்ப எழுதுவீங்க
ஜோவ் சீபிஎஸ் அசினை பிசின் தடவி ஒட்ட வைக்கிறீரே... அருமையாக இருக்கிறது...
சூப்பர்..3,10,11,15,16 டாப்பு..
கடைசி ஜோக் செம
remix ஜோக் சூப்பர்!
என் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி . திரும்பவும் பதிவு போட உங்கள் கமெண்ட்டும் ஒரு காரணமாகும்.
அண்ணே எல்லா ஜோக்ஸும் சூப்பர். அதுவும் போலிச கலாச்சது செம!!
அட்ரா சக்கை... நகைக்க வைக்கும் நகைச்சுவை..
//////////
“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”
//////////////
ஹஹஹா
//“அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்னு மேடையில பேசுறப்ப, நம்ம தலைவருக்கு நாக்கு தடுமாறி ‘அசின் கவனத்தை’னு பேசிட்டாரு!”
///
இந்த ஒரு வாசகத்துக்காக அசின் போட்டோவ இரண்டு தடவ போட்டிருக்கீங்களே ..!!
//3. “மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.”
“என்ன, போர் அறிவிப்பா?”
“ம்ஹும்... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.”/
என்ன நக்கலா ..?
//
“அந்தப்புரத்தில் உள்ள பெண்களின் இடுப்பளவு எவ்வளவு என்ற தகவல் வேணுமாம்!”
//
கொடுமை கொடுமை ..!!
///11. “மன்னா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாக புரிந்துகொண்டு உள்ளனர்!”
“எப்படி?”
“அந்தப்புரத்தில் உள்ள பெண்களின் இடுப்பளவு எவ்வளவு என்ற தகவல் வேணுமாம்!”/////
சே வெவரமில்லாத பசங்க, போயும் இடுப்பளவுதானா கேட்டானுக?
ஜோக்ஸ் 15, 16 டாப் டக்கருங்க்கோ!
கடைசி ரெண்டும் சூப்பர் தல ,
உபுண்டுல படிக்க முடில என்னனு பாருங்க ..தல
ha ha ha... sema comedy thaan ponga.. ROFL :-)))
rasiththu siriththaen..
thanks for sharing..
என்ன நைனா வெறும் ஜோக்கா போட்டு அசத்த ஆரம்பிச்சுட்டிங்க?... நீங்க எதுனா ஒண்ணு செய்யரதுன்னா காரணம் இல்லாம இருக்காதே!?
ரொம்ப நாளைக்குப் பிறகு அசினைப் பாக்க... பாக்க... மனசுக்குள்ள புது நீரோடை ஓடுதுய்யா!
ஒரு பூங்காவில் காதல் ஜோடி...
“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”
--- தலைவா அனுபவம் பேசுதோ? அண்ணிகிட்ட வத்தி வைக்கட்டுமா?
//16. “புடவை, புருஷன் என்ன வித்தியாசம்?”
“புடவை எடுக்கறப்ப புரட்டிப் புரட்டி பார்த்து எடுத்து கட்டிக்குவாங்க. புருஷனை கட்டிட்டு அப்புறமாதான் புரட்டி புரட்டி எடுப்பாங்க.” //
கட்டினாத்தான் அது புடவை / புருஷன்..
karthikkumar said...
4. “மேடம்... நீங்க சேலை கட்டி ஃபுல்லா கவர் பண்ணி ஒரு ஸ்டில் பார்த்தோமே?”
“ஐயையோ... நம்பாதீங்க...! அது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்!”///
சூப்பர்
நன்றி ,அது ஆனந்த விகடனில் நான் எழுதி வந்தது
karthikkumar said...
தலைவரே தொடர்பதிவுக்கு உங்கள சதீஷ் சார் கூப்டாரே எப்ப எழுதுவீங்க
4 நாள்ல
ம.தி.சுதா said...
ஜோவ் சீபிஎஸ் அசினை பிசின் தடவி ஒட்ட வைக்கிறீரே... அருமையாக இருக்கிறது..
சுதா,என்ன தைரியம் இருந்தா 16 ஜோக்ஸை விட்டுட்டு ஒரே ஒரு ஃபோட்டோவை விமர்சனம் பண்ணுவீர்?
ஹரிஸ் said...
சூப்பர்..3,10,11,15,16 டாப்பு..
நன்றி ஹரீஸ்.நல்ல டேஸ்ட் உங்களுக்கு
அருண் பிரசாத் said...
கடைசி ஜோக் செம
நன்றி அருண்
எஸ்.கே said...
remix ஜோக் சூப்பர்!
நன்றி எஸ் கே சார்
Delete
Blogger சசிகுமார் said...
என் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி . திரும்பவும் பதிவு போட உங்கள் கமெண்ட்டும் ஒரு காரணமாகும்.
நன்றி சசி
Blogger நாகராஜசோழன் MA said...
அண்ணே எல்லா ஜோக்ஸும் சூப்பர். அதுவும் போலிச கலாச்சது செம!!
நன்றி சோழா
சே.குமார் said...
அட்ரா சக்கை... நகைக்க வைக்கும் நகைச்சுவை..
நன்றி குமார்
THOPPITHOPPI said...
//////////
“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”
//////////////
ஹஹஹா
நன்றி தொப்பி தொப்பி
ப.செல்வக்குமார் said...
//“அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்னு மேடையில பேசுறப்ப, நம்ம தலைவருக்கு நாக்கு தடுமாறி ‘அசின் கவனத்தை’னு பேசிட்டாரு!”
///
இந்த ஒரு வாசகத்துக்காக அசின் போட்டோவ இரண்டு தடவ போட்டிருக்கீங்களே ..!!
ஹி ஹி ஹி
ப.செல்வக்குமார் said...
//
“அந்தப்புரத்தில் உள்ள பெண்களின் இடுப்பளவு எவ்வளவு என்ற தகவல் வேணுமாம்!”
//
கொடுமை கொடுமை ..!!
ஏன்?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///11. “மன்னா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாக புரிந்துகொண்டு உள்ளனர்!”
“எப்படி?”
“அந்தப்புரத்தில் உள்ள பெண்களின் இடுப்பளவு எவ்வளவு என்ற தகவல் வேணுமாம்!”/////
சே வெவரமில்லாத பசங்க, போயும் இடுப்பளவுதானா கேட்டானுக?
வில்லங்கம் புடுச்ச ஆளய்யா நீர்,வேற எதை கேக்கனும்?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜோக்ஸ் 15, 16 டாப் டக்கருங்க்கோ!
நன்றி ராம்சாமி
புதிய மனிதா.. said...
கடைசி ரெண்டும் சூப்பர் தல ,
உபுண்டுல படிக்க முடில என்னனு பாருங்க ..தல
இப்போ சரி ஆகிடுச்சு,ஏதோ டெக்னிக்கல் எரர்
Ananthi said...
ha ha ha... sema comedy thaan ponga.. ROFL :-)))
rasiththu siriththaen..
thanks for sharing..
நன்றி ஆனந்தி
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
என்ன நைனா வெறும் ஜோக்கா போட்டு அசத்த ஆரம்பிச்சுட்டிங்க?... நீங்க எதுனா ஒண்ணு செய்யரதுன்னா காரணம் இல்லாம இருக்காதே!?
வேற சரக்கு கைவசம் இல்ல
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
ரொம்ப நாளைக்குப் பிறகு அசினைப் பாக்க... பாக்க... மனசுக்குள்ள புது நீரோடை ஓடுதுய்யா!
ஓடும்யா ஓடும் உங்க முத ஒயிஃப் நெம்பர் பிளீஸ்
எஸ்.எஸ்.பூங்கதிர் said...
ஒரு பூங்காவில் காதல் ஜோடி...
“ரமேஷ்! எனக்கு சாப்பிடும் போதெல்லாம்கூட உன் ஞாபகமாவே இருக்கு...”
“அப்படியா... எனக்குக் கைகழுவும்போதுதான் உன் நெனப்பு வருது!”
--- தலைவா அனுபவம் பேசுதோ? அண்ணிகிட்ட வத்தி வைக்கட்டுமா?
ஜோக் சொன்னா சிரிக்கனும்,வத்தி வைக்கப்படாது
Madhavan Srinivasagopalan said...
//16. “புடவை, புருஷன் என்ன வித்தியாசம்?”
“புடவை எடுக்கறப்ப புரட்டிப் புரட்டி பார்த்து எடுத்து கட்டிக்குவாங்க. புருஷனை கட்டிட்டு அப்புறமாதான் புரட்டி புரட்டி எடுப்பாங்க.” //
கட்டினாத்தான் அது புடவை / புருஷன்..
நன்றி சார்
Post a Comment