சுதந்திர இந்தியாவை உருவாக்கிய சிற்பி
பம்பாய் ஆஸாத் மைதானத்தில், 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேருஜி, மெளலானா ஆஸாத், புலாபாய் தேசாய் ஆகியோர் அதில் பேசவிருந்தார்கள்.
நேருஜி பேசத் தொடங்கியபோது பெருமழை கொட்டத் தொடங்கியது. இருந்தாலும் கொட்டும் மழையிலும், இலட்சக்கணக்கான மக்கள் கொஞ்சங்கூட அசையாமல் அமர்ந்து, நேருஜியின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார். அதைக் கண்டு,”மக்கள் மழையில் நனையும்பொழுது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேரு. குடை பிடிப்பவரோ நேருஜி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டே இருந்தார்.
நேருஜி பொது மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன்,”இவர் என் சொல்லையும் மீறிக் குடை பிடித்திருப்பதைப் பார்த்தால், இவர் ஒலிபெருக்கியின் சொந்தக்காரராக இருப்பார் என்றுநினைக்கிறேன். இவர் எனக்காகக் குடை பிடிக்கவில்லை. ஒலிபெருக்கியை மழையிலிருந்து
பாதுகாக்கவே குடையைப் பிடிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அதைக் கேட்டதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
லால் பகதூர் சாஸ்திரி
ஒரு முறை, பம்பாயில் குழந்தைகளின் விழா ஒன்றுக்கு லால்பகதூர்
சாஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதற்காக எழுந்தார், லால்பகதூர் சாஸ்திரி.
”குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய
அறிஞன் அல்ல. அப்படியிருக்க இந்தக் குழந்தைகள் விழாவிற்கு என்னை ஏன் அழைத்தார்கள் என்று யோசித்தேன். அப்புறந்தான் உண்மை தெரிந்தது. என் உடல் தோற்றம் ஒரு பத்து வயதுச் சிறுவனைப் போன்று அவ்வளவு
குள்ளமாக இருக்கிறது. ஒரு சிறுவனைப் போலவே நான் தோற்றமளித்த
காரணத்தால்தான் இங்கே என்னை அழைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.”
இதைக் கேட்டதும், அங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்.
29 comments:
யாரு பாஸ் இந்த நேரு?...ஹி..ஹி
அட.. சுதந்திரத்துக்கு பாடுபட்டவரா?..
மன்னிச்சுக்குங்க.. கன்னத்தில போட்டுக்குக்கிறேன்....
( ராணுவத்தை அனுப்பி வச்சிடாதீங்க மக்கா...)
யோவ் பட்டா பட்டி உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தின்னு தெரியும்,ஆனா இந்தளவுக்கா?
பட்டாபட்டி.. said...
அட.. சுதந்திரத்துக்கு பாடுபட்டவரா?..
மன்னிச்சுக்குங்க.. கன்னத்தில போட்டுக்குக்கிறேன்....
யாரோட கன்னத்துல?
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html
ஹா,ஹா,ஹா.... பகிர்வுக்கு நன்றிங்க.
ஆர் கே செல்வமணி அல்ல....நல்ல லொள்ளு...
சுவாரஸ்யம்.
ஓ... வரலாற்றுப்பதிவா... நடத்துங்க நடத்துங்க...
யோவ் உங்க ஊர் லைப்ரரி எப்ப மூடுவாங்க.
நல்ல வரலாற்று நிகழ்வுகள்!
மாணவர்களுக்கு
அதாவது இளைய தளபதிகளுக்கு
நமது நாட்டின் தலைவர்கள்
எவ்வளவு எளிமையானவர்கள் என அறிய
இந்நிகழ்ச்சிகள் பெருதவிபுரியும்
நாமும் அடுத்தவரிடம் உரையாடும் பொழுதும்
இச்செய்திகளை பரிமாறும்
போது நமது அறிவை மெய்ச்சுவர்.
தகவலுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
இதே திசையில்.
அன்புடன் வராகன்.
அப்போ நம்ம ரோஜா இல்லியா? சாரி சார்... அட்ரஸ் மாறி வந்துட்டேன்1
//ங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்//
ஹ .......ஹா.......ஹி.......ஹி ............இப்படி சிரிப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன் அது என்ன கொல் என்ற சிரிப்பு .சொல்லுங்க மக்கா
நல்ல வரலாற்று பதிவு ..........நல்ல இருக்கு
// அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார்//
குடை என்றால் தலைக்கு மேல தான் பிடிக்க முடியும் (என்ன ஒரு கண்டு பிடிப்பு )
dineshkumar said...
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html
சாரி கவிஞா வர்றேன்
Chitra said...
ஹா,ஹா,ஹா.... பகிர்வுக்கு நன்றிங்க.
நன்றி சித்ரா
ஸ்ரீராம். said...
ஆர் கே செல்வமணி அல்ல....நல்ல லொள்ளு...
சுவாரஸ்யம்.
நன்றி சார்
philosophy prabhakaran said...
ஓ... வரலாற்றுப்பதிவா... நடத்துங்க நடத்துங்க...
அடுத்து ஒரு புவியியல் பதிவு
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் உங்க ஊர் லைப்ரரி எப்ப மூடுவாங்க.
எங்க ஊர் லைப்ரரி நயந்தாரா ம் ம் ம் மனசு மாதிரி ,எப்பவும் ஓப்பன்லயே இருக்கும்
எஸ்.கே said...
நல்ல வரலாற்று நிகழ்வுகள்!
நன்றி எஸ் கே
நன்றி வராகன் சார்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ நம்ம ரோஜா இல்லியா? சாரி சார்... அட்ரஸ் மாறி வந்துட்டேன்1
நம்ம ரோஜாவா? பதியம் போட்டீரா?பரிசம் போட்டீரா?
Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...
//ங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்//
ஹ .......ஹா.......ஹி.......ஹி ............இப்படி சிரிப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன் அது என்ன கொல் என்ற சிரிப்பு .சொல்லுங்க மக்கா
ஹி ஹி ஹி தெரியல.
இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல வரலாற்று பதிவு ..........நல்ல இருக்கு
நன்றி பாபு,புது பதிவு போடலையா?
Blogger இம்சைஅரசன் பாபு.. said...
// அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார்//
குடை என்றால் தலைக்கு மேல தான் பிடிக்க முடியும் (என்ன ஒரு கண்டு பிடிப்பு )
கொலம்பஸ் பாபு வாழ்க.
ers said...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்
இணைச்சிட்டா போச்சு>
போசின் நண்பனாக இருந்து விட்டு அவர் முதுகில் குத்திவிட்டு காந்தி பக்கம் போனவர் என்று எவருக்காவது தெரிந்தால் நன்று.
நன்றி
எல்லாம் சரிதான்!!!!!! ஆனா சுதந்திரத்துக்கு பாடுபட்ட வகையில்வேணா நேருவை பாராட்டலாம், ஆனால் ஒரு மிகப்பெரிய நாட்டின் முதல் பிரதமர் என்ற வகையில் அவருடைய செயல்பாடுகள் திருப்தியில்லாதது, அவருடைய பொறுப்பை அவர் முழுதாக உணரவில்லை, இந்திய நாட்டின் ஊழல் அவருடைய ஆட்சியிலேயே ஆரம்பித்துவிட்டது, அதை அவர் தடுக்க தவறிவிட்டார், மாறாக ஊழல்வாதிகளை காப்பாற்றினார், நாட்டின் சாபக்கேடு அங்குதான் ஆரம்பித்தது!!!!!!!!! என்னவோ போங்க என் வாய புடுங்க ஆரம்பிச்சுட்டிங்க!!! எங்க முடிய போகுதோ!!!!
Post a Comment