தலை தீபாவளி கொண்டாட வேண்டிய ஒரு புது மாப்பிள்ளை கம் போலீஸ் ஆஃபீசர் தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை.
இந்தப்படத்துக்கு 2 பெருமை இருக்கு.ஒண்ணு தீபாவளி ரேசில் எதிர்பாராத விதமாக நெம்பர் ஒன் பிளேசை பிடிச்சது.2வது பிரபு சாலமன் இயக்கிய படங்களிலேயே இது தான் டாப்.
அமரர் சுஜாதாவின் ஆலோசனைப்படி படத்தோட முத ஷாட்லயே கதையை ஆரம்பிச்சடறாரு இயக்குநர்.போலீஸ் ஆஃபீசரோட மனைவியின் சைக்கோ மனோபாவம்,மற்றவர்களை வருத்தி தான் இன்பம் காணும் நிலை இதை இவ்வளவு சிம்ப்பிளா சொன்னதுக்கு அவருக்கு ஒரு ஷொட்டு.
டைட்டிலில் எ ஸ்டோரி ஆஃப் அ லவ் ஜர்னி என போடும்போது நான் கூட பயந்தேன்.படம் பூரா லவ்வர்ஸ் ஓடிட்டே இருக்கப்போறாங்க,நாம ஒழிஞ்சோம் என.ஆனா யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கையில் நாம் நிமிர்ந்து உட்காருகிறோம்.
அதே போல் அழகி படத்தில் ,பூ படத்தில் வருவது போல் ஹீரோ,ஹீரோயினின் சிறு பிராய சம்பவங்களின் கோர்வையாய் வரும் பாட்டான கிச்சுகிச்சு தாம்பாளம் பாட்டு வரும்போது கூட இது வழக்கமான ஒரு காதல் கதையே எனும் சலிப்பை பார்வையாளனிடம் படம் ஏற்படுத்துகிறது.ஆனால் படம் போகப்போக காதல் என்ற பிரமை (பிரேமை ஆல்சோ) யிலிருந்து விலகி சஸ்பென்ஸ் வகையறாவில் சேர்கிறது.
ஹீரோ தொட்டுப்பார் பட அறிமுகம் ஒரு பாடல் காட்சியில் பருத்தி வீரன் கார்த்தி மாதிரி தலையை ஆட்டி ஆட்டி கடுப்பேற்றுகிறார்.மற்றபடி சுமாரான் நடிப்புத்தான்.(இவர் எப்போதும் பரட்டைத்தலையுடன் வருவது மகா எரிச்சல்)
ஹீரோயின் சிந்து சமவெளி அனாகா (இப்போ இயற்பெயரான அமலாவாம்)
விழிகளை வேல்களாக்கி காண்போர் மனதில் கவிதையாய் பாயும் திறன் மிக்கவர்.ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.கண் அசைவில் காளையரை கவிழ்க்கும் கவுதாரி.(போதுண்டா நாதாரி ,நிறுத்து உன் வர்ணனையை,சகிக்கலை,)
ஹீரோயின் ஏழை,வீட்டில் கரண்ட் கட்,விடிந்தால் பரீட்சை.அவள் படிப்பதற்காக ஹீரோ சைக்கிள் ஓட்டி அந்த டைனமோ கனெக்ஷனில் பல்பை எரிய வைத்து படிக்க வைப்பதும்,பின் அதுவும் ஒர்க் அவுட் ஆகாததில் ஹீரோ மின் மினி பூச்சிகளை ஒரு பாட்டில் தண்ணீரில் பிடித்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பதும் மனதை கவரும் காட்சிகள்.அதற்கு நன்றிக்கடனாக ஹீரோயின் உதட்டுடன் உதடு பதிப்பதில் காதலின் உச்சம்,கிளாமரின் சொச்சம்.
காதலின் தீவிரத்தை பார்வையாளனுக்கு உணர்த்த ஹீரோ தனது அப்பாவை டேய் எனக்கூப்பிடுவதும்,ஹீரோயின் தன் அம்மாவை கேவலமாக திட்டுவதும் ரொம்ப ஓவர் என்றாலும் கதையோடு சேர்ந்து பார்க்கையில் ஆடியன்சிடம் கை தட்டலை பெறுகிறது.
படத்துக்கு ஆதார நாதமாக இருக்கும் ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சீன் முடிந்ததும் அந்த ஜெயிலில் தோன்றும் பதட்டம் டாப்.வருஷம் 16 படத்தில் குஷ்பூவிடம் ரகளை செய்யும் கார்த்திக் அவர் குளிக்கும் பாத்ரூமில் மாட்டிக்கொண்டதும் அந்த குடும்பத்தில் ஏற்படும் பதட்டமான சூழ்நிலை போல்...இயக்குநர் இந்த காட்சியில் விளையாடி இருக்கிறார்.
தப்பித்த கைதியை 2 நாளில் பிடித்து வர வேண்டும் என திரைக்கதையில் டெம்ப்போ ஏற்றியதெல்லாம் சரிதான்,ஆனால் போலீஸ் ஏன் ஜீப்பிலோ,பைக்கிலோ போகாமல் பஸ்ஸில் போறாங்க?என்பதற்கு இயக்குநரிடம் பதில் இல்லை.(அப்போதான் கதை நகருமோ?)
பஸ் ஆக்சிடெண்ட்டில் 2 போலீஸ் ஆஃபீசரையும் ஹீரோ காப்பாற்றிய பிறகு அவர்கள் இடையே ஏற்படும் நல்லுறவை இன்னும் விஸ்தாரமாய் காண்பித்திருக்கலாம்.க்ளைமாக்சில் கடைசி 30 நிமிடங்கள் பதைபதைப்பு.எதிர்பார்க்க முடியத திருப்பம்.
காதலர்கள் சேருவார்களா,சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ் மெயிண்ட்டன் பண்ணுவதில் டைரக்டர் ரொம்ப தெளிவாக
இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்,காடு ,மலை,மழை என இவரது கேமரா புகுந்து விளையாடுகிறது.இசை இமான் சுமார்தான்.இன்னும் கலக்குவதற்கு சான்ஸ் உள்ள சப்ஜெக்ட்.
வசனகர்த்தாவின் பேனா இன் மைனா
1. என் பையன் 3 மாசமா ஸ்கூலுக்கு வர்லை,அதை நீயும் கவனிக்கலை,என்னய்யா வாத்தி நீ?அதுக்கு ஃபைனா இந்த 30 ரூபா நான் எடுத்துக்கறேன்,சீட்டாட வசதி...
2. ஸ்கூலுக்கு யாரோ ஒரு பொண்ணை புதுசா கூட்டிட்டு வந்து இருக்கியே?
சார்,இவ என் தோஸ்த்,இவளையும் ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க,
டேய்,இது என்ன சினிமா தியேட்டரா பாதில வந்து உட்கார...?
3. டே,எதுக்குடா அவளை இந்த வழில கூட்டிட்டு போறே?
ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு,அதான் குறுக்கு வழில கூட்டிட்டு போறேன்.
குறுக்கு வழில அந்த சிறுக்கியை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு ஏதாவது குசும்பு பண்ணீடாதே,என்னால பஞ்சாயத்து வந்து சாட்சி சொல்ல முடியாது.
4. புது செருப்புடா,ஏன் அடிச்சு வேஸ்ட் பண்றே,விடுடா,நாங்க எல்லாம் அடிகளை அல்லக்கைல வெச்சுட்டு போய்ட்டே இருப்போம்ல?
5. யோவ்,ஏட்டு இந்தாய்யா ஃபோனு,லைன்ல என் மனைவி,,ஏதாவது சொல்லி சமாளி.
உங்க ஆஃபீசரு அங்கே என்ன கழட்டீட்டு இருக்காரு..?
6. நாட்ல இருக்கற எந்தப்பெரிய மனுஷனுக்கும் வீட்ல மரியாதையே இல்லைனு தெரியுது. ( செம கைதட்டல் இந்த சீனுக்கு,பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க போல..)
7.மாப்ளே,எனக்கு ஒரு டவுட்டு,உங்கப்பன் உழைச்சு சொந்தமா ஒரு சட்டை கூட வாங்கி போட மாட்டான் போல? எல்லாமே ஓ ஸி தானா?
8.ஏய்,நம்ம பணியாரக்காரி முச்சந்திக்கு வந்துட்டா,ஓடி வாங்க எல்லாரும் வேடிக்கை பார்ப்போம்,அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்ன ஒரு சுகம்..
9.மாமா,சினிமாக்கள்ல வர்ற மாதிரி எல்லாரும் 3 நிமிஷப்பாட்டில முன்னுக்கு வர முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்?
10. சிக்கன் குழம்பு ருசிக்குமாம்,கோழி ஆகாதாம்,ஆத்தாக்காரி ஆகாதாம்,பொண்ணை மட்டும் லவ் பண்ணூவாராம்.
11. எல்லாரும் தீபாவளிக்கு யானை வெடி போடுவாங்க,நம்மளை இந்த யானை வெடி போட்டு துரத்துதே,...
12. ஏட்டு கைதியிடம் - டேய்,பீடியை எடுடா..
என்னமோ குடுத்து வெச்சிருந்த மாதிரி கேக்குறீங்க.?
13. நீ எதுக்கு அவங்களுக்கு ஹெல்ப் பண்றே?
அடுத்தவங்க காதலுக்கு ஹெல்ப் பண்ணுனா தன் காதல் தானே வளரும்.
14. டேய் டேய் எஸ்கார்டு டெய்லி பேட்டாவே ரூ 100 தான்,மினரல் வாட்டர் எல்லாம் ஆர்டர் பண்ணாதே டா.
15. ஹலோ..என் செல்ல பொண்டாட்டியா..?என்னடா கண்ணு,, நான் ஊருக்கு போயிட்டா உன்னை 30 பேர் பாக்க வர்றாங்களாமே,, அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கடா..என்ன காலிங்க் பெல் சத்தம் ஃபோன் ல கேக்குது,,மணி என்ன>9 ஓக்கே அப்போ ஆனந்த்தா தான் இருக்கும்,நீ யார் கூட வேணாலும் சுத்து,என்னை மட்டும் மறந்துடாதே செல்லம்..
16. என்ன பாக்குறே,என் மனைவி ஒரு அநாதை,யாராவது அக்கான்னு கூப்பிட்டாலே கண் கலங்கிடுவா,நீ அம்மான்னு கூப்பிட்டியா,அழுதுட்டா.
நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் ஏட்டாக வரும் சுப்பையா.குணச்சித்திர நடிப்பிலும் சரி ,காமெடி கமெண்ட்டிலும் சரி கலக்குகிறார்.போலீஸ் ஆஃபீசரின் மனைவி பின்னிட்டார்,ஹீரோயினின் அம்மா கேரக்டர் கச்சிதமான நடிப்பு,
ஹீரோயின் சமைஞ்சதும் (அது என்ன தமிழ் சினிமாவில் மட்டும் ஹீரோயின் 19 வயசு ஆனாத்தான் சமைகிறார்?) பக்கத்து வீட்டு லேடி “பார்க்க ராசாத்தி மாதிரி இருக்கே,எந்த மகாராசன் உன்னை தூக்கிட்டு போறானோ என அங்களாய்த்ததும் ஹீரோ கோபப்ப்ட்டு இந்த சுருளி மகராசந்தான் என பொறுமுவதும் காமெடிக்கு காமெடி,காதலின் ஆழத்தை உணர்த்துவதற்கும் யூஸ்.
மாமோய் நீங்க எங்கே இருக்கீங்க என்ற ஒரே ஒரு ரிங்க் டோனை வைத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாய் டைரக்டர் சொல்லி இருக்கும் காமெடி,சூப்ப்ர்.கை தட்டலை அள்ளிக்கொள்கிறது அந்தக்காட்சிகள்.
மணடை ஓடு மாணிக்கமாக வரும் பொடியனின் பாத்திரப்படைப்பும் ,நடிப்பும் அவனது தெனாவெட்டான வசன உச்சரிப்பும் டாப் கிளாஸ்,.
உயர் அதிகாரியின் உத்தரவுக்க்காக சொந்த பந்தங்களை பகைத்துகொண்டு வேண்டா வெறுப்புடன் பணி ஆற்றும் அதிகாரிகளின் மன ஓட்டங்களை இவ்வளவு கவி நயத்தோடு சொன்னதற்கு ஒரு சபாஷ்.
நீயும் நானும்,வானும் மண்ணும் பாடல் காட்சி கண்ணூக்கு குளுமை,
ஃபாரீன் ஜோடி காதலில் திளைப்பதை வேடிக்கை பார்க்கும் அனாகா அதை தன் கண்களாலேயே ஏக்கங்களாக வெளிப்படுத்து வது மார்வலஸ்.
ஹோட்டலில் அனாகா தண்ணீர் குடித்ததும் லேசாக ஹீரோவின் கன்னத்தில் அந்த தண்ணீரின் துளி பட்டு தெறித்ததும் ,அதை ஹீரோ ரசிக்கிறார் என்பதை உணர்ந்து வெட்கப்படும் அனாகா நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
இறுக்கமாக படம் போய்க்கொண்டிருக்கும்போது சிங்கி சிங்கி ஜிமிக்கி போட்டு பாட்டு செம கலக்கல் நாட்டுப்புறப்பாட்டு.டப்பாங்குத்து+நாட்டுப்புற இசை மனசை மெஸ்மரிஸ் பண்ணுகிறது.
ஆனால் அந்தப்பாட்டு முடிந்த கொஞ்ச நேரத்திலேயே வரும் கையை பிடி நெஞ்சை தொடு பாட்டு தேவையே இல்லை,படம் க்ளைமாக்சை நெருங்கும்போது எதற்கு மெலோடிப்பாட்டு?
பஸ் பிரயாணங்களில் சரளமாக வந்து போகும் காமெடி வசனங்கள் சூப்பர்.
இன்ஸ்பெக்டர் ஏன் கோபமா இருக்காரு தெரியுமா.? அவர் உக்காந்து இருக்கறது அக்னி மூலை.கண்டக்டர் ஏன் சில்லறை நிறையா வெச்சிருக்கார் தெரியுமா அவர் இருக்கறது குபேர மூலை..
இயக்குநருக்கு சில யோசனைகள் -
1.படத்தின் விளம்பரங்களில் இது ஒரு காதல் படம் என காண்பிக்கப்படுவதை மாற்றி ஆக்ஷன் திரில்லர் போல் ட்ரைலரை மாற்றலாம்.
2.கடைசி பாட்டு,மற்றும் இடைவேளைக்கு பின் வரும் காட்சிகள் சிலவற்றில் கத்திரி போட்டு இன்னும் படத்தின் விறு விறுப்பை கூட்டலாம்.
3.க்ளைமாக்சில் போலீஸ் ஆஃபீசரின் மனைவியை அவரே கொலை செய்வது தேவை இல்லாதது.மனைவியின் கோணத்தில் பார்த்தால் அவர் அந்த அளவுக்கு தப்பு ஏதும் செய்யவில்லை.மாற்றலாம்
படத்தின் க்ளைமாக்சில் கருத்து வேற்றுமை உண்டு.சோக முடிவு வலிய திணிக்கப்பட்டது போல் இல்லை இருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.படம் பார்த்தவர்கள் மனதை 10 நாட்களாவது பாதிக்கும் படம்.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று
ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள் (பொங்கல் வரை)
பி செண்ட்டர்களில் 50 நாட்கள்
சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.
57 comments:
ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்க செந்தில்! நானும் பார்த்தேன், நல்ல படம்தான் ஆனா ரொம்ப இம்ப்ரெஸ் ஆகலை...நீங்க சொன்னது மாதிரி தீபாவளிக்கு வந்த படங்களில் இது ஓகே.
ஏங்க ஒவ்வொரு படத்திலயும் வசனம் எப்படி இவ்வளவு மனப்பாடம் பண்றீங்க?
வடை ஜஸ்ட் மிஸ்.
ஒரு படத்தையும் விடல போல..
ஆமா வீட்டுக்கார அம்மாவையும்
கூட்டிகிட்டு தானே போனீங்க..?!!
படம் சூப்பர் செந்தில்..! எந்த தியேட்டர்ல படம் பாத்தீங்க ..? இன்னொரு வாட்டி பாக்கணும் ..!
படம் பாக்கும் போது லேப்டாப் கொண்டு போனீங்களா ..? வரிக்கு வரி கரெக்ட்டா இருக்கு செந்தில் .. ?
தமிழ் மனம் தவிர மூன்றிலும் ஒட்டு போட்டாச்சு ... !
வரிகளை எழுதுவதான் உங்கள் சிறப்பம்சம்!
/////ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.////
ஆஹா என்ன ஒரு வர்ணிப்பு... தாங்க முடியலடா சாமி..
சிபிஎஸ் நீங்க போன் கொண்டு போய் தானே இம்புட்டு வசனமும் ஒலிப்பதிவு செய்கிறிர்கள்...
சகோதரா முதலில் ஒரு மன்னிப்பு.. முன் போல் அடிக்கடி தளம் நுழைந்து கருத்திட முடிவதில்லை காரணம் எனது இணைய வேகப் பிரச்சனை அத்துடன் நேரப் பிரச்சனை.. ஆனால் ரிடரில் முழுதும் வாசிக்க முடிகிறது.. இருந்தும் வாக்கில் குறை வைக்க மாட்டேன் இன்ட்லியில் போய் அனைத்து நண்பருக்கும் போட்டுத் தான் வருகிறேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்...
நல்ல ரசனையான விமர்சனம் நண்பரே...
முதல்பாதி காதல் காட்சிகள்தான் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை..
ஹீரோயின் கண்பட்டு தொட்டாச்சிணுங்கிசுருங்குவதும், விரிவதும் எனக்குப் பிடித்திருந்தது :)
// மாமா,சினிமாக்கள்ல வர்ற மாதிரி எல்லாரும் 3 நிமிஷப்பாட்டில முன்னுக்கு வர முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்? //
நான் மிகவும் ரசித்த வசனம்...
பதிவுலகில் வெளிவந்த மிகச்சிறந்த மைனா விமர்சனம் என்று சொல்லலாம்...
Very nice review senthil....
சிவா said...
ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்க செந்தில்! நானும் பார்த்தேன், நல்ல படம்தான் ஆனா ரொம்ப இம்ப்ரெஸ் ஆகலை...நீங்க சொன்னது மாதிரி தீபாவளிக்கு வந்த படங்களில் இது ஓகே.
நன்றி சிவா.நான் நிறையா குப்பை படம் பாக்கறதால ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையா தெரிஞ்சிருக்கும்.நீங்க நல்ல படங்களா செலக்ட் பண்ணி பார்ப்பீங்க போல,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா
அன்பரசன் said...
ஏங்க ஒவ்வொரு படத்திலயும் வசனம் எப்படி இவ்வளவு மனப்பாடம் பண்றீங்க?
ஹி ஹி ஹி ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு ..... \இப்படி படிச்சுதான்
அன்பரசன் said...
வடை ஜஸ்ட் மிஸ்.
அடடா,2 நிமிஷ கேப்ல வட போச்சே..
வெங்கட் said...
ஒரு படத்தையும் விடல போல..
ஆமா வீட்டுக்கார அம்மாவையும்
கூட்டிகிட்டு தானே போனீங்க..?!!
ஹி ஹி ஹி இல்லை,எப்பவும் தனியாதான்.அதுவுமில்லாம 18 வயசு பையனுக்கு எப்படி அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைப்பாங்க?
Blogger ஈரோடு தங்கதுரை said...
படம் சூப்பர் செந்தில்..! எந்த தியேட்டர்ல படம் பாத்தீங்க ..? இன்னொரு வாட்டி பாக்கணும் ..!
அபிராமி 70 எம் எம் ஏ சி டி டி எஸ்
Delete
Blogger ஈரோடு தங்கதுரை said...
படம் பாக்கும் போது லேப்டாப் கொண்டு போனீங்களா ..? வரிக்கு வரி கரெக்ட்டா இருக்கு செந்தில் .. ?
ஹி ஹி ஹி
ஈரோடு தங்கதுரை said...
தமிழ் மனம் தவிர மூன்றிலும் ஒட்டு போட்டாச்சு ... !
ரொம்ப நன்றி துரை
Blogger எஸ்.கே said...
வரிகளை எழுதுவதான் உங்கள் சிறப்பம்சம்!
நன்றி சார்
Delete
Blogger ம.தி.சுதா said...
/////ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.////
ஆஹா என்ன ஒரு வர்ணிப்பு... தாங்க முடியலடா சாமி..
சிபிஎஸ் நீங்க போன் கொண்டு போய் தானே இம்புட்டு வசனமும் ஒலிப்பதிவு செய்கிறிர்கள்...
ஓஹோ இப்படி ஒரு ஷார்ட் கட் ரூட் இருக்கா? நஹி நஹி நான் அப்படி பண்ண்றதில்லை
Delete
Blogger ம.தி.சுதா said...
சகோதரா முதலில் ஒரு மன்னிப்பு.. முன் போல் அடிக்கடி தளம் நுழைந்து கருத்திட முடிவதில்லை காரணம் எனது இணைய வேகப் பிரச்சனை அத்துடன் நேரப் பிரச்சனை.. ஆனால் ரிடரில் முழுதும் வாசிக்க முடிகிறது.. இருந்தும் வாக்கில் குறை வைக்க மாட்டேன் இன்ட்லியில் போய் அனைத்து நண்பருக்கும் போட்டுத் தான் வருகிறேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்...
சுதா,நான் என்ன அரசியல் வாதியா?ஓட்டுக்கு அலைய.அங்கீகாரம் ஒன்றே [போதும்,அதுவே ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் சிறந்த பரிசு.நீங்க என் படைப்பை வாசித்தாலே போதும்
Delete
Blogger தமிழ்ப்பறவை said...
நல்ல ரசனையான விமர்சனம் நண்பரே...
முதல்பாதி காதல் காட்சிகள்தான் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை..
ஹீரோயின் கண்பட்டு தொட்டாச்சிணுங்கிசுருங்குவதும், விரிவதும் எனக்குப் பிடித்திருந்தது :)
கரெக்ட் சார்,இந்தப்படத்தை காதல் கதையாக எடுக்காமல் ஆக்ஷன் திரில்லராக எடுத்திருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும்.
Delete
Blogger philosophy prabhakaran said...
// மாமா,சினிமாக்கள்ல வர்ற மாதிரி எல்லாரும் 3 நிமிஷப்பாட்டில முன்னுக்கு வர முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்? //
நான் மிகவும் ரசித்த வசனம்...
பதிவுலகில் வெளிவந்த மிகச்சிறந்த மைனா விமர்சனம் என்று சொல்லலாம்...
மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி பிரபா.
வழிப்போக்கன் - யோகேஷ் said...
Very nice review senthil...
நன்றி யோகேஷ்
எல்ல படமும் பார்த்தாச்ச இன்னும் எதாவது பாக்கி இருக்க மக்கா .........சரி சீக்கிரம் அப்படியே DVD அனுப்பு மக்கா அல்லது லிங்க் கொடு
பாபு இன்னும் வல்லக்கோட்டை பாக்கி இருக்கு
G....o.....o....d R....e....v....i....e....w.....!
நன்றி சித்ரா.
இப்படி எல்லாரும் விமர்சனத்தை உடனே எழுதிட்டீங்கனா அப்பறம் எப்படித்தான் போய் படத்த பாக்குறது .முதல தியட்டர் சங்கத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லணும்
நம்ம செந்திலே சர்டிவிகெட் கொடுத்த பிறகு படத்தை நம்பி பார்க்கலாம்.
வணக்கம் பாஸ்
தீபாவளி ரிலீஸ் எல்லாம் பார்த்தாச்சு போல பாஸ்.......
அப்புறம் பாஸ் கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க
படம் பார்க்கும்போது டயலாக்க எழுதி இருப்பிங்க போலே. தியேட்டர் இருட்டா இருக்குமே எப்படி எழுதுனிங்க ?
நான் இன்னும் பார்க்கலை அண்ணா .., ஆனா படம் பார்த்தவங்க எல்லோருமே நல்லா இருக்கு அப்படின்னு தான் சொல்லுறாங்க .. உங்க விமர்சனமும் படம் பார்க்க தோன்றுகிறது ..பாக்குறேன் ..
விமர்சனம் நல்லாருக்கு, அது எப்புடிங்க வசனடத்த இப்பிடி மொட்ட உரு போட்டுடுறீங்க?
///ஹீரோயின் சிந்து சமவெளி அனாகா (இப்போ இயற்பெயரான அமலாவாம்)
விழிகளை வேல்களாக்கி காண்போர் மனதில் கவிதையாய் பாயும் திறன் மிக்கவர்.ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.கண் அசைவில் காளையரை கவிழ்க்கும் கவுதாரி.(போதுண்டா நாதாரி ,நிறுத்து உன் வர்ணனையை,சகிக்கலை,)///
ரொம்பத்தான் பாதிச்சிருச்சு போல?
///பார்வையாலேயே பார்வையாளர் மனதை கொல்கிறார்.சிந்து சமவெளி மருமகள் கேரக்டர் நம் மனதை விட்டு அகலாமல் இருப்பது அவர் தவறல்ல.இந்தப்படத்தில் மேக்கப்பே இல்லை.ஆனாலும் அழகுதான்.///
நீங்க சொன்னா சரிதான்...!
அழகுபபதுமை அமலா வாழ்க! அடுத்து அமலாவோட ஜில்லு படங்கள வெச்சி ஒரு தனிப் பதிவு போட்ருங்க!
படமே பாத்த எபக்ட்டு
எனக்கு தெரிஞ்சு படத்தை எல்லாரும் சிலாகிச்சு சொல்றாங்க. கண்டிப்பா பார்க்கணும். (அமலாவுக்காகவாவது....)
நா.மணிவண்ணன் said...
இப்படி எல்லாரும் விமர்சனத்தை உடனே எழுதிட்டீங்கனா அப்பறம் எப்படித்தான் போய் படத்த பாக்குறது .முதல தியட்டர் சங்கத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லணும்
ஆஹா,மணி கோபமா இருக்கார் போல.அப்பீட் ஆகிடு
Delete
Blogger சசிகுமார் said...
நம்ம செந்திலே சர்டிவிகெட் கொடுத்த பிறகு படத்தை நம்பி பார்க்கலாம்.
ஏன் சசி நக்கல் அடிக்கறீங்க,நான் என்ன சென்சார் ஆஃபீசரா?
Blogger dineshkumar said...
வணக்கம் பாஸ்
தீபாவளி ரிலீஸ் எல்லாம் பார்த்தாச்சு போல பாஸ்.......
அப்புறம் பாஸ் கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க
வந்துடுவோம்
Delete
Blogger THOPPITHOPPI said...
படம் பார்க்கும்போது டயலாக்க எழுதி இருப்பிங்க போலே. தியேட்டர் இருட்டா இருக்குமே எப்படி எழுதுனிங்க ?
ஹி ஹி ஹி
Delete
Blogger ப.செல்வக்குமார் said...
நான் இன்னும் பார்க்கலை அண்ணா .., ஆனா படம் பார்த்தவங்க எல்லோருமே நல்லா இருக்கு அப்படின்னு தான் சொல்லுறாங்க .. உங்க விமர்சனமும் படம் பார்க்க தோன்றுகிறது ..பாக்குறேன்
பாருங்க செல்வா
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
விமர்சனம் நல்லாருக்கு, அது எப்புடிங்க வசனடத்த இப்பிடி மொட்ட உரு போட்டுடுறீங்க?
ஹி ஹி ஹி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஹீரோயின் சிந்து சமவெளி அனாகா (இப்போ இயற்பெயரான அமலாவாம்)
விழிகளை வேல்களாக்கி காண்போர் மனதில் கவிதையாய் பாயும் திறன் மிக்கவர்.ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.கண் அசைவில் காளையரை கவிழ்க்கும் கவுதாரி.(போதுண்டா நாதாரி ,நிறுத்து உன் வர்ணனையை,சகிக்கலை,)///
ரொம்பத்தான் பாதிச்சிருச்சு போல?
லைட்டா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பார்வையாலேயே பார்வையாளர் மனதை கொல்கிறார்.சிந்து சமவெளி மருமகள் கேரக்டர் நம் மனதை விட்டு அகலாமல் இருப்பது அவர் தவறல்ல.இந்தப்படத்தில் மேக்கப்பே இல்லை.ஆனாலும் அழகுதான்.///
நீங்க சொன்னா சரிதான்...!
ஓஹோ அப்போ நீங்க சொன்னா தப்பா?
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
அழகுபபதுமை அமலா வாழ்க! அடுத்து அமலாவோட ஜில்லு படங்கள வெச்சி ஒரு தனிப் பதிவு போட்ருங்க!
அட இந்த ஐடியா கூட நலாருக்கே
மங்குனி அமைச்சர் said...
படமே பாத்த எபக்ட்டு
நன்றி அமைச்சரே
Delete
Blogger கவிதை காதலன் said...
எனக்கு தெரிஞ்சு படத்தை எல்லாரும் சிலாகிச்சு சொல்றாங்க. கண்டிப்பா பார்க்கணும். (அமலாவுக்காகவாவது....)
அனாகா ரசிகர் மன்ற தலைவர் மணீ வாழ்க
//நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் ஏட்டாக வரும் சுப்பையா.//அது சுப்பையா இல்லை தம்பி ராமையா!.
//நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் ஏட்டாக வரும் சுப்பையா.//அது சுப்பையா இல்லை தம்பி ராமையா!.
நன்றி சார்
ஏதோ பெயர் மாறு தோற்றப்பிழை
பழைய தோசை மாவில் வெங்காயம் போட்டு சுற்றுக்கானுங்க!!! வேற என்னத்த சொல்ல!!, ஆனால் படத்தை விட உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு!!!!
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.
http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php
Post a Comment