1 .குடிசை மக்களுக்காக தலைவர் என்ன செஞ்சிருக்கார்?
’குடி’ மக்களுக்குத்தான் ஏகப்பட்ட சலுகைகள் அறிவிச்சிருக்காரே,போதாதா?
-------------------------------
2 .தலைவரே,ரூ 400 கோடி செலவுல பிளட் பேங்க் ஆரம்பிக்கப்போறாங்களாம்.
அப்போ லோன் கேட்டா தருவாங்களா?
-----------------------------------
3. தலைவரே!அரசியல்வாதிகள்ல 3 பேருக்கு ஒரு ஆள் ஊழல்வாதியாம்,ஒரு புள்ளி விபரம் சொல்லுது.
அப்போ நம்ம கட்சில 2 துரோகிகள் இருக்காங்களா?
-------------------------------
4. நிருபர் - மேடம்,இந்தப்படத்துல உங்க டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப கம்மி.
நடிகை - இவ்வளவுதானா?டிரஸ்ஸே ரொம்பக்கம்மியா போட்ட மாதிரி ஏன் ஃபீல் பண்றீங்க?
-----------------------------------
5. முன்னே மாதிரி ஈரோடு அமைதியான நகரமா இருக்கறது இனி டவுட்தான்.
எப்படி சொல்றே?
புது கலெக்டர் பேரு சவுண்டய்யாவாம்.
----------------------------------
6. மேனேஜர் சார்,3 மணி நேரம் பர்மிஷன் குடுங்க.
எதுக்கு?
டைட்டானிக்ல பாட்டியா நடிச்ச பாட்டி இறந்துட்டாங்களாம்,டைட்டானிக் போய் மவுன அஞ்சலி செலுத்தனும்
.
-----------------------------
7. டைரக்டர் சார்,உங்க படத்துல கிராஃபிக்ஸ் காட்சிகள் சின்னப்பிள்ளத்தனமா இருக்கே,ஏன்?
அது வந்து.... ம்..,சின்னப்பசங்க கூட ரசிக்கட்டும்னுதான்.
--------------------------
8. ஜோசியரே,எனக்கு டைம் சரி இல்லை,கல்யாணத்துக்குப்பிறகு எனக்கு டைம் எப்படினு ஜாதகம் பார்த்து சொல்லுங்க.
பாக்கவே தேவை இல்லை,மேரேஜ் ஆனாலே எல்லா ஆண்களுக்கும் கெட்ட நேரம்தான்.
---------------------------------
.
9. அயோத்தி தீர்ப்பு டைம்ல மாயவரம்,அயனாவரம் இந்த ஏரியாக்கள்ல மட்டும் போலீஸ் பந்தோபஸ்து ஜாஸ்தியா இருக்கே,ஏன்?
கலவரம்க்கு பக்கமா இருக்கே?(RELATED)
-------------------------------
10. குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துட்டேன்.
ஏன்?
மல்லாக்கப்படுத்தா மச்சினி ஞாபகம் வருது
.
----------------------------
11.தலைவர் சிறந்த இந்தியக்குடிமகனா?
ஃபாரீன் சரக்கும் அடிப்பாரு.அதனால இண்ட்டர்நேஷனல் குடிமகன்னு சொல்லலாம்.
------------------------------
12. டெய்லி தண்ணி அடிச்சாதான் எனக்கு தூக்கமே வருது,உனக்கு?
போரிங்க் பைப்ல (அடி பம்பு) தண்ணி அடிச்சுக்குடுத்தாதான் மனைவிட்ட இருந்து எனக்கு சாப்பாடே வருது.
-----------------------------
13. தண்ணி அடிச்சா எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே ,அது ஏன்?
அது தெரியல,எனக்கு தண்ணி அடிச்ச பிறகு எதுவுமே தெரியறதில்லை,ஃபிளாட் ஆகிடறேன்.
--------------------------------
14.திருப்பூர் குமரனுக்கும்,நம்ம தலைவருக்கும் என்ன வித்யாசம்?
அவர் கொடி காத்த குமரன்,இவரு குடி காத்த தலைவரு.
-------------------------------
15.என்னை 3 ஃபிகருங்க லவ் பண்ணுதுடா மாப்ள.
பெரிய அயோத்தி லாண்ட் பிராப்ளம்.3 பேருக்கும் டிவைட் பண்ணி தரச்சொல்வாங்கனு நின்ச்சியா?
-----------------------------
16. தலைவரே,அயோத்தி தீர்ப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?
மூணா பிரிச்சதுல ஒரு பங்கை பொறம்போக்கு நிலமா அறிவிச்சிருந்தா நாமலாவது வளைச்சுப்போட்டிருக்கலாம்.
-------------------------
17. காதல்,போலீஸ் என்ன வித்யாசம்?
அது சப்ப மேட்டரு,இது தொப்ப மேட்டரு.
------------------------------
18 தலைவர் சரியான கஞ்சனா இருக்காரே?
ஏன்?
தண்ணி அடிக்கக்கூப்பிட்டா சரக்கு செலவு உன்னுது,முறுக்கு செலவு மட்டும் என்னுதுங்கறாரே?
----------------------------------
12 comments:
ஜோக்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு... சூப்பர் ...
ore thamaasu ponkal
ஜோக்ஸ் ஓகே அது என்ன ஒரே பதிவ 3 முறை போட்ருக்கீங்க
வெறும்பய said...
ஜோக்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு... சூப்பர் ...
October 2, 2010 1:42 PM
thanks verumpaya
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ore thamaasu ponkal
vaayyaa sirippuppooliisu,een late
Delete
Blogger karthik said...
ஜோக்ஸ் ஓகே அது என்ன ஒரே பதிவ 3 முறை போட்ருக்கீங்க
hi hi tecknikkal fault
thanks neechalkaaran,
thanks ennadhu naanu yaaraa?
thanx s k
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
நன்றி டெனிம்
எல்லாம் நல்லா இருக்கு! ஆனா தலைப்பில் இருக்கும் ட்விட்டர் பத்தி எந்த ஜோக்குமே இல்லே??
Post a Comment