பதிலடி - கதையும்,சூழ்நிலையும் அனுமதித்தால் மட்டுமே ஹீரோவுக்கான பில்டப் தர முடியும்.பாட்ஷா,படையப்பா,மன்னன் மாதிரி சவால் விடும் ஆக்ஷன் கதை என்றால் ஓப்பனிங் ஃபைட் அல்லது பில்டப் இண்ட்ரடக்ஷனுக்கு சான்ஸ் உண்டு.ஏன் கமலின் லேட்டஸ்ட் படமான உன்னைப்போல் ஒருவனில் சர்வ சாமான்யனாக மார்க்கட் போகும் சராசரி மனிதன் போல் அறிமுகம் ஆகவில்லையா?அன்பே சிவம்,மகாநதி,உன்னைப்போல் ஒருவன்,ஹேராம் உட்பட பல படங்களில் ஹீரோ சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?அவ்வளவு ஏன்?ஆக்ஷன் கிங் அர்ஜூன் வசந்த் இயக்கிய வேதம் படத்தில்,விஜய்காந்த் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படத்தில் சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?எப்படி அறிமுகம் ஆகறார்ங்கறது முக்கியம் இல்லை.
சர்ச்சை 2 -ரோபோ கேரக்டரில் ரஜினியின் நடிப்பில் லேசாக செயற்கை இழை தட்டுகிறது.காமெடி இயல்பாக வரவில்லை.கமல் அந்த கேரக்டரில் இதை விட சிறப்பாக நடித்திருக்க முடியும்.
பதிலடி - யார் வேணாம்னு தடுத்தது?வந்த வாய்ப்பை கோட்டை விட்டுட்டு இப்போ லபோ திபோனு அடிச்சுக்கிட்டு என்ன பிரயோஜனம்?சயிண்ட்டிஸ்ட் கேரக்டரில் கமல் நடிச்சிருந்தா இந்தளவு மாஸ் கிடைச்சிருக்குமா?ஓப்பனிங்க் இவ்வளவு பிரம்மாண்டமா வந்திருக்குமா?
சர்ச்சை 3 - கருணாஸ்,சந்தானம் இருவருக்கும் சரியான வாய்ப்பு தரப்படவில்லை.சும்மா வந்துட்டு போறாங்க,இன்னும் காமெடியில் அவங்களை யூஸ் பண்ணி இருக்கலாம்.
பதிலடி - படத்தின் காமெடி போர்ஷனை ரோபோ ரஜினி (சிட்டி) டாமினேட் செய்வதால் அப்படி தோன்றி இருக்கலாம்.ஃபுட்டேஜ் பிராப்ளமாகக்கூட இருக்கலாம்.(அதாவது படத்தின் நீளம் கருதி காமெடி போர்ஷனை குறைத்தல்).இதே பிரச்சனை சிம்புவின் மன்மதன் படத்தின் போதும் வந்தது,கவுண்டமணியின் காமெடிகாட்சிகள் பல வெட்டி எறியப்பட்டன.பொதுவாக ஒரு படத்தில் நீளம் அதிகமாக இருந்தால் அதற்கு முதலில் பலி ஆவது காமெடி காட்சிகளே.
சர்ச்சை 4 - ஐஸ்வர்யாராய்க்காக காத்திருந்ததால்தான் இந்தப்படம் இவ்வளவு தாமதமாக வந்தது.ராவணன் பட ஷூட்டிங்கில் அவர் இருந்ததால் கால்ஷீட் பிராப்ளம் வந்தது.ஒரு சூப்பர்ஸ்டார் படம் ஹீரோயினுக்காக வெயிட் பண்ணலாமா?ஏன் கோலிவுட்டில் வேறு நடிகைகளே இல்லையா?
பதிலடி - ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர வேண்டும் (படத்தில்தான்)என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை.பல படங்களில் அதற்கான முயற்சி செய்யப்பட்டது.ஆனால் இப்போதுதான் கை கூடி வந்தது.தசாவதாரம் படத்தில் அசின்தான் கமலுக்கு ஜோடி.ஆனால் மும்பை மார்க்கெட்டுக்காக கமல் மல்லிகா ஷெராவத்தை ஊறுகாய் ஆக்கவில்லையா?அவருக்காக 2 மாதங்கள் காத்திருந்து ஷீட் பண்ணவில்லையா?விக்ரம் படத்தில் அம்பிகா,லிஸி என 2 ஜோடி இருந்தும் டிம்பிள் கபாடியாவுக்காக 3 மாதங்கள் வீணாக்கவில்லையா?ஹேராம் படத்தில் ராணி முகர்ஜி கால்ஷீட்டுக்காக காத்திருக்கவில்லையா?
சர்ச்சை 5 - படத்தில் கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார்தான்.ஏதோ கார்ட்டூன் சேனல் பார்ப்பது மாதிரி இருக்கே தவிர சிலாகிக்க முடியவில்லையே?ராமநாராயணன் பட காட்சிகள் போல்,தான் இருக்கே தவிர ஷங்கரின் பிரம்மாண்டம் இல்லையே ,ஏன்?
பதிலடி - ஆளவந்தான் படத்தில் மணிஷா கொய்ராலா அடிபடுவது மாதிரி சீன் 15 நிமிடம் கார்ட்டூனாகவே காண்பிக்கப்படவில்லையா?அப்போது ரசிகர்களும் ,பத்திரிக்கைகளும் எள்ளி நகையாடவில்லையா?அதற்கு ஒண்ணும் இது மோசமில்லை.தசாவதாரம் படத்தில் கமலின் பல கேரக்டர்களுக்கான மேக்கப் ஏதோ மாறுவேஷப்போட்டிக்குத்தயார் ஆவது போல் அன் இயற்கையாக (நன்றி - சுஜாதாவின் வார்த்தை உபயோகம்) இருந்ததே?அந்தளவு மோசமில்லை.
சர்ச்சை 6 - படத்தின் டிக்கட் ரூ 300 என நிர்ணயித்திருக்காங்களே?இது ஓவரா இல்லை?ரசிகனை ஏமாத்தற வேலை இல்லையா?
பதிலடி -நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?வீடு வீடா வந்து கையைப்பிடிச்சு இழுத்து இந்தப்படத்தை பார்த்தே ஆகனும்னு சொல்லலையே.ரேட் அதிகம்னு நினைக்கறவஙக ஏம்ப்பா வர்றிங்க?கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.மார்க்கெட் இருக்கு,ரேட் ஃபிக்ஸ் பண்றான்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளிக்கொள்.
சர்ச்சை 7 -படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங்க்.படம் பார்த்தவங்க ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லைனு சொல்றாங்களே?
பதிலடி - இதே ஷங்கரின் சிவாஜி படத்துல ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் வைக்கலையா?மொட்டை பாஸ் ஸ்டைல்,மெயின் ஹீரோ ஸ்டைல்னு வெரைட்டியா கலக்கலியா?இதுல கதை அனுமதிக்கலை.ஒரு சயிண்டிஸ்ட் என்ன பஞ்ச் டயலாக் பேசிவிட முடியும்?அப்படியே பேசினாலும் அது நகைப்புக்கு இடம் ஆகி விடாதா?அதையும் தாண்டி ரோபோ ஒரு இடத்தில் “ரோபோ” என ஸ்டைலாக சொல்வது போதுமே?
மகாநதி படத்தில் ஏன் பிரேக் டான்ஸ் வைக்கலைனு கேக்கமுடியுமா?
சர்ச்சை 8 - படத்தில் ரஜினியின் டாமினேஷன் அதிகமா இருக்கே?
சந்திரமுகி படத்தில் ஜோதிகா,வடிவேல் 2 கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லையா?அதில் ரஜினி அடக்கிதானே வாசித்தார்?வேட்டையன் கேரக்டரில் 10 நிமிஷத்தில் கலக்கவில்லையா?கதை,திரைக்கதைக்குத்தகுந்தாற்போலத்தான் எல்லாம்.
ஏன் இதே கமல் குருதிப்புனல் படத்தில் அர்ஜூனை டம்மி பண்ணவில்லையா?வெற்றி விழா படத்தில் பிரபுவை இருந்த இடம் தெரியாமல் ஆக்கவில்லையா?அன்பே சிவம் படத்தில் மட்டுமே மாதவனுக்கு சரி சம கேரக்டர் குடுத்தார்,மற்றபடி கடந்த 15 வருடங்களில் கமல் தனக்கு நிகரான ஒரு கேரக்டரை யாருக்கும் தரவில்லை.தான் மட்டுமே தனித்து தெரிய வேண்டும் என நினைத்தார்.
ஆனால் ரஜினி மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு தன்னை விட அதிக வாய்ப்பு குடுத்தார்,அவர் கையால் அறை கூட வாங்கினார்.படையப்பா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனுக்கு வலிமையான கேரக்டர் தந்தார்.இந்தப்படத்தில் 2 கேரக்டர் என்பதால் பார்வையாளனுக்கு ஆக்கிரமிப்பு போல் ஒரு மாயத்தோற்றம் தெரிகிறது,அவ்வளவுதான்..
டிஸ்கி -இந்தப்பதிவைப்படித்த அனைவருக்கும் ஒரு தகவல்.யாரும் இப்படி பேசிக்கொள்ளவில்லை,நானே கமல் ரசிகனாக் இருந்து எனக்குத்தோன்றிய கேள்விகளை எழுப்பி ,ரஜினி ரசிகனாக இருந்து பதில் அளித்துக்கொண்டேன்.நான் உண்மையில் கமல் ரசிகனும் அல்ல,ரஜினி ரசிகனும் அல்ல,சினிமா ரசிகன்,நல்ல சினிமா அது யார் நடித்தாலும் பார்ப்பவன்.
டிஸ்கி 2 - கோபத்தில் மைனஸ் ஓட்டு போடும் மைனாரிட்டி மைனர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தேடி குழம்ப வேண்டாம்.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்.
63 comments:
ஹாஹா கலக்கலா இருக்கு
இதுவே விமர்சனம் மாதிரிதான் இருக்கு...கமல் ரசிகர்கள் சுருண்டு படுத்துட்டாய்ங்க தலைவரே..மருத நாயகம் வராத சோகம் அவங்களுக்கு...கோமணம் கட்டிய கமலை பார்க்க ஆர்வமாய் இருந்தாய்ங்க..பாவம்
படத்தின் டிக்கட் ரூ 300 என நிர்ணயித்திருக்காங்களே?இது ஓவரா இல்லை?ரசிகனை ஏமாத்தற வேலை இல்லையா?
பதிலடி -நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?//
இது ஒன்லி ரைனி ரசிகர்களுக்கான ஷோ ..ரஜினி ரசிகர்கள் பார்த்தாலே படம் செம ஹிட் ஆகி விடும்..கமல் ரசிகர்கள் ஒரு மாதம் கழித்துதான் வருவார்கள்..குழந்தைகள் கட்டாயப்படுத்தினால் மட்டுமே 15 நாளைக்கு பிறகு வருவார்கள்...
படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங்க்.படம் பார்த்தவங்க ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லைனு சொல்றாங்களே//
ரஜினி இருந்தாலே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான்
கோபத்தில் மைனஸ் ஓட்டு போடும் மைனாரிட்டி மைனர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தேடி குழம்ப வேண்டாம்.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்//
செம கடுப்புல இருப்பீங்க போல..நான் ரெண்டுமே போடல...சந்தோசமா..ஹிஹிஹி
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹாஹா கலக்கலா இருக்கு
தாங்க்ஸ்பா
.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்//
எனக்கென்னவோ ஹிட்ஸ் அதிகமாக்குற வேலை போல தெரியுதே..பதிவின் டைட்டிலை அழுத்துனா மைனஸ் வோட்டு எப்படி விழும்?
ஆர்.கே.சதீஷ்குமார் said...
இதுவே விமர்சனம் மாதிரிதான் இருக்கு...கமல் ரசிகர்கள் சுருண்டு படுத்துட்டாய்ங்க தலைவரே..மருத நாயகம் வராத சோகம் அவங்களுக்கு...கோமணம் கட்டிய கமலை பார்க்க ஆர்வமாய் இருந்தாய்ங்க..பாவம்
மனமதன் அம்பு வந்து காப்பாத்தும்னு நினைக்கறேன்
ஆர்.கே.சதீஷ்குமார் said...
படத்தின் டிக்கட் ரூ 300 என நிர்ணயித்திருக்காங்களே?இது ஓவரா இல்லை?ரசிகனை ஏமாத்தற வேலை இல்லையா?
பதிலடி -நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?//
இது ஒன்லி ரைனி ரசிகர்களுக்கான ஷோ ..ரஜினி ரசிகர்கள் பார்த்தாலே படம் செம ஹிட் ஆகி விடும்..கமல் ரசிகர்கள் ஒரு மாதம் கழித்துதான் வருவார்கள்..குழந்தைகள் கட்டாயப்படுத்தினால் மட்டுமே 15 நாளைக்கு பிறகு வருவார்கள்...
ஓ,இது வேறயா?
ஆர்.கே.சதீஷ்குமார் said...
படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங்க்.படம் பார்த்தவங்க ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லைனு சொல்றாங்களே//
ரஜினி இருந்தாலே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான்
ஓஹோ,அதுதான் அக்டோபர் 1ந்தேதி நீ சாப்பிடாமயே ஈர்ரோடு வந்து படம் பாத்தியா?
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கோபத்தில் மைனஸ் ஓட்டு போடும் மைனாரிட்டி மைனர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தேடி குழம்ப வேண்டாம்.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்//
செம கடுப்புல இருப்பீங்க போல..நான் ரெண்டுமே போடல...சந்தோசமா..ஹிஹிஹி
அட,ஏதாவது ஒரு ஓட்டு போடப்பா.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்//
எனக்கென்னவோ ஹிட்ஸ் அதிகமாக்குற வேலை போல தெரியுதே..பதிவின் டைட்டிலை அழுத்துனா மைனஸ் வோட்டு எப்படி விழும்?
அப்போதுதான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையே தெரியுது.
Thala
Super.
நன்றி பாபா
கேர்ள் பிரண்டு சண்ட போட்டு போயிட்டா இப்படித்தான் சார் யோசிக்க தோணும் , பஸ்ட்டு கால கைல விழுந்தாவது உங்க கேர்ள் பிரண்ட சரி பண்ணுங்க , அப்புறம் உங்களுக்கு இப்படிதோணாது
hi hi ஹி ஹி அந்த ரகசியம் எல்ல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?
சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி ஹி அந்த ரகசியம் எல்ல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?////
நாலஞ்சு கேர்ள் பிரண்டு வச்சுகிட்டு நான் படுற பாடு உங்களுக்கு எங்க தெரியபோகுது
இன்று முதல் என் உற்ற நண்பன் ஆகி விட்டீர்,(அப்படியே மிச்சம் மீதி இருந்தா இந்தப்பக்கம் தள்ளி விடறது?)எக்சேஞ்ச் ஆஃப்ஃபர் கேக்கக்கூடாது.ஒன் வே..ஹி ஹி டோண்ட் டேக் சீரியச்,ஜஸ்ட் ஃபார் ஃபன்
சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தாங்களாம், அந்த மாதிரியில்ல கதை போகுது?
என்ன பாஸ் எந்திரன் டிக்கட் கிடைக்கலியா?
appadiye ajith thukkum ezhuthirukkalaam
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தாங்களாம், அந்த மாதிரியில்ல கதை போகுது?
hi hi அண்ணே,மேட்டர் ஓகேவா?மொக்கையா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன பாஸ் எந்திரன் டிக்கட் கிடைக்கலியா
ஆமாண்ணே,ரூ 300 சொல்றாங்க.நம்ம பட்ஜெட்டுக்கு தாங்காது
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
appadiye ajith thukkum ezhuthirukkalaam
October 5, 2010 5:29 PM
வாய்யா,சிரிப்புப்போலீஸ்,அஜித் ரசிகர் கார்த்திக் கோவிச்சுக்குவாரே?
அப்பிடியே நம்ம டாகுடரு தம்பி விஜய்க்கும், அஜித்துக்கும் இதே மாதிரி ஒரு பதிவப் போடுங்க!
சரியான மொக்கை ..better luck next time :)
/// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தாங்களாம், அந்த மாதிரியில்ல கதை போகுது?
hi hi அண்ணே,மேட்டர் ஓகேவா?மொக்கையா?///
மேட்டரு செம தூள்மா ! (ஆமா அது என்ன அண்ணன், நான் உங்க தம்பி மாதிரியில்ல?)
ஜோ/Joe
//சரியான மொக்கை ..better luck next time :)//
உங்களுக்கு மொக்கையா தெரியிறது மத்தவனுக்கு சூப்பரா தெரியலாம், எனக்கு சூப்பரா இருக்கு. உங்களுக்கு எங்கயோ இடிக்குதென்னு நினைக்கிறன்.
//அப்பிடியே நம்ம டாகுடரு தம்பி விஜய்க்கும், அஜித்துக்கும் இதே மாதிரி ஒரு பதிவப் போடுங்க// ஏங்க என்னாச்சு ரஜினிக்கும் கமலுக்கும் நடுவிலே அஜித் எங்க வந்தார் அவர் பாட்டுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கார். சும்மா இருக்குற சங்க ஏங்க ஊதி கெடுக்கறீங்க
சன் டீவி ரேஞ்ஜிக்கு எந்திரனை வைச்சே சரக்கெல்லாம் வித்து வியாபாரம் செய்திடலாம்னு ப்ளானா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பிடியே நம்ம டாகுடரு தம்பி விஜய்க்கும், அஜித்துக்கும் இதே மாதிரி ஒரு பதிவப் போடுங்க!
2உங்க அளவு விஜய்யை நக்கல் அடிக்க யாரால முடியும்?சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.எங்க ஆஃபீஸ்ல எல்லோருக்கும் உங்க பிளாக்கை காண்பிச்சேன்
ஜோ/Joe said...
சரியான மொக்கை ..better luck next time :)
அண்ணே,எத்தனை நாளுக்குத்தான் சீரியஸ் பதிவையே படைக்கறது?ஒரு மொக்கை போட்டா என்ன?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தாங்களாம், அந்த மாதிரியில்ல கதை போகுது?
hi hi அண்ணே,மேட்டர் ஓகேவா?மொக்கையா?///
மேட்டரு செம தூள்மா ! (ஆமா அது என்ன அண்ணன், நான் உங்க தம்பி மாதிரியில்ல?)
இல்ல,இல்ல,இல்ல(எக்கோ)
அண்ணெ,அது எங்க ஏரியா பாஷை,ஈரோடு,கோவை மாவட்டத்துல அப்படித்தான் பேசுவோம்.
எப்பூடி.. said...
ஜோ/Joe
//சரியான மொக்கை ..better luck next time :)//
உங்களுக்கு மொக்கையா தெரியிறது மத்தவனுக்கு சூப்பரா தெரியலாம், எனக்கு சூப்பரா இருக்கு. உங்களுக்கு எங்கயோ இடிக்குதென்னு நினைக்கிறன்.
நன்றி சார்,என் வயித்துல பாலை வாத்தீங்க.(ஆவின்)
karthik said...
//அப்பிடியே நம்ம டாகுடரு தம்பி விஜய்க்கும், அஜித்துக்கும் இதே மாதிரி ஒரு பதிவப் போடுங்க// ஏங்க என்னாச்சு ரஜினிக்கும் கமலுக்கும் நடுவிலே அஜித் எங்க வந்தார் அவர் பாட்டுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கார். சும்மா இருக்குற சங்க ஏங்க ஊதி கெடுக்கறீங்க
கார்த்திக்,நோ கோபம்,எல்லாம் ஒரு தமாஷ்க்கு
என்னது நானு யாரா? said...
சன் டீவி ரேஞ்ஜிக்கு எந்திரனை வைச்சே சரக்கெல்லாம் வித்து வியாபாரம் செய்திடலாம்னு ப்ளானா?
ஆமாண்ணே,அறீவுபூர்வமா ஒரு பதிவு போட்டப்ப ஒரு ஆள் வர்லை
கார்த்திக்,நோ கோபம்,எல்லாம் ஒரு தமாஷ்க்கு///சார் நானும் சும்மாதான் சொன்னேன்
நிஜமோன்னு நினைச்சுட்டேன் கடைசியிலே மொக்கைனு ஒத்துக்கிட்டிங்க..!
karthikkumar said...
கார்த்திக்,நோ கோபம்,எல்லாம் ஒரு தமாஷ்க்கு///சார் நானும் சும்மாதான் சொன்னேன்
hi ஹி ஹி அப்ப சரி
Tamilzhan said...
நிஜமோன்னு நினைச்சுட்டேன் கடைசியிலே மொக்கைனு ஒத்துக்கிட்டிங்க..!
ஒரு வேளை ஒத்துக்காம இருந்திருந்தா பதிவு ஹிட் ஆகி இருக்குமோ?
இந்தப்பதிவைப்படித்த அனைவருக்கும் ஒரு தகவல்.யாரும் இப்படி பேசிக்கொள்ளவில்லை,நானே கமல் ரசிகனாக் இருந்து எனக்குத்தோன்றிய கேள்விகளை எழுப்பி ,ரஜினி ரசிகனாக இருந்து பதில் அளித்துக்கொண்டேன்.நான் உண்மையில் கமல் ரசிகனும் அல்ல,ரஜினி ரசிகனும் அல்ல,சினிமா ரசிகன்,நல்ல சினிமா அது யார் நடித்தாலும் பார்ப்பவன்.///////
ரஜினி மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு தன்னை விட அதிக வாய்ப்பு குடுத்தார்,அவர் கையால் அறை கூட வாங்கினார்.//
பொதுவாக ஒரு படத்தில் நீளம் அதிகமாக இருந்தால் அதற்கு முதலில் பலி ஆவது காமெடி காட்சிகளே.//
nalla sorangaya detailu.........
புரட்சித்தலைவா,என்ன சொல்ல வர்றீங்க?
புரட்சித்தலைவா,என்ன சொல்ல வர்றீங்க? //
தல சூப்பரா இருக்கு.
எழுதுறதுக்கு ஏகப்பட்ட detail தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.
Doubt clear……?
///நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?வீடு வீடா வந்து கையைப்பிடிச்சு இழுத்து இந்தப்படத்தை பார்த்தே ஆகனும்னு சொல்லலையே.ரேட் அதிகம்னு நினைக்கறவஙக ஏம்ப்பா வர்றிங்க?கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.மார்க்கெட் இருக்கு,ரேட் ஃபிக்ஸ் பண்றான்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளிக்கொள்///
ஹா ஹா ஹா.. நல்ல பகிர்வு.. :-))
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=313354&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
அங்க ரஜனியும் கமலும் நட்சத்திர ஓட்டலில் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு ஜாலியா இருக்காங்க, இங்க என்னடான்டா நாளைக்கு என்ன செய்வோம் என்று வேலையைப் பார்க்காம இதுகள் அவர்கள் இருவரும் ஏதோ வெட்டிக் கொள்ளுற மாதிரி விவாதிச்சிட்டு இருக்குதுகள். போங்கையா போய் வேலையைப் பாருங்க....
செந்தில்குமார்....சினிமா ஆர்வம் கொஞ்சம் குறைவு.அதானல ஏதும் சொல்ல வரல !
புரட்சித்தலைவன் said...
புரட்சித்தலைவா,என்ன சொல்ல வர்றீங்க? //
தல சூப்பரா இருக்கு.
எழுதுறதுக்கு ஏகப்பட்ட detail தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.
Doubt clear……?
a\அப்பாடா,அப்ப ஓக்கே,மொக்கை பதிவுனு சொன்னதா நினச்சுட்டேன்
Ananthi said...
///நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?வீடு வீடா வந்து கையைப்பிடிச்சு இழுத்து இந்தப்படத்தை பார்த்தே ஆகனும்னு சொல்லலையே.ரேட் அதிகம்னு நினைக்கறவஙக ஏம்ப்பா வர்றிங்க?கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.மார்க்கெட் இருக்கு,ரேட் ஃபிக்ஸ் பண்றான்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளிக்கொள்///
ஹா ஹா ஹா.. நல்ல பகிர்வு.. :-))
நன்றி ஆனந்தி
K.MURALI said...
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=313354&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
நன்றி சார்,பாக்கறேன்
ச.இலங்கேஸ்வரன் said...
அங்க ரஜனியும் கமலும் நட்சத்திர ஓட்டலில் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு ஜாலியா இருக்காங்க, இங்க என்னடான்டா நாளைக்கு என்ன செய்வோம் என்று வேலையைப் பார்க்காம இதுகள் அவர்கள் இருவரும் ஏதோ வெட்டிக் கொள்ளுற மாதிரி விவாதிச்சிட்டு இருக்குதுகள். போங்கையா போய் வேலையைப் பாருங்க...
சரியா சொன்னீங்க,ஆனா எங்க வேலையே வம்பிழுக்கறதுதானே சார்,(சும்மா சொன்னேன் சார்,நன்றி தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்.)
ஹேமா said...
செந்தில்குமார்....சினிமா ஆர்வம் கொஞ்சம் குறைவு.அதானல ஏதும் சொல்ல வரல !
October 6, 2010 4:48 AM
வர்லைனு சொல்லி வந்துட்டீங்களே,ஹி ஹி நன்றி ஹேமா
ஏய் எப்பா.....இப்பிடி மூச்சு விடாம நீட்டி முழங்குனா நாங்க அடங்கிருவமா என்ன??? நாங்க கமல் ரசிகனாக்கும்......பிச்சிபுடுவேன் பிச்சு.....
அட, கலக்கிட்டீங்க நண்பா....
ஏய் எப்பா.....இப்பிடி மூச்சு விடாம நீட்டி முழங்குனா நாங்க அடங்கிருவமா என்ன??? நாங்க கமல் ரசிகனாக்கும்......பிச்சிபுடுவேன் பிச்சு.....
அட கலக்கிட்டீங்க நண்பா....
நாட்டுக்கு ரொம்ப அவசியம்....
நாஞ்சில் மனோ said...
ஏய் எப்பா.....இப்பிடி மூச்சு விடாம நீட்டி முழங்குனா நாங்க அடங்கிருவமா என்ன??? நாங்க கமல் ரசிகனாக்கும்......பிச்சிபுடுவேன் பிச்சு.....
அட கலக்கிட்டீங்க நண்பா....
நன்றி சார்
Blogger நாஞ்சில் பிரதாப் said...
நாட்டுக்கு ரொம்ப அவசியம்....
அப்படி இல்ல,இப்போதைக்கு எந்திரந்தான் ரசிகர்களின் வசியம்
poya.
Nii Unnaipol Oruvan Pakkalaya >?!?!
Mohanlal one step ahead of Kamal in that film.
அவனாடா நீ ?
மிக அருமையான பதிவு நன்றி
இவன்
http://tamilcinemablog.com/
Post a Comment