Friday, October 15, 2010

எந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை

அட

ஸ்ரீதர் காலத்தில் பிரபலமான முக்கோணக்காதல் கதையை சயின்ஸ் ஃபிக்‌ஷன் எனும் கட்டுக்குள் கொண்டுவந்து,ஜனரஞ்சகமாக ஒரு மசாலா படம் எடுக்க முடியும் என நிரூபித்ததற்காகவே ஷங்கரை பாராட்டலாம்.

பொதுவாக ஷங்கரின் படங்களில் கதைக்குள் போகும் முன் ஒரு ரிலாக்ஸ் சாங்க் வைப்பார்.ஷக்கலக்க பேபி (முதல்வன்),ஊர்வசி ஊர்வசி (காதலன்),ஆனால் இந்தப்படத்தில் சுஜாதாவின் பாணியில் ஓப்பனிங்கிலேயே கதைக்குள் போய் விடுகிறார்.

விஞ்ஞானி ரஜினி ரோபோவுக்காக செலவிடும் நேரத்தை அவர் குடும்பத்துக்காகவோ,காதலிக்காகவோ கொஞ்சம் கூட செலவிடவில்லை என ஆரம்பத்திலேயே பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விடுவதால் ஆடியன்சுக்கு ரோபோவின் பாத்திரப்படைப்பு சுவராஸ்யம் ஊட்டுவதாய் தானாகவே அமைந்து விடுகிறது.

அண்டர்பிளே ஆக்டிங்க் (அடக்கி வாசிப்பது)ஏற்கனவே ரஜினி ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன்,வள்ளி ஆகிய படங்களில் செய்து இருந்தாலும் அவை யாவும் வணிக ரீதியாக தோல்விப்படங்கள் என்ற அளவில் இந்த எந்திரன் ரஜினிக்கு முக்கியமான படம் ஆகி விட்டது.

ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் ,ஸ்டைல் மன்னன் இந்த அளவு கட்டுக்கோப்பாக எந்த இடத்திலும் தன் தனித்தன்மை வெளிப்படாமல் டைரக்டர் சொன்னபடி நடித்து அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டி இருக்கிறார் என்றால் அதுதான் தொழிலை நேசிக்கும் ஒரு நடிகனின் வெற்றி.

அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் பேனா விளையாடி இருக்கிறது.என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் கலவைதான் எந்திரன் என்றாலும் அதற்கு ஷங்கரின் மெனக்கெடல் கவனிக்கத்தக்கது.ஜீனோ என்னும் நாய் கேரக்டரை ரோபோ ஆக்கி அதை ரஜினியின் 2வது ஆக்டிங்க்குக்கு யூஸ் பண்ணலாம் என கணித்த அவர் கெஸ்ஸிங்க் டேலண்ட்டிற்கு ஒரு சல்யூட்.ஆனால் படத்தின் பின் பாதியில் ரோபோவின் ராஜ்ஜியத்திற்கு அதே சுஜாதாவிம் பேசும் பொம்மைகள் நாவலின் சாரம் தேவைப்பட்டிருப்பினும் டைட்டிலில் கதை,திரைக்கதை உதவி சுஜாதா எனவும் வசனம் சுஜாதா வசன உதவி ஷங்கர் என போட்டிருந்தால் பெருந்தன்மையின் அர்த்தமும்,ஒரு படைப்பாளிக்கு உரிய கவுரமும் அளிக்கப்பட்டிருப்பதாக பெருமை கொள்ளலாம்,ஆனால் சினிமா உலகம்.....??

எழுத்தாளர் சுஜாதா புகுந்து விளையாடிய இடங்கள் -

1. ஐஸ் - அவர் என்னை பாக்க வர்றதே இல்லை,ஆள் உயிரோடதான் இருக்காரா?

இல்லை,வயரோட இருக்கார்.

2.சந்தானம் - மேடம்,உங்களுக்கு சிஸ்டர் இருக்காங்களா?

ஐஸ் - வாட்?

.சந்தானம் - சாரி,பிரதர்,மதர் இவங்களை பற்றி கேட்டேன்,கண்ட்ரோல் ஆல் டெலீட் குடுத்துடுங்க.

3.டி வி ஐ ஏன் கீழே போட்டு உடைச்சே?

ரோபோ - டி வியை போடுனு சொன்னாங்க.

4.எவ்வளவு டேஞ்சர்,ஏன் பிரேக் போடலை?

என்னைக்கேக்காம எதுவும் செய்யக்கூடாதுனு நீங்கதானே சொன்னீங்க?

5. என்னப்பா,தண்ணியை போட்டுட்டு வண்டியை ஓட்டறியா?

இல்லை.பெட்ரோல் போட்டுட்டு ....

6.ஷேவிங் செட்டை யாராவது கேர்ள் ஃபிரண்டுக்கு கிஃப்ட்டா தருவாங்களா?

இல்லை,தேவைப்படுமோன்னு....

7.வேலண்ட்டைன்ஸ்டேக்கு யாராவது முருகர் படம் தருவாங்களா?

8.என்னது இது? போஸ்ட் ஆஃபீஸ் முத்தம்?

9.உனக்கு அம்ம அப்பா இல்லையா?அப்புறம் எப்படி நீ பிறந்தே?

நான் பிறக்கலை,செஞ்சாங்க.

10.எங்க ஹோம்க்கு ஜெண்ட்ஸ் நாட் அலோடு (ALLOWED)

நாங்க ஜெண்ட்ஸ்னு யார் சொன்னது?

11. யார் இது? பாய் ஃபிரண்டா?      நோ,டாய் ஃபிரண்ட் . ( BOY - TOY)

12.மனுஷனால முடியாதுனு சொல்லப்பட்ட பல விஷயங்கள் நடந்திருக்கு.

13.இது இயற்கைக்கு எதிரானதுனு சொல்றாங்களே?

நோ.இது இயற்கைக்கு புதுசு.

14. என்ன நக்கலா?     நோ,நிக்கல்

15.இதுதான் ஹைடெக் பிட்டா?    நோ ,பைட்.

16. இறைவன் படைத்த 2 அதிசயங்கள் 1. நீ   2.நான்.

ஷங்கர் கலக்கிய இடங்கள் -தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து ரோபோ எல்லோரையும் காப்பாற்றுவதும் அது பிளஸ் ஆகிப்போன சந்தோஷத்தில் சயிண்டிஸ்ட் இருக்கும்போதே பாத்ரூமில் குளிக்கும் பெண்ணை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத ரோபோ அப்படியே தூக்கி வந்து மைனஸ் ஆகும் இடம்,,பெண்ணுக்கு நார்மல் டெலிவரி ஆகாது என டாக்டர்கள் நிராகரித்த ஒரு கேசை ரோபோ வெற்றிகரமாக நிறைவேற்றுவது,ரோபோவுக்கு மனித உணர்வுகள் புரியத்தொடங்கிவிட்டது என தெரிந்து எல்லோரும் சந்தோசப்படும்போது வில்லன் மட்டும் “இனி ஐஸ் உடன் ரோபோவுக்கு காதல் வரும் என கணித்து மர்மமாக ஒரு புன்னகை செய்து இடைவேளை ட்விஸ்ட் ஆக்குவது,ரோபோ வில்லன் ஆனதும் தனி ராஜ்ஜியம் அமைப்பது என பல இடங்களில் ஷங்கர் தனது முத்திரையை அழுத்தமாகவே பதித்து இருக்கிறார்.

ஷங்கர் சறுக்கிய இடங்கள் - எஜமான் படத்தில் மீனா பட்டாம்பூச்சி வேணும் என ரஜினியை கேட்டதும் ரஜினி படாத பாடுபட்டு அதை பிடித்துதரும் சீனை உல்டா செய்து ஐஸ் உடலில் கடித்த கொசுவை ரோபோ ரஜினி பிடித்து சாரி கேக்க வைக்கும் சீன்,என் கிட்ட இருக்கற ஒண்ணு உன் கிட்ட இல்ல என சந்தானம் ரோபோவை கலாய்க்கும் ஆபாச சீன்,இடைவேளைக்கு பிறகு ஏற்படும் அரை மணி நேர தொய்வு ,சந்தானம் கருணாஸ் கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட குழப்பம் அவர்களை சரியாக பயன்படுத்தாதது என சில இடங்களில் சறுக்கியது மைனஸ்.

ரஜினியின் முத்திரைகள் -விஞஞானியாக அடக்கி வாசித்த அவர் ரோபோவாக வரும்போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் டயலாக் டெலிவெரியில் கலக்குவது,ரோபோவுக்கும் மனுஷனுக்கும் முக்கிய வித்தியாசமான கண்கள் அமைப்பை சமாளிக்க கூலிங்க் கிளாஸ் அணிந்து சமாளிப்பது,ரோபோ வில்லன் ஆன பிறகு அதுவரை அடக்கி வைத்திருந்த நடிப்பாற்றலை எல்லாம் கட்டவிழ்த்தா காட்டாறு போல வெளிப்படுத்துவது.
1.ரோபோ என சைடாக தலையை திருப்பி பன்ச் டயலாக் பேசுவது
2.விஞ்ஞானி ரோபோவின் மாளிகையைல் மாறுவேடத்தில் நுழைந்ததை கண்டுபிடித்த ரோபோ கறுப்பு ஆடு யாரு என கேட்டு மே மே ம் மே என நக்கல் அடிப்பது
3.நகைக்கடை ஓனர் கேஷா,செக்கா எனக் கேட்கையில் GUN என நக்கலாக கூறுவது
4.தீ விபத்தில் இருந்து எல்லோரையும் காப்பாற்றுகையில் பாத்ரூமில் குளிக்கும் பெண் நான் டிரஸ் இல்லாம இருக்கேன் என கதறும்போது சோ வாட் நான் கூட அப்படித்தான் இருக்கேன் அசால்ட்டாக கூறுவது
5.ரோபோ ரஜினியை ஐஸ் முதன் முதலாக கிஸ் பண்ணும்போது ஏன் என் கன்னத்தை எச்சில் பண்றே என கேட்பது
6.சூப்பர்ஸ்டார் இமேஜை மீறி ரோபோவாக வரும் ரஜினி உயிர் பிச்சை கேட்டு கதறுவது

ஆர்ட் டைரக்‌ஷன்,ஒளிப்பதிவு என டெக்னிக்கல் பிரம்மாண்டங்கள் கலக்கல் ரகம்.அரிமா அரிமா பாடல் காட்சியில் ரஜினியின் ஆண்மை மிளிரும் நடையும்,தெனாவெட்டும் ஸ்பெஷல் முத்திரை.இத்தனை பிளஸ்கலை மீறியும் படத்தை பற்றி நெகடிவ் டாக் வருதுன்னா அதற்கான காரணங்கள்

1.சன் டிவியின் ஓவர் அலப்பறை
2.டிக்கட் ரூ 300 ,ரூ 200 என முதல் 15 நாட்களுக்கு விற்றது
3.படத்தை பற்றிய ஓவர் எதிர்பார்ப்பு
4.ரஜினியை ஸ்டைல்,பன்ச் வசனங்களோடு எதிர்பார்த்தது
5.ரஜினியின் அடக்கிவாசித்த நடிப்பை விரும்பாதது

பாடல் காட்சிகளில் ஐஸ் 37 வயசுப்பெண் மாதிரியே தெரியவில்லை,கொள்ளை அழகு.கிராஃபிக்ஸ் காட்சிகள் மிரட்டல் ரகம் என்றாலும் பாம்பு மாதிரி ரோபோ வருவது மட்டும் ராமநாராயணன் படம் எஃப்க்ட் ஏற்பௌத்துது.மற்றபடி தமிழில் வந்து மறக்க முடியாத ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

45 comments:

எல் கே said...

anne kalakal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் பேனா விளையாடி இருக்கிறது.//

என்ன விளையாட்டு விளையாடுச்சு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காந்தி செத்துட்டாரா. யோவ் இவ்ளோ நாள் கழிச்சா விமர்சனம் எழுதுறது., சரக்கு இல்லியா?

Riyas said...

விமர்சனம் நல்லாயிருக்கு சி.பி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு...

கவி அழகன் said...

ம் ம் கலக்குங்க

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...காந்தி செத்துட்டாரா. யோவ் இவ்ளோ நாள் கழிச்சா விமர்சனம் எழுதுறது.,/// அதானே

NaSo said...

விமர்சனம் லேட்டாக இருந்தாலும் நல்லா இருக்கு.

Chitra said...

:-)

புரட்சித்தலைவன் said...

விமர்சனம் லேட்டாக இருந்தாலும் உங்க ஸ்டைலில் அசத்தல் பதிவு.

மர்மயோகி said...

இதற்க்கு பெயர் விமர்சனம் அல்ல..நூறு சதவீதம் ஜால்ரா சத்தம்தான்...கேவலம்

சிசு said...

உங்கள மாதிரியே என்னோட முதல் ஓட்டு சுஜாதா-வுக்குதாங்கோ...

1. ஒவ்வொரு டயலாக் முடியும்போதும் ரஜினி சொல்லும் DOT.
2. ரோபோ சொல்லும் I CAN 'T SHIT !

ரசித்தேன்... எந்திரனை மட்டுமல்ல... உங்கள் விமர்சனத்தையும்...

நெகடிவ் டாக் காரணங்கள் அனைத்தும் உண்மை...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தியேட்டர்ல இருந்து எந்திரனை தூக்கினாலும் நீங்க உங்க பதிவுல எந்திரனை விடமாட்டிங்க போலிருக்கே?...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரனைப் பற்றி அதிகப் பதிவுப் போட்டவர் என்கிற சாதனைப் படைக்க எதாவது திட்டம் கைவசம் இருக்கா?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஷங்கர் சறுக்கிய இடங்கள் - எஜமான் படத்தில் மீனா பட்டாம்பூச்சி வேணும் என ரஜினியை கேட்டதும் ரஜினி படாத பாடுபட்டு அதை பிடித்துதரும் சீனை உல்டா செய்து ஐஸ் உடலில் கடித்த கொசுவை ரோபோ ரஜினி பிடித்து சாரி கேக்க வைக்கும் சீன்,என் கிட்ட இருக்கற ஒண்ணு உன் கிட்ட இல்ல என சந்தானம் ரோபோவை கலாய்க்கும் ஆபாச சீன்,இடைவேளைக்கு பிறகு ஏற்படும் அரை மணி நேர தொய்வு ,சந்தானம் கருணாஸ் கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட குழப்பம் அவர்களை சரியாக பயன்படுத்தாதது என சில இடங்களில் சறுக்கியது மைனஸ் - இவை அனைத்தும் மிக அற்புதமான வரிகள். பாராட்டுகள்.

கிருஷ்ணா said...

//2.டிக்கட் ரூ 300 ,ரூ 200 என முதல் 15 நாட்களுக்கு விற்றது
//

தவறு.
தென்காசி போன்ற சிறு நகரங்களில் டிக்கட் விலை 800

அவ்வளவு பணம் கொடுத்து பலமுறை படம் பார்த்த ஏழை ரசிகனின் காசில்தான் 225 கோடி வசுல் சாதனை.

இவ்வளவு பணம் கொடுத்து ரசிகர்கள் மட்டும்தான் படம் பார்ப்பார்கள்.

ரசிகரல்லாத நடுநிலை வாதிகள் காத்திருக்கிறhர்கள் விலை குறைவதற்காக.

கிருஷ்ணா said...

//4.தீ விபத்தில் இருந்து எல்லோரையும் காப்பாற்றுகையில் பாத்ரூமில் குளிக்கும் பெண் நான் டிரஸ் இல்லாம இருக்கேன் என கதறும்போது சோ வாட் நான் கூட அப்படித்தான் இருக்கேன் அசால்ட்டாக கூறுவது
//

இந்தக் காட்சியில் அனிமேட்டட் ரோபோவைத்தான் காட்டுவார்கள்

எனவே இதை ரசினியின் முத்திரையாகக் கொள்ள முடியாது

Anonymous said...

ரசிகரல்லாத நடுநிலை வாதிகள் காத்திருக்கிறhர்கள் விலை குறைவதற்காக//
அவர்கள் திருட்டு டிவிடியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

Anonymous said...

நல்ல விமர்சனம்

Anonymous said...

எந்திரனைப் பற்றி அதிகப் பதிவுப் போட்டவர் என்கிற சாதனைப் படைக்க எதாவது திட்டம் கைவசம் இருக்கா//என்னையும் மிஞ்சி விட்டார் ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

anne kalakal

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் பேனா விளையாடி இருக்கிறது.//

என்ன விளையாட்டு விளையாடுச்சு?

hi hi லொள்ளா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காந்தி செத்துட்டாரா. யோவ் இவ்ளோ நாள் கழிச்சா விமர்சனம் எழுதுறது., சரக்கு இல்லியா?

மீண்டும் ஒரு ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Riyas said...

விமர்சனம் நல்லாயிருக்கு சி.பி

நன்றி ரியாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெறும்பய said...

நல்லாயிருக்கு...

October 15, 2010 9:02 AM

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

ம் ம் கலக்குங்க
நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...காந்தி செத்துட்டாரா. யோவ் இவ்ளோ நாள் கழிச்சா விமர்சனம் எழுதுறது.,/// அதானே

யோவ் டிக்கட் இப்பதான் ஒயிட்ல கிடச்சது

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

விமர்சனம் லேட்டாக இருந்தாலும் நல்லா இருக்கு.

அது அது அது (எக்கோ)

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Chitra said...

:-)

??????!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger புரட்சித்தலைவன் said...

விமர்சனம் லேட்டாக இருந்தாலும் உங்க ஸ்டைலில் அசத்தல் பதிவு.

புரட்சியே ஓக்கே சொன்ன பிறகு அப்புறம் என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

மர்மயோகி said...

இதற்க்கு பெயர் விமர்சனம் அல்ல..நூறு சதவீதம் ஜால்ரா சத்தம்தான்...கேவலம்

சார் ,மைனஸ் என்னன்னு கூட எழுதி இருக்கேனே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சிசு said...

உங்கள மாதிரியே என்னோட முதல் ஓட்டு சுஜாதா-வுக்குதாங்கோ...

1. ஒவ்வொரு டயலாக் முடியும்போதும் ரஜினி சொல்லும் DOT.
2. ரோபோ சொல்லும் I CAN 'T SHIT !

ரசித்தேன்... எந்திரனை மட்டுமல்ல... உங்கள் விமர்சனத்தையும்...

நெகடிவ் டாக் காரணங்கள் அனைத்தும் உண்மை...

நன்றி சிசு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தியேட்டர்ல இருந்து எந்திரனை தூக்கினாலும் நீங்க உங்க பதிவுல எந்திரனை விடமாட்டிங்க போலிருக்கே?...

ஹி ஹி ஹி ,காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,எந்திரன் ஓடும்போதே யூஸ் பண்ணீகொள்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரனைப் பற்றி அதிகப் பதிவுப் போட்டவர் என்கிற சாதனைப் படைக்க எதாவது திட்டம் கைவசம் இருக்கா?

நோ நோ இப்படி எல்லாம் திட்டுனா அழுதுடுவேன்,அப்புறம் எந்திரனால் நான் பட்ட கேவலங்கள் அப்ப்டினு ஒரு பதிவு போட்டுடுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஷங்கர் சறுக்கிய இடங்கள் - எஜமான் படத்தில் மீனா பட்டாம்பூச்சி வேணும் என ரஜினியை கேட்டதும் ரஜினி படாத பாடுபட்டு அதை பிடித்துதரும் சீனை உல்டா செய்து ஐஸ் உடலில் கடித்த கொசுவை ரோபோ ரஜினி பிடித்து சாரி கேக்க வைக்கும் சீன்,என் கிட்ட இருக்கற ஒண்ணு உன் கிட்ட இல்ல என சந்தானம் ரோபோவை கலாய்க்கும் ஆபாச சீன்,இடைவேளைக்கு பிறகு ஏற்படும் அரை மணி நேர தொய்வு ,சந்தானம் கருணாஸ் கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட குழப்பம் அவர்களை சரியாக பயன்படுத்தாதது என சில இடங்களில் சறுக்கியது மைனஸ் - இவை அனைத்தும் மிக அற்புதமான வரிகள். பாராட்டுகள்.

அப்படியா நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

கிருஷ்ணா said...

//2.டிக்கட் ரூ 300 ,ரூ 200 என முதல் 15 நாட்களுக்கு விற்றது
//

தவறு.
தென்காசி போன்ற சிறு நகரங்களில் டிக்கட் விலை 800

அவ்வளவு பணம் கொடுத்து பலமுறை படம் பார்த்த ஏழை ரசிகனின் காசில்தான் 225 கோடி வசுல் சாதனை.

இவ்வளவு பணம் கொடுத்து ரசிகர்கள் மட்டும்தான் படம் பார்ப்பார்கள்.

ரசிகரல்லாத நடுநிலை வாதிகள் காத்திருக்கிறhர்கள் விலை குறைவதற்காக.

எங்க ஊர் எவ்வளவோ தேவலை போல

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரசிகரல்லாத நடுநிலை வாதிகள் காத்திருக்கிறhர்கள் விலை குறைவதற்காக//
அவர்கள் திருட்டு டிவிடியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

இப்படி நெத்தி அடி அடிக்க சதிஷை விட்டால் யார்?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல விமர்சனம்

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எந்திரனைப் பற்றி அதிகப் பதிவுப் போட்டவர் என்கிற சாதனைப் படைக்க எதாவது திட்டம் கைவசம் இருக்கா//என்னையும் மிஞ்சி விட்டார் ஹிஹி

குருவை மிஞ்ச மாட்டான் சிஷ்யன்

எஸ்.கே said...

நல்ல விமர்சனம்! ஏன் லேட்!:-)

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்,பிளாக்கில் பார்க்கும் எண்ணமும் ,வசதியும் இல்லை.எனவே லேட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் பாசு, போஸ்ட் போடும்போது, கொஞ்சம் சொல்லி அனுப்பிச்சா என்ன? இப்பிடி ஆள் இல்லாத கடையில டீ ஆத்த விட்டுட்டீங்களே?

erodethangadurai said...

ரொம்பவே லேட்டா வந்தாலும் ... லேட்டஸ்டா இருக்கு ..... வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் பாசு, போஸ்ட் போடும்போது, கொஞ்சம் சொல்லி அனுப்பிச்சா என்ன? இப்பிடி ஆள் இல்லாத கடையில டீ ஆத்த விட்டுட்டீங்களே?

saari,சாரி அடுத்த முறை மெசேஜ் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

ரொம்பவே லேட்டா வந்தாலும் ... லேட்டஸ்டா இருக்கு ..... வாழ்த்துக்கள்.

நன்றி துரை