Thursday, September 23, 2010

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
(நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்

24 comments:

அமைதி அப்பா said...

மிக அற்புதமான தொகுப்பு.
பாராட்டுக்கள்.

Anonymous said...

நல்லா இருக்கு..திடீர்னு சமூக சிந்தனை புரட்சி பதிவு எல்லாம்?பயமா இருக்கு?

karthikkumar said...

விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே///கண்டிப்பாக

karthikkumar said...

திடீர்னு சமூக சிந்தனை புரட்சி பதிவு எல்லாம்?//சீக்கிரமா கட்சி ஆரம்பிச்சுடுங்க

'பரிவை' சே.குமார் said...

மிக அற்புதமான தொகுப்பு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mm

Mohan said...

அனைத்துமே நன்றாக இருந்தது!

எஸ்.கே said...

இந்த சுயநல உலகத்தில் நன்மை செய்யும் மனது வெளிப்படுவதே அபூர்வமாக உள்ளது. நம் மனம் எதிலும் லாபத்தையே தேடுகிறது. நன்மை செய்யும் மனதை வளர்க்க வேண்டும்!

சி.பி.செந்தில்குமார் said...

அமைதி அப்பா said...

மிக அற்புதமான தொகுப்பு.
பாராட்டுக்கள்.

நன்றி அமைதி அப்பா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லா இருக்கு..திடீர்னு சமூக சிந்தனை புரட்சி பதிவு எல்லாம்?பயமா இருக்கு?

ஹி ஹி பயப்படேல்,அடுத்து வாலிபமே வா,கிரண் நடிச்ச சீன் பட விமர்சனம் போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே///கண்டிப்பாக


அதே கார்த்திக்

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

திடீர்னு சமூக சிந்தனை புரட்சி பதிவு எல்லாம்?//சீக்கிரமா கட்சி ஆரம்பிச்சுடுங்க

September 23, 2010 10:56 AM

சினிமாப்படம் பார்க்கும் சின்னப்பசங்க கட்சியா?

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

மிக அற்புதமான தொகுப்பு.

September 23, 2010 12:20 PM

நன்றி குமார்,எல்லாம் உங்களைப்பார்த்து கத்துக்கிட்டதே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mm

nn oo pp qq rr ss tt uu vv ww xx yy zz

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Mohan said...

அனைத்துமே நன்றாக இருந்தது!

September 23, 2010 2:37 PM

நன்றி மோகன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

இந்த சுயநல உலகத்தில் நன்மை செய்யும் மனது வெளிப்படுவதே அபூர்வமாக உள்ளது. நம் மனம் எதிலும் லாபத்தையே தேடுகிறது. நன்மை செய்யும் மனதை வளர்க்க வேண்டும்!

முயற்சிப்போம் தோழா

Anonymous said...

ஹி ஹி பயப்படேல்,அடுத்து வாலிபமே வா,கிரண் நடிச்ச சீன் பட விமர்சனம் போடறேன்//
ஓ..அதுக்கு முன்னாடி நல்லதம்பி ..நாடகமா நடத்துங்க்.

ஹேமா said...

உங்கள் மனதில் பெண்களுக்குரிய மதிப்பு பதிவில் காண்கிறேன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

sir,ippathaan namma veetla net kanaikt velai seyyuthu. etuthththathum unka valaippoovai than suvaasiththen. intha itaippatta kaalaththula thalaivaa neenka enkeyo poyittittinka... unmaiyaa?... illaiyaa?

சி.பி.செந்தில்குமார் said...

5 PM
ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹி ஹி பயப்படேல்,அடுத்து வாலிபமே வா,கிரண் நடிச்ச சீன் பட விமர்சனம் போடறேன்//
ஓ..அதுக்கு முன்னாடி நல்லதம்பி ..நாடகமா நடத்துங்க்.
September 23, 2010 8:28 PM

sathish,பூடகமா பேசறியே?(எப்பூடி?நாடகமா?பூடகமா?வார்த்தை ஜாலம்?ஏய்,ந்ந்னும் கவிஞன் ஆகிட்டேன்,எல்லாரும் பார்த்துக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஹேமா said...

உங்கள் மனதில் பெண்களுக்குரிய மதிப்பு பதிவில் காண்கிறேன்.

September 23, 2010 10:27 PM


நன்றி ஹேமா,என்னைப்பெற்ற அம்மாவும் ஒரு பெண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

sir,ippathaan namma veetla net kanaikt velai seyyuthu. etuthththathum unka valaippoovai than suvaasiththen. intha itaippatta kaalaththula thalaivaa neenka enkeyo poyittittinka... unmaiyaa?... illaiyaa?

போறப்ப உங்களையும் கூட்டிட்டுப்போறேன்,பூங்கதிர்

என்னது நானு யாரா? said...

பெண்களைப் பற்றி நிறையவே உயர்வாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி! நம்ப இனம் ஆண்களைப் பற்றியும் ஒரு பதிவு, அவர்களின் உயர்ந்த குணங்களைப் பற்றியதாக எழுதிவிடுங்களேன். Equation சமன் ஆகிவிடும் இல்லையா?

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி//

நான் நினைக்கிறேன். கோயிலை இடிப்பதை விட கற்புள்ள ஒரு பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசுவது பெரிய பாவம். இந்த வாக்கியம் இப்படி இருந்தால் தான் அதுப் பெண்ணினைப் பற்றி பெருமையாக பேசுவதாக இருக்கும். சரி தானா என்று உறுதிப்படுத்துங்கள் நண்பரே!

சி.பி.செந்தில்குமார் said...

ok நண்பா,நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.