Sunday, September 26, 2010

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்

கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை,அப்ப்டியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள்,அப்போ நீங்க நம்ம ஆளு.பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி.72 நாட்கள் மட்டுமே ஆகிறது.இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி எப்படி அவரது குடும்பத்துக்குள் பதவிகள்,பணங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறதோ,அதே போல் இந்த சங்கத்து நண்பர்களும் நமக்குள் உதவிக்கொள்ளலாம்.தலைவர், உப தலைவர் என யாரும் கிடையாது.அனைவரும் உறுப்பினர்களே.

1.நமக்கு யார் கமெண்ட் போட்டாலும் உடனே அவர்து ஃபோட்டோவை க்ளிக்கி அவர்து பதிவில் ஒரு கமெண்ட் போடவும்.ஃபாலோயராக சேரவும்.இந்தத்திட்டத்திற்கு மொய்க்கு மொய் என பெயர்.

2.நீங்கள் கமெண்ட் போட்டு விட்டு வேலைக்கு சென்று விடுகிறீர்கள்,பிறகு வந்து பார்க்கும்போது 4 கமெண்ட் வந்திருக்கிறது என்றால் உடனே 4 பேருக்கும் நன்றி என பொத்தாம்பொதுவாக நன்றி கூற வேண்டாம்.தனித்தனியாக நன்றி கூறவும்.

3.அப்படித்தனித்தனியாக நன்றி கூறுவதில் ஒரு டெக்னிக் உள்ளது.8 கமெண்ட் ஆகி விடும்.தமிழ் மணம் சைடு முகப்பில் 6 கமெண்ட் வாங்கிய பதிவு இடம் பெறும்.அதைப்பார்த்து அதிக பார்வையாளர்கள் வருவார்கள்.

4.உங்கள் பக்கத்து வீட்டு ஃபிகர் பெயரில்,முறைப்பெண்,அல்லது முறைக்காத பெண் பெயரில் 2 அல்லது 3 டூப்ளிகேட் மெயில் ஐ டி கிரியேட் செய்து கொள்ளவும்.நீங்கள் பதிவு போட்ட 2 வது நிமிஷமே அவர்கள் மெயில் ஐ டி யில் போய் மீ த ஃபர்ஸ்ட்,முத வடை எனக்குத்தான் என்று ஏதாவது ஒரு கமெண்ட் போட்டு விட்டு மீண்டும் உங்கள் மெயில் ஐ டி யில் போய் நன்றி சொல்லவும்.இப்போ 6 கமெண்ட் ரெடி.

5. பதிவு போடுவதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ளுங்கள்.வாரம் மினிமம் 3,அதிகம் 6 பதிவு போடவும்.அதே போல் ரெகுலராக ஒரே டைமில் பதிவு போடுங்கள்.உதாரணமாக காலை 7 மணி என்றால் ரெகுலராக அதே டைமில் போடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

6.உங்கள் பதிவு சினிமா,அரசியல்,சமூகவிழிப்புணர்வு என கலவையாக இருக்கட்டும்.அனைத்துப்பார்வையாளர்களையும் வரவைக்க அது உதவும்.

7.ஜெ கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது மாதிரி 7 நாட்கள் திடீர் என காணாமல் போய் விடாதீர்கள்.அப்படியே போக வேண்டிய சூழல் வந்தால் ஒரு நெருங்கிய நண்பர் கம் பதிவரிடம் உங்க பாஸ்வோர்டை  குடுத்து பிளாக்கை ஒப்படைத்து கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட் போட வைய்யுங்கள்.

8.பதிவிட்டால் மட்டும் போதாது,மார்க்கட்டிங்க் வேணும்.சன் டி வி எந்த டப்பா படம் எடுத்தாலும் விடாமல் விளம்பரம் செய்து 5 நாள் படத்தை 30 நாள் படம் ஆக்குவது போல் முக்கிய புது பதிவர்களின் மெயில் ஐ டிக்கு ஒரு லிங்க் அனுப்புங்கள்.100 மெயில் ஐ டிக்கு அனுப்பி (க்ரூப்பாக) விளம்பரம் செய்தால் 25% பேர் வந்தாலும் லாபம்தான்.

9.தமிழ்மணம் முகப்புப்பக்கத்தின் கடைசியில் போய் பாருங்கள்,லேபிள்கள் இருக்கும்.உங்கள் பதிவை வகைப்படுத்துங்கள்.சினிமா,அரசியல்.நகைச்சுவை,நையாண்டி,சமூக விழிப்புணர்வு என.அதில் ஏதாவது ஒரு தலைப்பை இடவும்.

10.தி.மு.க மாதிரி ஓட்டு வாங்க நம்மால் பணம் தர முடியாது.ஆனால் ஓட்டுப்போடலாம்.இண்ட்லி,தமிழ்மணம்,உலவு ஆகியவற்றில் நுழைந்து படப்படவென எல்லாருக்கும் ஓட்டுப்போடவும்.மொய் திரும்ப வருமா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம்.

11.கம்ப்யூட்டர் நிறுவனங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் உங்கள் சைட்டை (பிளாக்கை) அறிமுகபடுத்தி ஃபாலோயர் ஆக்கவைக்கவும்.ஒரே சமயத்தில் 10  ஃபாலோயர்ஸ் கிடைக்கும்.

12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.

13.சினிமா விமர்சனம் எழுத முடிவு எடுத்தால் ஏற்கனவே அந்தத்துறையில் ஃபேமஸ் ஆன கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன்,ஜாக்கி சேகர் அண்ணன்,ஹாலிவுட் பாலா அவர்கள்,அஜயன் பாலா அவர்கள் பதிவை படித்து அவர்கள் ஸ்டைலை காப்பி அடிக்காமல் உங்களுக்கு என தனி பாணியை அமைத்து எழுதவும்.

14.காமெடி,நகைச்சுவை எழுத முடிவெடுத்தால் காமெடியில் கலக்கி வரும் சேட்டைக்காரன் அண்ணன்,குசும்பன் சார்,பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன்,பரிசல்காரன்,வால்பையன் போன்றவர்கள் பிளாக்கை படித்துவிட்டு,பயிற்சி எடுத்து தனி பாணியில் பதிவு போடவும்.

15.தனிப்பட்ட தாக்குதல்களை,அநாகரீக வார்த்தைகளை தவிருங்கள்.நாம் நண்பர்களை உருவாக்கவே வந்தோம்,எதிரிகளை உருவாக்க அல்ல.

16.தனி நபர் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களை தாகும் பதிவை படிக்க நேர்ந்தால் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்,அல்லது உள்ளே ஐயா,பிரசண்ட் சார் என ஒரு அட்டண்டன்ஸை போட்டு விட்டு எஸ்கேப் ஆகுங்கள்.

17கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.

18.அலாஸ்கா ரேங்கிங்க்கை உங்கள் பிளாக்கில் பொருத்தவும்.மினிமம் தினமும் 250 பேர் வந்தால் போதும்.

19.மிட்நைட் 12  மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.அது போக நமது பதிவு அதிக நேரம் ஆன்லைனில் வைத்திருக்க அது ஒரு குறுக்கு வழி.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.

20.ட்விட்டர்,ஃபேஸ்புக்,கூகுள் பஸ் என எல்லாவறிலும் உறுப்பினர் ஆகி உங்கள் பதிவை இணையுங்கள்.இது ஒரு நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

21.பெண் பதிவாளர்களை மரியாதைக்குறைவாக பேசுவது,தேவை இல்லாத மற்றும் எல்லை மீறிய பின்னூட்டம் இடுவது,அவர்கள் பர்சனல் விஷயங்களைப்பற்றி எழுதுவது இவற்றை நிச்சயம் தவிருங்கள்.

22.எழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்‌ஷனுக்கு பணம் கட்டனுமே?)

23.பி எஸ் என் எல் பிராட்பேண்ட் கனெக்‌ஷன் இருப்பதில் சிறந்தது,அதில் அன்லிமிட்டட் ரூ 750 திட்டத்தில் சேருங்கள்.நான் பணத்தை மிச்சம் பண்றேன் பேர்வழி என ரூ 500 திட்டத்தில் சேர்ந்தேன்.விடிகாலை 2 லிருந்து 8 மணி வரை இலவசம், மற்ற டைமில் காசு என்ற திட்டத்தில்,எனக்கு வந்த பில் ரூ 2400.

24.பழைய மாடல் சிஸ்டம் ஆக இருந்தால் கண் பாதிப்பை தவிர்க்க கண்ணாடி அணியுங்கள் அல்லது அதற்கென விற்கும் கிளாஸ் (ரூ 125) வாங்கி சிஸ்டத்தில் பொறுத்தவும்.

25.எல்லாவற்றையும் விட முக்கியம் பதிவு,நெட் என அதற்கு அடிமை ஆகி விடாமல் குடும்பத்திற்கும்,குழந்தைகளை கொஞ்சுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.

பி.கு.  இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு  பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.

113 comments:

எல் கே said...

அண்ணே , என்னையும் உங்க சங்கத்தில சேத்துக்கோங்க

R. Gopi said...

சூப்பர். அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டீர்கள் !

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

அண்ணே , என்னையும் உங்க சங்கத்தில சேத்துக்கோங்க

ஓக்கே டன்,நான் உங்களுக்கு அண்ணனா?இது ரொம்ப ஓவரா இல்ல?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Gopi Ramamoorthy said...

சூப்பர். அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டீர்கள் !

வாங்க வாங்க ராம்

எல் கே said...

/,நான் உங்களுக்கு அண்ணனா?இது ரொம்ப ஓவரா இல்ல? //

நான் சின்ன பய்யன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neenga inka irukka vendiya aale illai...

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

/,நான் உங்களுக்கு அண்ணனா?இது ரொம்ப ஓவரா இல்ல? //

நான் சின்ன பய்யன்

அது சரி,பார்த்தா சித்தப்பா மாதிரி இருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

/,நான் உங்களுக்கு அண்ணனா?இது ரொம்ப ஓவரா இல்ல? //

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neenga inka irukka vendiya aale illai...

September 26, 2010 2:06 PM

இப்படி சொல்லி என்னை துரத்திடலாம்னு பார்க்கறீங்களா? ரமேஷ்

அலைகள் பாலா said...

present sir

ஸ்ரீ.... said...

//நண்பர்களை உருவாக்கவே வந்தோம். எதிரிகளை அல்ல.// சிறப்பான, பதிவுலகின் இன்றைய நிலைக்குத் தேவையான வார்த்தைகள். புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் இடுகை.

ஸ்ரீ....

ப.கந்தசாமி said...

ரொம்ப நல்ல கருத்துக்கள்.

erodethangadurai said...

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம் துவக்கிய எங்கள் ஆருயிர் அண்ணன் சி.பி.செந்தில்குமார் அவர்களே , பின்னுட்டம் இட்ட 9 , 16 , 28 - வது வட்ட செயலாளர்களே ..... அனைவரையும் என் தொகுதிக்கும் வந்து பார்க்கும் படி இதன் மூலம் அழைப்பு விடுக்கறேன்.
http://erodethangadurai.blogspot.com/

அமைதி அப்பா said...

எங்க காலத்துல இப்படி ஒரு சங்கம் இல்லாம போயிட்டே!

சி.பி.செந்தில்குமார் said...

அலைகள் பாலா said...

present sir

ஆஹா பாலா,அட்டண்டன்ஸ் மட்டுமா?

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்ரீ.... said...

//நண்பர்களை உருவாக்கவே வந்தோம். எதிரிகளை அல்ல.// சிறப்பான, பதிவுலகின் இன்றைய நிலைக்குத் தேவையான வார்த்தைகள். புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் இடுகை.

ஸ்ரீ....

நன்றி ஸ்ரீ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger DrPKandaswamyPhD said...

ரொம்ப நல்ல கருத்துக்கள்.

நன்றி டாக்டர்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம் துவக்கிய எங்கள் ஆருயிர் அண்ணன் சி.பி.செந்தில்குமார் அவர்களே , பின்னுட்டம் இட்ட 9 , 16 , 28 - வது வட்ட செயலாளர்களே ..... அனைவரையும் என் தொகுதிக்கும் வந்து பார்க்கும் படி இதன் மூலம் அழைப்பு விடுக்கறேன்.
http://erodethangadurai.blogspot.com/

இதோ வந்துட்டம் இல்ல,நம்ம ஊர்க்காரராச்சே

சி.பி.செந்தில்குமார் said...

அமைதி அப்பா said...

எங்க காலத்துல இப்படி ஒரு சங்கம் இல்லாம போயிட்டே!

அப்பா,இனி எல்லாம் நம்ம காலம்தான்,வாங்க இணைந்து கலக்குவோம்

surivasu said...

//எல்லாவற்றையும் விட முக்கியம் பதிவு,நெட் என அதற்கு அடிமை ஆகி விடாமல் குடும்பத்திற்கும்,குழந்தைகளை கொஞ்சுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
// Nice lines. Keep it up sir....

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சூரிவாசு

சி.பி.செந்தில்குமார் said...

100 வது ஃபாலோயரை வருக வருக என வரவேற்கிறேன்.யாரங்கே?

துளசி கோபால் said...

மூணாவது குறிப்பைக் கொஞ்சம் சரி பார்த்துக்குங்க.

ஏழு ஓட்டுக்குமேல் 'விழுந்தவங்கதான்' அங்கே நிக்கறாங்க.

சங்கத்தில் சொல்லப்பட்ட மத்த அத்தனையும் நல்லாத்தான் இருக்கு:-)

நாங்க எழுத ஆரம்பிச்ச சமயத்தில் இப்படி ஆலோசனைகளை அன்பாய்ச் சொல்ல ஆளில்லாமப் போச்சு பாருங்க:(

சி.பி.செந்தில்குமார் said...

thuLasi koopaal.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தமிழ்மணம் ஓட்டைப்பற்றி நீங்க சொன்னது சரியே. ஆனால் நான் சொன்னது தமிழ்மணம் வலது மூலையில் 6 கமெண்ட் வாங்கிய பதிவுகள் 3 மணி நேரம் நிற்கிறது.இடது மூலையில்தான் ஓட்டு வாங்கியது .அப்போ நீங்க சொன்னதும் சரி,நான் சொன்னதும் சரி.

துளசி கோபால் said...

அட! ஆறு ஓட்டுக்கு மூணு மணிநேரமா!!!!!

சேதி எனக்குப் புதிது.

Anonymous said...

வளர்த்த கடா மாரில் முட்டியது.....

சி.பி.செந்தில்குமார் said...

அப்படின்னா என்ன அர்த்தம் சதிஷ்?இந்தப்பதிவை நான் போட்டிருக்கக்கூடாதா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட புதுசா இருக்கே.....

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

ஜிஎஸ்ஆர் said...

\\ழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்‌ஷனுக்கு பணம் கட்டனுமே?)\\

நானும் சில பதிவுகளை அனுப்பலாம் என நினைக்கிறேன் கொஞ்சம் வழிகாட்டமுடியுமா?

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ALHABSHIEST said...

உறுப்பினராய் சேர்த்து கொள்ளவும்.ஆனால் இன்னும் blog ஆரம்பிக்கவில்லை.

virutcham said...

ஆரம்பிக்கும் போது கிண்டலாக ஆரம்பித்து பின் உண்மையிலேயே நல்ல அறிவுரைகளோடு முடித்து இருப்பது பாராட்டத்தக்கது ( பாராட்டி எழுதிட்டேன் )

dummy id ஒட்டு, பின்னூட்டம் பற்றி வேறு யாரோ கூட குறிப்பிட்டு இருந்தாங்க. உண்மை தானா?

Guruji said...

நான் பிளாக் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது . பிளாக் ல் உள்ள அத்தனை நெளிவு சுளிவையும் ஒருங்கே வெளியிட்ட உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது . நன்றி

Sanjai Gandhi said...

//மிட்நைட் 12 மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.//

பாகிஸ்தான்ல அப்போ பகலா இருக்குமா சார்?

//.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.//

எதிர்காலத்துல உதவுமான்னு பாக்கறேன் சார்..

Sanjai Gandhi said...

எப்டி சார் இப்டி எல்லாம் யோசிச்சிங்க.. அமர்க்களம் சார்.. பின்னி எழுத்துட்டிங்க..

Sanjai Gandhi said...

இது என்னோட 3வது கமெண்ட் சார்.. எனக்கும் 3 கமெண்ட் 3 வோட் போடுவிங்களா சார்?

vanathy said...

நான் பதிவர் இல்லை.அரசியல் சினிமா சமூகம் இலக்கியம் ஆகிய துறைளில் உள்ள ஆர்வத்தால் பதிவர்களின் இடுகைகளை படிப்பேன்.அதுவும் எல்லா பதிவுகளும் படிக்க நேரம் இல்லை..மனதுக்கு பிடித்தால், நேரம் இருந்தால் பின்னூட்டம் போடுவதுண்டு.ஆனாலும் சில பதிவுலக நியதிகளை இப்போதுதான் புரிந்து கொண்டேன்.. சில வேளைகளில் வாசகர் ஆதரவு வாக்குகள் கிடைக்காமல் நல்ல பதிவுகள் எல்லோரையும் சென்றடைவதில்லை என்பது வருந்தத் தக்கது. இந்த சின்ன பதிவுலக வட்டத்திலும் உள்ளக அரசியல் இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது..
--வானதி.

என்னது நானு யாரா? said...

//பி.கு. இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.//

கமெண்ட் வரவழைக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? நல்ல நல்ல விஷயமா அராய்ச்சி செய்திருக்கீங்க நண்பா! இப்போ நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு பின்னூட்டமும், ஓட்டும் போட்டாச்சி! இப்போ உங்க முறை!

பனித்துளி சங்கர் said...

புதுமையான முயற்சி நகைச்சுவை ததும்பும் வகையில் பல நுணுக்கங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி .

பனித்துளி சங்கர் said...

///////12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.////////

இந்த யோசனை மிகவும் சிறப்பானது தோழரே வாழ்த்துக்கள் .
ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் . இயன்றவரை அனைவரையும் ஊக்குவிப்போம் .

VISA said...

:)

Kiruthigan said...

ராஜ தந்திரங்களை கரைத்துக்கடித்து விரல் நுணியில் வைத்திருக்கிறீரப்பா..

நீச்சல்காரன் said...

முக்கியாமான டவுட் உங்கள் ப்ளாக்கிற்கு முன்னாடியே பால்லோவரயிருந்தா இந்த சலுகை கிடையாதா?
துணை முக்கியமான டவுட் உங்கள் ப்ளாக்கிற்கு முன்னாடியே கமெண்ட் போட்டவுங்களுக்கும் இந்த சலுகை கிடையாதா?
உப துணை முக்கியமான டவுட் உங்க பாலோயர் ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா எதில பாலோ பண்ணுவேங்க?

கேள்விகளுக்கு பதிலை போட்டிக்கான அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்.
அல்லது ஏதாவது ஒரு நம்பருக்கு SMS அனுப்பவும்.

Chitra said...

நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறோம். பகிர்வுக்கு நன்றி. (வோட்டு - கமென்ட் - follow பண்ணிட்டேனே!)
101 followers - வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

Warning: Visiting this site may harm your computer!
The website at adrasaka.blogspot.com contains elements from the site tamil10.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for tamil10.com.
Learn more about how to protect yourself from harmful software online.
I understand that visiting this site may harm my computer.

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

அட புதுசா இருக்கே.....

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

eஎல்லாம் நீங்க கத்துக்குடுத்ததே

சி.பி.செந்தில்குமார் said...

ஜிஎஸ்ஆர் said...

\\ழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்‌ஷனுக்கு பணம் கட்டனுமே?)\\

நானும் சில பதிவுகளை அனுப்பலாம் என நினைக்கிறேன் கொஞ்சம் வழிகாட்டமுடியுமா?

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

தாராளமாக,உங்கள் படைப்பிற்கான லிங்க்கை பின்னூட்டமாக இடுங்கள்.நான் படித்து அதை எந்த புக்கிற்கு அனுப்பலாம்னு சொல்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Siva said...

உறுப்பினராய் சேர்த்து கொள்ளவும்.ஆனால் இன்னும் blog ஆரம்பிக்கவில்லை.

ஆரம்பிங்க,ஒண்ணும் அவசரம் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

virutcham said...

ஆரம்பிக்கும் போது கிண்டலாக ஆரம்பித்து பின் உண்மையிலேயே நல்ல அறிவுரைகளோடு முடித்து இருப்பது பாராட்டத்தக்கது ( பாராட்டி எழுதிட்டேன் )

dummy id ஒட்டு, பின்னூட்டம் பற்றி வேறு யாரோ கூட குறிப்பிட்டு இருந்தாங்க. உண்மை தானா?

ஆம்,ஏற்கனவே வந்தேமாதரம் சசிகுமார்,கேபிள்சங்கர்,நல்லநேரம் சதிஷ் குறிப்பிட்டதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...

நான் பிளாக் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது . பிளாக் ல் உள்ள அத்தனை நெளிவு சுளிவையும் ஒருங்கே வெளியிட்ட உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது . நன்றி

நன்றி குரு.நாமெல்லாம் பிளாக்மேட் ஆகிட்டோமா?

சி.பி.செந்தில்குமார் said...

SanjaiGandhi™ said...

//மிட்நைட் 12 மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.//

பாகிஸ்தான்ல அப்போ பகலா இருக்குமா சார்?

//.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.//

எதிர்காலத்துல உதவுமான்னு பாக்கறேன் சார்..

ஏன்,நிகழ்காலத்துல உதவாதா?

சி.பி.செந்தில்குமார் said...

SanjaiGandhi™ said...

எப்டி சார் இப்டி எல்லாம் யோசிச்சிங்க.. அமர்க்களம் சார்.. பின்னி எழுத்துட்டிங்க..

பாராட்டுக்கு நன்றி காந்தி,(இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?)

Umapathy said...

கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞ்ர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.

இது தெரியாம நெறைய கவிதை எழுதிட்டானே

சி.பி.செந்தில்குமார் said...

SanjaiGandhi™ said...

இது என்னோட 3வது கமெண்ட் சார்.. எனக்கும் 3 கமெண்ட் 3 வோட் போடுவிங்களா சார்?

கண்டிப்பா.வாக்கு குடுத்து ஏமாற்ற நான் என்ன அரசியல்வாதியா?மொய்க்கு மொய் கண்டிப்பா உண்டு.அரை மணி நேரத்துல வர்றேன்.

சி.பி.செந்தில்குமார் said...

vanathy said...

நான் பதிவர் இல்லை.அரசியல் சினிமா சமூகம் இலக்கியம் ஆகிய துறைளில் உள்ள ஆர்வத்தால் பதிவர்களின் இடுகைகளை படிப்பேன்.அதுவும் எல்லா பதிவுகளும் படிக்க நேரம் இல்லை..மனதுக்கு பிடித்தால், நேரம் இருந்தால் பின்னூட்டம் போடுவதுண்டு.ஆனாலும் சில பதிவுலக நியதிகளை இப்போதுதான் புரிந்து கொண்டேன்.. சில வேளைகளில் வாசகர் ஆதரவு வாக்குகள் கிடைக்காமல் நல்ல பதிவுகள் எல்லோரையும் சென்றடைவதில்லை என்பது வருந்தத் தக்கது. இந்த சின்ன பதிவுலக வட்டத்திலும் உள்ளக அரசியல் இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது..
--வானதி.

வருகைக்கு நன்றி வானதி

சி.பி.செந்தில்குமார் said...

என்னது நானு யாரா? said...

//பி.கு. இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.//

கமெண்ட் வரவழைக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? நல்ல நல்ல விஷயமா அராய்ச்சி செய்திருக்கீங்க நண்பா! இப்போ நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு பின்னூட்டமும், ஓட்டும் போட்டாச்சி! இப்போ உங்க முறை!

நன்றி.என் டர்ன் வந்தாச்சா.வெயிட் ,கொஞ்ச நேரத்துல வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புதுமையான முயற்சி நகைச்சுவை ததும்பும் வகையில் பல நுணுக்கங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி .

நன்றி சங்கர்

சி.பி.செந்தில்குமார் said...

புதுமையான முயற்சி நகைச்சுவை ததும்பும் வகையில் பல நுணுக்கங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி .

September 26, 2010 10:37 PM
Delete
Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.////////

இந்த யோசனை மிகவும் சிறப்பானது தோழரே வாழ்த்துக்கள் .
ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் . இயன்றவரை அனைவரையும் ஊக்குவிப்போம் .

ஆம் சங்கர்,அங்கீகாரத்துக்குத்தானே படைப்பாளி ஏங்குகிறான்?

சி.பி.செந்தில்குமார் said...

VISA said...

:)

???!!!

சி.பி.செந்தில்குமார் said...

Cool Boy கிருத்திகன். said...

ராஜ தந்திரங்களை கரைத்துக்கடித்து விரல் நுணியில் வைத்திருக்கிறீரப்பா..

September 26, 2010 11:15 PM

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை,நடப்பதை,பதிவுலகில் நடப்பதை சொன்னேன்.நன்றி கிரு

டிலீப் said...

அண்ணே நன்னா இருக்கு உங்க பதிவு.
நானும் உங்க சங்கத்தில சேந்து கொள்றன்

டிலீப் said...
This comment has been removed by the author.
நிகழ்காலத்தில்... said...

சங்கத்தில என்னையும் சேர்த்துங்குங்க செந்தில் :)

ஓட்டுப்போட்டுட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

நீச்சல்காரன் said...

முக்கியாமான டவுட் உங்கள் ப்ளாக்கிற்கு முன்னாடியே பால்லோவரயிருந்தா இந்த சலுகை கிடையாதா?

உண்டு.

துணை முக்கியமான டவுட் உங்கள் ப்ளாக்கிற்கு முன்னாடியே கமெண்ட் போட்டவுங்களுக்கும் இந்த சலுகை கிடையாதா?

உண்டு

உப துணை முக்கியமான டவுட் உங்க பாலோயர் ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா எதில பாலோ பண்ணுவேங்க?

இரண்டையும்.

கேள்விகளுக்கு பதிலை போட்டிக்கான அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்.
அல்லது ஏதாவது ஒரு நம்பருக்கு SMS அனுப்பவும்.
ஓகே

அப்பாடா,பதில் சொல்லியாச்சு.ஒரு பதிவு போடக்கூட இவ்வளவு யோசிக்கலை

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறோம். பகிர்வுக்கு நன்றி. (வோட்டு - கமென்ட் - follow பண்ணிட்டேனே!)
101 followers - வாழ்த்துக்கள்!

வருகைக்கும்,வாழ்த்துக்கும்,மொய்க்கும் நன்றி சித்ரா,பதில் மொய் அரை மணி நேரத்தில் வைக்கப்படும்.

சி.பி.செந்தில்குமார் said...

இளா சார்,ந்ச்சரிக்கைக்கு நன்றி,கவனிக்கிறேன்

karthikkumar said...

தல கலக்குறீங்க தல ரெண்டு நாளா உடம்பு சரியில்ல சிஸ்டம் பக்கமே வர முடியல இப்போ வந்து பாத்தா டாப்ல இருக்கீங்க 100 followers
வாழ்த்துக்கள் . சங்கம் வைத்து பதிவுலகம் வளர்த்த செந்தில் அப்டின்னு இனி இந்த உலகம் உங்களை அழைக்கட்டும்.

Vishnu said...

வலைஞ்சரே , வள்ளலே, வலைபிற்ப்பே, பச்சை எம்.ஜி.ஆரே, வருங்கால முதல்வரே, இப்பவே 100 சீட் கேட்கும் தகுதி உங்களுக்கு!

Anonymous said...

நிறைய டெக்னிக் சொல்லித்தந்தீங்க நண்பா...நன்றி..ஆனா நான் wordpress பதிவர்..follower சேக்கவும் முடியல...எங்களுக்கும் எதாவது spl tips கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்..நம்ம bloggers சுத்தி சுத்தி blogspot தான் ரவுண்டு கட்டுறாங்க..நாங்கெல்லாம் என்ன பண்றது..ஹா..ஹா..

கோவில்பட்டி ராஜ் said...

கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டேன்கலே நண்பா

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அண்ணே , நீங்க ரொம்ப நல்லவருண்ணே...!
என்னையும் உங்க சங்கத்தில சேத்துக்கோங்க..!
அன்புடன் வெற்றி,
http://vetripages.blogspot.com/

க.பாலாசி said...

சில ஐடியாக்கள் காமடியைத்தவிர்த்து நல்லாயிருக்குங்க..

கலக்கல்..

Unknown said...

நன்றி இதை பின்பற்றுகிறேன்

இளங்கோ said...

Super Anna :)

Blogger said...

நல்ல பதிவு
புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம் வாழ்க!!

திருபுவனம் வலை தளம் said...

நல்ல பதிவு
நானும் சங்கத்திலே இணைந்து விட்டேன்
தலைவா!
இன்னும் நிறைய டிப்ஸ் தர வேண்டும்

Unknown said...

நல்லா இருக்கு தல !
(http://last3rooms.blogspot.com)

Anonymous said...

ஆஹா, இந்த ரூட்டு புதுசா இருக்கே !!!
நான் கமெண்ட்டும் போட்டுட்டேன்,ஓட்டும் போட்டுட்டேன்.

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_23.html

சி.பி.செந்தில்குமார் said...

உமாபதி said...

கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞ்ர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.

இது தெரியாம நெறைய கவிதை எழுதிட்டானே

பரவால்ல விடுங்க ,நான் கூடத்தான் எழுதுனேன்

சி.பி.செந்தில்குமார் said...

Dileep said...

அண்ணே நன்னா இருக்கு உங்க பதிவு.
நானும் உங்க சங்கத்தில சேந்து கொள்றன்

சேருங்கோ,அள்ளுங்கோ,திலீப்

சி.பி.செந்தில்குமார் said...

நிகழ்காலத்தில்... said...

சங்கத்தில என்னையும் சேர்த்துங்குங்க செந்தில் :)

ஓட்டுப்போட்டுட்டேன்.

ஓகே,நிகழ்கால,உங்களுக்கு எல்லா காலமும் ஓட்டும்,கமெண்ட்டும் உண்டு.

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

தல கலக்குறீங்க தல ரெண்டு நாளா உடம்பு சரியில்ல சிஸ்டம் பக்கமே வர முடியல இப்போ வந்து பாத்தா டாப்ல இருக்கீங்க 100 followers
வாழ்த்துக்கள் . சங்கம் வைத்து பதிவுலகம் வளர்த்த செந்தில் அப்டின்னு இனி இந்த உலகம் உங்களை அழைக்கட்டும்.

அடடே,வாங்க கார்த்திக்,எங்கே காணோமெனு பார்த்தேன்.வாழ்த்துக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வலைஞ்சரே , வள்ளலே, வலைபிற்ப்பே, பச்சை எம்.ஜி.ஆரே, வருங்கால முதல்வரே, இப்பவே 100 சீட் கேட்கும் தகுதி உங்களுக்கு!

ஏன்னே இப்படி?உங்க இதயத்தில் இடம் கொடுத்தா போதும்னே (நன்றி - கலைஞர்)

சி.பி.செந்தில்குமார் said...

வலைஞ்சரே , வள்ளலே, வலைபிற்ப்பே, பச்சை எம்.ஜி.ஆரே, வருங்கால முதல்வரே, இப்பவே 100 சீட் கேட்கும் தகுதி உங்களுக்கு!

September 27, 2010 10:39 AM
Delete
OpenID padaipali said...

நிறைய டெக்னிக் சொல்லித்தந்தீங்க நண்பா...நன்றி..ஆனா நான் wordpress பதிவர்..follower சேக்கவும் முடியல...எங்களுக்கும் எதாவது spl tips கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்..நம்ம bloggers சுத்தி சுத்தி blogspot தான் ரவுண்டு கட்டுறாங்க..நாங்கெல்லாம் என்ன பண்றது..ஹா..ஹா..

ஓ,இது வேறயா.யோசிக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

பாக்கிய ராஜ் குமார் said...

கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டேன்கலே நண்பா

அதனால பிடிச்சு உள்ளே போட்டிருவாங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அண்ணே , நீங்க ரொம்ப நல்லவருண்ணே...!
என்னையும் உங்க சங்கத்தில சேத்துக்கோங்க..!
அன்புடன் வெற்றி,
http://vetripages.blogspot.com/

நம்பிட்டேன் வாங்க பழகலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

க.பாலாசி said...

சில ஐடியாக்கள் காமடியைத்தவிர்த்து நல்லாயிருக்குங்க..

கலக்கல்..

நன்றி பாலாஜி,எதெது நல்லாலைனு சொல்லுங்க,தெரின்சுக்கறேன்,திருத்திக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

க.பாலாசி said...

சில ஐடியாக்கள் காமடியைத்தவிர்த்து நல்லாயிருக்குங்க..

கலக்கல்..

ஓகே,ஃபாலோ பண்ணுங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

இளங்கோ said...

Super Anna :)

நன்றி இளங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

இளங்கோ said...

Super Anna :)

ஓகே,சூப்பர்னு சொன்ன இளங்கோவுக்கு ஒரு ஓ போடுவோம்,ஓட்டும் போடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger The Rebel said...

நல்ல பதிவு
புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம் வாழ்க!!

வாழ்த்துக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

THIRUBUVANAM said...

நல்ல பதிவு
நானும் சங்கத்திலே இணைந்து விட்டேன்
தலைவா!
இன்னும் நிறைய டிப்ஸ் தர வேண்டும்

நான் ஹோட்டல் சர்வரா?ஹி ஹி சும்மா ஜோக்,எனக்கு தெரிஞ்சதை தர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

குத்தாலத்தான் said...

நல்லா இருக்கு தல !
(http://last3rooms.blogspot.com)

September 27, 2010 4:24 PM

நன்றி குத்தாலத்தான்,24 மணி நேரத்துல அங்கே வர்ற்றென்

சி.பி.செந்தில்குமார் said...

ஷேக்பாஷா said...

ஆஹா, இந்த ரூட்டு புதுசா இருக்கே !!!
நான் கமெண்ட்டும் போட்டுட்டேன்,ஓட்டும் போட்டுட்டேன்.

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_23.html

புதுசு கண்ணா புதுசு,வந்து நானும் பதில் மொய் செய்யறேன்,24 மணி நேரம் அவகாசம் தாங்க

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அசத்தரதுக்குன்னே புறந்திங்க போலிருக்கே.. அசத்துங்க. காலம் ஒருநாள் உங்களுக்கு ஒரு நாள் புகழ் மாலை சூட்டும்!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க வாக்கு பலிக்கட்டும்,நன்றி பூங்கதிர்

geethappriyan said...

ரொம்ப நல்ல கருத்துக்கள். உங்க அடக்கமே உங்களுக்கு பிளஸ்,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

சார்,உங்க விமர்சந்த்தின் ரசிகன் நான்,பாராட்டுக்கு நன்றி

ப.கந்தசாமி said...

என்னையும் சேர்த்துக்கோங்கோ.

சி.பி.செந்தில்குமார் said...

கண்டிப்பா,தலை இல்லாமல் வால் ஆடலாமா?ஆடுமா?டாக்டர் சார்

Unknown said...

nalla pathivu miha sirantha yosanigal

முகுந்த்; Amma said...

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கத்தில உறுப்பினராக சந்தா எதாவது செலுத்தனுமா என்ன :))?

Speed Master said...

அண்ணே , என்னையும் உங்க சங்கத்தில சேத்துக்கோங்க

Little late

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

How to get alaska Ranking..Please give me the link..நாங்களும் செய்வோம்ல..

வசூல்ராஜாmbbs said...

அப்பாடா உங்களீன் வெற்றீயின் ரகசியம் தெரிந்துகொண்டென்,

Preethi Karikalan said...

நானும் புதிய பதிவர் தான்.., உங்களது பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி.என்னுடைய ப்லோகயும் முதிந்தல் விசிட் செயவும். உங்களது கருத்துக்காக காத்திருகிறேன். www.sindhanaisolaiyilae.blogspot.com

பெயருள்ள என்னய்யா இருக்கு said...

நன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ருந்து கொண்டதுக்கு. புதிய பதிவலாணன் எனக்கு இது ரொம்ப உபயோகமாக இருந்தது.

Anonymous said...

Really Nice... ll try. ha...

Aathira mullai said...

நானும் சேர்ந்துட்டேன் சங்கத்துல.
ஆமாம் அது எப்படி பதிவுக்கு, பதிலுக்கு, குடும்பத்துக்கு, பர்ஸுக்கு, கண்ணுக்குன்னு நாலா பக்கமும் சிந்திச்சு ஐடியா கொடுத்து இருக்கீங்க... ரொம்ப யூஸ்ஃபுல்ல்ல்ல்ல்... பதிவு.
நன்றி செந்தில் சார்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே சூப்பர்டா அண்ணே....!!!

cheena (சீனா) said...

அன்பின் சிபி - கலக்கல் - சூப்பர் - புதுசா வரவங்க எல்லாம் ஒரு வாரத்துல பெரிய ஆளாயிடுவாங்க - நட்புடன் சீனா

Prabu Krishna said...

நல்ல டிப்ஸ்..... கலக்குங்க.

கோகுல் said...

புதுப்புது மார்கெட்டிங் டெக்னிக் சொல்லித்தரும்
புதிய பதிவர் முன்னேற்ற சங்க தலைவர் சிபி வாழ்க!வாழ்க!

முன்பனிக்காலம் said...

ஆறு கமென்ட் விழுந்தா தமிழ் மணத்தில தெரியும் என்று சொன்னீங்க, அது ஓகே, ஆனா அந்த ஆறு கமென்ட் ஐயும் எப்பிடி போடலாம் என்று சொன்னீங்க பாருங்க....அங்க தான் நீங்க நிக்கிறீங்க..