Thursday, September 16, 2010

பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்

பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
தி.மு.க - த மா க கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர்,பி ஜே பி அனுதாபியாக இருந்தாலும் தான் எழுதும் அரசியல் கட்டுரைகளில் நடுநிலைமை தவறாதவர்,அப்படிப்பட்டவர் இன்று வெளியாகி இருக்கும் துக்ளக் இதழில் எழுதிய தலையங்கத்தின் சாரம் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர் அப்படி என்ன எழுதினார் என்பதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
புதுடெல்லி, செப்.7-

பிரதமர் மன்மோகன்சிங், நேற்று பத்திரிகை ஆசிரியர்களை தனது வீட்டிற்கு அழைத்து, உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்றில், அரசு `குடோன்'களில் வீணாகிவரும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்? இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”

ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே.

நன்றாய் தெரிகிறது நீங்கள் யாருக்கான அரசு என்று. உங்கள் சம்பளம் மட்டும் 5  மடங்கு  உயர்த்தியது போதாது என்பீர்கள்.  ஏழைகள் என்றால் கசக்கிறது. செருப்பால் அடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள்.

இது குறித்து நண்பர் வேந்தன் அரசு கூறியது
நம் நாட்டில் 100 கோடி டன் தானியங்கள் விளையுதுனா, அது முழுமையும்
நாட்டு மக்களுக்கு போய் அடையணும்.
அரசு அவற்றில் பெரும்பான்மை வாங்கி பதுக்கிவச்சா ஏழைமக்கள் என்ன
செய்வாங்க? இது சந்தையில் இருந்தால் தானியங்களின் விலை குறையும் ஏழைகளால்
வாங்க இயலும்..

இதில் ஒரு பகுதியை அழுகி வீணாக்குவது என்பதை சமூக குற்றம்.
உணவுப்பொருட்கள் இருந்தால் என்ன விலை என்றாலும் வாங்கி பசியாறலாம்
இல்லாமலே போனால்? அவர்களால் தாமே தானியங்களை விளைவிக்கத்தான் முடியுமா?

பில்கேட்சு போன்ற ஒரு கோடீசுவரன் வந்து 100 கோடி டன் தானியங்களையும்
வாங்கி கடலில் கொட்டினா அரசு சும்மா இருக்குமா?

அதனால் தானியங்களி வீணடித்த உணவுத்துறை அமைச்சரை கழுவில் ஏற்றணும்.

நீதிபதிகளுக்கு பொலிடகலி கரெக்ட் ஆக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதனால்
அவர்கள் கருத்தை அரசு கட்டாயம் கேட்கணும்.  மேலவையில் உடகார்ந்து
சொன்னால்தான் அறிஞர்களின் கருத்தா?

நண்பர் அசோக் கூறியது
தானியங்கள் விலை கூடினால், அடுத்த முறை போட்டி போட்டு கொண்டு விலை அதிகமுள்ள தானியங்களை விவசாயிகள் விளைவிப்பார்கள். அதே போல் விலை குறைந்தால் அந்த தானியங்களை விளைவிக்க நாட்டம் காட்ட மாட்டார்கள்.

தானியத்தை வீணாக்குபவனும் நட்டத்தை அடையாமல் இல்லை. நட்டத்தை நோக்கி தொழில் நடத்த அவனும் மூடன் அல்ல. தானியம் வீணாகும் நிலையில், போக்குவரத்து செலவு, தானிய விலையை விட அதிகமாக இருந்தால் தவிர அவன் அடி மாட்டு விலைக்கு தன் பொருளை விற்றே தீருவான்.

சந்தை விதிகள் சுதந்திரமாக இயங்க விடுங்கள். அதை விட திறனான வழி முறைகள் வேறு இல்லை.

இப்போது மேட்டருக்கு வருவோம்.சோ அவர்கள் பிரதமர் செய்ததும் ,சொன்னதும் சரிதான் என தலையங்கம் எழுதி இருக்கிறார்.ஏழைகள் பட்டினி இருந்தாலும்  பரவாயில்லை,உணவுப்பொருள்கள் வீணானாலும் பரவாயில்லை,சட்டப்படி தான் நடக்கனும் என்கிறார்

என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

1.ஜெ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரே அது சட்டப்படியா?

2.கலைஞர் 25 தலைமுறைக்கு கோடிக்கணக்கி சொத்து சேர்த்தாரே அதுவும் சட்டப்படியா?

3.ஆ ராசா 1000 கோடி ஊழல் பண்ணியும் கூட்டணி அதர்மப்படி அதை கண்டுகொள்ளாமல் பி எம் இருக்காரே அது சட்டப்படியா?

4.போபர்ஸ் ஊக்ஷலில் ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்டது தெரிந்தும் மூடி மறைக்கப்படதே,அது சட்டப்படியா?

ஏழைகளுக்கு ஒரு நீதி,பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும். 4 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை என.கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை நடக்கும்போது சட்டம் மீறப்பட்டால்தான் என்ன? மனிதாபிமானம் எப்போது உயிர் பெறும்?  

32 comments:

karthikkumar said...

me the first antha dvdeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

Chitra said...

என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

......... Good question!!!

Anonymous said...

அடடா சூப்பர்..அருமையான கேள்விகள்..கலக்குங்க..சூப்பர் ஹிட் கட்டுரை...

karthikkumar said...

////நம் நாட்டில் 100 கோடி டன் தானியங்கள் விளையுதுனா, அது முழுமையும்
நாட்டு மக்களுக்கு போய் அடையணும்.
அரசு அவற்றில் பெரும்பான்மை வாங்கி பதுக்கிவச்சா ஏழைமக்கள் என்ன
செய்வாங்க? இது சந்தையில் இருந்தால் தானியங்களின் விலை குறையும் ஏழைகளால்
வாங்க இயலும்..///ஏழை மக்களுக்கு இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் உதவ போவதில்லை.... மன்மோகன் சிங்க்ஹின் இந்த பதில் எரிச்சலை தான் வரவழைக்கிறது... இந்தியா இன்னும் எதனை காலம்தான் இந்த மாதிரி அரசியல்வாதிகள் கையில் சிக்குமோ௦......

karthikkumar said...

1st comment summa....... edhum thappa nenaichukatheenga

podang_maan said...

சங்கராச்சாரி செக்ஸ் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யபட்ட போது இதே சட்டங்கள் மீறப்பட வேண்டும் என்று பேசினான் சோ.

அந்த உதாரணத்தை பதிவில் கொடுக்கப்பட தவறிவிட்டது.

KANTHANAAR said...

சோ எந்த காலத்தில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்... அப்படிப் பேசினால் இந்த உலகமே அழிந்து விடாதா.....

சதுக்க பூதம் said...

//மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் //

சோவின் எந்த ஒரு கொள்கையும் நடு நிலையற்றது என்பதுதான் என் கருத்து. ஆனால் இந்த பிரச்சனை வேறு. சுப்ரீம் கோர்ட்டின் தலையீடை இந்த பிரச்ச்னையோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அரசு என்பது மக்களாள் தேர்ந்தெடுக்க பட்டு ஓரளவு அக்கவுண்டபிலிட்டி உள்ள அமைப்பு. எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க பல கோணத்திலிருந்து ஆராய கட்டுமானங்கள் ஏற்கனவே உள்ளது. எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க அரசுக்கு கோர்ட்டால் பரிந்துரை மட்டும் செய்ய முடியும். ஆனால் கொள்கை முடிவுகளை கோர்ட் எடுத்து நடைமுறை படுத்த சொல்ல தொடங்கினால் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எதிர் கொள்ள போவது அரசு தான். அதன் ரெஸ்பான்ஸிபிலிட்டியை ஏற்க போவது அரசு தான். சுப்ரீம் கோர்ட் கொள்கை ரீதியான முடிவுகளை அறிவிக்க தொடங்கினால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்.

VISA said...

உங்கள் கட்டுரைகள் அடிக்கடி படிப்பதுண்டு இது டாப் ரகம்

Madhavan Srinivasagopalan said...

அந்த துக்ளக்கின் தலையங்கத்தை நான் இன்னும் படிக்கவில்லை.. எனவே கருத்து சொல்ல முடியாது..
இல்லன்னா. என்னையக்கோடா நீங்க மன்கோன் சிங்கு கணக்குல செத்துடுவீங்க //Ref : "... இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”
ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே...."

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சார் ,
அவர் இந்த மாதிரி தான் பேசுவார்..,பசின்னா என்ன தெரியாதவன் எல்லாம் தலையங்கம் எழுதினால் இப்படி தான் நடக்கும் ...மக்களுகாக தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை ..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nach

CNC Job Offers said...

சட்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டும். இங்கே எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதில்தான் சிக்கல்? அமேரிக்காவின் சட்...? தேவைக்கு அதிகமாகவுள்ள கோதுமையை கடலில் கொட்டுவது காரணம் கேட்டால் விலைத்தளம்பலைத் தடுப்பதற்காகவாம். அரேபியாவின் சட்..? பேரித்தம் பலம் தேவைக்கு அதிகமானதை பிர ஏழைநாடுகளுக்கு இலவசமாக கொடுப்பது ஆனால் அதற்கான விலைத்தளம்பலை நேர்த்தியாக வைத்திருப்பது. சற்று சிந்திக்க வேண்டிய விசயம். நன்றி

புரட்சித்தலைவன் said...

so.........

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

me the first antha dvdeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
September 16, 2010 10:12 AM

good karthik,adress pls

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

......... Good question!!!

thanx citra

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடடா சூப்பர்..அருமையான கேள்விகள்..கலக்குங்க..சூப்பர் ஹிட் கட்டுரை...

thanxpa

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

1st comment summa....... edhum thappa nenaichukatheenga

ok ok no sorry ,no thanx,no formalities within friendship

சி.பி.செந்தில்குமார் said...

KANTHANAAR said...

சோ எந்த காலத்தில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்... அப்படிப் பேசினால் இந்த உலகமே அழிந்து விடாதா.....

thanx mr kandhanar

சி.பி.செந்தில்குமார் said...

சதுக்க பூதம் said...

//மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் //

சோவின் எந்த ஒரு கொள்கையும் நடு நிலையற்றது என்பதுதான் என் கருத்து. ஆனால் இந்த பிரச்சனை வேறு. சுப்ரீம் கோர்ட்டின் தலையீடை இந்த பிரச்ச்னையோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அரசு என்பது மக்களாள் தேர்ந்தெடுக்க பட்டு ஓரளவு அக்கவுண்டபிலிட்டி உள்ள அமைப்பு. எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க பல கோணத்திலிருந்து ஆராய கட்டுமானங்கள் ஏற்கனவே உள்ளது. எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க அரசுக்கு கோர்ட்டால் பரிந்துரை மட்டும் செய்ய முடியும். ஆனால் கொள்கை முடிவுகளை கோர்ட் எடுத்து நடைமுறை படுத்த சொல்ல தொடங்கினால் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எதிர் கொள்ள போவது அரசு தான். அதன் ரெஸ்பான்ஸிபிலிட்டியை ஏற்க போவது அரசு தான். சுப்ரீம் கோர்ட் கொள்கை ரீதியான முடிவுகளை அறிவிக்க தொடங்கினால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்.

thanx for your valuable coments mr sadhukkapootham

சி.பி.செந்தில்குமார் said...

thanks mr visa

சி.பி.செந்தில்குமார் said...

Madhavan said...

அந்த துக்ளக்கின் தலையங்கத்தை நான் இன்னும் படிக்கவில்லை.. எனவே கருத்து சொல்ல முடியாது..
இல்லன்னா. என்னையக்கோடா நீங்க மன்கோன் சிங்கு கணக்குல செத்துடுவீங்க //Ref : "... இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”
ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே...."

mr mdhavan,good coment

சி.பி.செந்தில்குமார் said...

பனங்காட்டு நரி said...

சார் ,
அவர் இந்த மாதிரி தான் பேசுவார்..,பசின்னா என்ன தெரியாதவன் எல்லாம் தலையங்கம் எழுதினால் இப்படி தான் நடக்கும் ...மக்களுகாக தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை ..,
mr panankaattu nari,thanx for your support

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nach

thanx ramesh for such coment

சி.பி.செந்தில்குமார் said...

கஹடோவிட said...

சட்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டும். இங்கே எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதில்தான் சிக்கல்? அமேரிக்காவின் சட்...? தேவைக்கு அதிகமாகவுள்ள கோதுமையை கடலில் கொட்டுவது காரணம் கேட்டால் விலைத்தளம்பலைத் தடுப்பதற்காகவாம். அரேபியாவின் சட்..? பேரித்தம் பலம் தேவைக்கு அதிகமானதை பிர ஏழைநாடுகளுக்கு இலவசமாக கொடுப்பது ஆனால் அதற்கான விலைத்தளம்பலை நேர்த்தியாக வைத்திருப்பது. சற்று சிந்திக்க வேண்டிய விசயம். நன்றி

thanx sir

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

so.........

September 16, 2010 7:50 PM

mr puratchi,your comrmt is so sweet

ஆட்டையாம்பட்டி அம்பி said...

//பி ஜே பி அனுதாபியாக இருந்தாலும் தான் எழுதும் அரசியல் கட்டுரைகளில் நடுநிலைமை தவறாதவர்...///

உங்களுக்கு நகைச்சுவையும் வஞ்சப் புகழ்ச்சியும் இயல்பாக வருகிறது...

எழுத்துலகில் நீங்கள் "சோ" மாதிரி முன்னுக்கு வருவீர்கள். எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

Anonymous said...

அடேங்கப்பா..செம பரபரப்பா இருக்கு பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

mr,ambi,i dont know whether u r appriciating me or kindaling me, any way thanx

சி.பி.செந்தில்குமார் said...

sathish,satti suttadhadaa kai vittadhadaa.

Unknown said...

500 ரூபாய்க்கு ஓட்ட விக்கிற நாம இத பத்தி எல்லாம் பேசகூடாது

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

500 ரூபாய்க்கு ஓட்ட விக்கிற நாம இத பத்தி எல்லாம் பேசகூடாது

thanx for coming