Tuesday, September 07, 2010

சினிமா டைட்டிலில் கவிதைப்போட்டி


Fifty Seven (by ..priya..)
சில வருடங்களுக்கு முன் தமிழன் எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில்
சில சினிமா டைட்டில்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் கவிதை கேட்டிருந்தார்கள்.
சினிமாவில் சிச்சுவேசன் சாங் கேட்பது போல்தான் இதுவும்.தானாக உருவாகும் கவிதைகளை விட இது போல் நிர்ப்பந்தங்களில் உருவாகும் கவிதைகளில் வீரியம் குறைவாக இருக்கும்.சினி ஃபீல்டில் அதிக முறை திருத்தம் செய்து,அதிக வரிகளில் எடிட் செய்து உருவான பாடல் ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை.இதில் வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்.

முதலில் பரிசு பெற்ற கவிதை.

நேருக்கு நேர்




இனி என்னை மறந்து விடுங்கள் 

என்று தோழியிடம் சொல்லி விட்டாய்.

நமக்குள் இனி ஒன்றுமில்லை என 

கடிதம் எழுதினாய்.

என் வாழ்வில் இனி குறுக்கிடக்கூடாது 

என ஆள் அனுப்பினாய்.

சரி,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் உன்னால் 

நேருக்கு நேர் நின்று 

என் கண்களைப்பார்த்து சொல்ல முடியுமா? 

 இனி பிரசுரத்துக்கு தேர்வானவை.


காதல்

உச்சரிக்கும்போது உதடுகள் கூட


ஒன்று சேர்வதில்லை


காதல்.




நாணயம் இல்லாத நாணயம் 


தொட்டுப்பார்க்க மட்டுமெ சொந்தம் 

பேங்க் கேஷியர் எண்ணும் பணம்.



 ஏட்டிக்குப்போட்டி


கதை எழுதும்போது கிடைக்கவில்லை

காதலிக்கும்போது மட்டும் 

உருவாகி விட்டது கரு.

கவிதைகளை வெளீயிடுவதில் முன்பிருந்ததை விட இப்போது குமுதமும்,விகடனும் அதிக அக்கறை செலுத்துகின்றன.குமுதத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள்,மழலை சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதினால் 20 நாட்களில் போட்டு விடுவார்கள்.விகடனில் காதல் கவிதைகளும்,மனித மன விகாரங்கள்  பற்றிய அலசல்கள்,வித்யாசமான கருக்கள் இருந்தால் பிரசுரம் ஆகி விடும்.குமுதம் ரூ 50 பரிசும், விகடன் ரூ 250 பரிசும் தருகின்றன.

15 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nall Pakirvu..

karthikkumar said...

//வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்// nice info

Chitra said...

பகிர்வுக்கு நன்றி. :-)

Anonymous said...

ஸ்வாரஸ்யமான தகவல்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா..சதிஷ்..இந்த தடவ நீ லேட்..

சி.பி.செந்தில்குமார் said...

கார்திக்//
சித்ரா..
வருகைக்கு நன்றி..கார்த்திக்,மூவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி

இடைவெளிகள் said...

மீண்டும் ஒருமுறை நல்ல தரமான கவிதை படித்த திருப்தி. முன்னணி பத்திரிகைகளின் சன்மான விபரம்ங்கறது கம்பெனி சீக்ரெட் வெளியே சொல்லிபுடாதீக

IKrishs said...

//வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்//

Ariya thagaval.. Meethi asai list yennanu theriyuma? mudinthaal athaiyum pathiyalame?

சி.பி.செந்தில்குமார் said...

irenipuram paal raasayyaa, come,thanx. the secret get its importance while it is exposed.am i right or not

சி.பி.செந்தில்குமார் said...

thankq krishkumar,i think our people will not like that lengthy matter,bwcause that will come 240 lines.

சி.பி.செந்தில்குமார் said...

mr verumpaya,thanx for coming

சி.பி.செந்தில்குமார் said...

nallenna citra,thanx for coming,and comenting

சி.பி.செந்தில்குமார் said...

karthik,thanks for your coment
//வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்// nice info

சி.பி.செந்தில்குமார் said...

SATHISH,AS PER YOUR STAEMENT THE INTEREST THINGS R ONLY THE INFORMATIONS,NOT MY CONTRIBUTION,AM I RIGHT?
(IPPDITHTHAAN VAMBUKKU IZUKKANUM.)

Learn said...

அருமை பாராட்டுக்கள்

www.tamilthottam.in