பருத்திவீரன் படம் ஹிட் ஆன சமயத்தில் வெளிவந்த ஒரு ஆங்கில படத்துக்கு 300 பருத்தி வீரர்கள் என டைட்டில் வைத்த மாதிரி இந்தப்படத்துக்கு 365 காதல் கடிதங்கள் என டைட்டில் வைத்து உள்ளார்கள்.வைத்த டைட்டிலை கரெக்ட் பண்ண ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு வருடம் தினசரி ஒரு கடிதம் அனுப்புவது மாதிரி ஒப்பேற்றி இருக்கிறார்கள்.
படத்தின் கதை என்ன?16 வயசுப்பையன் கூடப்படிக்கும் 16 வயசுப்பொண்ணை லவ் பண்ணுகிறான்.(இந்த காலத்தில் 16 வயசுப்பையன் 34 வயசுப்பெண்ணை லவ் பண்றதுதான் ஃபேஷன் - உபயம் கிரண் நடித்த வாலிபமே வா.)+2 பாஸ் பண்ணினால் காதலை ஏற்றுக்கொள்வதாக ஹீரோயின் கூறுகிறாள்.(ஆஹா,என்னே ஒரு கஷ்டமான கண்டிஷன்?)கஷ்டப்பட்டு பாஸ் ஆன ஹீரோ ஹீரோயின் வாயால் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறான்.இந்த சமயத்தில் ஹீரோயின் இட மாற்றம் காரணமாக சென்னை செல்கிறாள்.அட்ரஸ் குடுத்துவிட்டு.ஹீரோ கடிதமாக போட்டுத்தள்ளுகிறான்.பதிலே இல்லை.ஹீரோயின் அம்மா அதை ஒளீத்து வைக்கிறாள்.4 வருடங்கள் கழித்து ஹீரோயின் ஹீரோ ஊருக்கு வந்து ஹீரோவை சந்திக்கும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறாள். 6 வருடங்கள் சிகிச்சை செய்தும் குணம் ஆகாததால் ஹீரோயின் தந்தை அவளை கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.உடனே ஹீரோ தற்கொலை செய்துகொள்கிறார்.அவர் இறந்ததும் ஹீரோயினுக்கு பழைய நினைவு திரும்பி விடுகிறது.
ஹீரோ செலக்ஷன் மஹா மட்டம்.ஹீரோயின் செலக்ஷன் சுமார்.தன்னை ஹீரோ பார்க்கும்போது பெருமிதமும்,வெட்கமும் கலந்த நாணச்சிரிப்பு உதிர்ப்பது அருமை.மற்றபடி தேறாத கேஸ்.
ஓப்பனிங்க் சீனில் ஹீரோ இன்ஸ்பெக்டர் மனைவி என தெரியாமல் ஏடாகூட போஸில் ஃபோட்டோ எடுத்து மாட்டுவது வறட்சியான காமெடி.டீ கொண்டு வர்றவனுக்கு எல்லாம் டீட்ட்ய்ல் சொல்லனுமா என அறிமுகமாகும் கருணாஸ் காமெடி எடுபடவில்லை.
பொக்கிஷம் படத்தில் சேரன் கடித இலக்கியத்தை மையமாக வைத்து கதை எழுதும்போதே புத்திசாலித்தனமாக கதைக்களம் 1980 களில் செல்ஃபோன் அதிக உபயோகத்தில் இல்லாத காலம் என்பது மாதிரி பீரியட் ஃபிலிம் ஆக்கி விட்டிருந்தார்.ஆனால் இந்தப்படத்தில் ஹீரோயின் கையில் செல்ஃபோன் வைத்திருக்கிறார்,ஆனால் ஒரு முறை கூட ஹீரோவுடன் ஃபோனில் பேசாமல் லெட்டரையே நம்பி இருப்பது திரைக்கதையில் முதல் சறுக்கல்
ஹீரொயின் பாத்திரப்படைப்பில் கோட்டை விட்டாரா, அல்லது எடிட்டரின் தவறா தெரியவில்லை ஹீரோயின் ஒரு காட்சியில் ஹீரோவை காதலிப்பது போலவும் அடுத்த காட்சியில் இது வெறும் நட்புதான் என சொல்லுவது போலவும் அமைந்து பார்வையாளர்களை குழப்புகிறது.
என் 20 வருஷ அனுபவத்தில் மப்புல இருக்கறவன் கல்லை சரியா போட்டதே இல்லை, போடுடா பார்ப்போம் என குடிகாரனை உசுப்பேற்றும் காமெடி ஓகே ரகம்.நட்பு படத்தில் செந்தில் 10 பைசா பைத்தியமாக வந்தது மாதிரி இதில் முத்துக்காளை மல்லிகா பைத்தியமாக வருகிறார்.அவர் நடிப்பு ஓவர் ஆக்டிங்.சுத்தமா சிரிப்பே வர்லை,எரிச்சல்தான் வருது.
ஹீரோ ஹீரோயினுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறார்.அதற்கு ஜாஸ்மின் இல்லம் என பெயர் வைக்கிறார்.பேசாமல் படத்துக்கு மல்லிகை இல்லம் என டைட்டில் வைத்திருக்கலாம்.
சைக்கிள் தேவதை சாலையில் ஐஸ் மழை பாடல் காட்சி நல்ல ரசனையாக
எடுக்கபட்டுள்ளது. முதல் மழை முதல் முத்தம் பாடல் காட்சி முதல் மழை என் மனசுக்குள் தெறித்திட்ட என்ற பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
படத்தில் நம்ப முடியாத சீன்கள்.
1.ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த வீட்டில் கள்ளக்காதலர்கள் ஒதுங்கும் இடத்தில் ஹீரோவும்,ஹீரோயினும் கம்பைன் ஸ்டடி பண்ணுவதும்,அதை ஹீரோவின் அப்பாவே பார்த்து பூரிப்பதும்
(கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வானாம் -உபயம் திண்டுக்கல் ஐ லியோனி)
2.ஹீரொயின் காலில் ஹீரோ விழுந்து கெஞ்சியதும் ஹீரோயின் காதலிக்க ஒத்துக்கொள்வது. (காதலையே கேவலப்படுத்தி விட்டார்கள் கூடவே ஆண் வர்க்கத்தை)
3.எந்தத்தந்தையாவது கோமா ஸ்டேஜில் இருக்கும் மகளை கருணைக்கொலை செய்ய முன் வருவாரா?( உளவியல் நிபுணர் ஒருவரிடம் விசாரித்தேன்,சான்ஸே இல்லை என்றார்.வயதானவர்கள் என்றால் ஓகே,இள வயதுப்பெண்ணை கொலை செய்ய யாரும் நினைக்க மாட்டார்களாம்.)
4. 6 வருடங்கள் கழித்து ஹீரோவை சந்திக்க வரும் ஹீரோயின் ஏன் இத்தனை நாட்களாக கடிதமே போடலை என ஏன் கேட்கலை?ஜஸ்ட் லைக் தட் போயிடறாரே?
5. எந்த ஸ்கூலில் பிட் அடித்த மாணவனை உடனே டி சி குடுத்து அனுப்புகிறார்கள்?
படத்தில் வரும் ரசனையான சீன்கள்
1.காதலியின் மேல் உதட்டில் தோன்றும் வியர்வைத்துளிகளை இங்க் ஸ்பில்லரால் காதலன் சேகரிப்பது.(காதல் என்றாலே பைத்தியக்காரத்தனங்களின் தொகுப்புதானே)
2.என்னால என் காதலியை மறக்க முடியலை என உதார் விடும் எடுபிடியிடம் கருணாஸ் “எங்க முதலாளியைப்பார்,9 பேரை வெச்சிருந்தார்,எல்லாரையும் அப்பப்ப மறந்துடுவார் என அவரை வாருவது
படத்தில் வரும் ரசனையான வசனங்கள்
1.அதிக சோகத்தையும்,அதிக சந்தோஷத்தையும் தருவது காதல் மட்டும்தான்.
2. மரணம் என்பது இறைவன் தர்ற சுகமான தூக்கம்.
3.செம கட்டையா நிக்குதே பொண்ணு,என்னய்யா பஞ்சாயத்து? ம்,கட்டை பஞ்சாயத்து.
4.அறிவாளி வேலையை தேடிப்போவான்,புத்திசாலியை வேலை தேடி வரும்.
5.டேய்,எப்படியாவது ட்ரை பண்ணி என்னை கரெக்ட் பண்ணறதுலயே நீ குறியா இருக்கேடா.
ஆனா முடியலையே.
6.அந்தப்பொண்ணைப்பார்த்தா தப்பானவளா தெரியலை,செத்துப்போன என் ஆத்தா மாதிரியே இருக்கா.
உன் ஆத்தா ஜீன்ஸ் போட்டிருக்குமா?
7. மூளை வளரனும்னு உன் பையனுக்கு முட்டைக்காபி போட்டுத்தர்றே,உன் பையன் பரீட்சைல முட்டை வாங்கக்கூடாதுங்கறதுக்காக காப்பி அடிக்கறான்.
8.உன் பிள்ளை ராமர் மாதிரியா?
ஆமாமா,ஒரு பொண்ணுக்கு காதல் பாலம் போட்டுட்டு இருக்கான்
சமீப காலமாக வரும் காதல் படங்களில் ஒரு மோசமான க்ளிசே வருகிறது. அது க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது.இது மாபெரும் தவறு என்பதை அந்த படங்களின் தோல்வி உணர்த்துகிறது.
இந்தப்படம் பி சி செண்ட்டர்களில் ஏழு நாள் ஓடினாலே அது ஏழாவது அதிசயம்தான்.
17 comments:
இன்னொரு மெகா மொக்க படமா.................. எஸ்கேப்.................
பிரிச்சி மேய்றதுன்னா இதுதானா...?
அப்படி ஒரு விமர்சனம். நன்று!
neenga romba nallavatrunkooo
செந்தில் சார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போலிருக்கே. சத்தியமா அவர் ரொம்ப நல்லவர்தான்
முக்கியமான வசனங்களை மேற்கோல் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது
வெறும்பய said...
இன்னொரு மெகா மொக்க படமா.................. எஸ்கேப்.................
u escape, i?
velji said...
பிரிச்சி மேய்றதுன்னா இதுதானா...?
அப்படி ஒரு விமர்சனம். நன்று!
thankq very much velji.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
neenga romba nallavatrunkooo
s, both of us r good.
karthik said...
செந்தில் சார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போலிருக்கே. சத்தியமா அவர் ரொம்ப நல்லவர்தான்
adingkayyaa,adingka.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
முக்கியமான வசனங்களை மேற்கோல் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது
ok sathish,thanx.y dont u put any post for 2 days/?
சத்தியமா அவர் ரொம்ப நல்லவர்தான்
thanx puratchi
விமர்சனம் நன்று!
thanx kumar
படம் நன்றாக தான் உள்ளது... விமர்சனம் என்ற பெயரில் நல்ல படத்தை கொஞ்சை படுத்தி உள்ளீர்கள்
படம் நன்றாக தான் உள்ளது
படம் நன்றாக தான் உள்ளது
Post a Comment