Thursday, September 02, 2010

சிந்துசமவெளி - நாகரீகமா?அநாகரீகமா? 18+

22 வருடங்களுக்கு முன் ஈரோடு  ரவி தியேட்டரில் (18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை அமைப்பில் நாளை ரிலீஸ் ஆகும் இந்தப்படமும் சேரும்.

இந்தப்படத்தில் 2 வெவ்வேறு துருவங்கள் இணைகின்றன.மிக கவுரவமான எழுத்துக்களுக்கும்,நுண்ணிய மனித உணர்வுகளின் நுட்பமான தருணங்களை நாவலில் வடிப்பவருமான எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்.இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்.இவரது எழுதும் வேகம் அளப்பரியது.22 வருட பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இவரைப்போல் சலிக்காமல் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுபவரை நான் கண்டதில்லை.

இயக்குநர் சாமி உயிர் படம் மூலம் அண்ணி -கொழுந்தன் உறவில் ஏற்படும் ஒரு சிக்கலான தருணம் பற்றி படம்  எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.படத்தில் காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக கூட்டுக்குடும்பங்களிடையே பெரிய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்த வல்ல பாம் (படம்)அது.2வது படம் மிருகம் ஷீட்டிங்க் டைமில் நாயகி பத்மப்ரியாவை பளார் என அறைந்து ஒரு வருட காலம் டைரக்ட் பண்ண தடை பெற்றவர்.


இப்படி 2 வேறு வேறு துருவங்கள் இணையும் இந்தப்படம் என்ன மாதிரி கதை?

ரஷ்ய மொழியில் வெளி வந்த 3 காதல் கதைகள் என்ற நூல் தொகுப்பில் முதல் காதல் என்ற குறு நாவலே ஜெயமோகன் கை வண்ணத்தில் படம் ஆகி இருக்கிறது.
இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஹீரோயின் கேரளத்துப்பார்ட்டி போல.நல்ல கவிதை பேசும் கண்கள்,நடிக்க பல சீன்களில் வாய்ப்பு.இந்தப்படத்துக்கு நல்ல விளம்பரம் ,தியேட்டர்களில் வைக்கப்பட்ட ரிச்சான ஸ்டில்கள் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவர்வதாக இருந்தன.ஒளிப்பதிவு தரமாக இருந்தது.மாமனாரின் அறிமுகக்காட்சியில் கமாண்டோ படத்தில் அர்னால்டு ஸ்வார்செனேகர் விறகு வெட்டி எடுத்துப்போவது போல் (பைசெப்ஸ் காண்பிக்கும் ஆண்மை தெறிக்கும்)சீனை சுட்டு ஏற்கனவே விஜய்காந்த் உளவுத்துறையில் சீன் வைத்திருந்தாலும் சாமி அது பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் அந்த சீனை சுட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா நல்ல ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,அங்காடித்தெரு
,களவாணி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி புதுப்புது டைரக்டர்களை,புது கதையம்சமான படங்களை கோடம்பாக்கம் வரவேற்கத்தயாராகி வரும் இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
  இயக்குநர் சாமி மீது தனிப்பட்ட பகையோ,கருத்து வேற்றுமையோ எனக்கு கிடையாது.நான் இன்னும் படமே பார்க்கவில்லை.ட்ரைலர் மட்டுமே பார்த்தேன்.மேலும் சில தகவல்கள் சினிமாத்துறையில் உள்ள உதவி இயக்குநர்கள் தந்து  உதவினார்கள்.சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் போராடும் பெண்ணிய அமைப்புகள் இந்தப்படம் பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.

23 comments:

புரட்சித்தலைவன் said...

படம் வெளிவருவதற்குள் விமர்சனமா,.ரொம்ப fast.

மதுரை சரவணன் said...

நல்லவிதமான விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

welcome puratchiththalaivaa,thanx for coming

ராம்ஜி_யாஹூ said...

ஒரு மாமனாருக்கு மருமகள் என்பவர் மகள் போன்றவர்.
இந்த உறவை கொச்சை படுத்தி காட்டும் (காட்சியில், வசனத்தில்) இந்த திரைப்படத்தை புறக்கணிப்போம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

படம் வெளிவருவதற்குள் விமர்சனமா...

சித்தன்555 said...

அது உளவுத்துறை இல்லை,புலன்விசாரணைன்னு நெனய்க்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ராம்ஜி,நீங்க என் நோக்கத்தை சரியா புரிஞ்சிட்டீங்க,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வெரும்ப்ய அவர்களே,ட்ரைலர் விமர்சனம்தான் இது

சி.பி.செந்தில்குமார் said...

சித்தன் அவர்களே சரியா சொன்னீங்க,மாத்திடறேன்,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

மதுரை சரவணன் நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்.

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

இதுபோன்று வித்தியாசமாக இருந்தால் கூட்டம் வரும் என்பது இயக்குனரின் எண்ணம் என்று நினைக்கிறன்.இதற்கு அவர் நேரடியாக ஒரு பிட்டு படம் எடுக்கலாம் எதோ ஒரு பேட்டியில் இயக்குனர் சாமி இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் ஜனரஞ்சகமான படம் என்று கூறியதாக நினைவு. இதுபோன்ற படங்களை பற்றி பேசாமல் தவிர்ப்பது நல்லது. செந்தில் சார் நீங்க ரொம்ப ஸ்பீட் படம் ரிலீஸ்க்கு முன்பே விமர்சனம்

Anonymous said...

(18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.//
தேதி முதக்கொண்டு புள்ளி விவரம் வெச்சிருக்காருய்யா..

Anonymous said...

இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்//
இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தனி காட்டு ராஜா said...

//இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.//
தல ,
இன்று நியூஸ் பேப்பர் -யை திறந்தால் கள்ளக் காதல் ,ஏமாற்று திருமணம் என்று எத்தனை நியூஸ் வருகிறது ?
நாராயண ரெட்டி புத்தகத்தை படித்து பாருங்கள் ....இது போன்ற சமுகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் சொல்ல பட்டு உள்ளது ...
இதில் கள்ளக் காதல் என்றால் அதில் ஈடுபடும் ஆண் ,பெண் இருவருமே கண்டிப்புக்கு அல்லது பாராட்டுக்கு (உங்கள் பார்வையை பொருத்து) உரியவர்கள்....
இதில் பெண்ணியம் எங்கே வந்தது .....முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று தெளிவு படுத்தினால் புண்ணியமாக போகும் ..

தல,அப்புறம் ஏன் ரவி,ராஜாராம்,பிரபா,ஸ்ரீனிவாச தியேட்டர் எல்லாம் கிளோஸ் பண்ணீ ட்டாங்க.........

அ.சந்தர் சிங். said...

அது உளவுத்துறை இல்லை,புலன்விசாரணைன்னு நெனய்க்கிறேன்


yes correct.

சி.பி.செந்தில்குமார் said...

தனிக்காட்டுராஜா,வருகைக்கு நன்றி,ராஜாராம் தியேட்டர் வித்துட்டாங்க,நடராஜா 45 முறை ரெய்டில் சிக்கி பெனல்டி கட்டியே முடிஞ்சுட்டாங்க.ரவி தியேட்டர் ரேட் பேசிட்டிருக்காங்க.17 கோடியாம்.

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,ஜெயமோகன் எழுத்து வேகம் பற்றி மட்டும்தான் சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்தி,உங்கள் கருத்து சரியே

முத்து குமரன் said...

இன்று ஜெயா டிவியில் இந்த பட இயக்குனரின் பேட்டியை பார்த்தேன். இது போன்ற கதைகள் அதிகம் மக்களாலும்(???) தயாரிப்பாளர்களாலும் கவனிக்கப்படுவதே, தான் தேர்வு செய்ய காரணம் என்றார்(இவரின் வக்கிர புத்திக்கு நாமதான் ஊறுகாய் போல). இதை விட பிட்டு படம் இயக்கினால் தமிழ் மக்களால் மட்டுமல்லாமல் பல மொழி மக்களாலும் கவனிக்கபடும் என்பது ஏன் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் புரியவில்லை(ஒரு பெரிய சந்தையை கோட்டை விட்டுடிங்களப்பா).

சிரிப்பு போலீசு வடிவேலு, ஒரு பட விழாவில் உயிர் படம் எடுத்தவனை செருப்பாலயே அடிக்கனும்னு சொன்னார். இந்த படம் பார்த்தா!!!!!!!!!!.

சி.பி.செந்தில்குமார் said...

pearl,thanx for comintg and comenting. i think we must avoid him and his film.automatically he will change

Sairam said...

விமரிசனம் மிகவும் சூப்பர் பிய்த்து உதறி விட்டீர்கள்
ரவிச்சந்திரன் சென்னை

Sairam said...

தொடரட்டும்!! வாழ்த்துக்கள்!!!