Sunday, August 29, 2010

கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்

1. இந்த வாரத்தின் சிறந்த  பிழைக்கத்தெரியாத பிலோமினா விருது மெக்சிகோ அழகி ஜிமேனா நவ்ரத்தேவுக்கு,பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மற்ற அழகிகள் போல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல்,அமைதியாக விருதை வாங்கியமைக்காக.

2.இந்த வாரத்தின் சிறந்த கூச்ச நாச்சமே இல்லாத கூத்தாண்டப்பெருமாள் விருதும்,யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை என களம் இறங்கி (!?)
3 ஆம் திருமணம் செய்த டோண்ட் கேர் டோண்டு ராகவன் விருதும் சசிதரூருக்கு.

3.இந்த வாரத்தின் சிறந்தகேள்வியின் நாயகன் விருதும்,லாஜிக் லிங்கேசன் விருதும் கலைஞருக்கு,ரஜினியின் மகள்,மருமகன் சினிமாவுக்கு வரலாம்,என் வாரிசுகள் சினிமாவுக்கோ,அரசியலுக்கோ வரக்கூடாதா? எனக் கேட்டமைக்காக.

4.இந்த வாரத்தின் சிறந்த கள்ள நோட்டு கண்காணிப்பு ஸ்பெஷல் ஆஃபீசர் விருது திருப்பூர் ஐ சி ஐ சி ஐ  பேங்க் மேனேஜர் (டேமேஜர்?!)திரு பிரதீப் சாமியப்பனுக்கு,316 கள்ள நோட்டுகள் பேங்க்கில் கண்டுபிடிக்கப்பட்டபோது,இவை எப்படி வந்தது என்றே தெரியவில்லை என பொறுப்போடு பதில் சொன்னமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்தகவுண்ட்டவுன் கண்ணாயிரம் விருது தினமலருக்கு,திருச்சியில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் 6 நிமிடத்தில்
37 முறை தொண்டர்கள் அம்மா என அழைத்ததை பொறுப்பாக எண்ணி அதை ஒரு பக்க கட்டுரையாக போட்டதற்கு.
6. இந்த வாரத்தின் சிறந்தஜெராக்ஸ் காப்பி ஜெகதீசன்ஸ் விருது ஆந்த்ரா நீதிபதிகள் 6 பேருக்கு,நீதிபதிகளுக்கான பிரமோசன் தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக.

7.இந்த வாரத்தின் சிறந்த இண்டீசண்ட் இன்பராஜ் விருது புழல் பட இயக்குநர் அழகுக்கு,படத்தின் விளம்பர டிசைனில் மிக மோசமாக ஆண்களை சித்தரித்தமைக்காக.

8.இந்த வாரத்தின் சிறந்த கிழக்குசீமையிலே கிலாக்கா விருது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு,தன்மானத்தம்பி விருது முத்துசாமிக்கு. ரக்‌ஷாபந்தன் விழாவில் பழைய பகை மறந்து இருவரும் ராக்கி கட்டி அண்ணன் தங்கை ஆனதற்கு.

9. இந்த வாரத்தின் சிறந்த நஷ்ட ஈடு நாதமுனி விருது கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்சனுக்கு ரூ 3169 கோடி நஷ்ட ஈடாக மனைவிக்கு கொடுக்க நேர்ந்தமைக்கு.இந்த வாரத்தின் சிறந்த பம்ப்பர் லாட்டரி பரிமளா விருது அவரது மனைவி எலின் நர்திகிரன் அவர்களுக்கு.

10.இந்த வாரத்தின் சிறந்த ஒன்னும் தெரியாத பாப்பா விருது அருணாச்சலபிரதேசத்தின்  முன்னாள் முதல்வர் ஜியாங் அபாங் அவர்களுக்கு,பொது விநியோகத்தில் ரூ 1000 கோடி ஊழல் நடந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்னும் எப்படி நடந்தது என்பதே எனக்குத்தெரியாது என சொன்னதற்காக.

11. இந்த வாரத்தின் சிறந்த சமாளிஃபிகேசன் சங்கடராஜ் விருது கலைஞருக்கு,திருச்சியில் ஜெ கூட்டிய கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம்,தானாக கூடிய கூட்டம் இல்லை என சமாளித்ததற்காக.

12. இந்த வாரத்தின் சிறந்த பங்சுவாலிட்டி பரமசிவம் விருது மீண்டும் சசிதரூருக்கு,ஹனிமூனுக்கு கிளம்புகையில் 30 நிமிடம் தாமதமாக
கிளம்பியதற்காக விமானம் தரை இறங்கியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லெஃப்ட் & ரைட் வாங்கியமைக்காக.

13.  இந்த வாரத்தின் சிறந்த  ஒண்டிக்கு ஒண்டி சண்டி ராணி விருதும்,காலக்கொடுமையால்  காவியத்தலைவி ஆன (?!) காவ்யா விருது நடிகை குஷ்பூவுக்கு, யாருக்கு கூட்டம் அதிகமாகக்கூடுகிறது பார்ப்போமா? என ஜெவுக்கு சவால் விட்டமைக்காக.

38 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.......

Anonymous said...

நையாண்டி நாரதர் விருதுகள் அப்படின்னே தலைப்பு கொடுத்திருக்கலாம்.இன்றைய தேதி போட்டு

Anonymous said...

விருதுகள் அனைத்தும் தகுதியானவர்க்கே போய் சேர்ந்திருக்கின்றன

Anonymous said...

இந்த வாரத்தின் சிறந்த இண்டீசண்ட் இன்பராஜ் விருது புழல் பட இயக்குநர் அழகுக்கு,படத்தின் விளம்பர டிசைனில் மிக மோசமாக ஆண்களை சித்தரித்தமைக்காக.//
தொள தொள ந்னு ஜட்டி போட்டுகிட்டு அந்த நாலு பேர் நிற்கிற போஸ் கண்றாவியா இருக்கு.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கலைஞருக்கே விருதா?... வீட்டுக்கு ஆட்டோ வருணுமா?.

புரட்சித்தலைவன் said...

nice awards........

புரட்சித்தலைவன் said...

nice awards........

புரட்சித்தலைவன் said...

nice awards........

புரட்சித்தலைவன் said...

nice awards........

புரட்சித்தலைவன் said...

nice awards........

புரட்சித்தலைவன் said...

nice awards........

ஜெயந்த் கிருஷ்ணா said...

விருது உங்களுக்கு மட்டும் சந்தையில மலிவா கிடைக்குதா.. இப்படி வாரி வழங்குறீங்க..

Unknown said...

உங்களின் 13 விருதுகளும் அருமையோ அருமை. இந்த மாதிரியான விருதுகள் கிடைக்கபெற்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னோட நல்ல வாழ்த்துக்கள்.


நம்முடைய எதிர் காலம் பற்றிய பயம் போக இன்றே நீங்கள் பார்க்க வேண்டிய இணையத்தளம் www.yourastrology.co.in

Unknown said...

13 விருதுகள்..
நம்பர் சரியில்லை...
இன்னொன்னு சேர்த்துக்குங்க...
விருதுக்கே..விருது வழங்கிய...
அட்ரா..அட்ரா சக்க....பேரிக்கா மண்டையன் விருது...
மாஸ்கோவின் காவேரி படத்தின் காமெடியன் சந்தானத்திற்கு...
பல விக்கு மண்டைகளில் வந்ததில் சிறந்தது "ப்ரொவுன் பேரிக்கா மண்டையன் விருது"

Unknown said...

இங்க ஏனப்பா numerology வருது, இருந்தாலும் பரவாஇல்லை இந்த 14 விருதுகளுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

thanks ulavu.com.your presence is a present to me ,thanx

சி.பி.செந்தில்குமார் said...

sathish, are you also see that advertisement (puzal)?what the hell that director had done you note it?

தமிழன்-கோபி said...

பல எறுதுகளுக்கு விருது வழங்கிய உங்களுக்கு சுறா மற்றும் பெண் சிங்கம் போன்ற அற்புதமான படங்களின் குறுந்தகடுகள் பரிசாக அளிக்கிறேன். பார்த்து பரவசம் அடைந்து இன்னும் பல விருதுகள் கொடுக்கவும் ... :)

தமிழன்-கோபி said...

பல எறுதுகளுக்கு விருது வழங்கிய உங்களுக்கு சுறா மற்றும் பெண் சிங்கம் போன்ற அற்புதமான படங்களின் குறுந்தகடுகள் பரிசாக அளிக்கிறேன். பார்த்து பரவசம் அடைந்து இன்னும் பல விருதுகள் கொடுக்கவும் ... :)

IKrishs said...

என்னுடைய தாழ்மையான கருத்து இது .தங்களுடைய பத்திரிக்கை துணுக்குகள் அளவுக்கோ மற்ற தலைப்புகளில் வரும் பதிவுகள் அளவுக்கோ இந்த விருது பதிவுகள் இல்லை..
தமிழ் ப்ளாக் வாசிப்பவர்கள் பெரும்பாலும் விகடன் வாசிப்பவர்கள் தான் .. விகடன் வழங்கும் காமெடி விருதுகள் பாணியில் நீங்களும் பதிவு போட வேண்டுமா ?கொஞ்சம்மாவது அது காமெடி ஆகவே இருந்தாலும் புதுமை வேண்டாமா?
அதிலும் ஆனவுக்கு ஆனா ,கானாவுக்கு காண படு மொக்கை யான வார்த்தைகள் ! பத்திரிக்கை யில் ஜோக் எழுத்தில் முத்திரை பதித்த நீங்கள் பதிவுகளிலும் நல்ல கற்பனை வளத்தை காட்டுவீர்கள் என நம்புகிறேன் ! உங்கள் பதிவு மேலும் மெருகேரவே வாசகனாக இந்த விமர்சனம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பதிவை படிக்கிற எனக்கு பொறுமை பூச்சாண்டி விருது கொடுக்கலாமே!!!

Anonymous said...

thanks ulavu.com.your presence is a present to me ,thanx//
துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது..

Anonymous said...

பத்திரிக்கை யில் ஜோக் எழுத்தில் முத்திரை பதித்த நீங்கள் பதிவுகளிலும் நல்ல கற்பனை வளத்தை காட்டுவீர்கள் என நம்புகிறேன் ! உங்கள் பதிவு மேலும் மெருகேரவே வாசகனாக இந்த விமர்சனம்..//
வழிமொழிகிறேன்!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழன் கோபி,வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

s s poongkadhir, thanx for coming.no fear about auto.automatically my fingers are shivering while type this. (hi hi hi )

karthikkumar said...

நீங்கள் எழுதும் விதம் அருமை திரு செந்தில்குமார் .

சி.பி.செந்தில்குமார் said...

thankyou very much mr karthik

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 1...
ஒரு 25 வருடம் முன்பு உண்மை சமபவம் textile-க்கு பெயர் போன நகரத்தில் நடந்தது. பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது. குப்புசாமி என்பவர் ஒரு textile machine-ஐ கண்டு பிடித்து விலை ஒரு கோடி என்று விற்க ஆரம்பித்தார். ஆரம்பித்த இரண்டு மாதங்களில் ராமசாமி என்பவர் அதே மாதிர் machine-ஐ காப்பி அடித்து அதே ஊரில் 83 லட்சத்திற்கு விற்பனை செய்தார். குப்புசாமி கண்டு பிடித்த machine-ஐ சீண்டுவார் யாரும் இல்லை. குப்புசாமி ராமசாமி மீது கேசைப் போட்டார். கோர்ட்டில் ராமசாமி தான் அந்த புது textile machine-ஐ காப்பியடித்த machine என்று ஒத்துக்கொண்டார். ஆனால் ராமசாமி தான் காப்பி அடித்தது குப்புசாமி கண்டு பிடித்த machine-ஐ அல்ல என்றும் அது German Company கண்டுபிடித்த machine -ஐப பார்த்து என்று சொல்லி ராமசாமி ஆதாரங்களை அள்ளி வீசினார். Case dismiss. இரண்டு பேரும் Copy Cats... களவாணிகள். அப்புறம் கேசைப்போட்ட குப்புசாமி க்கு அபராதம். கூடவே கோர்ட்டு செலவு எல்லாம். கெட்டிக்கார ராமசாமிக்கு ஜே! குப்புசாமி காலி!!

சரி கூடவே நான் ஒரு ஜோக்கு சொல்லுகிறேன்...

ஒரு ஊரில் ஒரு தபால்காரன் ஒய்வு பெற்றான். அவனுக்கு அந்த ஊரில் எல்லோரும் பண முடிப்பு கொடுக்க ஆசைப்பட்டார்கள். ஒரு பெண் தனது கணவனிடம் நாம் எவ்வளுவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதிற்கு அவளது கணவன் கூறினான், "அவன் மூன்று நாள் mail ­எல்லாம் சேர்த்து வாரத்தில் இரு முறை தான் Delivery செய்கிறான். அவனுக்கு ஒன்னும் கொடுக்க வேண்டாம் என்று கணவன் சொன்னான். அதற்க்கு அவன் மனைவி அது தப்பு. ஊரோடு ஒத்து வாழ். ஆகவே நாமும் எதாவது பணம் கொடுக்க வேண்டும் என்றாள். அதற்க்கு அவளது கணவன், " Fuxk that postman! Give him a dollar." என்றான். அவளும் அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டு அந்த வேலையை முடித்து விட்டு அந்த தபால்காரனுக்கு ஒரு டாலர் கொடுத்தாள். ஏன் இந்த ஒரு டாலர் என்று கேட்டதிற்கு அவள் சொன்னால் இந்த பஜனை எனது கணவனின் யோசனை." உங்களுக்கு சாப்பாடு போட்டது மட்டும் என்னுடைய idea என்றாள். (சுஜாதாவே பஜனை என்றால் அந்த வேலை தான் என்று சொல்லி இருக்கிறார்; ஆதாலால் இது கெட்ட வார்த்தை இல்லை நமது கோர்ட்டின் படி!). உங்களுக்கு சாப்பாடு போட்டது மட்டும் என்னுடைய idea என்றாள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2...
(((ஆங்கிலத்தில் fxuk என்று எழுதினாலும் தவறு . எழதுவது ஆபாசம். எந்த மொழியில் எழுதினாலும் அது ஆபாசம் தான். ஏன் அதையே தமிழில் ஒxதா என்று எழுதுவது தானே. இது என்ன களவாணித்தனம். ஆங்கிலத்தில் எழதினால் ஆபாசம் இல்லையா? ஆங்கிலம் தெரிந்த ஒரு 15 வயது தமிழ் பெண் என்னிடம் கேட்டார்கள், "How can they perimit to publish vulgar jokes like this and that too there is no warning about the contents. All internet sites provide this facility such as this site should be accessed by people of 18 years of age and older. I would NOT have acccessed this site if such a warning was provided to me. Why the author of that bolg did not do that? He has wantenly avoided that to have more hits; and more traffic))) இதற்க்கு என்ன பதில்?

சரி இதை விடுங்கள். மேற்கூறிய ஜோக்கை நான் காப்பி அடித்து விட்டதாக ஒருவர் அவரது பதிவில் எழுதலாம். அவருக்கு எனது பதில் இந்த ஜோக்கை நான் இந்த புத்தகத்தில் இருந்து எடுத்தேன். Fair Use Policy பிரகாரம அந்த ஆதாரத்தையும் (அதாவது தமிழில் source) கொடுக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும் " ராமசாமி குப்புசாமி....ஹி! ஹி!!

Reference (source): "One thousand party jokes to get noted" by Mr. Danny Morrison...

அவர் முதலில் காப்பி அடித்தார், அதுவும் ஆதாரம் கொடுக்கமால். ஏதோ தனது சொந்த சரக்கு மாதிரி! நான் ஆதாரத்தோட எழுதுகிறேன்; அதை காப்பி என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் நான் எங்கு இருந்தது சுட்டேன் எனபதை கூறியுள்ளேன் "Fair Use Policy" பிரகாரம .

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 3...
பின்குறிப்பு: தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் கிடையாது. நீங்கள் அத்கனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்.? எந்த பத்திரிக்கை தனது தவறை ஒத்துக் கொண்டு இருக்கிறது? அதுவும் சாணி பேப்பரில் போடும் பத்திரிக்கைகள்.

இதை நான் எழுவதற்கு காரணம் செந்தில் குமாருக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதற்க்கு துணை போன மற்ற பதிவாளர்கள். உண்மையை எல்லா கோணங்களில் இருந்தும் அலச வேண்டும். எடுத்தமா கவிழ்தமா என்று இருக்கக் கூடாது. சிலர் சொல்லாம். எனக்கும் செந்தில் குமாருக்கும் சம்பந்தம் இருக்கு என்று. அதானல் தான் நான் இப்போ இதை எழுதிககிறேன் என்று.....ஆமாம் இருக்கு! இருக்கு!! இருக்கு!!!

நான் இந்தியாவிற்கு வந்தால் சென்னிமலையில் நெய்யும் ஜமக்காளத்தை மட்டும் தான் வாங்குவேன். அந்த ஒரு சம்பந்தம் தான். நான் கூறியதில் உண்மை இருந்தால் உங்களுக்கு ஆதரவு வரும் மற்ற பதிவர்களிடம் இருந்தது. காப்பி அடிச்சவன் டீ அடிச்சவன் ஆங்கிலத்தில் இருந்தது அடித்தால் என்ன? தமிழில் இருந்தது அடித்தால் என்ன.
எவனுக்கும் சொந்த சரக்கு கிடையாது. அவர்கள் பேசாப்படாது!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு: . செந்தில் குமார் அவர்களே! நீங்கள் விரும்பினால் இந்த பின்னூட்டத்தை ஒரு பதிவாகப் போட்டு உங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கிக் கொள்ளலாம்...இதற்க்கு எனது முழ அனுமதியும் உண்டு.

செந்தில் குமார் இளைத்தவன் என்பதால் எல்லோரும் அவர் மீது ஏறு ஏறு என்று ஏறிநீர்கள். இளைத்தவனுக்கு ஆதரவு தரும் சுகத்தை மீறி உலகத்தில் ஓன்றும் இல்லை.

இப்படிக்கு, என்றும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பி!?

karthikkumar said...

//செந்தில் குமார் இளைத்தவன் என்பதால் எல்லோரும் அவர் மீது ஏறு ஏறு என்று ஏறிநீர்கள். இளைத்தவனுக்கு ஆதரவு தரும் சுகத்தை மீறி உலகத்தில் ஓன்றும் இல்லை. //

ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களே நீங்கள் சொல்வது சரிதான்.

சி.பி.செந்தில்குமார் said...

mr ambi and mr karthik thanks for supporting me.but my thought is let foget the past and think about the future.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

தெரியாமல் தவறு செய்தால் மன்னிக்க வேண்டும். இந்த வரியே தப்பு. தப்பு!!! தெரியாமல் செய்தால் அது தவறே அல்ல!

அதுவும் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்...அப்படி தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் எல்லா பதிவர்களும் (அந்த காப்பியாளரையும் (Copy King) சேர்த்துத்தான் ) உங்களை நோண்டி நொங்கு எடுக்கும் போது ....

உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும். அந்த காப்பியாளர் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எவனையும் உடாதீங்க...குனிஞ்சா குxxயிலே குதிரை ஒட்டிடடு வானுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

MR AMBI COOL,Y TENSION ?RELAX.WE ARE BORN TO WIN NOT FOR FIGHT.THANX FOR YOUR SUPPORT.

kumar sundaram said...

நன்றி ஸ்ரீதரன் அவர்களுக்கு,

தங்கள் எழுதிய இணையத்தில் சென்று எனது எதிர்காலம் பற்றிய அணைத்து சந்தேகங்களையும் பற்றி தெளிவான பதிலை நான் பெற்று கொண்டேன். இதற்கு காரணமாக இருந்த உங்களுக்கு மிக்க நன்றி. உண்மையில் www.yourastrology.co.in மிக பயனுள்ள இணையத்தளம்.

இடைவெளிகள் said...

ஒவ்வொன்றும் நல்ல ரசனையான விருதுகள். தூள் கிளப்பிட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

thanks for you valuable coment,mr iraenipuram paalrasayya

சி.பி.செந்தில்குமார் said...

kumar,what is this,r u come missely or make an advertisement for that site?

anyway,thanks