வேண்டாம் என்று நீ
விலகிப்போனாலும்
காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி
உன் சுவாசத்தில் நிரம்புவேன்.
நான் பார்க்கின்ற
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்
அங்கே குடியேற குறுக்கு வழியோ ,
என் முகம் அதில் பிரதிபலிக்க
விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.
திட்டமிட்ட பயணத்திலோ,
எதேச்சையாகவோ
நம் சந்திப்பு ஒருமுறை
நிச்சயம் நிகழும்.
அப்போது
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.
9 comments:
kavithai nalla irukku.
நன்றி குமார்
4 நால் லீவுங்கறதுக்காக 4 பதிவு ஒரே நாளிலா?10 நாள் லீவு போட்டா..?தமிழ் மணம் படுத்துருமே
1 கவிதை,சில்பான்சி ஜோக்ஸ்,நையாண்டி விருது,அரசியல் நு குமுதம் ரேஞ்சுக்குவெரைட்டியா உங்க தளம் போய்கிட்டு இருக்கு
பத்திரமா பார்த்துக்கப்பா,தளம் காணாம போகப்போகுது.
விட்டு சென்றவள், உங்கள் கவிதையை படித்தால் நிச்சயம் திரும்பி வருவாள்.கவிதை சூப்பரா இருக்கு.அனுபவ கவிதையா....?
புரட்சித்தலைவன் வருகைக்கு நன்றி.அனுபவமேதான்
கவிதை நல்லாயிருக்கு சார்
வரிகளில் வாழ்கிறது காதல்.
Post a Comment