2வது படம் அதே தயாரிப்பாளருக்கு காதலன் .இந்து வில் ஹீரோவாக பிரபுதேவா செய்த முதல்படம் தோல்வி அடைந்தபோதும்,அவரது நடனத்திறமை மீதும்,தன் மீதும் நம்பிக்கை வைத்து ஜாலியான லவ் ஸ்டோரி எடுத்தார்.அந்தப்படத்தில்தான் பாடல் காட்சிகளீல் ஜிம்மிக்ஸ் வேலைகளில் தனது சித்து வேலைகளை காண்பித்தார்.கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தனது உச்ச பட்ச பதிவை தமிழ்ப்படத்தில் தடம் பதித்தது அப்போதுதான்.
3வது படம் இந்தியன்.கமல் 2 வேடங்களில் வந்தாலும் இந்தியன் தாத்தா வேடமும்,கமலின் மேக்கப்பும் பேசப்பட்டது.கமலுடன் ஷூட்டிங்க் டைமில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.2 திறமைசாலிகள் ஒன்றாக வேலை செய்கையில் இது சகஜம்தான்.கவுண்டமணியின் காமெடி டிராக் படத்துக்கு தேவை இல்லை ,படத்தின் சீரியஸ்னெஸை காமெடி பாதிக்கும் என கமல் நினைத்தார்.ஆனால் எண்டெர்டைன்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட்டான ஷங்கர் விடாப்பிடியாக நின்று காமெடி டிராக்கை மெருகு ஏற்றினார்.அதே போல் மாயா மச்சிந்த்ரா பாடல் காட்சியில் கமல் சிங்கம் போல் கிராஃபிக்ஸில் மாறுவது போல் எட்த்தது கமலுக்குப்பிடிக்கவில்லை.3 மாசம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பிறகு காம்ப்ப்ரமைஸ் ஆகி கமல் நடித்தார்.இந்தப்படம் பெற்ற மெகா வெற்றியால் ஷங்கர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உய்ர்ந்தார்.
ஷங்கர் படம் டைரக்ட் பண்ண ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறார்.ஒரு படம் சீரியஸ்,ஒரு படம் ஜாலி.அதன்படி 4வது படம் ஜீன்ஸ்.ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஷங்கர்க்கு இந்தப்படம் அவரது முந்தைய படங்களோடு
ஒப்பிடுகையில் சுமார் ரகம்தான்.ஐஸ்வர்யாராயின் அழகும்,ஏ ஆர் ரஹ்மானின் இசையும் படத்தை காப்பாற்றின. பிரசாந்த்,நாசர்,ஐஸ் என ஆளாளுக்கு டபுள் ஆக்ட் நடிப்பு கொடுத்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.அன்பே அன்பே கொல்லாதே பாடல் வைரமுத்துவின் உச்சபட்ச வர்ணனையை கொணர்ந்தது.ஃபிஃப்டி கே ஜி தாஜ்மஹால் (50 KG) டாக் ஆஃப் சிட்டி ஆனது.
5வது படம் முதல்வன்.இது ரஜினிக்காக உருவாக்கப்பட்டது,ஆனால் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் (கலைஞர் பீரியட்)ரஜினி அந்தப்படத்தில் நடித்தால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரும் என ரஜினி நினைத்ததால் அர்ஜூன் புக் ஆனார்.இடைவேளை வரை படம் செம ஸ்பீடாக இருந்தது.பாலகுமாரன் வசனத்தை விட அமரர் சுஜாதாவின் வசன்ம் ஷங்கருக்கு நன்றாக செட் ஆனது.பட்டி தொட்டி எங்கும் படம் பட்டையை கிளப்பியது.
6வது படம் பாய்ஸ்.இளமைத்துள்ளலாக எடுக்க நினைத்தவர் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி முகம் சுளிக்கும் அளவு ஏ படம் ஆனது.பத்திரிக்கைகளின் கடுமையான விமர்சனத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் படத்தின் ஸ்டில்லை போட்டு ச்சீ மோசம் என ஒரே ஒரு கமெண்ட் மட்டும் போட்டு ஒரு முழு பக்கத்தை அப்படியே பிளாங்க்காய் விட்டது.ஆனால் இலங்கையில் இது சூப்பர் ஹிட் ஆனது.
7வது படம் அந்நியன்.விக்ரம்க்கு இது மாஸ்டர்பீஸ் படம்.லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் கேரக்டர்.ரெமோ,அம்பி,அந்நியன் என 3 வெவ்வேறு கேரக்டரில் பிரமாதப்படுத்தினார்.குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் சடக் சடக் என அந்நியன்ஆகவும்,அம்பி ஆகவும் அவர் காண்பித்த முக பாவனைகள் ஏ க்ளாஸ் ரகம்.உயிரைக்குடுத்து நடித்திருந்தாலும் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.ஆனால் தெலுங்கில் அபராஜித்டு என்ற பெயரில் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்தக்கால கட்டத்தில்தான் ஷங்கர் ஒரே மாதிரி கதைகளை எடுக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது.அநியாயம் எங்கு நடந்தாலும் ஹீரோ அதை தட்டிக்கேட்பார்,இருப்பவர்களீடம் பறித்து இல்லாதவர்களிடம் கொடுப்பார்.இந்த ஒரே டைப் மாவை அவர் வித விதமாக தோசையாக ,ரோஸ்ட்டாக மாற்றி மாற்றிஉருவாக்குகிறார் என்பதே அந்தக்குற்றச்சாட்டு.
ஆனால் ஷங்கர் அதற்கெல்லாம் அஞ்சவில்லை.
முதல் முதலாக ஷங்கர்ஃபார்முலாவை மீறினார்,அதாவது ஒரு படம் சீரியஸ்,ஒரு படம் ஜாலி.என்பதை தொடர்ந்து 7 படங்களாக கடைப்பிடித்து வந்தவர் 8வது படத்தை ஜாலியாக எடுக்க வேண்டியது.ரஜினிக்காக அதை மாற்றினார்.இந்தப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்தியாவின் சிறந்த டைரக்டர்,ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடி அதிக சம்பளம் பெறும் நடிகர் இணைவது என்றால் சும்ம்மாவா?ஆனால் எதிர்பார்த்தபடி மெகா ஹிட் ஆகவில்லை.படத்தில் ரஜினி இளமையாகக்காட்டப்பட்டது பேசப்பட்டது.மற்றபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அடுத்து ஷங்கரின் ட்ரீம் புராஜக்ட் ரோபோ. 6 வருடங்களூக்கு முன்பே கமலுக்காக தயாரான ஸ்கிரிப்ட்.அமரர் சுஜாதா கமலை மனதில் வைத்து இதற்கான ஸ்கிரிப்டை பக்காவாக உருவாக்கி விட்டார். ஆனால் ஏனோ கமல் விலகி விட்டார்.அடுத்து ஷாருக்கான்.அவரும் சில நாட்களீள் முடியாது என கை விரித்து விட்டார்.என்ன காரணம் என்பதை கமல்,ஷாருக்,ஷங்கர் 3 பேரும் வெளியிடவே இல்லை.
இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிற இன்னொரு முக்கிய காரணம் உண்டு.ஷங்கரின் வழக்கமான ராபின்ஹூட் ஃபார்முலா இதில் இல்லை.இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என சொல்லப்படுகிறது.(ஆனால் எஸ் ஜே சூர்யாவின் நியூ படம் கூட ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம்தான்)
ரஜினியின் நீண்ட நாள் ஆசை ஐஸுடன் ஜோடியாக நடிப்பது.அது நிறைவேறி விட்டது.படத்தின் பாடல்கள் வெளீயாகி விட்டது.சூப்பர் என சொல்ல முடியாவிட்டாலும் ஓகே ரகம்தான்.ஏ ஆர் ரஹ்மான் மியூசிக்கில் ஒரு மேஜிக் உண்டு,முதல் முறை கேட்கும்போது சுமாராகத்தோன்றுவது படம் வந்த பிறகு ஹிட் ஆகி விடும்.
இன்னொரு செண்ட்டிமெண்ட்டும் தமிழ் சினிமாவில் காலம் கால்மாக இருந்து வருகிறது.மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களும் சரி,நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படங்களூம் சரி,பெரிய வெற்றியை தந்ததில்லை.பீமா,குற்றப்பத்திரிக்கை,பாபா,ஆளவந்தான், போன்ற படங்களெல்லாம் அப்படிப்பட்ட படங்களே.
இவற்றை எல்லாம் மீறி எந்திரன் எதிர்பார்த்த வெற்றி பெற்றால் நமக்கு மகிழ்ச்சியே.அதே சமயம் ரசிகர்கள் அந்தப்படத்தின் மேல் ஓவராக எதிர்பார்ப்பை வைக்காமல் இருப்பதும் நல்லது.
21 comments:
ரசிகர்கள் இந்தப்படத்தின் மேல் ஓவராக எதிர்பார்ப்பை வைக்காமல் இருப்பது நல்லது....
வாவ்.. ஷங்கர் பற்றிய அருமையான கண்ணோட்டம். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. ஷங்கரோட ரோபோவில் சுஜாதாவோட பங்கு மிக மிக அதிகம். ஆனா சுஜாதாவுக்கான மரியாதையை எந்திரன் விழாவில் யாருமே சரியா செய்யலை. அதுதான் வருத்தம்.
பீமா,குற்றப்பத்திரிக்கை,பாபா,ஆளவந்தான்//இவை எல்லாம் மட்டமான திரைக்கதை மற்றும் வடிப்பாய் கொண்டவை .இயக்கம் அதைவிட மானங்கெட்டு இருந்தது ...அதனுடன் எந்திரனை ஒப்பிட முடியாது.ஏனென்றால் ஷன்கர் படங்கள் கதை,மற்றும் திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெடக்கூடியவர்.அதனால் எந்திரன் வெற்றி என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை
சுஜாதாவுக்கான மரியாதையை எந்திரன் விழாவில் யாருமே சரியா செய்யலை// எனக்கும் அதே வருத்தம் தான்
மெகா ஹிட் ஆகவில்லை.படத்தில் ரஜினி இளமையாகக்காட்டப்பட்டது பேசப்பட்டது.மற்றபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை// தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம்.ஆனால் மெஹா ஹிட் ஆகவில்லை என சொல்ல முடியாது அருமையாக வசூல் செய்த படம் அது.ஆனால் மறக்க முடியாத படமாக அது நிற்க்க வில்லை
அந்நியன், சிவாஜி மெகாஹிட் இல்லை என்கிறீர்கள்.. இந்தியன் படத்தை மெகாஹிட் என்கிறீர்கள்... முரணாக இருக்கிறதே...நம்ப முடியவில்லையே....
எந்திரன் காலத்தை வென்று சரித்திரம் படைக்கும்.. பாடல்கள் நீங்கள் சொல்வதை போல் சுமார் அல்ல.. சூப்பர் என்பதே மார்க்கெட் டாக்.... சிவாஜிக்கு பிறகு அதிக அளவில் விற்பனையாகி கொண்டிருக்கிற ஒரே திரைப்பட மியூஸில் ஆல்பம் எந்திரன் தான்...
சில தகவல்களைத் தவிர மற்ற அனைத்தும் உண்மையே..
சிவாஜி படம் தமிழ் சினிமாவில் இதுவரை ஓடிய படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாமிடத்தில் உள்ளது. (முதலிடம், தசாவதாரம்) சரியாக ஓடவில்லை என்பதெல்லாம் சும்மா..
மற்றப்டி, ஷங்கர் பற்றி எவ்வளவு பெரிய பதிவு தேவையற்றது. எனக்குத் தெரிந்து அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், காதல் படத்திற்கு தயாரிப்பாளராக இருந்ததுதான்!! ஷங்கர் படம் வந்தால் பார்ப்பேன். அது பொழுது போக்குக்கென.. அவர் ஒரு பொழுது போக்கு இயக்குனர்தானே//
//SIVAJI-The Boss எதிர்பார்த்தபடி மெகா ஹிட் ஆகவில்லை//
தாங்கள் தவறாக டைப் பண்ணி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்..
சிவாஜி படம் எதிர் பார்த்ததுக்கு மேலே வசூல் சாதனை செய்தது.. ஹிந்தி கஜினி தான் சிவாஜி ரெகார்டை முறியடித்தது..
சிவாஜி - 180 கோடிகள்
கஜினி(hindi) - 200 கோடிகள்.
SO pl check facts and then post..
//சுஜாதாவுக்கான மரியாதையை எந்திரன் விழாவில் யாருமே சரியா செய்யலை//
எனக்கும் வருத்தம் தான்.
ரசிகர்கள் இந்தப்படத்தின் மேல் ஓவராக எதிர்பார்ப்பை வைக்காமல் இருப்பது நல்லது....
கவிதைக்காதலரே,வருகைக்கு நன்றி,பார்ப்போம்,பட ரிலீஸிலாவது அந்தக்குறையை சரி செய்வார்களா என்று
ovedose udambukku aakaathu
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.குறச்சுக்கறேன்
அருமையான அலசல்..
நன்றி ரியாஸ் அண்ணே,நீங்க விகடன் ல எழுதும் சேலம் ரியாஸா?
கண்ணன் சார்,சந்திரமுகி தான் டாப் ஹிட்.லோ பட்ஜெட்.ஹை வசூல்
வாங்க குமார்,நீங்களும் நம்மளை மாதிரி சுஜாதா ரசிகரா?
அட்ரா சக்க...
நல்லா சொல்றாங்கயா detail...
புரட்சித்தலைவன் அண்ணே,நல்லாருக்குனு சொல்றீங்களா?நக்கல் அடிக்கிறீங்களா?
நல்லா இருக்கு. இப்ப புரிஞ்சுச்சா .சந்தோசமா?
எனக்கென்னமோ வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரிஞ்சுது,ஓகே.நம்பிட்டேன்
எந்திரன் - மந்திரன்
திறமை இல்லாத ஆய்வு
Post a Comment