Tuesday, August 10, 2010

ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி-

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.
இதையடுத்து, சென்னைப் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகைகளையும், செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் செய்தி ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் வாசித்த கடிதத்தின் விவரம் வருமாறு: 
மதிப்புக்குரிய ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்...
ஜூனியர் விகடன் 8.8.2010 தேதியிட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் 'மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்ற செய்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 10.8.2010 அன்று காலை நாளிதழ் ஒன்றில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கை அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கிற்கு இத்தகைய சவாலை ஏற்படுத்தப்போவதாக இவர்கள் கூறியிருப்பது, இந்திய தேசத்தின் அரசமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையே செய்தியை எழுதியவர்கள் இன்னார்தான் என்று தாங்களாகவே முடிவு செய்த சிலர் பத்துக்கும் மேற்பட்ட வகையில் மிரட்டல் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரமெங்கும் ஒட்டியுள்ளனர். அதில் நிருபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர்.
தொலைபேசி வாயிலாக முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் விகடன் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும், வழியேற்படுத்த வேண்டி தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்.
தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தனிப்பட்ட ஒரு பத்திரிகைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எண்ணிவிடாமல் ஒட்டு மொத்த ஊடக சுகந்திரத்துக்குமான மிரட்டலாக கருதி ஊடக நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக்குரல் எழுப்பியிருப்பதை நன்றியோடு வரவேற்கிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் முறைப்படி இறங்கியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊடக சுகந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்து திரண்ட அத்தனை நண்பர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த ஜனநாயக விரோதச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2. ஜூனியர் விகடன் சார்பில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுவை - சென்னை பத்திரிகையாளர் மன்றம் டி.ஜி.பி.க்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க வேண்டும்.
3. இன்று காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
4. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுவோம்.
5. பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பகிங்கரமாக அச்சுறுத்தல் விடுத்த நபர்கள், சங்கங்களின் அமைப்புகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைப்போம்.
6. பத்திரிகைகளை விமர்சித்து மிரட்டி வெளியான விளம்பரத்தை சில பத்திரிகைகள் வெளியிட்டது  பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பத்திரிகை உரிமையாளர்களை சந்தித்து நமது வருத்தத்தை பதிவு செய்வோம்.
7. ஜூனியர் விகடன் சம்பவம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிரான சம்பவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளார் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
8. பத்திரிகை உரிமையாளர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல ஒரு குழு அமைக்கப்படும்.
9. பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்துக்கு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், "பத்திரிகை அலுவகத்துக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான பொய்ப் புகார்களை திரும்பப் பெற வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

 பத்திரிக்கையாளரின் நண்பர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என பத்திரிக்கைத்துறை நண்பர்கள் தங்களூக்குள் அங்கலாய்த்துக்கொள்கின்றன.

37 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok. writtu

சி.பி.செந்தில்குமார் said...

ramesh ,வெல்கம்.

முத்தரசு said...

உண்மை உண்மையை சொன்னால் யாருக்குமே பொறுக்காது....தெரிந்தே மோதுவது why?

Anonymous said...

ஜூனியர் விகடன் தான் ஓரளவு துணிந்து எழுதுகிறது.அதையும் நக்கீரன் போல விளக்கு பிடிக்கும் பத்திரிக்கையாக மாற்றும் முயற்சிதான் இது.எனது கண்டனங்கள்

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

சி.பி.செந்தில் சார், நீங்க, சென்னிமலை சி.பி. செந்தில்குமார் என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு விமர்சனம் எழுதினீர்கள் தானே? நானும் தான். செந்தாரப்பட்டி பெத்துசாமி என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். நினைத்த மாதிரி பத்திரிக்கைத் துறையில் வேலை பார்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

மனசாட்சியின் வருகைக்கு நன்றி.சதிஷ்,நக்கீரன் மேல் ரொம்பக்கோவமா இருப்பே போல?

a said...

pakirvukku nanri...

சி.பி.செந்தில்குமார் said...

செந்தாரப்பட்டி பெத்துசாமி அவர்களே வணக்கம்.நான் பத்திரிக்கைத்துறையில் பணீ புரியவில்லை.பார்ட் டைமாக ஜோக்ஸ் எழுதுவேன்,அவ்வளவுதான்.நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வருகைக்கு நன்றி யோகெஷ்

ஜோதிஜி said...

voted

ராம்ஜி_யாஹூ said...

நான் அழகிரி அண்ணன் பக்கமே. விகடனில் நூற்றுக்கு என்பது சதவீத செய்தி கற்பனை மற்றும் வதந்தி அடிப்பையில் ஆனது.

இரண்டாயிரத்து ஏழு முதல் விகடனில் கலைஞர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல போகிறார், அப்போது ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு முதல்வராக இருப்பார் என்று எட்டு மாதங்களாக செய்தி. அதே போல பாக்சைடு ஆலை australia பார்த்து விட்டு இந்திய திரும்பியதும் அழகிரி அண்ணன் ராஜினாமா செய்ய போகிரிறார். இப்படியே பல உதாரணங்கள் சொல்லி கொண்டு போகலாம். இவர்தான் உங்கள் ஹீரோ என்று ஒரு ௨௦௦ % கற்பனை கட்டுரை.

எப்படியோ நான் விகடன் சந்தாவை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. எனவே இந்த நிகழ்வை கண்டுக்க போவதில்லை.

Vikatan was good in those days where sudhaankan was in charge of Kalugaar.

தோழி said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

ஓட்டு போட்ட ஜோதிக்கு ஒரு ஓ போட்ரலாம்.ராம்ஜி அண்ணெ,நீங்க சீனியர்,நீங்க சொன்னா சரியா இருக்கும்.விகடன் தரமே எஸ் பாலசுப்ரமணீயம் ஆசிரியராக இருந்தபோது பிரமாதமாக இருந்தது

ராம்ஜி_யாஹூ said...

செந்தில்குமார், சீனியர் ஜூனியர் எல்லாம் இதில் இல்லை. நானும் உங்கள் அளவே அனுபவம் பெற்ற சாமானியன் தான்.


எனக்கு உங்கள் கருத்தின் மீது தான் உடன்பாடு இல்லை, உங்களின் மீது எனக்கு உடன்பாடு உண்டு

Rajan said...

அவனுக பாசிஸ்ட்டுகளாகிட்டானுக! எதிரா யாரு பேசினாலும் கோவம் தாங்க முடியல்!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

விகடனுக்கு ஆபத்து என்றவுடன் எல்லா சூத்திரக் கண்மணிகளும் ஓடிப்போய் சொம்பு தூக்குங்க.

சொந்த புத்தியே கிடையாதா? இதே ஒரு சூத்திரப் பததிரைக்கு ஆபத்து என்றால் அவாள் யாரும் உதவிக்க வர மாட்டாள். அப்புறம் என்ன சொல்லியிருப்பார்கள், "எழுதும் போது அளவோட எழுதணும். அப்புறம் இதுக்கு கோர்ட் இருக்கு. அங்க தான் போகணும். நம்ம வேலை வெட்டியாய் விட்டு விட்டு இதுகெல்லாம் போக முடியுமா. போய் பசங்களை நல்லா படிக்க வைத்து முன்னேருன்கப்பா?

சொந்த அறிவு என்னைக்கு இருந்தது நம்மளுக்கு. இப்ப வரதுக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்ஜி அண்ணே,உங்க கருத்து ,.>>>

எனக்கு உங்கள் கருத்தின் மீது தான் உடன்பாடு இல்லை, உங்களின் மீது எனக்கு உடன்பாடு உண்டு <<<

ரொம்ப அருமை.ஆரோக்யமான நட்பு எப்பவும் ந்மக்குள் வளரட்டும்.

Thamizhan said...

பத்திரிக்கை "தர்மம்" என்று ஒன்று இருப்பதாக யாரும் இப்போதெல்லாம் நம்புவதில்லை.நாய் குரைப்பது கூட ஒரு காரணத்திற்காக,ஆனால் இந்த்ப் பத்திரிக்கைகள் குரைப்பது காசுக்காக.ஆதாரமில்லாமல் மஞ்சள் பத்திரிக்கை,அவர்களே கேள்விகள்,அசிங்கங்கள் பொய்களின் சிகரங்கள் இதுதான் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ப் பத்திரிக்கைகள்.முதலில் தங்களைத் திருத்திக் கொண்டு வரட்டும்.உண்மைகளை ஆதாரங்களுடன் எழுதுங்கள்.உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கண்டதும் எழுதினால் எப்படியிருக்கும்.

Unknown said...

appadiyea antha pathirikkai vilamparathayum podda nalla irukkum........
i read all your posts. very nice. keep it up.

Unknown said...

உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் வெளியிடுவதுதான் பத்திரிகை தர்மம்... அரசல்புரசலாக எழுதி குழப்பம் விளைவிக்க முயன்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள்... அது அவர்களின் சுதந்திரம்... அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு விகடன் தான் பொறுப்பு... அதை விடுத்தது ஐயோ என்னை அடிக்கிறான் கிள்ளுறான் என்று சின்னபிள்ளை மாதிரி அழ கூடாது... அது ஒரு பத்திரிக்கைக்கு அழகில்லை... விகடனிடம் ஆதரமிருந்தால் அதை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று நேர்மையாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும்...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா, பதிவுலகில் வருடக்கணக்கில் அனுபவம் பெற்ற பல ஜாம்வான்களை எல்லாம் குறுகிய காலத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டீர்கள். இது மிகப் பெரிய சாதனை. உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொர்டு மாதிரியாக வித்தியாசப் பட்டு பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உங்களை யுயர்த்துகிறது. நண்பா, நீ என் நண்பன் என்பதில் எனக்கு மிகப் பெரிய மரியாதை. சந்தோசம். மகிழ்ச்சி. நீங்கள் நம்பர் ஒன் பதிவாளராக வர என் அன்பான வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ராஜன்,அம்பி 2 பேரும் ரொம்பக்கோவமா இருக்கீங்க போல.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சரவணன் ,செம கிண்டல் பேர்வழி போல நீங்க,வருகைக்கு நன்றி

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///சி.பி.செந்தில்குமார் said...ராஜன்,அம்பி 2 பேரும் ரொம்பக்கோவமா இருக்கீங்க போல.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி///

சி.பி.செந்தில்குமார்...உங்கள் வாதம் சரியில்லை. எதற்கு இந்த சொற்கள்."ரொம்பக்கோவமா இருக்கீங்க." உண்மையை சொன்னால் நாங்கள் கோபமாக இருக்கிறோம் என்று எப்படி நீங்கள் சொல்லலாம். ஏன் இந்த அறிவுரையை அவாள் விகடனுக்கு சொல்லவேண்டியதுதானே? என்ன சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் எல்லாம். இதற்கு "when they provided you a landnry list.such as "சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு." சி.பி.செந்தில்குமார், நீங்கள் சொல்லிருக்க வேண்டும், விகடன் குழுமமே, "நீங்கள் "ரொம்பக்கோவமா இருக்கீங்க போல" என்று என்னிடம் சொன்ன மாதிரி. நீங்கள் அதை சொல்ல வில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதற்க்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். நீங்களும் அந்த முற்றுகையைத் தவிர்க்க கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லிருக்க வேண்டும். அப்படி சொன்னால் நீங்கள் உத்தமர். அதை விட்டு விட்டு. எங்களுக்கு அறிவுரை. இது தவறு. அடிமை மனப்பான்மை இன்றும் தமிழ் நாட்டில் ஒழியவில்லை...

///Govindarajan said...உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் வெளியிடுவதுதான் பத்திரிகை தர்மம்...விகடனிடம் ஆதரமிருந்தால் அதை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று நேர்மையாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும்... ///
நூற்றுக்கு நூறு உண்மை! பொறுக்கிப் மற்றும் விபசாரப் பத்திரிக்கைகளுக்கு பதில் சொல்ல தேவை இல்லை.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2 contd from above..
///Thamizhan said...பத்திரிக்கை "தர்மம்" என்று ஒன்று இருப்பதாக யாரும் இப்போதெல்லாம் நம்புவதில்லை. இந்த்ப் பத்திரிக்கைகள் குரைப்பது காசுக்காக.ஆதாரமில்லாமல் மஞ்சள் பத்திரிக்கை. கேள்விகள். அசிங்கங்கள் பொய்களின் சிகரங்கள் .உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கண்டதும் எழுதினால் எப்படியிருக்கும்.///

எது பத்திரிக்கை "தர்மம்". கேட்டால் கோர்ட்டில் சந்தி என்று சொலவது. அடேய்! இதற்க்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். நீங்களும் அந்த முற்றுகையைத் தவிர்க்க கோர்ட்டுக்கு செல்லுங்கள். கேட்டால் என்ன கோர்ட்டு என்பீர்கள். கோட்டே ஒரு Fraud என்பீகள். அனல் அது எங்களுக்கு மட்டும் தான். உங்களுக்கு என்று வரும் போது கோர்ட்டு தான் எல்லாம்.!

ஆனால் நீங்கள் கொலையே செய்தாலும், 147 வருடம் வாய்தா வாங்கினாலும் அப்ப என்ன பதில்? நாங்க என்ன பண்ண முடியும் கோர்ட்டில ஆர்டர் போட்டுட்டா! அவாள்கள் எல்லா குற்றத்திலும் இருந்தது தப்பிக்க நாடுவது கோர்ட்டு தானே? தேசம் அவாளுது. கோர்ட்டு அவாளுது.. ஆனால் சொம்பு தூக்குவது நம்மஆளு.

தூத்தெரி! இந்த தூத்தெரி! பார்ப்பனர்களுக்கு அல்ல.அவாள் ரோமப நல்லவா.

இந்த தூத்தெரி! சொம்பு தூக்கும் நமதது சகோதர சகோதரிகளுக்கும் மட்டும் தான். இதுக்கு மாண்டுகடலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

அம்பி அண்ணே,சரண்டர்.உங்க அளவு எனக்கு வாதிடும் திறன் இல்லை.நீங்க சொல்றது எனக்கு புரியுது.ஆனா அதுக்கு மறுமொழி கூறும் அளவு எனக்கு இன்னுமனுபவம் பத்தாதுனு நினைக்கிறேன்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///அம்பி அண்ணே,சரண்டர்.உங்க அளவு எனக்கு வாதிடும் திறன் இல்லை.நீங்க சொல்றது எனக்கு புரியுது.ஆனா அதுக்கு மறுமொழி கூறும் அளவு எனக்கு இன்னுமனுபவம் பத்தாதுனு நினைக்கிறேன் ///

மன்னிக்கவும். மறுபடியும் தவறு செய்கிறீர்கள். அவாள் சொன்னால் நியாயம். ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னால் கோபம. இது தவறு. எவன் சொன்னாலும் அதில் உள்ள உண்மையைப் பாருங்கள். சொல்லும ஆளைப பார்க்காதீர்கள்.

நீங்கள் சொல்லும "எனக்கு வாதிடும் திறன் இல்லை," "மறுமொழி கூறும் அளவு எனக்கு இன்னுமனுபவம் பத்தாதுனு நினைக்கிறேன்," என்று சொல்வது ஏதோ நான் எனது வாதத்தால் உங்களை வென்றது மாதிரியும், எனது விவாதமே தவறு என்று சொல்வது மாதிரி இருக்கிறது.

வாதத்திறமை தெரிந்த அவாளையே கூப்பிடுங்கள். நான் ரெடி. ஏனெறால் இந்த வாதத்தை ஒரு குப்பனோ இல்லை சுப்பனோ அல்லது எனது "சூத்திர கண்மணிகளோ" செய்து ஜெயிப்பார்கள்.

ஏனென்றால் உண்மை எனது பக்கம். அதனால் ஜெயித்தது உண்மை தான். எனது வாதத் திறமையால் அல்ல!

சி.பி.செந்தில்குமார் said...

போச்சு.என்ன பண்றது?

புரட்சித்தலைவன் said...

//அம்பி அண்ணே,சரண்டர்.உங்க அளவு எனக்கு வாதிடும் திறன் இல்லை.நீங்க சொல்றது எனக்கு புரியுது.ஆனா அதுக்கு மறுமொழி கூறும் அளவு எனக்கு இன்னுமனுபவம் பத்தாதுனு நினைக்கிறேன் //


அண்ணா உங்கள் தன்னடக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.....
காலேஜ்ல first year students க்கு ராக்கிங் கொடுமை இருக்க தான் செய்யும்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் அண்ணே,நல்ல சமயத்துல கை குடுத்தீங்க

kathir said...

Hai cps sir

this is kathir here
how are you ?
hope u fine

Happy diwali in advance

kathir said...

Hai cps sir

this is kathir here
how are you ?
hope u fine

Happy diwali in advance

vels-erode said...

எனக்கே ஜூ.வி.யில் வரும் சில கட்டுரைகளைப் படிக்கும் போது கடுப்புத் தான் வருது. அவ்வளவு கேனத்தனமா எழுதறாய்ங்க....! என்ன செய்ய? நம்ம தலை விதி ! இதெல்லாம் வாசிக்க வேண்டியிருக்கு!

"உழவன்" "Uzhavan" said...

தமிழ்நாட்டைக் காலிபண்ணிட்டு, பேசாம பீகாருக்கோ குஜராத்துக்கோ போய் செட்டிலாயிராம்போல.

Ravi kumar Karunanithi said...

ok writtu vidu..

anbu said...

பத்திரிக்கைனாலே திரிக்கரதுதனு தெரியுது .அரசால் புரசலான செய்திதான் என்று வாதிட வேண்டாம். அரசால் புரசலான செய்திதான் என்று நான் (bulk sms)அனுபின போலீஸ் புடிக்காது .உங்களை கேட்க யாரு