Sunday, August 29, 2010

விலை -சினிமா விமர்சனம்

படத்தின் ஸ்டில்களைப்பார்த்தோ,எகனை மொகனையான போஸ்டர்களைப்பார்த்தோ, அஜால் குஜால் படம் என நினைத்து வரும் அனைத்து சீன் பட ரசிகர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இந்தப்படத்தில் மெடிசனுக்குக்கூட அதாங்க மருந்துக்குக்கூட அது போல் ஒரு சீன் இல்லை என் மட்டற்ற மகிழ்ச்சியோடும்,பிட்டற்ற வருத்தத்தோடும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
20 வருடங்களுக்கு முன் கார்வண்ணனின் பாலம் என்று ஒரு படம் வந்தது,மொத்தமே 2 லட்சம்தான் செலவு,2 நாகள் ஓடுனாலே லாபம் என்ற கான்செப்டில் வந்த படம் ,40 நாட்கள் ஓடின.அது போல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து முதலுக்கு மோசம் இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் படங்கள் வரிசையில் இதை சேர்க்கலாம்.
படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே பருத்திவீரன் சித்தப்பு சரவணன் கேப்டன் மாதிரி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும்போது தான் எனக்கு சந்தேகம் வந்தது,இது பிட்டுப்படமா?ஆக்‌ஷன் ஹிட்டுப்படமா ?என.

நாடோடிகளில் காதில் அடி வாங்கி செவிடாகிப்போவாரே அவர்தான் ஹீரோ.நோ ஹீரோயின்,நோ டூயட், ஒன்லி ஆக்‌ஷன்.
.சென்னைக்கு வரும் அப்பாவிப்பெண்களை ஒரு கும்பல் வளைத்துப்பிடித்து ஆன்லைன் வியாபாரத்தில் ஏலம் விடுகிறது.அவர்களை பாதிக்கப்பட்ட அண்ணன் போலீஸ் ஆஃபீசருடன் இணைந்து காப்பாற்றுவதே கதை.
ஹீரோவுக்கு பம்பு செட் பட்டப்பெயர் எப்படி வந்தது என சர்வே எடுப்பது செம காமெடி.அந்த பிராசஸ் நடக்கும்போதே விஜய் டி வி வரை அந்த மேட்டர் போவது சிரிப்பு.அப்பா,அம்மா கிட்ட தான் திருடுனதை சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கும் ஹீரோ ,தங்கை ஊர் பூரா ஃபோன் போட்டு மானத்தை கெடுப்பது சுவராஸ்யம்.அண்ணன்,தங்கை இருவரும் அடித்துக்கொள்வதும் ,பின் பிரச்சனை வரும்போது சேருவதும் எதார்த்தம்.
மேற்படிப்புக்காக தங்கையை சென்னை அழைத்து வரும் அண்ணன் எவ்வளவுதான் அப்பாவியாக இருந்தாலும் அப்படியா தனியாக டாக்சியில் விட்டு வருவார்?ஆனால் திரைக்கதையை வேகமாக நகர்த்தும் கலையில் இயக்குனர் காமராஜ் தேர்ச்சி பெற்றதால் சமாளிக்கிறார்.
அருக்காணி எனும் குத்துப்பாடலில் டைரக்டரின் பேடு டேஸ்ட் வெளிப்படுகிறது,(கமர்சியல் காம்ப்ரமைஸ்?)பிரபுதேவா ஒரு படத்தில்(மிஸ்டர் ரோமியோ?)ஹீரோயின் இடுப்பில் ஆம்லெட் போடுவது போல் இதிலும் ஒரு சீன் உண்டு.மக்காச்சோளத்தை போட்டதும் அது இடுப்புச்சூட்டில் பாப்கார்ன் ஆகிறது.(என்னே ஒரு இன்டீசண்ட்டான கற்பனை?)

படத்தின் கேமராமேனுக்கு ஒரு கேள்வி.அது ஏன் அடிக்கடி கேமராவை லோ ஆங்கிளில் வைக்கிறீர்கள்?அதெல்லாம் காமிராமேதை(!?)கர்ணனின் ஜம்பு,இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகிய படங்களோடு வழக்கொழிந்து போனதே?

அதே போல் இயக்குனருக்கு ஒரு கேள்வி.நாடோடிகள் படம் உங்களை ரொம்ப பாதித்திருக்கலாம்,அதற்காக அதிலிருந்து ஏகப்பட்ட காட்சிகளை உருவ வேண்டுமா?குறிப்பாக சம்போ சிவசம்போ பாட்டு ஸ்டைலில் அச்சு அசலாய் ஜெராக்ஸ் எடுக்க வேணுமா?
வில்லனின் ஆட்களை செல்ஃபோன் மூலம் கேட்ச் அவுட் பண்ணும் சீன் செம திரில்லிங்க்.(என்னதான் அது தி செல்லுலார்  என்ற ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டிருந்தாலும்).
ஹீரோயிச எஃபக்ட் வேண்டும் என்பதற்காக சரவணன் வரும்போதெல்லாம் ஹோ ஹோ ஒஹொஹோ, ரீ ரீ போ போ ரிம்பக் என்பதெல்லாம் ஓவர் பில்டப்.படத்தில் சரவணன் பேசும் பஞ்ச் டயலாக்குகள் செம காமெடி.
பஞ்ச் டயலாக் 1 -போலீஸ்காரன் திருடனை பிடிக்காம கூட இருப்பான்,ஆனா என்ன நடந்ததுனு தெரியாம இருக்க மாட்டான்.(அப்போ தானே மாமூல் வாங்க முடியும்?)
பஞ்ச் டயலாக் 2 - ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதா அப்படிங்கறது ஒர்க் அவுட் ஆனபின்புதானே தெரியும்?(சத்தியமா எனக்கு அர்த்தம் புரியலை)
பஞ்ச் டயலாக் 3 - உண்மையை சொல்ற நண்பனை விட எனக்கு கடமையை செய்யற போலீஸ்தான் வேணும்.

சரவணன் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.பஞ்ச் டயலாக் பேசுவதற்கு 50 படங்களாவது நடித்திருக்க வேண்டும்,அதில் 20 படமாவது ஹிட் குடுத்திருக்க வேண்டும்.(சத்தியமா நான் விஜய்யை கிண்டல் பண்ணலை).அதே போல் போலீஸ் கேரக்டர் பண்ணும்போது அட்லீஸ்ட் ரிவால்வரை எப்படி பிடிக்க வேண்டும் என்றாவது கற்றுக்கொண்டிருந்தால் தேவலை.காக்க காக்க படம் பார்க்க பார்க்க.
ஹீரோவின் தங்கை வேனில் கடத்தப்பட்டு வரும்போது அவரது உதட்டு காய ரத்தத்திலிருந்து வேன் பின் புற கண்ணாடிக்கதவில் கிட்னாப்புடு என எழுதும் ஐடியா ஓகே.
ஆனால் போலீஸ் செக்யூரிட்டியை மீறி அவர்கள் எப்படி ஆந்திரா பார்டரை கடந்தார்கள் என்பது டைரக்டருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்.ஊமை என சைகை செய்து தப்பிக்கும் கைதியை  தப்பிக்க விட்டு, பின் ஊமைக்கு ஏன் செல் ஃபோன் எனக்கேட்டு மடக்கும் சீனும் புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டே.
மாட்டிக்கொண்ட பெண் கொலுசை கூர் செய்து த்ற்கொலை செய்து கொள்ளும் சீன் பரபரப்பு.தெலுங்கில் டப் பண்ணவும்,டப்பு  பண்ணவும் வசதியாக பானுச்சந்தரை யூஸ் பண்ணிக்கொண்ட விதத்தில் இயக்குனரின் தொலை நோக்குப்பார்வை தெரிகிறது.

வில்லி சரவணின் மகள் என்ற ட்விஸ்ட் எண்டமூரி வீரேந்திரநாத்தின் மர்ம மாளிகை நாவலில்,சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்தில் உட்பட பல வற்றில் பார்த்தது தானே?மன்மதக்காடு பாட்டு ஜெவின் “ஆடாமல் ஆடுகிறேன் “பாட்டின் காப்பி.ஹீரோ சரவணனிடம் சார்,1 ல இருந்து 100 ஐ பார்க்காதீங்க,99ல இருந்து பாருங்க,பக்கத்துலயே இருக்கும்னு ஒரு வசனம் வருது.அது எதுக்குன்னு யாருக்கும்  புரியலை.

சரவணனுக்கு வரும் அந்த ஃப்ளாஸ்பேக் காட்சிகளை இன்னும் எடிட் செய்திருக்கலாம்,அவர் புரொடியூசர் என்பதற்காக இந்தக்கொடுமையை எல்லாம் ரசிகர்கள் தாங்க வேணுமா?

படத்தில் வில்லியாக வருபவர் டி ஆர் பட வில்லி மாதிரி ஓவர் ஆக்ட் செய்வது ரசிக்க வைக்கிறது.(கேப்டன் பிரபாகரன் மன்சூர் மாதிரி).அவரது நடை உடை பாவனைகள் எல்லாம் பக்கா ஐட்டம் போல் அமைந்தது டைரக்டரின் சாமார்த்தியமா?நடிகையின் அதிர்ஷ்டமா?(பார்ட்டி செம கட்ட மாமு)
இலங்கைப்பெண்ணாக வருபவர் தற்கொலை செய்யும் சீன் நான் கடவுள் க்ளைமாக்ஸ்சை ஞாபகப்படுத்துகிறது.

வசனகர்த்தாவின் பெயர் சொல்லும் இடங்கள்
1. ஒரு பொண்ணா எனக்கு கிடைக்காத மரியாதை நான் பொணமான பிறகாவது எனக்கு கிடைக்கட்டும்.
2.கடவுள் மனுஷனா வந்து யாரும் பார்த்ததில்லை,ஆனா மனுஷன் கடவுளா இருந்து உதவி செஞ்சதை  நிறைய பார்த்திருக்கேன்.
3.விலைமகளான எங்கம்மாவைப்பார்த்தா அவ கிட்ட சொல்லுங்க,”நீங்க பார்த்த நரகத்தை அவ பார்ர்க்காம ,நீங்க பார்க்காத சொர்க்கத்தை பார்க்க அவ மேல போய்ட்டா அப்படினு”
4.படிப்பு வராத பிள்ளையை படி படினு சொல்றதும்,படிக்கற பிள்ளையை படிக்க வேணாம்னு சொல்றதும் ரொம்பத்தப்பு.
5.நரகம்னு சொல்லி இந்த தொழிலை வேணாம்னு சொல்றீங்களே,முன் அனுபவம் இருக்கா?நரகம்னா என்னனு தெரியுமா?

ஹீரோ டாக்சி டிரைவரை ஆவேசமாக தூக்கி எறிவது செமயான ஆக்‌ஷன் சீன் .ஆனால் அடிக்கடி அவர் காட்டுக்கத்தல் கத்துவது எதற்கு?ஒரு வேளை ரீ ரிக்கார்டிங் ஃபால்ட்டோ?
மன்மதக்காடு பாட்டு மிக மோசமான சிச்சுவேஷனில் வைக்கப்பட்ட மிக நல்ல பாடல்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1.பெண்களுக்கான விழிப்புணர்வுப்படத்தை ஆக்‌ஷன் ஃபார்முலாவில் எடுத்திருக்கிறீர்கள்,ஓகே,சந்தோஷம்.ஆனால் பெண்களை தியேட்டருக்கு வரவைக்க என்ன செஞ்சீங்க?போஸ்டர் டிசைன் ரொம்ப மோசம்.டப்பிங் படம் மாதிரி.
2.இந்தப்படத்தை சன் டிவி டேக் ஓவர் பண்ணி இருந்தா 50 நாட்கள் ஈஸியா ஓட வெச்சுருவாங்க.அந்த அளவு படத்துல சரக்கு இருக்கு.ஆனா படத்தை நல்லா எடுத்த நீங்க மார்க்கட்டிங் விஷயத்துல ஏன் இவ்வளவு அசிரத்தை?
3.வெர்ஜின் லேடிஸ் ஏலம் விடுவது போலீஸ் நினைத்தாலும் தடுக்க முடியாது என ஒரு வசனம் வைத்திருக்கிறீர்கள்.யார் சொன்னது?சைபர் க்ரைம்னு ஒரு டிப்பார்ட்மெண்ட்டே அதுக்குனு இருக்கே?
4.ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் இருந்தாலும் அது குடிக்கமுடியாதுதானே,பின் ஏன் நல்ல சமூக அக்கறையில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் டபுள் மீனிங் டயலலாக்ஸ் ,முகத்தை சுளிக்கும்படி சில வசனங்களை வெச்சீங்க?
5.திருடப்போறவனை தேள் கடிச்சா பரவால்லை,திமிங்கலமே கடிச்சா? அப்படினி ஒரு டயலாக் வருது,தேள் கொட்டும்,எப்படி கடிக்கும்னு பெஞ்ச் ல உக்கார்ந்து இருக்கற கடைக்கோடி ரசிகன் கூட சொல்றான்,நீங்க எப்படி அதை அனுமதிச்சீங்க?
6.போஸ்டரில் ஹீரோவின் தங்கைக்கு ரூ 50,000 என ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறது,ஆனால் படத்தில் 60 லட்சத்துக்கு விலை போகிறார்.எப்படி?
எனிவே இந்தப்படம் போட்ட முதலுக்கு மேலயே சம்பாதிச்சுக்கொடுத்துடும்.தெலுங்கில் 50 நாள் ஓடும்.இங்கே பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.(படம் ரிலீஸ் ஆகி 3வது நாளிலேயே 40 அதிகப்படியான தியேட்டரில் போட்டுட்டதா விளம்பரம் பார்த்தேன்

25 comments:

nis said...

விமர்சனம் நல்லா இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ரா ரா ராவணா,முத வட உங்களுக்கே,நன்றி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை.....

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்.உங்கள் மேலான பாராட்டுக்கும் ,கருத்துக்கும்

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம் மற்றும் அலசல்.

(பாலம் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த படம்).

சி.பி.செந்தில்குமார் said...

ஒகே ,சரி பண்ணிடுவோம்.நன்றி உங்கள் ஆலோசனைக்கு

Mohan said...

நீங்கள் இவ்வளவு தூரம் சொல்வதைப் பார்த்தால்,படம் ஒரு முறை பார்க்கும் அளவிற்கு இருக்கிறது என்று தெரிகிறது. விமர்சனம் நன்றாக இருந்தது.

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி மோகன்.

ramalingam said...

கதையைக் கேட்டால் ட்ரேடு(trade) என்ற ஆங்கில படத்தின் கதை போலவே இருக்கிறது.

Anonymous said...

சரவணன் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.பஞ்ச் டயலாக் பேசுவதற்கு 50 படங்களாவது நடித்திருக்க வேண்டும்//
இயக்குனரை பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது.இயக்குனர் சொல்வதை சரவணன் செய்திருக்கிறார்.

Anonymous said...

எனிவே இந்தப்படம் போட்ட முதலுக்கு மேலயே சம்பாதிச்சுக்கொடுத்துடும்.தெலுங்கில் 50 நாள் ஓடும்.இங்கே பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.(படம் ரிலீஸ் ஆகி 3வது நாளிலேயே 40 அதிகப்படியான தியேட்டரில் போட்டுட்டதா விளம்பரம் பார்த்தே//
விமர்சனம்+ரிசல்ட் ,தயாரிப்பாளர் வயித்துலியும் பால வார்த்து விடுறீங்க..சிபி பதிவுக்கு வந்தா படத்த பத்தின ரிசல்ட் ஜோசியமும் தெரிஞ்சுக்கலாம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

விமர்சனம் நல்லா இருக்கு

புரட்சித்தலைவன் said...

மக்காச்சோளத்தை போட்டதும் அது இடுப்புச்சூட்டில் பாப்கார்ன் ஆகிறது.(என்னே ஒரு இன்டீசண்ட்டான கற்பனை?)//

http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post_26.html
இந்த லின்க்க விட ஈசியா இருக்கே..?

விமர்சனம் அருமை..

Unknown said...

இப்போ தான் பார்த்திட்டு வரேன்....
படம் இடைவேளையிலேயே நான் தியேட்டர் மேனஜரிடம் சொல்லிவிட்டேன்..போஸ்டரை மாத்துங்கன்னு (ஒரு லேடீஸ் கூட இல்லை..)
உங்க கருத்து சரி...
மத்தபடி படம் ஓகே...

சி.பி.செந்தில்குமார் said...

MR RAMALINGAM,trade english film knot,but the director make a screenplay depend upon the real incident which occur in america,a college girl ready to auction her verginity through internet,.
thanks for coming

சி.பி.செந்தில்குமார் said...

mr sathish, thanks for coming, you forget onething, actor saravanan is the producer,so the director himself has to obey the producer

புரட்சித்தலைவன் said...

must read

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விலை போகும் அப்டிங்கிறீங்க?

டெல்லி பிரபு said...

சிபி அண்ணே
எப்படி இவ்வளவு டீடெயில விமர்சனம் பன்றிங்கே வசனமெல்லாம் மறக்காம... உட்காந்து நோட்ஸ் எடுப்பிங்களோ..!
விமர்சனம் அருமை. பார்த்துருவோம்..
பிரபு.மு

சி.பி.செந்தில்குமார் said...

பிரபு,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

s ramesh,not failure film,go smoothly to the distributers,i think, thanks for coming

சி.பி.செந்தில்குமார் said...

mr puratchiththamizan,thanks for your guidance and coming

சி.பி.செந்தில்குமார் said...

tamilish 31 v0tes,thanks to all voters and the viewers

சி.பி.செந்தில்குமார் said...

THIS FILM IS NOW IN 30 THEATRES MORE.PEOPLE MOUTHTALK IS THE REASON

முத்து குமரன் said...

//திருடப்போறவனை தேள் கடிச்சா பரவால்லை,திமிங்கலமே கடிச்சா? அப்படினி ஒரு டயலாக் வருது,தேள் கொட்டும்,எப்படி கடிக்கும்னு பெஞ்ச் ல உக்கார்ந்து இருக்கற கடைக்கோடி ரசிகன் கூட சொல்றான்,நீங்க எப்படி அதை அனுமதிச்சீங்க?
//

தேள் கொட்டும் என்பது எல்லோரும் அறிந்திருந்தாலும், வட்டார வழக்காக "கடிக்கும்" என்பதும் பயன்படுத்தபடுகிறது.
(உம்) இங்கு தேள் கடிக்கு மருந்து கிடைக்கும்.(தேள் கொட்டுக்கு அல்ல)