டைரக்டர்-மாதிரி என்ன மாதிரி,அதே கதையை அப்ளை பண்ணி ஒரு காக்டெய்ல் கதை பண்ணிடுவோம்.
ஹீரோ-சரி,படத்தோட ஒன் லைன் ஸ்டோரி சொல்லுங்க.
-
டைரக்டர் - அப்பாவைக்கொன்னவங்களை பழி வாங்கற பையனோட கதைதான்,பழைய கதைனு யாரும் சொல்லிட முடியாதபடி ஸ்க்ரீன்ப்ளே மேஜிக் கைவசம் இருக்கு.ஜோடியா பொம்மலாட்டம் காஜல் அகர்வாலை போட்ரலாம்,ஓவர் ஆக்டிங்க் ஓமனா விருது அவங்களுக்கு இந்தப்படத்துல கிடைக்கலாம்.5 லட்சம் சம்பளம் குடுத்தா அம்மணி 20 லட்சம் சம்பளத்துக்கு நடிக்குது,நீங்க வேணா பாருங்க அவங்க ஜூனியர் ஜோதிகானு பேரு வாங்கப்போறாங்க.
ஹீரோ - அதெல்லாம் ஓகே,நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் பிரைட்டா தெரிவேன்னு ஒரு காமெடி சீன் வெச்சிருக்கீங்களே,அது பல வருஷங்களுக்கு முன்பே தூறல் நின்னு போச்சுல வந்த சீன் ஆச்சே.
டைரக்டர்- ஆமா,உங்க கண்ணுக்கு எப்பவும் மைனஸ்தான் தெரியும்,படத்தோட முதல் பாதில 17 காமெடி சீன் படத்தோட ஒட்டி இருக்கற மாதிரி இருக்கே,6 இடத்துல செம அப்ளாஷ் வாங்குச்சே அதை பற்றி பேசுங்க.
ஹீரோ - 1.நாம என்ன சாப்பாட்டுக்காகவா கல்யாணத்துக்கு வந்தோம்?
அதுல என்ன டவுட்?
2.ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கட் எடுத்தா படம் பார்ப்பீங்க?
நோ, நோ பத்து ரூபா டிக்கட் கவுண்ட்டர்ல தான் செம ஃபிகருங்க வரும்.
3.என்னா அண்ணே,பொண்டாட்டிக்கு தோசை சுடறீங்க?ஹூம்,விட்டுக்குடுத்து வாழ்னு சொல்வாங்க,சுட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததுனு நினைப்பே போல.
4.சில செக்கை பேங்க்ல போட்டாதான் பவுன்ஸ் ஆகும்,இவன் குடுத்த செக்கை கீழே போட்டாலே பவுன்ஸ் ஆகிடும்.
5.கடக ராசி,பூஷ நட்சத்திரம்.ஐ லவ் யூ சீன்
இதெல்லாம் காமெடிதான்,ஓகே,ஆனா எல்லா புகழும் வசனக்ர்த்தா பாஸ்கர் சத்திக்குதானே போகும் ,நீங்க எங்கே வர்றீங்க?
டைரக்டர் - ஏன்,காஜலுக்கு நீங்க ஐஸ்க்ரீம் குடுக்க்ற சீன்,பசங்களை பார்த்ததுமே நம்பிடக்கூடாதுனு தோழி காஜலுக்கு சொல்ற சீன்,ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டு மெதுவா கொண்டு வாங்க என அமர்த்தலா சர்வர்ட்ட சொல்ற சீன்,காஜல்ட்ட ஃபோன்ல பேசிட்டே அவங்க வீட்டுக்கே வ்ந்து சம்பந்தம் பேசற சீன் எல்லாமே டைரக்ஷன் டச் உள்ள சீந்தானே?
ஹீரோ - எப்படியோ யுவனை பிடிச்சு 3 ஹிட் பாட்டு வாங்கிட்டீங்க?வா வா நிலவை பிடிச்சு பாட்டுக்கு ரசிகர்கள் செம அப்ளாஸாமே?கண்ணோரம் பாட்டுக்கு உங்க ஜிம்மிக்ஸ் வேலைகள் கனகச்சிதம்.ஆனா அடிக்கடி நான் செல் ஃபோன்ல பெசிட்டே வண்டி ஓட்டற மாதிரி 8 சீன் வெச்சு இருக்கீங்களே ,எதுக்கு?
டைரக்டர் - படத்துல என்ன சொல்ல வர்றீங்கனு எவனும் கேட்டுடக்கூடாது,பைக்ல போறப்ப ஃபோன் பேசக்கூடாது அப்ப்படிங்கறதுதான் மெஸேஜ்னு சொல்லி சமாளிக்கலாம்.வில்லன் குரூப்பை க்ளைமாக்ஸ்ல ஹீரோ அதகளம் பண்ற சீன்ல பின்னீட்டமில்ல?அனல் அரசு கலக்கிட்டாரு.
ஹீரோ - அது ஓகே,ஆனா ரன் படத்துல மாதவன் செஞ்ச மாதிரியே இருக்குன்னா என்ன பண்றது?அது கூட தேவலை.கல்யாண வீட்ல கரண்ட் போனதும் வழக்கமா ஜெனெரேட்டர்தானே போடுவாங்க?1000 மெழுகுவர்த்தி எல்லாம் யார் இந்தக்காலத்துல ஏத்த்றாங்க?
டைரக்டர் - அப்பதாங்க பாட்டு சீன்ல ஜாலவித்தை காண்பிக்க முடியும்?வெண்ணிலா கபாடி குழுல வந்த புரோட்டாக்காமெடி செஞ்சவரை இன்னும் நல்லா உபயோகிச்சிருக்கலாம்.பின்னணி இசைலயும் யுவன் கிட்ட இன்னும் நல்லா வேலை வாங்கி இருக்கலாம்னு தோனுது.
ஹீரோ - பின்னால் ஒரு பெரிய சாட்சியாக வந்து நிற்பான்னு தெரிஞ்சும் யாராவது ஃபோனை வாங்கி அதுல வில்லனின் ஃபோன் நெம்பரை போட்டு பேசுவாங்களா?அதுல ரெக்கார்டு ஆகும்னு தெரியாதா?
டைரக்டர் - சரி விடுங்க,மிஸ் ஆகிடுச்சு.உங்கப்பாவை கொலை பண்ற காட்சி,ஏரியா தாதாவை பொடிப்பசங்க போட்டுத்தள்ள்ற சீன் எல்லாம் செம விறுவிறுப்புதானே?
ஹீரோ - அவ்வளவு பெரிய தாதா ஒரு பொடியன் பாட்டிலை உடச்சு மிரட்னதும் ஓடறது நம்பற மாதிரி இல்லை.
டைரக்டர் - படம் போற செம ஸ்பீடு விறு விறுப்புல அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க.படத்துல வன்முறை அதிகம்னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான் முன்பாதி பூரா படத்துக்கு சம்பந்தமில்லைனாலும் காதல்,காமெடி,நக்கல்,நையாண்டினு கொண்டு போனேன் பார்த்தீங்களா?
ஹீரோ - அதுலதான் பிரச்சனை,முதல் பாதி காமெடி,செகண்ட் ஆஃப் ஆக்ஷன் த்ரில்லர்னு திடீர்னு படம் கலர் மாறுதே அதை ரசிகர்கள் எந்த அளவு ஏத்துக்குவாங்கன்னு தெரியலை.
டைரக்டர் - ஒண்ணும் கவலைப்படாதீங்க.போட்ட முதல் கண்டிப்பா வந்துடும்.நல்ல ஓப்பனிங்.ஈரோட்லயே 4 தியேட்டர்,திருப்பூர்ல 7 தியேட்டர், 2 வாரம் ஓடுனாலே போதும் அள்ளிடலாம்.எப்படியும் படம் எல்லா செண்ட்டர்லயும் சராசரியா 50 நாள் ஓடிடும்.அடுத்த படமும் நம்ம காம்பினேஷன் தான்.
30 comments:
ஜி... சத்தியமா பதிவு எழுதி முடிச்சப்புறம் தான் உங்க பதிவோட தலைப்ப பாத்தேன்... தப்ப எடுத்துக்காதீங்க...
,நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் பிரைட்டா தெரிவேன்னு ஒரு காமெடி சீன் வெச்சிருக்கீங்களே,அது பல வருஷங்களுக்கு முன்பே தூறல் நின்னு போச்சுல வந்த சீன் ஆச்சே//
புள்ளி விவரம் எல்லாம் சூப்பருங்கோ...
வித்யாசமான விமர்சனம்....
தமிழ் மணம் பிரச்ச்னை தீரவில்லையா....
வித்தியாசமான விமர்சனம்தான்..!
ஊர்ல இருந்து வந்ததும் பதிவு போட்டு அசத்திட்டிங்களே?... விமர்சனம் அருமை. சம்திங் டிஃப்ரென்ட்!
பணம் கிடைக்க ஏற்பாடு
விமர்சனமா
பணம் கிடைத்தால் வெற்றி விமர்சனம்
இல்லையென்றால் பிளாப் விமர்சனம்
தலைப்பு நான் மாக்கான் அல்ல - சி. பி. செந்தில்குமார்
அப்படியென்று போட்டுருக்க வேண்டும்
அதை விட்டுட்டு ரசிகர்கள் என்று போடுவது தவறு
வித்தியாசமான விமர்சனம் :)
unka faarin varamalar joke arumai.
nanbaa, en intha karuththuraikkum pathil sollaamal mavunam saathikkeerkal?... neenka vaayvittu rentu vaarththaip pesinaathaane athu azhaku...
இன்னும் படம் பார்க்கவில்லை தல . விமர்சனம் அருமை
வாங்க பிரபாகரன்,நம்ம 2 பேர் சிந்தனையும் ஒத்து போயிருக்கு அவ்வளவுதான்.
கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா--சினிமா வியாபாரம்--புகைப்படங்கள்-தொகுப்பு
http://kaveriganesh.blogspot.com/
வித்யாசமான விமர்சனம்....
வித்தியாசமான விமர்சனம்.
பூங்கதிர்,சாரி,வேலைப்பளு,உங்க விமர்சனத்துக்கு நன்றி.வாரமலர் ஜோக் பாராட்டுக்கும் நன்றி.தொடர்ந்து படைப்போம்.
புதிய முறையில் விமர்சனம் செய்திருப்பது
பாராட்டுக்குரியது.
தொடருங்கள்.
புரட்சித்தமிழன்,வித்யாசமான முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி
அமைதி அப்பா அவர்களே,நன்றி
கதிர்,அதெல்லாம் ஒரு மார்க்க்ர்ட்டிங்க் டெக்னிக்,அவ்ளவ் தான்.ந்நோ டென்ஷன்,ரிலாக்ஸ்
but i like this film
ரமேஷ்.எனக்கும் படம் ஒகே தான்.சும்மா ஒரு அட்ராக்சனுக்காக அப்படி டைட்டில் வைத்தேன்
good review.
மதுரை சரவணன்,உங்க விமர்சனம் உங்க பிளாக்ல போய் பார்த்தேன்,அசத்துறீங்களே
பnனித்துளி சங்கர்,வருகைக்கு நன்றி,படம் பார்க்கலாம்,முதல் பாதி உங்களுக்கு மிகவும் பிடித்த காதல் தீம் வித் காமெடி
காவெரி கணேஷ்,வருகைக்கு நன்றி,வந்து பார்க்கிறேன்
வெரும்பய அவர்களே, வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
kumaar,வருகைக்கு ,விமர்சனத்திற்கு நன்றி
விமர்சனம் ரசிக்கும்படிதான் எழுதி இருக்கீங்க..ஆனா..இது 30, 35 வருசத்துக்கு முந்தைய ஆனந்த விகடன் விமர்சன ஸ்டைல் இல்லையா...
ஆஹா,கரக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே,உங்க ஞாபக சக்தில இடி விழ,தல ,சும்மா ஒரு சேஞ்சுக்குதான்
Post a Comment