Saturday, August 21, 2010

இனிது இனிது - சினிமா விமர்சனம்

படத்துக்கு பேசாமல் (அல்லது பேசிக்கிட்டே) ஃபோர் பிளஸ் ஃபோர் (4 + 4) என டைட்டில் வைத்திருக்கலாம்.4 லவ் ஜோடிகள்,அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்,ஊடல்கள்  என இளமை ததும்பும் கதைதான்.ஆனால் திரைக்கதை..?

டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்திருக்கும் படம், இனிது இனிது. தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெ‌ரிய வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படத்தின் தமிழ் ‌ரீமேக் இது.


 தெலுங்குக்காரர்களுக்கு ஒருவேளை இந்தக்கதை புதுசாக இருந்திருக்கலாம்.நாம் தான் ஏற்கனவே சுசிகணெசனின் 5 ஸ்டார்,ஒரு கல்லூரியின் கதை,பறவைகள் பலவிதம் என பலவிதத்திலும் பார்த்து சலித்தாகி விட்டதே.


காதலன் படத்தில் ஹீரோவின் அப்பா ஹீரோவோடு சேர்ந்து தண்ணி அடித்தாலும் அடித்தார்,அதை அப்படியே காப்பி அடித்து பல படங்களில்... இப்போ  இந்தப்படத்தில் அதை விட ஒரு படி மேலே (கீழே?) போய் சைட் அடிக்க செட்டா போறாங்க(பரிணாம வளர்ச்சி?).கொடுமை.

காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லோரையும் அவர்கள் பெற்றோரெ காலேஜ்க்கு டிராப் பண்ணுவதாக இயக்குனருக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை.4 ஜோடிகள் என முடிவான பிறகு ஆர்டினரி,ஹிப்பி,ஃபங்க்,லூஸ் என வெரைட்டிக்கு ஒன்று என தேர்வு செய்த இயக்குனரின் எண்ணம் ஓகே,ஆனால் அது தேவை இல்லாதது.
ரேகிங்க் சீனின் ஓப்பனிங்க் காட்சிகள் ஓகே, ஜாலி ரகம்.தமிழ் வழிக்கல்வியை ஆரம்பத்தில் கிண்டல் அடித்து பின் சாமார்த்தியமாக பாசிடிவ்வாக திருப்பி அடிப்பதில் இயக்குனர் சபாஷ் பெறுகிறார்.பாடகியாக வரும் ஹீரோயின்,அப்புவாக வரும் சோடா புட்டி,மூடி டைப்பாக வரும் சீனியர் என 3 பேருக்கும் சரியான போட்டி.அதில் வென்றது அப்புதான்.

முதல் பாடல் காட்சியில் பிரம்மாண்டமாக தேசியக்கொடியை மேலிருந்து கீழே பறக்க விட்டு பூக்களை சொறியச்செய்து எடுத்த சீன் இயக்குனர் எதிர்பார்த்த தியேட்ட ரெஸ்பான்ஸை பெறாததற்குக்க்காரணம் அது ஒரே ஷாட்டாக காண்பிக்கப்படாமல். கட்ஷாட்டாக காண்பிக்கப்பட்டதுதான்.

அமெரிக்காவே கடன் கேட்கும் எனும் பாடல் வரிகளில் வைரமுத்து உள்ளேன் ஐயா சொல்கிறார்.
ஹீரோவாக வரும் புதுமுகம் சிபிராஜ் சாயல்,ஆனால் அவரை விட நல்லாவே நடிக்க முயற்சிக்கிறார்.லன்ச் காட்சிகளில் காலேஜில் அனைவரும் பிளாஸ்டிக் ஸ்பூனால் சாப்பிடுவது போன்ற காட்சி எதற்கு?மதுவாக வரும் ஹீரோயின் உயிர் சங்கீதா சாயல்.முக வசீகரம்,புன்னகை,கண்ணியமான தோற்றம் என கோல் அடிக்கிறார்.ஆனால் அவருக்கு மனசுக்குள் தான் ஒரு சூப்பர் ஃபிகர் என்ற சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் என்ற எண்ணம் மேலோங்கியதால் பர்ஃபார்மென்சில் கோட்டை விடுகிறார்.

காக்கா கக்கா போன சாப்பாட்டை ஹீரோயினடம் இருந்து பிடுங்கி வில்லன் சாப்பிடும் சீனை இயக்குனர் காமெடி சீன் என நினைத்தால் சாரி.

படம் பூரா பின்னணியில் கதை சொல்லும் உத்தி எடுபடவில்லை.
லெக்சரரையே வாட் எ பியூட்டி என கொஞ்சுவது ஓவர் என்றாலும் ரசிக்கலாம்.ஆனால் எந்த காலேஜில் லேடி லெக்சரர் இப்படி லோ கட்,லோ ஹிப் என கலக்கலாய் வர்றார் என இயக்குனர் விளக்கினால் நல்லது.
FILE


இனிது இனிதுவை ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியிருக்கிறார். குஷி, நியூ, மொழி, தெலுங்கு அத்தடு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த குகனின் முதல் இயக்குனர் முயற்சி இந்தப் படம்.

கல்லூரியின் முதல் நாளில் தொடங்கும் படம் இறுதி நாளான ஃபேர்வெல் டேயில் முடிகிறது. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் நட்பு, காதல், மோதல், துரோகம், பச்சாதாபம் என அனைத்தையும் மிகை இல்லாமல் சொல்கிறது.

இனிது இனிது பாடல் காட்சியில் இயக்குனரின் பல சின்ன சின்ன ஐடியாக்கள் சூப்பர்.குறிப்பாக புகையில் வானில் அவரவர் விருப்ப ஆட்களின் உருவம் வரவைப்பது,SMS பண்ணுவதை ஸ்க்ரீனில் எழுத்துக்களாக காட்டுவது அனைத்தும் அருமை.

சீனியர்-ஜூனியர் லவ் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது.முதலில் உம்மனாமூஞ்சியாக வருபவர் படிப்படியாக புன்னகையிலேயே காதலை  வழிய விடுவது அற்புதம்.
டீச்சரிடம் (?) ஒப்பிக்கும்போது அவர் லோ ஹிப்பில் மயங்கி அடச்சே காத்து வந்து கவுத்திடுச்சு என புலம்புகையில் தியேட்ட ர் அதிர்கிறது.

1)பர்த்டே பார்ட்டிக்கு நான் வர்லை


ஓகே நான் வேணா அவ கிட்ட சொல்லி பர்த்டேவை போஸ்ட்போன் பண்ண
சொல்லவா?
2)பிடிச்சிருந்தா வா,பயமா இருந்தா வேணாம்

2ம் ஒண்ணா இருந்தா?
அப்படி இருக்க சான்ஸ் இல்லை.


3)சண்டை போடறது ஈஸி,பின் அதை சமாதானப்படுத்தறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

4)எதுவா இருந்தாலும் அனுபவிக்கறப்ப அதனோட அருமை தெரியறதில்லை,பிரியனும்னு நினைக்கறப்பதான் கஷ்டம் தெரியுது.

5)டியர்,உன் தலைமுடியும் சுருள் சுருளா இருக்கு,என் முடியும் சுருள் சுருளா இருக்கு.
 சோ வாட்?

அப்போ நாம லவ் பண்ணலாம்தானே?

6)ஆ,இடிச்சிடுச்சு.

ஒக்கே டியர்,காலேஜ் லீவ் விட்ரலாமா?


இதெல்லாம் வசனங்களில் இயக்குனர் சிக்ஸர் அடித்த காட்சிகள்.

கிரிக்கெட் மேட்ச் காட்சிகளை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்.பவுலிங்க் போட வரும்போது டீச்சரின் முகம் பொறித்த டீ சர்ட் போட்டு வந்து கவிழ்க்கும் சீன் சூப்பர்.அந்த கிரிக்கட் காட்சிகள் அமரர் சுஜாதாவின் நிலா நிழல் நாவலின் சுட்ட வடிவம்.
ஹீரோயினின் பர்த்டே பார்ட்டி பற்றிய முஸ்தீபுகளை ஓவராகக்க்கொடுத்து விட்டு ரொம்ப சுருக்கமாக அந்த சீனை ஏன் முடிக்க வேண்டும்?
படத்தின் தென்படும் பெரிய குறையே இயக்குனரின் குழப்பம்தான்.அவருக்கு அடிக்கடி 4 லவ் ஸ்டோரியையும் சம அளவில் சொல்ல வேண்டுமா?அல்லது ஹீரோ .ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்ற குழப்பம்தான்.இதனால் பல காட்சிகளில் அழுத்தம் இல்லை.

ஹீரோ ஜஸ்ட் ஒரு முத்தம் கேட்டதற்காக 8 ரீலகள் ஹீரோயின் பேசாமல் இருப்பது ஓவர் ( கே பாக்யராஜின் டார்லிங் டார்லிங் கிலேயே அந்த மாதிரி சீன் வந்துடுச்சே?)
அதை விட க்ளைமாக்சில் ஹீரோ பேசிய காதல் டயலாக்ஸை ஆடியோ டேப்பில் கேட்டு மனம் மாறும் ஹீரோயினின் முடிவு சொதப்பல்.

ஏ செண்ட்டர்களில் மட்டும் 50 நாட்கள் ஓடும். காதலர்கள் பார்க்கலாம்.

13 comments:

Anonymous said...

நாங்கு நாட்கள் ஐரோப்பிய பயணம் முடிந்து வந்திருக்கும் அருமை அண்ணன் ஓ சென்னையா மறந்துட்டேன்..உண்மைத்தமிழனை சந்திச்சதா சொன்னீங்க..அது அடுத்த பதிவா?

Anonymous said...

வந்தவுடன் சுடச்சுட விமர்சனமா...
.இதெல்லாம் வசனங்களில் இயக்குனர் சிக்ஸர் அடித்த காட்சிகள்//
இது உங்க..சிக்ஸர் தொடருங்கள்..

Unknown said...

அட்ரா சக்க...
எங்க..ஆளைக் காணோமேன்னு பார்த்தா ?
அட்ரா சக்க...
அட்ரா சக்க...
அட்ரா சக்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்

Unknown said...

//படத்துக்கு பேசாமல் (அல்லது பேசிக்கிட்டே)//

தியேட்டரில் யாரோடணும் பேசமுடியல...
தனியாத்தான் போக வேண்டியதாயிருச்சு...

//ஏ செண்ட்டர்களில் மட்டும் 50 நாட்கள் ஓடும். காதலர்கள் பார்க்கலாம்.//

திருப்பூரில் நா.ம.அல்ல எட்டு தியேட்டரிலும், இ.இனிது இரண்டு தியேட்டரிலும் ரிலீஸ் ஆகியுள்ளது, அப்போ இது ஏ செண்டரா , பி செண்டரா ?

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,பத்திரமா 5 நாட்கள் பதிவை,இடுகையை பார்த்துகிட்டதுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன்,உங்க கேள்விக்கு பதில் சொன்னா சென்னை சென்ற வெண்ணைனு கிண்டல் பண்ணுவீங்க

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ், ஆஃபீஷ் ட்ரிப் சென்னை 5 நாள் கேம்ப்.இப்பதான் வந்தேன்

Mohan said...

இந்தப் படம் தெலுங்கில் ரொம்ப நல்லா இருந்தது. அதனாலேயே தமிழில் பார்ப்பதற்கு தயக்கமாக உள்ளது. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன்,திருப்பூர்,ஈரோடு 2ம் பி செண்ட்டரே,ஆனால் திருப்பூர் ஆடியன்ஸ் அதிகம்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி மோகன்

ரமேஷ் கார்த்திகேயன் said...

//லன்ச் காட்சிகளில் காலேஜில் அனைவரும் பிளாஸ்டிக் ஸ்பூனால் சாப்பிடுவது போன்ற காட்சி எதற்கு?
//

mostly chennaila ulla college la ipadi thanga nadakuthu !!!!!

Unknown said...

//ஆகாய மனிதன்,திருப்பூர்,ஈரோடு 2ம் பி செண்ட்டரே,ஆனால் திருப்பூர் ஆடியன்ஸ் அதிகம்//
சி.பி.செந்தில்குமார் - நன்றி