எந்திரன் பட விழாவில் ,’’ ஐஸ்வர்யாராய்க்கு வெளிநாடு போகும்போதெல்லாம் பிரச்சனைதான்.பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வயது 30+ என பூர்த்தி செய்திருக்கிறார்,ஆனால் நேரில் பார்க்கும்போது 20+ மாதிரிதான் தெரிகிறார் என அனைவரின் முன்பும் பிரமாதமாக வழிந்தமைக்காக.
2) இந்த வாரத்தின் சிறந்த மாமியார் விருது இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு.
கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் கலைஞர்களின் குறும்படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும்,இயக்குநர் ஷங்கர்,ஹாய் மதன் உட்பட யார் பாராட்டினாலும் ,”எனக்கு படம் பிடிக்கலை,இயக்கம் ரொம்ப மோசம் என எல்லாத்தையும் நொட்டு (குறை)
சொல்வதற்காக.
3) இந்த வாரத்தின் சிறந்த மல்டி பல்டிமங்காத்தா விருது எஸ் வி சேகருக்கு.நான் இப்போது அ தி மு க வில் இல்லை,இருந்தாலும் அம்மா விரும்பினால் அவரை சந்திப்பேன்,அவர் ஓக்கே என்றால் மீண்டும் அ தி மு க வில்இணைவேன் என ஜெமினி சர்க்கஸ் கலைஞர் போல் பல்டி அடித்தமைக்காக.
4)இந்த வாரத்தின் சிறந்தஅடைக்கல்ராஜ் விருது கேப்டன் டி விக்கு.டிராபிக் ராமசாமியை தனது டி ஆர் பி ரேட்டிங்கிற்காக உபயோகிக்க ஒரு கருவியாய் உபயோகிக்க முடிவு எடுத்தமைக்காக.
5) இந்த வாரத்தின் சிறந்த கொலம்பஸ் கோகிலா விருது ஸ்ருதி கமலுக்கு.
ஏ ஆர் முருகதாசின் ஏழாம் அறிவு படத்திற்கும் டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ நடித்த தி இன்செப்ஷன் (THE INCEPTION) படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்தமைக்காக.(படத்தோட டைரக்டரே கம்முனு இருக்காரு)
6) இந்த வாரத்தின் சிறந்த விரிவுரையாளர் விருது கலைஞருக்கு.உமாசங்கர் ஐ ஏ எஸ் பழி வாங்கப்படுகிறாரா எனக்கேட்டதற்கு பத்திரிக்கையாளர்களிடம் அ தி மு க ஆட்சியில் பழி வாங்கப்படவில்லையா என விளக்கியதற்கு.
7) இந்த வாரத்தின் சிறந்த மெம்மரி பிளஸ் மொமெண்ட்டோ +அரிச்சந்திரன் விருது சன் டிவியில் ஸ்டேண்ட் அப் காமெடி பண்ணும் மதுரை முத்துக்கு.
பத்திரிக்கைகளில் வெளிவந்த ஜோக்குகளை யும்,பேராசிரியர் கு ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய சிரிக்கலாம் வாங்க புத்தகத்தில் இருந்து உருவி எடுத்த சரக்குகளை யும் பிரமாதமாக மனப்பாடம் செய்து ஒப்பித்து தானே உருவாக்கியதாக சொன்னதற்காக.
8) இந்த வாரத்தின் சிறந்த செய்தி வாசிப்பு விருது கலைஞர் டி விக்கு.
கபினி அணை மழை வெள்ளத்தால் நிரம்பியபோது வேறு வழி இல்லாமல் அணையை திறந்து விட்டனர்.உடனே கலைஞர் டி வி செய்தியில் முதல்வர் கலைஞர் கேட்டுக்கொண்டத்ற்கு இணங்க திறந்து விட்ட்தாக வாய் கூசாமல் வாசித்ததற்காக.
ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளிவந்து 6 வருடங்களுக்கு முன் சூப்பர் ஹிட் ஆன தஞ்சை தாமு எழுதிய ஜோக்
இவ்வளவு வசதி இருந்தும் சோபா,மெத்தைல படுக்காம தலைவர் ஏன் பாய்ல படுக்கறார்?
காலைல எந்திரிச்சதும் அவருக்கு எதையாவது சுருட்டனும்.
13 comments:
செம கலக்கலான தொகுப்பு.இது போல வாரம் ஒருபதிவு போடுங்கள்
super. உங்களுக்கும் ஏதாச்சும் கருவாடு ச்சீ அவரது கொடுக்கலாம்னு நினைக்கிறேன்..
வாப்பா சதிஷ் கடை விரித்தேன் ,கொள்வாரில்லை.தமிழ் மணத்தில் முகப்பில் வரவே இல்லை.எந்த ராசிக்கல் அணியனும்?
செம கலக்கலான தொகுப்பு இது.
வாரம் ஒருபதிவு போடுங்கள்.
thaanu joke super
மதுரை முத்துவுக்கு நல்லா விட்டிங்க... ஒரு குத்து!
நன்றி குமார்.நீங்களும் சதிஷும் சொன்ன படி செஞ்சுடுவோம்
நையாண்டி - இது ரியல் - நையாண்டி
நன்றி பூங்கதிர்.முத்து மதுரை முத்து உங்க வாழ்க்கைலயும் விளையாடிட்டாரா?
Second Gnani ?? Waw! Super...
வாங்க எஸ் ஏ சி வாழ்த்துக்கும் ,கமெண்ட்டிற்கும் நன்றி
வாங்க மனசாட்சி,உங்க பாராட்டுக்கு நன்றி
ரமேஷ் ,நான் சைவம்,கருவாடு வேணாம்,திருவோடு வேனா தாங்க
Post a Comment