நான் 1992 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிக்கை உலகில் எழுதி வருகிறேன்.18 வருடங்களாக இந்தத்துறையில் எழுதி இப்போதுதான் 20 தினங்களாக பதிவுலகுக்கு வந்துள்ளேன்.என்னைக்கவர்ந்த பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமிழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.
உங்கள் படைப்பை பிரசுரிக்கையில் தவறுதலாக எனது பெயர் வந்து விட்டது.
நன்றி ஜாக்கிசேகர் எனவும் தொகுத்து வழங்கியது சி பி எஸ் எனவும் வர வேண்டியது.இதை நான் உடனடியாக பாக்யா ஆசிரியரிடம் ஃபோன் மூலம் தெரியப்படுத்தி விட்டேன்.நீங்கள் பல முறை மெய்ல் அனுப்பிக்கொண்டே வருவதாக அவரும் சொன்னார்.
நமக்குள் ஃபோன் தொட்ர்பு உண்டு என்பதால் நீங்கள் தாராளமாக என்னிடமே கேட்டிருக்கலாம்.
கொலை செய்த தூக்குத்தண்டனைக்கைதிக்குக்கூட தன் தரப்பு வாதத்தை சொல்ல உரிமை உண்டு.
மற்றவர்கள் படைப்பை திருடும் பழக்கம் எனக்கு இல்லை.அதை சரக்கு இல்லாதவர்கள்தான் செய்வார்கள்.இவ்வளவு பப்ளீக்காக ஒருவர் அடுத்தவர் படைப்பை திருடத்துணிவார்களா?
உங்களுக்கு தெரியாமல் போய் விடுமா?
வருகிற பாக்யா இதழில் இது பற்றிய விளக்கம் வரும் .நன்றி அண்ணே
37 comments:
உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி செந்தில்..! இப்படியொரு பதிவொன்று பத்திரிகைகளில் வரப் போகிறது என்று முன்கூட்டியே நீங்களாவது ஜாக்கியிடம் சொல்லியிருக்கலாம்..! அல்லது இந்தப் புத்தகம் வந்த பின்பாவது நடந்த குழப்பத்தை அவரிடம் முன்பே தொலைபேசியில் சொல்லியிருக்கலாம்..!
சரி போகட்டும்.. விடுங்கள்..! அடுத்த முறை எந்தப் பதிவராக இருந்தாலும் முன்கூட்டியே அவர்களிடம் ஒரு தகவலைத் தெரிவித்து விடுங்கள்..!
நன்றி..!
ரொம்ப நல்ல மனசு உள்ளவங்க..மன்னிசிருவாங்க..
கவலைப்பட வேண்டாம் சகோதர...
அன்பின் செந்தில..
பதினெட்டு வருடங்களாக எழுதி வரும் உங்களுக்கு, ஒருவரின் எழுத்தை அச்சில் ஏற்றும் முன் அவரிடம் சொல்ல வேண்டுமென தோன்றாமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது. அதுதான் போகட்டும், அச்சாகி 7- 10 நாட்கள் ஆவதாக அறிகிறேன், ஒரு முறையாவது அவருக்கு போன் போட்டு - உங்க பேர் போட்டுத்தான் அனுப்பினேன் ஜாக்கி, எப்படியோ மிஸ் ஆகி விட்டது- வருந்துகிறேன்னு சொல்லியிருக்கலாமே - ஏன் செய்யவில்லை?
விசயம் வெளியே வரும் வரை மௌனம் காத்துவிட்டு இப்போ விளக்கம் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?? - நீங்களே சொல்லுங்கள்.
It is human to err. We also need to stand up and accept our mistake.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஆம் அண்ணே,படைப்பை அனுபியதோடு சரி.புத்தகம் எதையும் நான் வாங்குவதில்லை.அவர்கள் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவார்கள்.5 நாள் கழித்து வரும்.நான் புக்கை பார்க்கவில்லை.தவறு நடந்து விட்டது.இனி கவனமாக இருக்கிறேன்.பொறுமையாக பின்னூட்டமிட்டதற்கும் ,ஆலோசனைக்கும் நன்றி அண்ணே
உங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் பக்கமும் தவறு உள்ளது. போடும் முன் ஜாக்கியிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திருடு அது இது என்று எழுதுவதும் முறையல்ல. உங்கள் படைப்புகளை படித்து உங்கள் நுட்பமான நகைச்சுவை உணர்வை வியந்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். ஜாக்கியும் புரிந்துகொள்வார். தொலைபேசியில் பேசிக்கொள்வதே சிறந்தது.
//உங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் பக்கமும் தவறு உள்ளது. போடும் முன் ஜாக்கியிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திருடு அது இது என்று எழுதுவதும் முறையல்ல.//
உண்மை
//பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமிழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.//
இதில் யாரிடமாவது உங்கள் படைப்புகளை பாக்யாவில் எழுதினேன் என்று முன்னதாக கூறினீர்களா
இந்த கட்டுரை ஜாக்கி பெயரிலேயே வந்தது என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை ஜாக்கி இதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி, அவருக்கு தெரியாமலேயே நீங்கள் அதை பாக்யாவிற்கு அனுப்பி, இரண்டும் ஒரே நாளில் (ஜாக்கி பெயரிலேயே) வெளிவந்தால் ஆனந்த விகடனில் ஜாக்கியை பற்றி என்ன நினைப்பார்கள்
ஒரே நேரத்தில் ஒரே படைப்பை இரண்டு பத்திரிகைகளுக்கு அனுப்புகிறான் என்று தவறாக நினைக்க மாட்டார்களா ?
வெகுசன ஊடகங்களில் 18 வருடமாக எழுதியும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறுவதை நம்ப சிரமமாக உள்ளது
செந்தழல் ரவி,உண்மைத்தமிழன்,ராம்,வெறும்பய,சதிஷ் அனைவருக்கும் நன்றி
முடிந்தது முடிந்து விட்டது.
இதன் மூலன் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : தயவு செய்து அடுத்தவர்களின் படைப்புகளை அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் பெயரில் கூட பயன் படுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்
அடுத்தவரின் படைப்புகளை அவர்களின் பெயரில் வெளியிட்டால் கூட அனுமதி வாங்கி வெளியிட்டால் இது போல் அதிர்ச்சிகளை தடுக்கலாம்
புருனோ அவர்கள் கொடுத்த லிங்க் http://www.payanangal.in/2010/01/4.html
விளக்கமளித்தமைக்கு நன்றி செந்தில்குமார்..
திரு. சி.பி.எஸ் அவர்களுக்கு,
வணக்கம். இன்று காலை ஜாக்கி அண்ணாவின் பதிவு பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். நான் தினபூமியில் கவிதை, கதைகள் எழுதிய நாட்களில் உங்களது படைப்புக்களையும் பார்த்திருக்கிறேன். தற்பொழுதும் உங்கள் நகைச்சுவைகளை படித்து வருகிறேன்.
இவ்வளவு நாள் பத்திருக்கையில் எழுதும் நீங்கள் அடுத்தவரின் எழுத்தை எடுத்துப் போடும்போது அவரின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் போனது ஆச்சரியப்பட வைக்கிறது. பதிவை எடுத்த நீங்கள் அவரிடம் போனில் பேசும் அளவுக்கு தொடர்பு இருந்தும் தெரிவிக்காதது ஏனோ?
இன்று அவர் பதிவிட்ட பிறகுதான் நிலமையின் கடுமை உங்களுக்கு புரிந்தது போலும். திருடப்பட்ட பதிவு என்று போட்டதும் தாங்கள் வேகவேகமாக பகிங்கர மன்னிப்புக் கடிதம் எழுதுவதைவிட அவருக்கு போன் செய்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
யாராக இருந்தாலும் தங்களது படைப்பு வந்திருக்கிறதா என்று கடையிலாவது புத்தகத்தை புரட்டிப்பார்க்கும் காலத்தில் தாங்கள் பார்க்கவில்லை என்று சொல்வது ஏற்றுக் கொள்ளும்படியில்லை.
சரி, நண்பரே நடந்த தவறுக்கு நீங்களோ அல்லது பாக்யா பத்திரிக்கை நிர்வாகமோ காரணமாக இருந்தாலும் நம்மைப்போல் கதை, கவிதை என்றில்லாமல் படங்களை தேடிப்பிடித்து பார்த்து தனக்கேயுரிய பாணியில் அழகாய் எழுதும் திரு. ஜாக்கியின் மனநிலையை அவர் நிலையில் இருந்து பாருங்கள்.
சரி, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லதாக நடக்கட்டும். உங்கள் விளக்கத்தையும் வருத்தத்தையும் வலைப்பூவில் பதிவதை விடுத்து திரு,ஜாக்கியிடம் தொலைபேசியின் மூலம் தெரிவியுங்கள்.
நட்புக்குள் விரிசல் வராமல் இருக்கு அதுவே சிறந்ததாகும். உங்கள் நட்பு தொடரட்டும்.
இது எனது கருத்துதான். உங்கள் மனதை பாதிக்கும் வண்ணம் அமைந்திருந்தால் படித்ததும் நீக்கிவிடுங்கள்.
நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.
.
தனது படைப்பை திருடிவிட்டார்கள் என்று சொல்லும் அனைவரும் இனிமேல்
பைரசி படங்களைப் பார்க்காதீர்கள்
பைரசி டிவிடிக்களை வாங்காதீர்கள்
இணையத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமற்ற பாடல்களை / படங்களை தரவிறக்கி பயன்படுத்தாதீர்கள்
...
இப்படி நிறைய..
உலகப்படங்களை பார்க்கும் தமிழ்ப் பேர்வழிகள் பலர் இணையத்தில் இருந்து அல்லது பைரசி டிவிடிக்கள் வழியாக படங்களை தரவிறக்கி பயன்படுத்துபவர்கள்தான். தெரிந்தவருக்கு பாதிப்பு நடந்தால் மட்டும் வருந்தலாம் கண்டிக்கலாம் ஆனால் எவனோ ஒரு முகம் தெரியாத ஒருவனின் படைப்புகளை வெக்கம் இல்லாமல் திருடாலாம். ஏன் இப்படி என்று கேட்டால் அவர் அவருக்கு ஒரு காரணம்.
:-(((
முன் கூட்டி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவ்வளவு எழுத வேண்டி வராது.
கல்வெட்டு நீங்கள் பின்னூட்டங்களில் கலக்குறீங்க.
பொதுவாக பத்திரிக்கைகளில் ப்ளாக்கர் குறித்து கட்டுரை எழுதும் போது சம்பந்தபட்ட பதிவர்களிடம் அனுமதி வாங்குவதாக தெரியவில்லை. நான் விசாரித்த வரையில்.. பத்திரிக்கையில் பெயர் வந்ததும் அது குறித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அப்பத்திரிக்கையில் நம்மைக் குறித்து எழுதியவர் பதிவுகளைப் படிக்கக் கூடியவராகவே இருப்பார். அந்த சூழலில் தான் இவரைப் பார்க்க முடிகின்றது. இவர் வழக்கமாக பதிவர்களின் சிறந்த பதிவுகளை பத்திரிக்கைக்கு அவர்களின் பெயருடன் அனுப்பி வைக்கும் மீடியேட்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்த முறை உதவி ஆசிரியரின் தவறால் அனுப்பியவர் பெயரே வந்து விட்டது. தவறு நிகழ்ந்ததும் மீடியேட்டர் மாட்டிக் கொண்டார்.. எல்லாரும் இவரைக் கும்மத் துவங்கி விட்டோம்.
இதற்கு முன் ஆனந்தவிகடனில் பதிவுகள் குறித்தும், டிவிட் குறித்தும் கட்டுரைகள் வந்த போது எத்தனை பேர் எங்களிடம் கேட்காமல் எப்படிப் போடலாம் என்று இடுகை இட்டார்கள்? எத்தனை பேரிடம் விகடனும், குமுதமும் பர்மிஷன் கேட்டார்கள்?
மண்ணிப்பு கேட்பவரும், மண்ணிப்பவரும் தான் மனிதர்கள். ஜாக்கி மண்ணிப்பார்.
அடுத்த முறை இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
படைப்பாளியின் நிலையிருந்துப் பார்த்தால் வருத்தங்கள். உங்கள் பதிலும் நியாயமாகவுள்ளது. இனி அம்மாதிரி தவறுகள் நடக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.
ஜாக்கி சேகர் மற்றும் சென்னிமலை செந்தில் குமார் அவருக்கும் முதலில் கண்டனத்தை தெரிவித்த்துக் கொள்கிறேன் இது உண்மையில் இவர்கள் இருவருமாகவே சேர்ந்து நம்மை ஏமாற்றும் வழிதான் இது செந்தில் குமார் பிரபல பதிவர் ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம் தான் இது
ஜாக்கி சேகருக்கு இப்போதாவது போன் செய்து சொல்லுங்கள், இந்த விளக்க பதிவு குறித்து, அவரது பின்னூட்டம் இன்னும் வர வில்லை,
நான் பாசெபூக்கில் Facebook அவர் லிங்கில் இதை எழுதி இருக்கிறேன்
///கல்வெட்டு said... தனது படைப்பை திருடிவிட்டார்கள் என்று சொல்லும் அனைவரும் இனிமேல் பைரசி படங்களைப் பார்க்காதீர்கள். பைரசி டிவிடிக்களை வாங்காதீர்கள். இணையத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமற்ற பாடல்களை / படங்களை தரவிறக்கி பயன்படுத்தாதீர்கள் இப்படி நிறைய...//
Excellent! எனக்கு பிடித்ததே இந்த பின்னூட்டம் தான். அறிவுபூர்வமாக எழுதி உள்ளார். இதை விட ஒரு நெத்தி அடி கொடுக்க முடியாது.
"To err is human; but to repeatedly err is not human." ஏன் இதை இங்கு சொல்ல வேண்டும். மணிரத்னம் படங்கள் எல்லாமே பல ஆங்கில படங்களின் காப்பி என்று இங்கு எல்லோரும் சொல்லி இருக்கிறீர்கள். அது சேகருக்கும் தெரியும். அவர் மணிரத்னதை கண்டித்து எழுதி உள்ளாரா? நீங்கள் சொல்லுங்கள்? ஏன் இங்கு யாரும் மணிரதினத்தை கண்டிக்க வில்லை? எது உங்களை அவ்வாறு செய்யாமல் தடுத்தது? இப்படி எல்லா படங்களையும் காப்பி அடிகரவ்ன் பற்றி ஒரு குரல் இல்லை. ஏன் பயமா? இல்லை பாசமா? அப்படி சேகர் கண்டித்து எழுதி இருந்தால் என்னை மன்னிக்கவும்.
ஒரு பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக்கை எல்லோரும் சேர்ந்து கிண்டி கிழங்கு எடுத்தீர்கள். எல்லா ஜோக்கும் எவனோ ஒருத்தன் சொன்னது தான் என்று அவர் அவ்வளவு சொல்லியும் அவரை யாரும் விடலை. சரி சுஜாதா எழுதினது என்ன எல்லாம் அவர் சொந்த சரக்கா? இல்லவே இல்லை. எல்லாம் "encyclopedia" இருந்தது தமிழாக்கம் செய்தது தான். ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை கண்டிக்க பயம். அனல் அந்த பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக்கை வைத்து அவரை தாக்குகிறீர்கள்.
அந்த சுஜாதா மற்றும் மதன் இவர்கள் சரக்கு எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தது சுட்டவை. இவர்களுக்கு அறிவு ஜீவி என்ற பட்டம். ஆனால் அந்த பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக் உங்களுக்கு இடிக்குது .ஏன் அப்படி?
சேகர் விமர்சனம் எழதிய இந்த படம் தமிழ் நாட்டில் வெளிவந்து விட்டதா? வந்தால் சரி. முடிவாக சேகர் எழதிய "Goal Post" joke அவருடை சொந்த சரக்கு அல்ல. அதற்க்கு ஆதாரம் அவர் ஏன் கொடுக்க வில்லை. அந்த "Goal Post" joke -கிற்கு அப்பன் தாத்தான் மூலம் உண்டு. அதை நான் இங்கு கூறுகிறேன். ஆனால் பதிலை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த ஜோக் இது தான்.
உலகத்தில் மிக சிறந்த கோல்கீப்பர் யார்?
பின் குறிப்பு: இந்தியாவில் கிரிக்கெட்டு விளையாட்டை பற்றி எல்லோருக்கும் தெரியும். Foot Ball விளையாட்டும் அதன் விதிகளும் தெரிந்திருக்காது. எனவே அதன் விதிகளை இங்கு நான் கூறுகிறேன். நீங்களே சொல்லுங்கள் "யார் உலகத்தில் மிக சிறந்த கோல்கீப்பர்" என்று?
விதிகள்: கோல்கீப்பர் பந்தை எப்படி வேண்டுமானாலும் தடுக்கலாம். கைகள், கால்கள், தலை, இப்படி எது வேண்டுமென்றாலும். இப்படி எதுவும் தேவை இல்லாமல் அந்த சிறந்த கோல்கீப்பர்கள், நான் சொன்ன கோல்கீப்பர்கள், இலகுவாக பந்தை தடுத்து விடுவார்கள். யார் அவர்கள்?
Addendum: Foot Ball விளையாட்டில் ஒரே ஒரு பந்தை மட்டும் தான் வைத்துதான் விளையாடுவார்கள்.
விதிகளை சொல்லியாகி விட்டாயிற்று இப்பொழுது சொல்லுங்கள்
உலகத்தில் மிக சிறந்த கோல்கீப்பர் யார்???
///கல்வெட்டு said... தனது படைப்பை திருடிவிட்டார்கள் என்று சொல்லும் அனைவரும் இனிமேல் பைரசி படங்களைப் பார்க்காதீர்கள். பைரசி டிவிடிக்களை வாங்காதீர்கள். இணையத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமற்ற பாடல்களை / படங்களை தரவிறக்கி பயன்படுத்தாதீர்கள் இப்படி நிறைய...//
Excellent! எனக்கு பிடித்ததே இந்த பின்னூட்டம் தான். அறிவுபூர்வமாக எழுதி உள்ளார். இதை விட ஒரு நெத்தி அடி கொடுக்க முடியாது.
"To err is human; but to repeatedly err is not human." ஏன் இதை இங்கு சொல்ல வேண்டும். மணிரத்னம் படங்கள் எல்லாமே பல ஆங்கில படங்களின் காப்பி என்று இங்கு எல்லோரும் சொல்லி இருக்கிறீர்கள். அது சேகருக்கும் தெரியும். அவர் மணிரத்னதை கண்டித்து எழுதி உள்ளாரா? நீங்கள் சொல்லுங்கள்? ஏன் இங்கு யாரும் மணிரதினத்தை கண்டிக்க வில்லை? எது உங்களை அவ்வாறு செய்யாமல் தடுத்தது? இப்படி எல்லா படங்களையும் காப்பி அடிகரவ்ன் பற்றி ஒரு குரல் இல்லை. ஏன் பயமா? இல்லை பாசமா? அப்படி சேகர் கண்டித்து எழுதி இருந்தால் என்னை மன்னிக்கவும்.
ஒரு பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக்கை எல்லோரும் சேர்ந்து கிண்டி கிழங்கு எடுத்தீர்கள். எல்லா ஜோக்கும் எவனோ ஒருத்தன் சொன்னது தான் என்று அவர் அவ்வளவு சொல்லியும் அவரை யாரும் விடலை. சரி சுஜாதா எழுதினது என்ன எல்லாம் அவர் சொந்த சரக்கா? இல்லவே இல்லை. எல்லாம் "encyclopedia" இருந்தது தமிழாக்கம் செய்தது தான். ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை கண்டிக்க பயம். அனல் அந்த பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக்கை வைத்து அவரை தாக்குகிறீர்கள்.
அந்த சுஜாதா மற்றும் மதன் இவர்கள் சரக்கு எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தது சுட்டவை. இவர்களுக்கு அறிவு ஜீவி என்ற பட்டம். ஆனால் அந்த பெரியவர் "Microsoft" பற்றி எழதிய ஜோக் உங்களுக்கு இடிக்குது .ஏன் அப்படி?
//கல்வெட்டு said... தனது படைப்பை திருடிவிட்டார்கள் என்று சொல்லும் அனைவரும் இனிமேல் பைரசி படங்களைப் பார்க்காதீர்கள். பைரசி டிவிடிக்களை வாங்காதீர்கள். இணையத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமற்ற பாடல்களை படங்களை தரவிறக்கி பயன்படுத்தாதீர்கள் இப்படி நிறைய...//
பைரசி படங்கள் பார்ப்பதற்கும் படைப்பாளியின் அனுபவத்தை காப்பி செய்வதற்கும் வித்தியாசங்களுண்டு. ஆனால் இதை இப்படிக் கண்டிக்க்கலாம், அடுத்தவரின் புகைப் படங்களைத் திருடி தனது விமர்சனத்துடன் போட்டுக் கொண்டு ஒரு நன்றியோ அல்லது எதையுமே செய்யாமல் விடுபவர்கள் பதிவு திருடப்பட்டது என்று கூறாமலிருக்கலாம்.
//இருவருமாகவே சேர்ந்து நம்மை ஏமாற்றும் வழிதான் இது செந்தில் குமார் பிரபல பதிவர் ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம் தான் இது///
அண்ணே, எனக்கென்னமோ திரு சேகர் தான் தன்னை பிரபலமாகக் காட்டச் செய்யும் விளம்பரம் என்று தெரிகிறது.
//இருவருமாகவே சேர்ந்து நம்மை ஏமாற்றும் வழிதான் இது செந்தில் குமார் பிரபல பதிவர் ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம் தான் இது''''//
நல்ல காமெடி. ஒரு லட்சம் ஜோக்குகளை மாங்குமாங்கென்று தபால்கார்டில் ஆரம்பித்து கம்பூட்டர் வரை எழுதி குவித்த செந்தில் இனிமே என்ன பிரபலம் ஆகி என்னத்த ?
நான் டவுசரில் மூச்சா போன காலத்திலேயே சி பி செந்தில்குமார் என்ற பெயரில் இவரது படைப்புகளை படித்துள்ளேன்.
நான் சொல்ல நினைத்ததை கல்வெட்டு அழகாக வடித்துவிட்டார். எந்த ஆங்கில படமாக இணையத்தில் தான் படங்களை எடுத்து போடவேண்டும். இது திருட்டு என்று சொல்லமுடியுமா என்று ஜக்கி சேகர் தான் சொல்லவேண்டும்.
ஹுயூமன் எரர் ஆக இருக்க கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. ஒரு முறை வருவது என்பது வேறு. தொடர்ந்து வருவது வேறு. அந்த கோணத்தில் சிந்திக்கவேண்டும். என்று டாக்டர் உட்பட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
//முடிவாக சேகர் எழதிய "Goal Post" joke அவருடை சொந்த சரக்கு அல்ல. அதற்க்கு ஆதாரம் அவர் ஏன் கொடுக்க வில்லை. //
ஆமாம் தற்போதுதான் நியாபகம் வந்தது பதிவர் வசந்த் என்ற ஒருவர் எழுதிய ஒரு இடுகையை மெயிலில் வந்ததாகப் போட்டுக் கொண்டவர் இந்த ஜாக்கி சேகர் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.
செந்தில்குமார்! நான் டாக்டர் புரூனோவின் கருத்துக்கு ஒத்து போகின்றேன். ஒருவேளை ஜாக்கிக்கும், பாக்யாவுக்கும் முன்பே வாய்க்கா வரப்பு சண்டை இருந்ததுய்யா. தன் எழுத்துகள் அதில் வர கூடாது என அவர் நினைத்து இருக்கலாமில்லையா? இதுக்கு தான் சொல்வது. அனுப்பும் முன்பு அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு செய்திருக்கலாம். போனது போகட்டும் இனி நடப்பதை பாருங்கள். இருவருக்குமே தான் சொல்கிறேன்.
ஆத்திரகாரணுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். அது போல ஆகிவிட்டது இந்த சம்பவம்.
ஜாக்கி சேகர் அவர்கள் வீணாக ஆத்திரப்பட்டு அப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
அவர் பெருந்தன்மையுடன் நடந்திருந்தால் உங்களுக்கு இவ்வளவு பெரிய பழி நேர்ந்து இருக்காது.
//அந்த சுஜாதா மற்றும் மதன் இவர்கள் சரக்கு எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தது சுட்டவை. இவர்களுக்கு அறிவு ஜீவி என்ற பட்டம்//
அறிவு ஜீவியாக தன்னை காட்டி கொள்பவர்கள் .....
//தனது படைப்பை திருடிவிட்டார்கள் என்று சொல்லும் அனைவரும் இனிமேல்
பைரசி படங்களைப் பார்க்காதீர்கள்
பைரசி டிவிடிக்களை வாங்காதீர்கள்
இணையத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமற்ற பாடல்களை / படங்களை தரவிறக்கி பயன்படுத்தாதீர்கள்
...
இப்படி நிறைய..//
குத்துங்க எசமான் நல்லா குத்துங்க இந்த படைப்பாளிகளை .....
நானும் என் பங்கிற்கு குத்தி உள்ளேன் .....
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_14.html
கருத்து சொன்ன அனைவருக்கும்,ஆதரவு தந்த,எதிர்ப்பு தெரிவித்த ,ஆலோசனை,அறிவுரை சொன்ன அனைவருக்கும் என் ந்ன்றிகள்
கல்வெட்டு You are right!!! கருத்து super ....
good artist create great artist steal :)
எது எப்படியோ... நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்...
ஜாக்கியும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டியிருக்க வேண்டாம்....
இனியாவது இந்த நட்பு கெடாமல், நீண்ட நாட்கள் தொடருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்...
Dear Sir
What you have done is wrong and so also your explanation especially when the chicken is out of the egg. But let Mr.Jackie forget and forgive.
Somebody in the comment said that seeing the pirated DVDs especially of foreign films are wrong. But seeing the film is a not a sin especially when one is not commercially using it to make money. As there is no source of seeing foreign films, this can be excused. Most famous Directors are just copying and charging crores of rupees as remuneration for somebody's concept and thought which is condemnable. The best way is to expose them also with the original titles and stop seeing the pictures of such Directors however big there are.
With regards
SS
கோபி சார் & மணியன் சார் வருகைக்கும் ,கருத்துக்கும்நன்றி
மிஸ்டர் "ஸ்மார்ட்" அவர்களுக்கு, இரண்டு பேருக்குப்பிரச்சினை என்றால் சமாதானப்படுத்த முயற்சி செய்யவும், அல்லது அமைதியாக வேடிக்கை பார்க்கவும். அதை விட்டுவிட்டு "எதோ விளம்பர யுக்தியாகத் தெரிகிறது" என்று ஏனய்யா சொல்கிறீர்? உங்களைப்பார்த்தால் தான் உண்மையில் எழுதிப்பெயர் வாங்கும் ஆளாகத்தெரியவில்லை. எல்லா ப்ளாக்குகளிலும் போய், போய் வம்பிழுத்துக் கொண்டு திரிகிறாய் நீ. வால் பையனின் வலைப்பதிவில் போய் வரிக்கு வரி பின்னூட்டம் போட்டு சண்டை இழுத்திருக்கிறாய். ஒரு லாயரின் வலைப்பதிவில் போய் வால்பையன் மேல் கேஸ் போட என்ன செய்யலாம் என்று கேட்கிறீர். உங்களின் பதிவில் "நான் இந்து அல்ல, ஆனால் பகவத் கீதையை வம்புக்கிழுப்பேன்" என்று சொல்கிறீர். ஏதாவது எழுதிப்பெயர் வாங்குங்கள் அய்யா, வம்புச்சண்டை செய்து பெயர் வாங்கி என்ன செய்யப்போகிறீர்? நைட் சாப்பாடுக்கு யாராவது பிரியாணி பொட்டலம் தரப்போகிறார்களா என்ன?
namathu ezhuthu veru oruvarin peyaril varuvathu athirssiyaana ondru.neengale pirabala ezhuthazar. valaiyil varum kadduraikal padri ezhuthumbothu ippadi nervathundu? jakie sekar annanin unarvu niyayamaanathu. ungalai varutheduthai padri kavalaip padaamal avaraip pukazhnthu pathivu poddirukkireerkal. ini ippadi neraathu allavaa?-meerapriyan
Post a Comment