காங்கிரஸ் தனித்து போட்டி இடுமா?காமராஜர் ஆட்சி கனவு என்னாச்சு ?போன்ற கேள்விகளுக்கு அவருக்கெ உரித்த நடையில் பதிலளித்து இருந்தார்.பேட்டி திடீரென திசை திரும்பியது.ஜெ பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்ட போது அவர் நிதானம் தவறி ,வார்த்தையை விட்டார்.
எதிர்க்கட்சிக்கான எந்த தகுதியும் இல்லாதவர் ஜெயலலிதா.அவ்ர் ஒரு நடிகை.ஒரு ஷாட்டுக்கும் ,அடுத்த ஷாட்டுக்கும் இடையே கிடைக்கும் கேப்பில்,கேரவுனுக்குள் போய் ரெஸ்ட் எடுக்கும் நடிகை போல் ஜெ
ஆட்சியில் சுகமாக இருப்பார்.ஆட்சி முடிந்ததும் கொட நாட்டுக்கு போய் விடுவார்,பிறகு தேர்தல் ஷாட் ரெடி என்றதும் பிரச்சாரத்துக்கு வருவார்
கேரவுனில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கும் நடிகைக்கும்,ஜெ வுக்கும் பெரிய வித்யாசம் ஏதும் கிடையாது என்று பேட்டியில் தெரிவித்தார்.
28.7.10 அன்று வெளியான குமுதத்தில் இந்த பேட்டி வெளியானது அ.தி.மு.க தொண்டர்களுக்கு அன்று இரவே தெரிய வந்தது.ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.ஏற்கனவே குமுதம் நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.ஒரு முறை கே.பாலச்சந்தர்-குஷ்பு கல்யாணம் என ஏப்ரல் ஃபூல் நிகழ்ச்சி நடத்தி வாசகர்களிடம் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டது.
இந்தப்பிரச்சனையால் அவருக்கும்,அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.பொதுவாக தமிழருவி மணியன்அழகான தமிழ் நடைக்கும்.பிரவாகமான பேச்சாற்றலுக்கும் பெயர் போனவர்,சிறந்த பேச்சாளர்.யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் அளித்த பேட்டி இப்பொது அவருக்கே எதிரி ஆகிப்போனது.
3 comments:
சூடான் விவாதத்தை சுவைபடச்சொல்லியிருக்கிறீர்கள், குமுதத்திற்க்கு ஏன் தான் இந்த வேதனையோ.
ஐரேனிபுரம் பால்ராசய்யா
வணக்கம் ஐயா,வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.பரபரப்புக்காக எதையாவது செய்து பின் வருந்துவதே குமுதத்தின் பழக்கம்.
என்னைப்பொறுத்தவரை தமிழருவி மிகச்சரியாகவே ஜெ வை ப்பற்றி கூறியிருப்பதாகப்படுகிறது....
Post a Comment