கடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்
சிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே போட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள் எழுந்தன.கண்டனங்கள் விழுந்தன.மாதர்சங்கங்கள் பொங்கின.
இப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக வாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல விமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிறந்த டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.
இவ்வளவு திறமைசாலி இப்போது தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரிய
கேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த
சர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.
இந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்?
தன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.
52 comments:
இது தேவையா ? பையன் பாஸ்டன்ல காலேஜ்ல படிக்கிறான். அவன் இந்த படத்தை பார்த்தால் தன் அம்மாவை பத்தி என்ன நினைப்பான்?
The Graduate (1967) movie style story????
mmmmmmm.......
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
என் ப்லொக்கில் உங்கள் கமென்ட் பார்த்து வந்தேன். follow பண்றேன்....
ஏன் இவங்கள் மனம் இப்பிடி எல்லாம் மாறுதோ ஒன்னும் புரியலை
சுகாசினி ஒரு விளம்பரத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.குஷ்பு கற்பு சொன்னபோது இவரும் சொல்லி கல்லடி வாங்கினார்.சிறிது நாள் ஒளிந்திருந்தார்.அண்ணன் மகள் விஜய் டிவி காபி வித் அனு நடத்தி கலக்கிய போது ,பொறாமை பிடித்து ஜெயா டிவியில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு ஹாசினி பேசும் படம் நடத்துகிறார்.ராவணனுக்கு வசனம் எழுதியெ தீருவேன் என மணிரத்னத்தை கவிழ்த்தார்.இப்போது ஏதோ ஒரு செக்ஸ் படத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறிர்கள் .வரட்டும் அந்த கன்றாவியயும் பார்த்து தொலைவோம்
In another website (thatstamil.com)the synopsis of the movie is briefed as "Traumas of a Widower throughout her life". It could be addressing family and social issues that a Widower has to encounter. My request is let's not jump into conclusion and post nasty comments without exactly knowing the story of the film.
உண்மை சார்,நீங்க சொல்றது உண்மை.அதே ஆதங்கம்தான் எல்லாருக்கும்.
சித்ரா மேடம்,உங்களுக்கு பல புள்ளி விபரங்கள் தெரிந்திருக்கே,கேப்டன் மாதிரி கலக்கறீங்களே
சந்தியா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.எல்லாம் பணமும்,புகழும் செய்யும் மாயை
சதீஷ்,அப்போ அந்தப்படம் வந்தாலும் போயிடல்லாம்கறியா?
mr gopi sir,thax for coming and comenting.pls see the kungumam issue this week for this news confirmation.
சினிமாவில் நடிக்கத்தானே செய்தார்.....இதுக்கு எதுக்கு இவ்வளவு அலும்பு கொடுக்கிறீங்க.....நடிப்பை கலையாக மட்டும் பாருங்கள்... அவங்க என்னமோ நிஜமாகவே தன் மகளோட காதலனை சைட் அடிக்கிற மாதிரி எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறீங்க.... அவங்களுக்கு இருக்கிறது ஒரு பையன் தான்...நீங்க ஏன் இவ்ளோ கவலைப்படுறீங்க....எந்த செய்தியும் கிடைக்கலன்னா நீங்களாவே ஒரு செய்தியை உருவாக்கிடுவீங்களே.....
மடத்தனமான பதிவு!, பரபரப்புக்காக எழுதுகிறேன் பேர்வழியென உங்களை நீங்களே அசிங்கப் படுத்திக் கொள்கின்றீர்கள்.
சுஹாசினி ஒரு புனித பிம்பம் மாதிரியும், இத்தனை நாள் குடும்பப் பெண் வேஷம் கட்டியாதால் அவருக்கு தீபாராதனை செய்து விரதம் இருந்தவர் மாதிரியும்....இன்றைக்கு இந்த பாத்திரத்தில் நடிப்பதால் உங்களுக்கு வாழ்க்கை இருண்டு விட்டதைப் போல போலியாக பதைபதைத்து பதிவெழுதியிருக்கிறீர்கள்...
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள்....இந்த லட்சணத்தில் கொம்பு சீவிவிடும் பின்னூட்டங்கள்....எரிச்சல்தான் வருகிறது
நடிக நடிகையரின் கதைப்பாத்திரங்களை அவர்களை எடை போடும் தவறு இன்னும் தொடர்வதால்தான் இவ்வாறு செய்தி இடம் பெற்றுள்ளது. சுகாசினி ஒரு நடிகை. அவர் தனக்குப் பணம் கிடைக்கும் ஒரு படத்தில் படக்கதைக்குரிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவ்வளவுதான். மாணவிகளை மயக்க மருந்து கலந்த பானம் குடிக்கச் செய்த நீலப்படம் எடுத்த நடிகரைக் காண அனவைரும் தயங்கிய பொழுது தான் சென்று சந்தித்தவர். எனவே, அவர் அப்படிப்பட்டவர் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே,தூய மகள் ஒருத்தியின் உண்மையான நடத்தையில் மாற்றம் வருவது போல் இவரின் பாத்திரம் பற்றிக் கூறி இவரை உயர்வாக எண்ணுவதுபோல் குறிக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வேண்டாத வேலை!
அவர்கள் எல்லாம் அப்படித்தான் நாம் அவர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்கக்கூடாது....
//
டவுசர் பாண்டி...
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள்....இந்த லட்சணத்தில் கொம்பு சீவிவிடும் பின்னூட்டங்கள்....எரிச்சல்தான் வருகிறது
//
Well said.
கேணைத்தனமான பதிவு. அதற்கு கலாச்சாரக் காவலர்கள் மாதிரியான பின்னூட்டங்கள். இன்னும் படமும் வெளி வரவே இல்லை. யாரும் பார்க்கவும் இல்லை. இதுல மொக்கைத் தனமா அவங்க அப்படி, இவங்க இப்படி, நாடு ரொம்ப கெட்டுப் போச்சு மாதிரியான பதிவு வேற.
சுஹாசினின் குட்டைப் பாவாடைப் போட்டதை கொலைக் குற்றம் மாதிரியான பின்னூட்டங்களைப் பார்க்கையில் இன்னும் எரிச்சல்தான் அதிகமாகின்றது.
மாற வேண்டியது நாம்தான்.
ஞானமணீ அண்ணே,டவுசர் பாண்டி அண்ணே,திரு அண்ணே.கருணா அண்ணே,சங்கவி,ரமி,நந்தா அனைவர் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணே.குங்குமம் வார இதழில் ஆதாரம் உள்ளது.இட்டுக்கட்டியோ,பரபரப்புக்காகவோ எழுதலை.
குங்குமம் வார இதழ் ஒரு பத்திரிக்கை, அதுல போட்டிருந்த உடனே இப்படி ஒரு பதிவுங்களா? பா விட்டா வாரமல்ர் நடுப்பக்க கிசு கிசுல போட்டிருந்துச்சுன்னு சொல்லுவீங்க போல.
சரி அப்போ இதுக்கு திட்டணீங்கன்னா, அபூர்வ ராகங்க்ள் படத்துல நடிச்சதுக்கு கமல், மேஜர் சுந்தரராஜன், ஸ்ரீவித்யா, படம் எடுத்த பாலச்சந்தர், வாலி அஜீத், எஸ்.ஜே சூர்யா எல்லாத்தையும் சேர்ந்து திட்டலாமே.
பிரச்சினை அவங்க நடிக்கிறாங்களா, இல்லயா என்பதல்ல. ஒரு கதையில் அவர்கள் ஏற்றிருக்கும் ரோல் அது. அந்தளவில் மட்டும் பார்க்க நாம் எப்போது கற்றுக் கொள்ளப்போகின்றோம்.
ஓகே அண்ணே,நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.நான் பதிவுலகுக்கு புதுசு.15 நாள்தான் ஆச்சு,ஒவ்வொண்ணா கத்துக்கறேன் அண்ணே.தொடர்ந்து உங்க கருத்தை பதிவு செய்து வ்ழி காட்டுங்க
அட..ரத்தகொதிப்பு வந்துட போவுது நந்தா...இது ஒரு பதிவு னு இதுக்கு போயி மூச்சு முட்ட புத்திச் சொல்லிகிட்டு இருக்கீங்க..செந்தில் பொழுது போகாம சும்மா ஒரு மேட்டரை எழுதினா படிச்சிட்டு போவீங்களாம் அதை விட்டுட்டு ஆயிரம் கதை பேசிக்கிட்டு.
இதுல என்ன இருக்கு - கணவன் ராவணனில் அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைபடுவது போல - சுகாசினி மகள் லவர் இட்ஸ் ஒகே
Gopi said...///In another website (thatstamil.com)the synopsis of the movie is briefed as "Traumas of a Widower throughout her life". It could be addressing family and social issues that a Widower has to encounter. My request is let's not jump into conclusion and post nasty comments without exactly knowing the story of the film.///
just, I read this blog...gopi u are right..i'll explain in tamil later
Vanakkam,
ஹலோ இதில் என்ன விசேசம் இருக்கிறது இதை எல்லாம் எழுதி கொண்டு இருக்கிறீர்கள். அவர் நானும் மேதாவி என்று காட்டிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார். இதை கற்பு(கழிவு) கரசி குஷ்பு விசயத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவர் வரிந்து கொண்டு தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கு என்று கேட்டார்.
நன்றி நல்லவன் illai
எல்லாம் பணம் பண்ணுற வேலை...
நடிக நடிகையர்களை, தொழில் செய்பவர்களாய், நினைக்காமல், அவர்கள் ஏற்கும் பாத்திரங்களாய் பார்த்ததால் தான், எம்ஜியாரு முதல்வராய் 14 வருஷம் நாட்டை ஆண்டார். ரஜினியும், டாக்டர் விஜையும் இன்னும் அலப்பரை பண்ணிட்டு திரியுராங்க. அவர்கள் போடுவது வேஷம், பொழைப்புக்காய். இதில் வில்லன், வில்லி, நாயகன், நாயகி எல்லாம் அவ்ர்களுக்கு ஒன்றுதான்.
வேஷம் பார்த்து மக்கள் தான் மோசம் போகிறோம்.
இந்தம்மா எடுத்துச்சே ஒரு படம் இந்திரா-ன்னு, தமிழில் எடுத்ததிலே பெரிய மொக்கைப் படம் இதுதான் என்று ஸ்ரீப்ரியா எடுத்த சாந்தி மூகூர்த்தம் படத்தை தோற்கடிச்சு
பெயர் வாங்குச்சு. இந்தம்மா Jaya TV-யில பண்ணுதே விமர்சனம், அது மாதிரி கொடுமை வேறெங்குமே பாக்க முடியாது, குசேலன் படத்தை, வாசு எடுத்ததிலேயே பெஸ்ட் படம்னு இந்தம்மா சொல்லிச்சு, அந்தப் படம் கல்லடி பட்டு பெட்டிக்குள்ள போயி புகுத்துகிச்சு. இன்னொன்னு இந்தம்மாவை திறமையானவர்னு சொல்றீங்க, திறமையை தேடித்தான் கண்டுபிடிக்கணும்.
enna kodauma sir ithu avanga ennamo kasukkaaga , oru timepassukkaga illa variety performance pannalame nnu nadikka sammadhichu irukkalaam , adha poye neengalum perisu paduthuringaley, ithey avanga oru amman characterla nadicha avangala pathi kondaada poringala illa avanga padathukku abishegam pannuvingala just acting nu thaanae paapinga ? illa unga kobam intha maadhiri padangalin melanna neenga thitta vendiya padangal muukavaasi irukkum enna ippa varra padamellam appidithaan irukku ,
அண்ணே, நீங்களெல்லாம் எப்பண்ணே திருந்துவீங்க. நம்ம கடவுளுங்க பண்ணாத லீலைங்களா? (நம்ம வாலுப் பையங்கிட்ட கேளுங்க விலாவாரியா சொல்லுவாரு)மத்த தொழில்மாதிரிதான் நடிப்பும். நடிகர்கள நடிக்கமட்டும் விடுங்க. சொந்த வாழ்க்கை எல்லாருக்கும் நாற்றம்தான்.
I will go with Gopis comment. what he said is correct.
உண்மையா சார் இது?
edhukku yaa indha polappu..
படத்தில் நடிப்பதை நடிப்பு என புரிந்துகொள்ளாத மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்து அலம்பல் போறாதுன்னு நீங்களும் பதிவு போட்டு பெரிய ஆளா ஆகனும்னு நினைக்கறீங்களா.நடிப்பை நடிப்பா பாக்க மக்கள் ஆரம்பிச்சாதான் நாடு உருப்படும்.உங்களைமாதிரி ஆளுங்க உட மாட்டீங்களே.நாட்டுக்கு உருப்படியா ஏதாவது பதிவி போடுங்க.
அட விடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படித்தான் பதிவா போட்டு வைப்பாங்க , அவங்க, அவங்க வேலைய பாக்கட்டும் , நாம நம்ம வேலைய பாப்போம்.........
oru murai oru pathirikaila telugu cinemala entha kathanayagi analum athu suhasiniya erunthalum glamouraum abasamahavumthan nadikanumnu eluthiyirunthaga athu pola erukku unga pathivu.
nadigaina ellam onnuthan orey mathirithan athula enna suhasini mattum grade I mathavangallem grade II , appo nameetha entha grade.
இதுதாம்ப்ப விளம்பர யுக்தி படம் எடுக்கறது முன்னாடியே எவ்வளவு விளம்பரம்
ennal nampamudiavillai
இவங்க ஒரு நடிகை இதெல்லாம் விளம்பரத்துக்கு செய்றாங்கன்னு சொன்னா குஷ்பு சொன்ன மேட்டர்ல மட்டும் ஏன் எல்லாரும் சண்டைக்கு போகனும் .அதையும் விட்டுட வேண்டியதுதானே ...!!
:-))
இதெல்லாம் நடக்காதது ஒண்ணும் இல்லை. மனித மனம் ஊகங்களுக்கு அப்பாற்பட்டது. அவள் ஒரு தொடர்கதை படத்தில் அம்மாவும், பெண்ணும் ஒரே ஆளைக் காதலிக்கிற மாதிரி காட்டியிருந்தார். ஆனால் அன்றைய கலாச்சாரம் அதை ஏற்குமோ என்கிற பயத்தில் அம்மாவைத் தற்கொலை செய்து கொள்ள வைத்தார்.
இன்றைக்கு கலாச்சாரம் ரிடிஃபைன் செய்யப்பட்டுள்ளது. இன்னம் கூட மாறலாம்.....
http://kgjawarlal.wordpress.com
kalai kalaikannoodu paarukal samuthayaththil ullathuthaane
Aiyooda, enna kodumai senthil sir ithu... tamil thirai ulaguku vandha sodhanai....
கர்மம், கர்மம் !
நடிப்பு என்று சொல்றீங்க..... உலகத்திலே இதுபோல பல நடக்கின்றது என்று எடுத்துக்காட்டத்தானே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இவர் துணிந்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருக்கிறார். இப்படிப் பார்த்தால் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு ஆண்களைத்தான் போடவேண்டும். இதைவிட கன்றாவி இப்போதைய பெண்களின் நடிப்பு இதற்கு யார் பணம் கொடுத்துப் பார்க்கின்றார்கள்??????
@ஆர்.கே.சதீஷ்குமார்
அருமையா சொன்னிங்க
நீங்க என்ன சுஹாசினி அபிமானியா?
திரையில் எத்தனையோ இப்படி நடந்துகொண்டிருக்கிறது.. பரபரப்புக்காக , வியாபார நோக்கோடு மட்டுமே எடுக்கப்படுகின்ற எல்லாப் படங்களிலும் இப்படி ஏதாவது ஒரு கேரக்டர் இருக்கத்தான் செய்கிறது..
சமீபத்தில் வெளியான படத்தில் காதலிக்காக பெற்றவர்களை அடிக்கும் கேரக்டர்.. என்ன படம் என்று நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கே புரியும்..
நான் பொதுவாவே சொல்றேன்.. சினிமாவை விட்டுத் தள்ளு தல.. உண்மையாகவே இப்படிப்பட்ட அசிங்கங்கள் அங்கங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது..
இதுக்கெல்லாம் ஒரு முக்கியத்துவம் கொடுத்து பிளாக்கில் எழுதினா இப்படிப்பட்ட கமெண்ட் விழத்தான் செய்யும்..
ஆனாலும் நீர் எதற்கும் சளைத்தவரில்லை என்பதை உங்களின் பதில்களிலேயே தெரிகிறது..! தொடருங்கள்..! சுவராஷ்யம் உள்ள பதிவுகளை..!
நன்றி.!வாழ்த்துக்கள்..!
அவங்க வாழ்க்கையில (சினிமாகாரவுங்க ) இதெல்லாம் சகஜமப்பா....அவங்களே இதுபற்றி கவலப்படமாட்டாங்க நீங்கள்ளாம் ஏன்ப்பா கவலைப் படறீங்க.....
பரவாயில்லையே? சுகாசினி துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கிறாரே?
art imitates life.
இது சினிமாக் கதை. இதுக்கே இப்படிப்பட்ட ரியேக்சனா? நிஜ வாழ்க்கையில் அப்படி நடந்தாலும் ... big deal.
படம் எப்ப ரிலீஸ்......ஹி......ஹி......
@அப்பாதுரை
SUHASINI MAY ACT IN ANY [BLUE]FILM.,THAT IS HER WISH.IF U DONOT LIKE .,DON.T SEE IT.
thats all his personal interest.
Post a Comment