-ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி,உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் எனும் ரீமேக் வரிசையில் டைரக்டர் ராஜாவின் புதிய காதல் கலாட்டா கதைதான் தில்லாலங்கடி.
எல்லாத்துலயும் பர்ஃபெக்ஷன் பார்க்கற ஆளுக்கும் ,எதுலயுமே ப்ர்ஃபெக்ஷன் இல்லாத ஆளுக்கும் காதல் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன் லைன் தான் கதை.அதை முடிந்தவரை கலாட்டா,காமெடி .கடி எல்லாம் கலந்து கொஞ்சம் காதில் பூவையும் சுற்றியும் சொல்லி இருக்கிறார்.
படத்தோட ஓபெனிங் சீன்லயே தமனாவை யோகா செய்வதை க்ளோசப்பில் காட்டும்போதே நமக்கு புரிந்து விடுகிறது இயக்குனரின் எண்ணம்.தியேட்டரில் என்ன ஒரு விசில்.தமிழ் ரசிகர்களூக்கு யோகா மேல் இவ்வளவு ஆர்வமா?
சத்யன் &கோவிற்கு காதல் கை கூட ஜெயம் ரவியும்,தமனாவும் உதவும் காமெடி கலாட்டா ரசிக்க வைக்கிறது என்றாலும் அதில் அநியாயத்துக்கு நாடோடிகள் வாசம்.
காத்லுக்காக 14 தடவை கையை வெடிக்கிட்டவன் நான் என்ற சத்யனின் அறிமுகம் டாப்.எனக்கு கல்யானம் நடக்குமா?கருமாதி நடக்குமா?என சந்தேகமாக அவர் கேட்கும்போது எது நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்,ரெண்டுக்கும் எனக்கு மந்திரம் தெரியும் என புரோகிதர் சொல்வது வெடிச்சிரிப்பு.
தமன்னாவுக்கு காமெடி நடிப்பு,ஆச்சரியம்,வெட்கம் என எல்லா ஆக்டிங்கும்
வந்தாலும் சோக நடிப்பில் அவர் இன்னும் ஆனந்த தாண்டவம் மதுமிதா பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.
ஒவ்வொரு சந்திப்பிலும் ரவி தம்னாவிடம் தயவு செஞ்சு என்னை லவ் பண்றேன்னு உடனே சொல்லிடாதே,எனக்கு கிக்கே போயிடும்,நல்லா அலைய வை என சொல்லி த்லை சுற்ற விடுவது நல்ல கற்பனை.
ரவி பேராண்மை பாதிப்பிலிருந்து அநாசயமாக வெளி வந்து அசால்ட்டாக நடித்திருக்கிறார்,அவ்ரது கேரக்டர் சந்தோஷ்சுப்ரமனியம் ஜெனீலியா
கேரக்டரையும், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் சந்தோஷ் கேரக்டரையும் மிக்ஸ் பண்ணியது மாதிரி வடிவமைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.
ஓப்ப்னிங்கில் அவர் என்ன்னோட ஒரு முகத்தைத்தானே பார்த்திருக்கே,இன்னொரு முகத்தை காட்டற மாதிரி வெச்சுக்காதே என பஞ்ச் டயலாக் சொல்லி விட்டு பின் அவரே ஏன்னா எனக்கு ஒரே ஒரு முகம்தான் என நக்கலடிப்பது நல்ல கிண்டல்.
ஜெயம் ரவியை வெறுப்பேற்றுவதற்காக தமனா வடிவேலுவை லவ் பண்ணுவதாக டூப் விடுவதும் ,அவர் கூட பைக்கில் ரைடு போவதும் செம அப்ளாஷ் வாங்கும்சீன்.
வடிவேலு-தமனா பிட் டூயட்டுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு ரெஸ்பாண்ஸ்.
இடைவேளை வரை ஜாலியாகப்போகும் கதையில் ஷாம் வந்ததும் ஒரு தேக்கம் வருகிறது.படத்தில் ட்விஸ்ட் வேண்டும் என டைரக்டர் நினைத்து வைத்த ஷாம் கேரக்டர் எடுபடவில்லை.
திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.ஜெண்டில்மேன் அர்ஜூன் மாதிரி இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் ஆகிறார் ஜெயம் ரவி.
பிறகு அவர் கஜினி மாதிரி பழசெல்லாம் மறப்பதாக நடிப்பதும் தமனா நம்புவதும் ,ம்ஹூம் எடுபடவில்லை.
இடைவேளை வரை வடிவேலு காமெடி என்றால் அதற்குப்பிறகு சந்தானம் காமெடி.பல இடங்களில் நாடகத்தன்மை வர ஜெயம் ரவியின் கேரக்டர் சரியாக வடிவமைக்கப்படாததே காரணம்.
மன்சூரலிகான் போலீஸாக வந்து காமெடி பண்றார்.இடுப்புக்கு கீழே பைக்கில் அடி பட வைத்த வடிவேலுவிடம் என்னை குடும்பம் நடத்த விடாம பண்ணிட்டு நீ மட்டும் நல்லா வாழ விட்றுவேனா பழிக்குப்பழி என அவரும் வடிவேலுவை அதே பைக் ஏற்றி அதே இடத்தை டேமேஜ் பண்ணுவது வயிறு குலுங்கச்சிரிக்க வைக்கும் காமெடி.
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே சரியான ஹிட் பாட்டு.ஆனால் அது அப்படியே தூள் படத்தில் வரும் பாட்டின் நகல்.ஆர்ட் டைரக்ஷன்,டான்ஸ் மூவ்மெண்ட் என அப்படியே காப்பி அடித்திருக்க வேணுமா?
உனக்கு ஏதோ சொல்லனும் போல் இருக்கா?எனக்கு ஏதோ கேட்கனும் போல் இருக்கு , மறதி சந்தோசமான விஷயம் ,அவங்கவங்க ஆசையை அவங்கவங்களே நிறைவேத்திகறதுல என்ன கிக் இருக்கு,அடுத்தவங்க ஆசையை நிறைவேத்தறதுலதான் கிக் என்பது போன்ற மெச்சூரிட்டியான வசனங்களும் உண்டு.
ஹீரோ வரும் பல சீன்களில் அன்னியன் பட ஹம்மிங் தீம்மை சுட்டு போட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
பாடல்களில் 3 தேறுகிறது.படம் ஃபுல்லா மலேசியாவில் எடுத்திருப்பதால் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.
நல்ல காதல் கதையாக ஜாலியாகப்போன கதையில் தேவை இல்லாமல் ஆக்ஷனை நுழைத்து தானும் குழம்பி ,ரசிகனையும் குழப்பி விட்டார் டைரக்டர்.
பிரபு கெஸ்ட் ரோல்.மகனுடன் தண்ணி அடிக்கும் காட்சி அருமை.ஆனால் காதல்ன் பட நினைவு வருதே.
அதிகமாக அறிமுகமில்லா குழந்தைக்காக ஹீரோ 20 லட்சம் செலவு செய்வது நம்பும்படி இல்லை.என் பேரை மறுபடி மாத்திக்கறேன் என வடிவேல்
சொல்லும்போதும்,பிறந்தமேனியா நோய் என சந்தானம் சொல்லும்போதும் தியேட்டரில் வெடிச்சிரிப்பு.
இனி தான் கேம் ஸ்டார்ட் ஆகுது -இந்த டயலாக்கை படத்தில் ஆளாளுக்கு சொல்கிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை.(தியேட்டர் ஆடியன்ஸ் கமெண்ட்-படத்தை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.)
வடிவேல்,சந்தானம் இவர்களோடு இணைந்து ஜெயம் ரவியின் காமெடி ,த்மனாவின் இளமை படத்தின் பலம்.ஷாம் கேரக்டர்,ஆக்ஷன் காட்சிகள்,நாடகத்தனமான் காட்சி அமைப்புகள் படத்தின் பலவீனம்.
பி,சி செண்ட்டர்களில் 50 நாள் ஓடும்.
2 comments:
thala kick 10 thadava paththiruppen. now im on the way to DEVI complext to see thillalankadi...
அப்படியா நன்றி
Post a Comment