அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.
நிருபர் : வணக்கம் மேடம். பேட்டிக்குள்ளே போலாமா?
]
நடிகை : ஓ தாராளமா? என்னமோ வேட்டிக்குள்ளே போலாமா?-ங்கற மாதிரி ஏன் தயங்கித் தயங்கி கேட்கறீங்க. ரிலாக்ஸா கேளுங்க ..
நிருபர் : மேடம் முத கேள்வி உங்க பெயர்க்கு முன்னால ஒரு அடை மொழி இருக்கே. அதுக்கு என்ன காரணம்? சினி‡பீல்டுலயே நீங்க மட்டும் தான் கற்புள்ள நடிகையா?
நடிகை : அதெல்லாமில்லைங்க. நல்ல கலரா, சிவப்பா இருக்கற நடிகைகளே வரிசையா ஹிட் ஆகிட்டே இருந்த நேரம், ஒரு ட்ரெண்ட் செட்டிங்கா கறுப்பா இருக்கற நான் என்ட்டர் ஆனேன். ஹிட் ஆகிட்டேன். அந்த நன்றியை மறக்காம இருக்கனும்கறதுக்காக ‘கறுப்பு” காஞ்சனா-னு டைட்டில்ல போடச் சொன்னேன். அது அப்படியே மருவி ‘கற்பு” காஞ்சனா-னு ஆகிடுச்சு.
நிருபர் : ஓ.கே. மேடம். ஒரு பேட்டில நீங்க ஒரு வகைல மன்னர் பரம்பரைல வந்ததா சொல்லியிருந்தீங்க. அது எப்படி?
நடிகை : மன்னர்கள்னா புறமுதுகு காட்டி ஓடறது வழக்கம் தானே, அதே மாதிரி நானும் என்னால முடிஞ்சவரை புறமுதுகு அக முதுகு எல்லாத்தையும் காட்டி நடிச்சேன் என் படங்களைப் பார்த்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ஞ்சு (எதை ஆராய்ஞ்சுனு கேட்காதீங்க) நான் மன்னர் பரம்பரையாத்தான் இருக்கும்னு யூகமா சொன்னார். அவர் என்னிடம் வழிஞ்சதை நான் நிரூபரிடம் வழிமொழிஞ்சேன்.
நிருபர் : மேடம்! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி நினைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு உங்க ஞாபகம் வந்துடறதா சொன்னீங்களாமே? அவருக்கும், உங்களுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாதே? அவரு கல்பாக்கம், நீங்க கோடம்பாக்கம், எப்படி லிங்க்-னு சொல்லுங்க.
நடிகை : நீங்க நினைக்கற மாதிரி இல்லை, அப்துல்கலாம்னா ‘ராக்கெட்” விட்டது நினைவு வரும். நான்-னா விதவிதமா அதை வெச்சு சொன்னேன்.
நிருபர் : அடடே நீங்க போட்டுட்டு வர்ற ஜாக்கெட் டிசைனைப் பார்க்க குடும்பப் பெண்களெல்லாம் காத்திட்டு இருப்பாங்களாமே?
நடிகை : விதவிதமான டிசைன்ல நான் ஜாக்கெட் போடறதால அது எப்படி இருக்கும்னு பார்க்க பெண் ரசிகர்களும், ஜாக்கெட் போடாம நான் நடிக்கறப்ப ஆண் ரசிகர்களும் Q ல நின்னு ரசிக்கறாங்க.
நிருபர் : மேடம் சினி‡பீல்டுல கொடி கட்டி பறந்த நீங்க திடீர்னு சின்னத் திரைக்கு வந்துட்டீங்களே ஏன்?
நடிகை : சினிமா தான் எனக்க சோறு போட்டுது அதுல எந்த மாற்றமும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை. ஆனா டி.வி எனக்கு பிரியாணியே போட்டுது. அதான் டி.விக்கு ஜம்ப் பண்ணிட்டேன்.
நிருபர் : புரியலையே இந்த சோறு- பிரியாணி மேட்டர்.
நடிகை : அதாவது சினிமால நடிச்சா ஒரு படத்துக்கு 60 நாள் கால்ஷீப் வாங்கி நைட், பகல்-னு ட்ரில் எடுத்து 30 லட்சம் தர மூக்கால அழுவாங்க, செக் தருவாங்க, பவுன்ஸ் ஆகும். ஆனா டி.வி.ல அப்படி இல்லை கைல காசு வாயில தோசை. காலைல 9.00 மணிக்கு நடிக்கப் போவேன் மாலை 6 மணிக்கு கிளம்பிடுவேன். அப்பவே ரூ 2 லட்சம் டவுன் பேமண்ட்.
நிருபர் : ஓஹோ, இதுல இப்படி ஒரு தொழில் ரகசியம் இருக்கா? ஓ.கே மேடம், உங்க எழில் ரகசியம் என்ன?-னு சொல்லுங்க.
நடிகை : நான் என் வீட்டுக்காரரோட சண்டையே போடமாட்டேன் அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பேன்.
நிருபர் : மேடம் உங்க ஹவுஸ் ஓனரைப் பற்றி இப்ப எதுக்குப் பேச்சு?
நடிகை : ஹய்யோ வீட்டுக்காரர்னா ஹஸ்பெண்ட்.
நிருபர் : ஓஹோ, அதான் மேரேஜ் ஆன ஆளுங்க எல்லாம் பெண்டு கழண்டு முதுகு பெண்ட் ஆகி இருக்காங்களா? மேடம். என்னால நம்பவே முடியலை. புருஷன்- பெண்டாட்டின்னா சண்டை வரத்தானே செய்யும்? ஏப்படி வராது னு சொல்றீங்க?
நடிகை : புருஷன் கூட சண்டை ஸ்டார்ட் ஆச்சுன்னா, நான் காரை ஸ்டார்ட் பண்ணி கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வாங்கிடுவேன். ஜாக்கெட்டை மாத்தற மாதிரி புருஷனை மாத்திடுவேன் ஆயிரம் புருஷனை மாற்றிய அபூர்வ சிகாமணி- னு பெயர் எடுக்க ஆசை.
நிருபர் : ஓஹோ, ஹாலிவுட் நடிகைக்கு சவால் விடும் விதத்தில் இருப்பேன்னு நீங்க சொன்னீங்களே அது இந்த விஷயத்துல தானா? நாங்க கூட நடிப்புல வெரைட்டி காண்பிப்பீங்கனு பார்த்தா நீங்க இதுல வெரைட்டி காட்;டறீங்களா?
நிருபர் : மேடம் ஒரு முன்னணி ஹீரோ கூட லவ் இருந்ததா கிசுகிசு வந்தது.
நடிகை : இது ஒரு பெரிய மேட்டரா? மார்க்கெட் அவுட் ஆன ஹீரோவையா லவ் பண்ண முடியும்? லீடிங் ஹீரோவை லவ் பண்ணுனா தான் அவர் நடிக்கற படத்துல எல்லாம் என்னையே ஹீரோயின் ஆக்குவாரு.
நிருபர் : அந்த ஹீரோ கூடவே 26 படம் பண்ணி இருக்கீங்க. இதுக்கு உங்க 2 பேருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டதாலா?
நடிகை : ஆமா பிஸிக்கலா நாங்க சேர்ந்துட்டோம். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இப்போ என் உடம்புல பயாலாஜிக்கல் (biological) மாற்றங்கள்.
நிருபர் : ஓ.கே மேடம், ஹீரோவை லவ் பண்ணுன நீங்க திடீர்-னு ஒரு டைரக்டரை மேரேஜ் பண்ணிட்டீங்களே.
நடிகை : அந்த ஹீரோ ஜீரோ ஆகிட்டாரு நான் டைரக்டர் ஆ‡ப் த டைரக்டர்-னு பேரெடுக்க ஆசைப்பட்டேன்.
நிருபர் : ஓ.கே. மேடம் படிப்பறிவே இல்லாத நீங்க உங்க பேருக்குப் பின்னால BA.BL.-னு பட்டம் போட்டுக்கிட்டீங்களே? எப்படி?
நடிகை : சாதாரண வக்கீலே B.L. பட்டம் போடறப்ப ஒரு ஜட்ஜ் B.AB.L னு பட்டம் போடறது
தப்பா?
நிருபர் : மேடம் மாசமா இருக்கறது நீங்க. ஆனா எனக்கு தலை சுத்துது. படத்துலதான் நீங்க பேசற வசனங்கள் புரியறதில்லை, பேட்டிலயுமா?
நடிகை : டி.வி. டான்ஸ் புரோக்ராம்ல ஜட்ஜா வர்றேன். அதைச் சொன்னேன்.
நிருபர் : ஓஹோ தமிழ்நாட்ல இருக்கற பல ஜட்ஜுங்க ரிசைன் பண்ணுனதுக்கு காரணமே நீங்க ஜட்ஜ் ஆனது தானா? சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட்-னு ஜட்ஜ் பஞ்சம் உருவாகிடுச்சே.. சரி அது போகட்டும,; மேடம். திருச்சில உங்க ரசிகர்கள் உங்களுக்கு சுடுகாடு கட்டி இருக்கறதா கேள்விப்பட்டமே அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க .
நடிகை : எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதா ரசிகர்கள் சொன்னாங்க. ஆனா அற நிலைத்துறைல விடலை. அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும் என்பதற்காக ஆப்போசிட்டா சுடுகாடு கட்டிட்டாங்க.
நிருபர் : அந்த சுடுகாடு கட்டுனதுல யாருக்கு என்ன லாபம்?
நடிகை : பொதுவா சினிமா ரசிகர்களுக்கு நடிகையை நேர்ல பார்க்கனும் தொட்டு பேசனும்-னு நினைப்பாங்க. சில கணவர்கள் மனைவி கூட படுத்திருக்கறப்ப தங்களோட அபிமான நடிகையை மனசுக்குள்ள நினைச்சுக்கு வாங்க-னு உளவியல் நிபுணர்கள் கூட சொல்றாங்க, என் பேர்ல இயங்கி வர்ற அந்த சுடு காட்ல ஒரு மேடை அமைச்சிருக்கோம். என் ரசிகர்கள் அங்கே வந்து உண்டியல்ல காணிக்கை போட்டுட்டு கல் மேடைல கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு போயிடுவாங்க.
நிருபர் : O.K மேடம் கோயில்ல செருப்புக் காலோட கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பிரச்சனைல மாட்டிக்கிட்டீங்களாமே?
நடிகை : அட நீங்க வேற, என் கணவருக்கு ஊயடட பண்ணுனேன் நாட் ரீச்சபிள்னு வந்தது. அதனா ல CALL மேல CALL போட்டேன். அதை பத்திரிக்கைங்க திரிச்சு கால் மேல கால் போட்டு உட்கார்ந்ததா எழுதிட்டாங்க.
நிருபர் : கருமாதிக்கு முன்னாலயே படையல் போட்ரனும்-னு நீங்க ஒரு கருத்து சொன்னீங்களாமே? ஏன்?
நடிகை : கல்யாணத்துக்கு முன்னாலயே உறவு வெச்சுக்கலாம்-னு நான் சொன்ன கருத்து பயங்கர பிரச்சனை ஆகிடுச்சு. அதை டைவர்ட் பண்றக்காக கருமாதி மேட்டரை சொன்னேன்.
நிருபர் : உங்க மேல 1730 வழக்கு போட்டாங்களாமே?
நடிகை : அதை ஏன் கேட்கறீங்க? ஆல் இண்டியா டூர் போன மாதிரி கோர்ட் கோர்ட்டா அலைஞ்சு என் சொத்துல பாதி கரைஞ்சிடுச்சு. நான் சினிமா ஆர்ட்டிஸ்டா? கோர்ட்டிஸ்ட்டா?-னு டவுட்டே வந்திடுச்சு.
நிருபர் : எப்படியோ உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு, இப்போ உங்க கருத்துல ஏதாவது மாற்றம் உண்டா?
நடிகை : இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா போய் பெண்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்னமே உறவு கொள்ளலாம்-னு சொல்லப் போறேன்
.
நிருபர் : ஹீம். ஜென்மக்கூறு பேட்டா செருப்பால அடிச்சாலும் திருந்தாதுங்கறது சரியா இருக்கு. நல்ல வேளை பெண்கள் வயதுக்கு வரும் முன்பே உறவு கொள்ளலாம்-னு சொல்லாம விட்டீங்களே? OK மேடம், திடீர்னு அரசியல்ல இறங்கி இருக்கீங்களே ஏன்?
நடிகை : இதெல்லாம் ஒரு கேள்வியா? மார்க்கெட் போன நடிகை தொழில் அதிபரை கல்யாணம் பண்றதும், பரபரப்பா நியூஸ்ல வரனும்னு நினைக்கற நடிகை பாலிடிக்ஸ்ல குதிக்கறதும் சகஜம் தானே?
நிருபர் : குறிப்பா இந்தக் கட்சில இணைய எதாவது காரணம் இருக்கா?
நடிகை : ஆளுங்கட்சியா இருக்கே அந்த ஒரு காரணம் போதாதா?
நிருபர் : மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?
நடிகை : வீட்ல புருஷனுக்கு இதுவரை ஒரு லெமன் சேவை கூட செஞ்சதில்லை சரி மக்களுக்காவது செய்யலாம்னு பார்த்தேன்.
நிருபர் : சரி உங்களால அரசியல்ல ஜொலிக்க முடியுமா?
நடிகை : சினி ஸ்டார் ஜொலிக்காம இருக்கமா? மேக்கப்புக்கே டெய்லி 5 மணி நேரம் செலவு பண்றேன்.
நிருபர் : கட்சில பதவி வேணும்-னு கேப்பீங்களா? மேலவைக்கு போட்டியிடுவீங்களா?
நடிகை : CM. போஸ்ட் லட்சியம,; MLC. சீட் நிச்சயம்.
நிருபர் : உங்களை அந்த கட்சி தாங்காதுனு ஒரு பத்திரிக்கையை தலையங்கம் எழுதி இருக்காங்களே?
நடிகை : நான் வெறும் 82 கிலோ தான். இதைக் கூட பாரம்பரியம் மிக்க கட்சி தாங்காதா என்ன?
நிருபர் : அரசியலுக்கு வந்துட்டீங்க. இனி சினிமால நடிப்பீங்களா?
நடிகை : சினிமால நடிக்கறனோ இல்லையோ, மேடைல நடிப்பேன். சினி‡பீல்டுல இருக்கற ஆள் தான் தமிழ்நாட்டின் CM. ஆக முடியும்கற விதியை நிரூபிக்கறேன். OK உற்சாகமா இருந்தீங்க, இப்ப ஏன் டல்லா இருக்கீங்க?
நிருபர் : தமிழனோட தலையெழுத்தை நினைச்சேன். எனக்கு தலைவலி வந்திடுச்சு.
நடிகை : விடுங்க. எல்லாம் அவங்கவங்க தலைவிதி
diski- this is republished from my own blog.
diski- this is republished from my own blog.
5 comments:
கலக்கீட்டீங்க தலைவரே ..முதல் போட்டோ ஒரிஜினல் இல்லை என நினைக்கிறேன்.இப்பல்லாம் பதிவர்களையும் ’’உள்ளே’’தள்றீங்க..பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..பட் போட்டோ நல்லாருக்கு அதை தூக்கீடாதிங்க...ஹி ஹி
வீட்ல புருஷனுக்கு இதுவரை ஒரு லெமன் சேவை கூட செஞ்சதில்லை சரி மக்களுக்காவது செய்யலாம்னு பார்த்தேன்// good
ஏம்ப்பா,நான் உனக்கு தலைவனா?பதிவுலகை அறிமுகப்படுத்திய நீ அல்லவா என் குரு.
அட்ரா...
அட்ரா...அட்ரா...
அட்ரா...அட்ரா...அட்ரா...
அட்ரா சக்கைனான்ன...
(மறுப்பு மங்காத்தா'ன்னு இன்னொரு பதிவு போடுங்க..)
தலைவர் வாழ்க தலைவர் வாழ்க,
பின்னழகை முன்னால் காட்ட சொல்லும் தலைவர் வாழ்க
Post a Comment