Monday, July 19, 2010

பொள்ளாச்சி மாப்ளே-சினிமா விமர்சனம்

-8 வருஷங்களுக்கு முன்பே  ரெடி ஆன படம் .பல பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் இப்போ வந்திருக்கு.80 வருஷங்களுக்கு முன்பே  வந்திருந்தால் ஒரு வேளை ஹிட் ஆகி இருக்கலாம்.அவ்வளவு அரதப்பழசான கதை.ஓரளவு தியேட்டரில் உட்கார்ந்திருக்க முடிகிறது என்றால் அதற்கு முழு காரணம் கவுண்டமணியின் எகத்தாளமும்,சத்யராஜின் லொள்ளும் தான்.

எஸ்.வி.சேகரின் தத்துப்பிள்ளை நாடகத்தை உல்டா பண்ணிய கதை.வினுசக்ரவர்த்திக்கு வாரிசு இல்லை.மனைவியும் இறந்து விட்டாள்.ஊதாரி மச்சினன் அலெக்ஸ் மட்டும் ஒரே சொந்தம்.அவர் பேரில் சொத்துக்களை எழுதி வைக்க வினுவுக்கு விருப்பம் இல்லை.டுபாக்கூர் ஜோசியர் டி பி கஜேந்திரனின் பேச்சை நம்பி வெட்டாஃபீஸர் சத்யராஜ்ஜை தத்துப்பிள்ளை ஆக்குகிறார்.அவர் கவுண்டமணி,மணிவண்ணன் &கோ வுடன் அடிக்கும் லொள்ளுகளே படம்.
வேலை இல்லாத வெட்டாஃபீஸராக வரும் சத்யராஜ் +கவுண்டமணியின் அறிமுகங்களே கலகலக்க வைக்கும் காமெடி.சத்யராஜ் கவுண்டமணியை ஷாருக்கான் என்பதும்,கவுண்டமணி சத்யராஜ்ஜை சல்மான்கான் என்று வாருவதும் லொள்ளுத்தனமான காட்சிகள்
.
செலவுக்கு பணம் வேண்டும்,அதை யாரிடமிருந்து ஆட்டையை போடலாம் என் இருவரும் தீவிரமாக சிந்திப்பதும்,பின் அதை செயல்படுத்துவதும் செம காமெடி.
ஹீரோயின் துவைத்துக்கொண்டிருக்கும்போது இருவரும் போய் பணம் கேட்பதும்,அதற்கு அந்த பத்தினி தெய்வம் ஜாக்கெட்டுக்குள்தான் இருக்கு எடுத்துக்குங்க என்பதும்,கவுண்டர் அங்கலாய்ப்பாய் பார்க்க சத்யராஜ் அதை எடுப்பதும் ரகளைக்கு ரகளை.கிளு கிளுப்புக்கு கிளு கிளுப்பு.

கில்லர் மணிவண்ணன் வந்ததும் என்னமோ பெரிய ட்விஸ்ட் படத்தில் வருவதாக டைரக்டர் நம்பி அந்த இடத்தில் இடைவேளை பொடுவது செம காமெடி.
ஜமீன் மகன் ஆனதும் கவுண்டர் செய்யும் அலப்பறைகள் அட்டகாசம்.
வயக்காட்டில் களை பிடுங்கும் பெண்களை உட்கார வைத்து இருவரும் கடலை போடுவதும் ரசிக்கத்தக்க சீன்களே.
படத்தின் டைரக்டர் டி வி சீரியல் எடுத்தவர் என்பதால் நாடகத்தன்மை படம் நெடுக.இளைய தலைமுறை டைரக்டர்களின் படத்தை பார்க்கவே மாட்டாரோ என கேட்க வைக்கிறது.

இலக்கியத்தனமான பாடல் வரிகளுக்கு 2 சாம்பிள்
1.வெச்ச இடம் நல்ல இடம் உச்சத்துல வை
2.வீட்டுக்குதிரையை ஓட்ட வந்த ஒட்டகம் நீதானய்யா
உபயம்-சினேகன்
ஒரு கொலைன்னா ஒரு லட்சம்,2 கொலைன்னா ரிடக்சன் உண்டு என மணீவண்ணனின் அறிமுகமே எள்ளல்.தொட்டதுக்கெல்லாம் மகாநடிகன் படம் போல் மொக்க காமெடி செய்வதால் படத்தில் தேவையான சீரியஸ்னஸ் வரவில்லை.

அப்பாவி-அண்ணே,நான் பழனில இருந்து வர்லை,
க.மணி-பின்னே,இளனில இருந்து வந்தியா?

மணிவண்ணன் -யோவ்,நீ நின்னாலே தெரியாது,அவ்வளவு குட்டை,உக்காந்தா எப்படி?
டி.பி.கஜேந்திரன் -??

முடிவெடுக்கறது கஷ்டம்,முடி எடுக்கறதுதான் ஈஸி

ஜோலியை பாருன்னா பொம்பள சோளியை பாத்துட்டு இருக்கே?
 போன்ற மொக்கை காமெடிகளும் உண்டு.
வசன்கர்த்தாவுக்கு வேலை ரொம்ப கம்மி.மணிவண்ணன்,கவுண்டமணி சத்யராஜ் 3 பேருமே சொந்த டயலாக்சே பேசி விடுகின்றனர்.
 ஒட்டு மொத்தப்படத்துலயே உருப்படியான ஒரே வசனம்-சஞ்சலப்படும்போது சந்தோசம் தர்றதுதான் தெய்வம்.

அங்கங்கே கேப் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் சத்யராஜ்  கமலை இமிடேட் செய்கிறார்.
மணீவண்ணன் சூட்கேசில் கொலை செய்வது எப்படி போன்ற புக்கை பார்த்து “புக் படிச்சுட்டு சமயல் பண்ணுனாலே விளங்காது,இதுல கொலை வேறயா என கவுண்டர் கேட்கும்போது ஒரே அப்ளாஸ்(மொத்தமே தியேட்டரில் 50 பேர்தான்)
அடிக்க வாட்டமா இருக்கேன் அப்படிங்கறதுக்காக மாத்தி மாத்தி அடிக்கறதா என டி.பி.கஜேந்திரன் புலம்பும் சீனும் அதே ரகம்.

க்ளைமாக்ஸ் மஹா சொதப்பல்.சொல்லி வெச்ச மாதிரி அலெக்ஸ்,சத்யராஜ் எல்லாருமா அப்படி திருந்துவார்கள்?
ஒளிப்பதிவு ,இசை  என தொழில் நுட்பங்களும் சொதப்பல் ரகமே.
சி செண்ட்டர்களில் ஓடும்.கவுண்டமணி ரசிகர்களூம்,கடிஜோக்ஸை ரசிப்பவர்களும் பார்க்கலாம்.

9 comments:

சித்தன்555 said...

இந்தப்படத்திற்கு வலையுலகில் உள்ள ஒரே விமர்சனம்.கீப் இட் அப்.

Anonymous said...

சத்யராஜ்,கவுண்டர் இணைந்தால் ஒரே ரவுசுதான்.

அன்புடன் நான் said...

சத்தியராஜ் கவுண்டமணி கூட்டணிக்காக பாக்கலாம்?
பகிர்வுக்கு நன்றிங்க.

M.G.ரவிக்குமார்™..., said...

எப்படிங்க இப்படி எல்லாம்?...............

ரவி said...

எப்போதுமே சத்யராஜ் கவுண்டமணி ரசிகன் நான்.

பரிசல்காரன் said...

இப்படி ஒரு படம் வந்திருக்கா செந்தில்? நான்கூட கிண்டலா எழுதிருக்கீங்களோன்னு நினைச்சேன்.

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,கருணா,நேசன்,ரவி,பரிசல் அனைவரின் வருகைக்கும் நன்றி.பரிசல் சார்,நோ கிண்டல் ஒன்லி சுண்டல்.ரவி நீங்க மட்டுமா க,மணி ரசிகர்?நாங்களும்தான்,நேசன் சார்,அப்படித்தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Padam kandippaa paakkanum kavundarukkaaka

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் அதுக்குத்தான் இந்த படமே கொஞ்சமாவது செல்ஃப் எடுக்குது