பிறகு ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கே இருந்து வெளியேறினார்.
அண்ணன் எப்போ எந்திரிப்பாரு,திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்திருந்த குமுதம் அப்படியே அவரை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
தொடர்ந்து 3 வருடங்களாக காரசாரமாக குட்டு.திட்டு,ஷொட்டு என அரசியல் உலகை விமர்சித்தவர் சில வாரங்களாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதாலேற்படும் நன்மைகள்,வாக்கிங் போனால்.. என்பது மாதிரி மருத்துவக்குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.
அப்போதே வாசகர்கள் சந்தேகப்பட்டனர்.ஏதோ உள் குத்து நடக்கிறது என்று.
பதிவர் சவுக்கு கைதுக்கு முன் அந்த பிளாக்கில் தரப்பட்ட சில விஷயங்களை
குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
வெகுண்டு எழுந்த ஞானி வெளியேறி விட்டார்.ஆனால் குமுதத்தில் அதை பற்றி எந்த அறிவுப்பும் இல்லை.
17 comments:
ஆமாம் ஏதோ நடந்திருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே
//குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
வெகுண்டு எழுந்த ஞானி வெளியேறி விட்டார்.ஆனால் குமுதத்தில் அதை பற்றி எந்த அறிவுப்பும் இல்லை//
சந்தேகமா இருக்கே அவர் மேல இல்ல. உங்க மேல.உண்மைதானா?
// உருளைக்கிழங்கு சாப்பிடுவதாலேற்படும் நன்மைகள்,வாக்கிங் போனால்.. என்பது மாதிரி மருத்துவக்குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.//
சில பெண்கள் சமையல் குறிப்புகளும் எழுதச் சொல்லி அவரை கேட்டுக்கிட்டாங்களாம்
//பதிவர் சவுக்கு கைதுக்கு முன் அந்த பிளாக்கில் தரப்பட்ட சில விஷயங்களை
குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை //
குமுதம் ,ரிப்போர்ட்டர் என்ற மஞ்சள் பத்திரிக்கை வைத்துள்ளது அதிலாவது சவுக்கு மேட்டரை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும்
//பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் //
முன்பு குமுதம் இருந்த நிலை என்ன? இன்று குமுதம் குழும முதலாளிகள் அடிதடிக்கு பின் அதன் நிலமை என்ன? ஆளும்கட்சியிடம் சரண்டர் ஆகி விட்டது குமுதம்.சினிமா செய்தி,நயந்தாரா எத்தனை முறை பிரபு தேவா வுடன் லுலுலாயி செய்தார் என்ற எக்ஸ்குளுசிவ் செய்திகளைத்தான் குமுதம் இனி போட முடியும்
இது புனைவு இல்லையே ...?
வாப்பா சதீஷ்,ரொம்ப கோபமா குமுதம் மேல?
சரவணக்குமார்,அக்மார்க் 100% உண்மை.எங்களூக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
அன்புள்ள செந்தில்குமார்
எனக்கு யாரும் எங்கேயும் கல்தா கொடுத்ததில்லை. கொடுக்க முடியாது. குமுதத்தில் இப்போதும் என்னை எழுதும்படிதான் சொல்லுகிறார்கள். அதற்கு அவ்ர்கள் விதிக்கும் வரையறைகள் எனக்கு உடன்பாடில்லை என்பதால் நான்தான் எழுத மறுத்துவிட்டேன். இதை என் இணைய தளத்தைப் படித்தால் தெளிவாகப் புரியும்.செய்தியை வெளியிட்டதற்கு நன்றி.
அன்புடன்
ஞாநி
www.gnani.net
ஐயா வணக்கம்.உங்க அட்ரஸ்ல போய் பார்த்தேன்.உண்மை அறிந்தேன்.தலைப்பை உடனே மாற்றுகிறேன்
செந்தில்குமார், தவறாக எழுதாதீர்கள். ஞானியின் இனைய தளத்தில் தெளிவாக எழுதி உள்ளார், வழிப்போக்கன் புலம்பல்கள்; என்ற வலை பதிவிலும் விளக்கங்கள் உள்ளது
ok ramji.i correct it.thanx for coming and comenting.(tamil font problem)
துணிச்சல் வேணும் - காசு பணம் தன்னால வரும்
/*
ஐயா வணக்கம்.உங்க அட்ரஸ்ல போய் பார்த்தேன்.உண்மை அறிந்தேன்.தலைப்பை உடனே மாற்றுகிறேன்
*/
தலைப்பு இன்னும் மாற்றப் படவில்லையே .. ஏன்?
www.aaraamnilam.blogspot.com
Post a Comment