ஆரம்பம் புகழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் கதை , இயக்கம் ,நாயகி அதிதி ஷங்கர் ஆகிய இரு விஷயங்கள் தான் இப்படத்தைப்பார்க்க தூண்டுகோலாக இருந்தன .டைட்டிலைப்பார்த்ததும் இது எதோ ரொமாண்டிக் சப்ஜெக்ட் என்று நினைத்தால் இது ஒரு க்ரைம் த்ரில்லர் என்பது ஆச்சர்யம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ,நாயகி இருவரும் காதலர்கள் . நாயகன் நாயகி மீது அதீத அன்பு வைத்திருக்கிறான் .சல்மான்கான் - ஐஸ்வர்யாராய் , சிம்பு - நயன் தாரா இந்த ஜோடிகளின் பிரிவுக்குக்காரணம் ஓவர் பொசசிவ்னெஸ் தான் . ஒரு கட்டத்தில் நாயகனின் அன்புத்தொல்லை தாங்காமல் நாயகி-பிரேக்கப் சொல்லிவிட்டு வெளிநாடு போகிறாள் .அங்கே ஒரு கொலைக்கேஸில் மாட்டிக்கொள்கிறாள் .இந்த விஷயம் நாயகனுக்குத்தெரிந்ததும் நாயகி இருக்கும் நாட்டுக்கு வந்து அந்தக்கேஸை டீல் செய்து நாயகியை எப்படிக்காப்பாற்றுகிறான் என்பது மீதிக்கதை
நாயகன் ஆக -புதுமுகம் ஆகாஷ் முரளி . அறிமுகம் ஆன முதல் படத்திலேயே காதல் , ஆக்சன் , பைட் என அசத்தி இருக்கிறார் , நல்ல எதிர் காலம் உண்டு . ஆனால் இவர் எதனால் -பிச்சைக்காரன் போல தாடியுடன் அலைகிறார்? என்பது தெரியவில்லை
நாயகி ஆக அதிதி ஷங்கர் . மேடையில் செய்வது போல இவர் மொக்கை ஜோக் எதுவும் அடிக்காமல் இருப்பது ஆறுதல் . அழகான முகம் , உணர்ச்சிகரமான நடிப்பு , இளமைத்துள்ளல் என ஒரு நாயகிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உண்டு
சரத் குமார் , குஷ்பூ இருவரும் கெஸ்ட் ரோல் தான் என்றாலும் உணர்ச்சிகரமான நடிப்பு . குறிப்பாக குஷ்பூ கலக்கல் .கடலோரக்கவிதைகள் ராஜா தான் வில்லன் என்றால் அந்த ராஜாவே நம்ப மாடடார் ..ஆடியன்ஸ் எப்படி நம்புவார்கள் ?என்று இயக்குனர் நினைத்திருக்க வேண்டும், அதனால் க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் வைத்தருக்கிறார்
நாயகியின் வக்கீல் ஆக கல்கி கோச்லின் கச்சிதமாக நடித்திருக்கிறார்
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 5 பாடல்கள் .அவற்றில் 3 அருமை .பின்னணி இசை வழக்கம் போல கலக்கல் .ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் படம் 146 நிமிடங்கள் ஓடுகின் றது ,கேமரூன் எரிக் பிஸ்மென் தான் ஒளிப்பதிவு .போர்ச்சுகல் பகுதியின் அழகைக் கண் முன் கொண்டு வருகிறார் .நீலன் சேகர் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் விஷ்ணு வர்தன்
சபாஷ் டைரக்டர்
1 நான் - லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்து நாயகன் - நாயகி காதல் போர்சன், நிகழ் கால க்ரைம் கதை என்று மாற்றி மாற்றிக் காட்டிய விதம் குட்
2 வெளிப்புறப்படப்பிடிப்பை லைவ் லொக்கேஷனில் நடத்தி சுவராஸ்யம் கூட்டிய விதம்
3 பாடல்களைப் படம் ஆக்கிய விதம் , பிஜிஎம் ,, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 யார்ரா இவ?
2 சோலோ வயலின் நீதான் செம பீலிங்க்
3 சொல் , நீ சொல் , மனதுக்குள் மறுபடி வருவாயா?
4 உடைந்த மனசு திரும்பக்கிடைக்குமா?
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்தில் யாருமே இல்லாதவங்க என யாருமே இல்ல
2 சில பொண்ணுங்களைப்பார்க்கும்போது சின்னதா ஒரு மணி அடிக்கும், ஆனா உன்னைப்பார்த்தப்ப பெரிய மணி அடிச்சது
3 நீ இப்போ எப்படி இருக்கியா அதே மாதிரி எப்பவும் இருப்பியா?
4 காலில் கட்டிய கல் மாதிரி எப்பவும் என் கூடவே இருக்கே . எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் வேண்டும்
5 எந்தப்பிரச்சனைக்காக நீங்க பிரிய முடிவு எடுத்தீங்களோ அதே ;பிரச்சனை ஒரு நாள் இல்லாமயே போகலாம்
6 மகனைப்பிரிந்த ஒரு அம்மாவின் வலி அபாயகரமானது
7 அவன் "கேட்"டுக்கிடத்தே தான் இருக்கான்,இதைக்கேட்டுக்கிட்டு தான் இருக்கான்
8 உன்னை விட்டுட்டுப்போனப்புறம் தான் நிறைய விஷயங்கள் எனக்குப்புரிய ஆரம்பித்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனின் மகன் ஒரு ஹோமோ என்பதும் அது சம்பந்தமான காட் சிகளும் தேவையற்றவை .
2 பாஸ்போர்ட், விசா எல்லாம் ரெடி பண்ணாம டி வி நியூஸ் -பார்த்த அடுத்த நிமிடமே நாயகன் பாரீன் பயணம் செய்வது எப்படி ?
3 நாயகன் க்ளைமாக்சில் ஒரு ஸ்கூல் பஸ்ஸை கிட் னாப் செய்து மிரட்டி காரியம் சாதிப்பது நம்ப முடியாத காதில் பூ
4 சிறையில் நடந்த சண்டையில் நாயகிக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுகிறது . ஆனால் நாயகி கழுத்தில் பேண்டேஜ் போட்டிருக்கிறார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்ணுக்கு அவசர புத்தி , ஆணுக்கு உண்மை-யான காதலுக்காக உயிரையும் பணயம் வைக்கும் தியாக -புத்தி என சொன்ன கருத்துக்காக படம் பார்க்கலாம் . விகடன் மார்க் - 4-0 .ரேட்டிங் 2.75 / 5
Nesippaya | |
---|---|
Directed by | Vishnuvardhan |
Written by | Vishnuvardhan Neelan Sekar |
Produced by | S. Xavier Britto Sneha Britto |
Starring |
|
Cinematography | Cameron Eric Bryson |
Edited by | A. Sreekar Prasad |
Music by | Yuvan Shankar Raja |
Production company | XB Film Creators |
Distributed by | Romeo Pictures |
Release date |
|
Running time | 146 minutes |
Country | India |
Language | Tamil |