ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - சேலம் மாவடடம் ஆத்தூர் தான் கதைக்களம் .அங்கே இன்று இடைத்தேர்தல் முடிந்து வாக்குப் பெட்டிகள் எல்லாம் பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன . அன்று ஒரு இளம்பெண் காணாமல் போய் விட்டதாக புகார் வருகிறது . நாயகன் ஆத்தூர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்ட்டர் அந்தக்கேஸை விசாரிக்கிறார் .அப்போது ஒரு போன் கால் வருகிறது . ஒரு பஸ் நெம்பரைக்குறிப்பிட்டு அந்த ஆம்னி பஸ்சில் ஒரு இளம்பெண் துன்புறுத்தப்படுவதாக தகவல் . நாயகன் உடனே அந்த பஸ்ஸை ட்ரேஸ் அவுட் செய்ய உத்தரவிடுகிறார்
சம்பவம் 2 . குறிப்பிட் ட அந்த பஸ்ஸை மடக்கி செக் செய்தால் ஒரு திருப்பம் . ஒரு ஆண் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான் . சீட்டில் உட்கார்ந்த வாக்கில் இருக்கிறான் .பஸ்ஸில் பயணித்த யாரோ ஒருவர் தான் அந்தக்கொலையை செய்திருக்க வேண்டும் என்பதால் பயணிகள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசன் வரச்செய்து நாயகன் விசாரிக்கிறார்
சம்பவம் 3 - பஸ்ஸில் கொலை செய்யப்பட் ட நபரின் பிணத்தை போஸ்ட் மார்ட் டம் செய்ய அனுப்பி இருந்தாலும் அந்த ரிப்போர்ட் வந்தால் தான் கேசில் ஒரு முன்னேற்றம் வரும் என்பதால் நாயகன் ரிப்போட்டுக்கு வெயிட்டிங்க் . இப்போது அடுத்த திருப்பம் .அந்தப்பிணத்தைக்காணவில்லை .
காணாமல் போய் விட்டதாக புகார் செய்யப்பட் ட பெண் , ஆம்னி பஸ்சில் ஒரு இளம்பெண் துன்புறுத்தப்படுவதாக வந்த தகவல் பஸ்ஸில் கொலை செய்யப்பட் ட நபரின் பிணம் காணாமல் போனது , அந்த கொலை சம்பவம் இந்த நான்கு சம்பவங்களையும் ஒரு மையப்புள்ளி இணைக்கிறது என்பதை நாயகன் உணர்கிறார் . அவர் என்ன என்ன உண்மைகளைக்கண்டு பிடித்தார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக சிபிராஜ் படம் முழுக்க ஒரு சீன் கூட சிரிக்காமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ் மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஆக வருகிறார் . கச்சிதமான நடிப்பு . இவருக்கு ஜோடி இல்லை , டூயட் இல்லை என்பது ஒரு பிளஸ் படத்தில் நடித்த மற்ற அனைவரது நடிப்பும் சிறப்பு .பழைய ஜோக் தங்கதுரை நான்கு மொக்கை ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் நாயகனுக்கு உதவி ஆக வரும் போலீஸ் கெஜராஜின் நடிப்பு கச்சிதம் . திலீபனுக்கு இன்னமும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம் . வந்தவரை ஓகே ரகம்
ஒளிப்பதிவு ஜெய்கார்த்திக் , பிரமாதமான உழைப்பு இவருடையது . சென்னை டு கோவை ரூட் லாங்க் ஷாட்டில் இரவு நேர சீனைக்கச்சிதமாக படம் ஆக்கி இருக்கிறார் , கே எஸ் சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை கச்சிதம் . ஷார்ப் ஆன எடிட்டிங்க் . டைம் டியூரேசன் 116 நிமிடங்கள் . விறுவிறுப்பான இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 ஹீரோ இண்ட்ரா வில் அவரது பழைய கேஸ் துப்பறியும் திறனை வெளிப்படுத்தும் குற்றவாளி யை பிடிக்கும் ஆப்பிள் பழக்காட்சி கச்சிதம்
2 மூன்று வெவ்வேறு சம்பவங்களை ஒன்றிணைக்கும் ஐடியா அருமை
3 ஒரே இரவில் கதை நடப்பது , வேகமான திரைக்கதை அமைப்பு ப்ளஸ்
4 பிரமாதமான ஒளிப்பதிவு , கச்சிதமான பின்னணி இசை , ஷார்ப் ஆன , க்ரிஸ்ப் ஆன எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு
5 ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக்ஸ் , ஜோடி இல்லாதது ஆறுதல்
ரசித்த வசனங்கள்
1 பிடிக்காத வேலையை போராடி செய்வதை விட பிடித்த வேலையை இஷ்டப்பட்டு செய்வது சிறப்பு
2 ஹாட் வாட்டர் இருக்கா?
ஹார்ட் இருக்கு , ஆனா வாட்டர் இல்லை
3 எறும்பு கரும்பு மேயுது , சரி , ஆனா எருமை மாடு எதுக்குக்காயுது ?
4 நேரம் சரி இல்லைன்னா யானை தலைல பூனை கக்கா போகுமாம்
5 மேரேஜ் கூட தள்ளிப்போகலாம், ஆனா நான் சொன்ன நேரத்தில் பர்ஸ்ட் நைட் நடந்தே தீரும்
6 நாம தேடிட்டு இருக்கும் நபர் யார் ? என் நமக்குத்தெரியாது , ஆனா அவன் தன்னை நமக்குக்காட்டிக்கிட் டே இருக்கான்
( 1, 6 இரண்டும் ஹீரோ வுக்கு ,2,3,4,5 ஆகிய மொக்கை ஜோக்ஸ் பழைய ஜோக் தங்கதுரை க்கு )
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இடைத்தேர்தல் நட க்கும் நாள் அன்று தேர்தல் அதிகாரிக்கும், அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மாட்டார்களா ?
2 டெல்லி நிர்பயா கேஸ் நடந்ததிலிருந்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது . ஆம்னி பஸ்ஸில் டிரைவர் , கண்டக்டர் ,மட்டுமே இருக்கும்போது பெண் நிருபருக்கு சந்தேகம் வரவில்லையா? அவரது காதலர் /கணவர் கூட அதைக்கண்டுகொள்ளவே இல்லை
3 ஒரே ரிஜிஸ்ட்ரேஷன் எண் உள்ள இரு ஆம்னி பஸ்கள் அருகருகே இடைத்தேர்தல் நட க்கும் நாள் அன்று ஓடுமா? போலீஸ் பார்க்கும் என்ற பயம் இருக்காதா?
4 ஓடும் பஸ்ஸில் 26 பயணிகள் இருக்கும்போது அவர்கள் யாருக்குமே தெரியாமல் கொலைகாரன் கொலை செய்ய முடியுமா? அது ரிஸ்க் ஆச்சே?
5 நெற்றியில் திருநீறு பட்டை இடுவது முகத்தில் சாந்தம் , அமைதி தான் கொடுக்கும், போலீஸ் கம்பீரத்தைத்தராது . போலீஸ் ஆபீசர் திருநீறு பட்டை இட்டிருப்பது எடுபடவில்லை
6 சபரி மலை சாமி சந்தனப்பட் டை தான் இடுவார்கள் .சிவ பக்தர்கள் தான் திருநீறு பட்டை இடுவது வழக்கம்
7 கொலை நடந்த நாளில் ஆம்னி பஸ்ஸில் பயணித்த 26 பயணிகள் செல்போன் நெம்பரை சைபர் க்ரைம் போலீசில் கொடுத்து ட்ரேஸ் பண்ணி இருந்தாலே சுலபமாக கொலைகாரனை பிடிக்கலாம்
8 போலீஸ் இன்ஸ்பெக்டர் யுனிபார்மில் சர்ட் பட் டனைக்கழட்டி விடக்கூடாது
9 ஆம்னி வேன் என சப் டைட்டில் சரியாக வருகிறது , ஆனால் வசனமாக சிவப்புக்கலர் கார் என வருகிறது
10 வெளியூர் பயணம் செல்பவர்கள் பவர் பேங்க் வைத்திருக்க மாட்டார்களா ? பேட்டரி டவுன் ஆவது எப்படி ?
11ஒரு கைதியை லாக்கப்பில் அடை க்கும்போது அவனிடம் ஆயுதம் இருக்கா?என செக் செய்ய மாட் டார்களா? அசால்ட் ஆக கன் எடுத்து சுடறான்
12 மிஸ் ஆன பெண்ணின் போட்டொவை பேக்ஸ் அனுப்புகிறார்கள் .அது ஒயிட் அண்ட் பிளாக்கில் ஜெராக்ஸ் போல வருது .அனைத்து போலீஸ் ஆபீசர் செல்போனுக்கு வாட்சப்பில் படம் அனுப்பி இருக்கலாம்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு சீன் கூட போர் அடிக்காத விறுவிறுப்பான திரைக்கதை . லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டோ ம் என்பவர்கள் படம் பார்க்கலாம் . நல்ல டைம் பாஸ் மூவி . ஆனந்த விகடன் மார்க் ( யூகம் ) - 41 . ரேட்டிங்க் 2.75 / 5
0 comments:
Post a Comment